ஞாயிறு, 25 மே, 2025

சேலம் மாநகராட்சி விழாவில் பேச வாய்ப்பளிக்காத மேயரை கண்டித்து பெண் துணை மேயர் விழா அரங்கில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு. துணை மேயராக  பொறுப்பேற்றதில் இருந்து தன்னை தொடர்ச்சியாக புறக்கணிப்பதோடு மிரட்டல் விடுவதாகவும் மேயர் மீது பகிரங்க குற்றச்சாட்டு....

சேலம் மாநகராட்சி விழாவில் பேச வாய்ப்பளிக்காத மேயரை கண்டித்து பெண் துணை மேயர் விழா அரங்கில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு. துணை மேயராக பொறுப்பேற்றதில் இருந்து தன்னை தொடர்ச்சியாக புறக்கணிப்பதோடு மிரட்டல் விடுவதாகவும் மேயர் மீது பகிரங்க குற்றச்சாட்டு....

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாநகராட்சி விழாவில் பேச வாய்ப்பளிக்காத மேயரை கண்டித்து பெண் துணை மேயர் விழா அரங்கில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு. துணை மேயராக  பொறுப்பேற்றதில் இருந்து தன்னை தொடர்ச்சியாக புறக்கணிப்பதோடு மிரட்டல் விடுவதாகவும் மேயர் மீது பகிரங்க குற்றச்சாட்டு....

தமிழகம் முழுவதும் அரசு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து முடிவுகள் வெளியானது. அதன் அடிப்படையில் சேலம் மாநகராட்சியில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவ மாணவிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்களை பாராட்டி பரிசளிக்கும் நிகழ்ச்சி சேலம் மாநகராட்சி நேரு கலை அரங்கில் நடைபெற்றது. சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவி மாணிக்கம்,  மாநகராட்சி ஆணையாளர் உட்பட கல்வித்துறை அதிகாரிகள் பலரும் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் ஆகியோரை வாழ்த்தி மாநகர மேயர் உட்பட கல்வி துறை அதிகாரிகள் அனைவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில், சேலம் மாநகர துணை மேயர் சாரதாதேவி மாணிக்கம் அவர்களுக்கு பேச வாய்ப்பளிக்காமல் சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த துணை மேயர் சாரதாதேவி மாணிக்கம் மேயரின் செயல் குறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார். பின்னர் ஆணையாளர் பேச அனுமதித்தும் மேயர் ராமச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்து பேச விடாமல் தடுக்கும் நோக்கில் பள்ளி மாணவ மாணவிகளை பாராட்டும் வகையில் சான்றிதழ்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தது மாநகர துணை மேயர் சாரதாதேவி மாணிக்கம் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து சற்றும் யோசிக்காமல் சேலம் மாநகராட்சி அரசு விழாவிலிருந்து துணை மேயர்  சாரதாதேவி மாணிக்கம் விழாவை புறக்கணித்து வெளியேறியது  பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் இடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
இது குறித்து சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம் நம்மிடையே கூறுகையில், துணை மேராக தான் பொறுப்பேற்றதிலிருந்து மேயர் ராமச்சந்திரன் அவர்கள் கால்புணர்ச்சி காரணமாக தொடர்ச்சியாக தன்னை அவமதிப்பதும் அரசு விழாவிற்கு அழைப்பு விடுக்காமல் மறுப்பதும், தான் தகவல் அறிந்து செல்லும் பட்சத்தில் பொது மேடையிலேயே தன்னை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தும் நோக்கில் சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் அவர்கள் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டிய அவர், தான் நல்ல பெயர் எடுத்து விடுவேன் என்று கருதி தன்னை எல்லா வகையிலும் அவமதிப்பதோடு மட்டுமல்லாமல் பகிரங்கமாக மிரட்டல் விடுவதாகவும் தெரிவித்ததொடு, இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் செல்வ பெருந்தகை மற்றும் தங்கபாலு ஆகியோரின் தகவலுக்கு தெரிவித்துள்ளதாகவும்,  இதுபோக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் அவர்களிடமும் தெரிவித்துள்ளதாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய திருமதி சாரதாதேவி மாணிக்கம், தான் ஒரு பெண் வழக்கறிஞர் என்றும் பாராமல் இத்தகைய செயல்களில் ஈடுபடும் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மீது தமிழக முதலமைச்சர் உரிய விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் நம்முடைய தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
சேலம் மாநகராட்சி துணை மேயர் திருமதி சாரதாதேவி மாணிக்கம் அவர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து மேயர் ராமச்சந்திரனை நேரில் அணுகி கேட்டபோது, துணை மேயரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று ஒரே வார்த்தையில் திட்டவட்டமாக தெரிவித்து சென்றார். 
சேலம் மாநகராட்சியில் நிலவு வரும் மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோருக்கு இடையேயான மணி போர் நீங்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பாரா ? பொறுத்திருந்து பார்ப்போம்.
 

வெள்ளி, 23 மே, 2025

சேலத்தில் தெய்வா அறக்கட்டளையின் வாயிலாக ஏழை எளியவர்களுக்கு 100-வது நாள் காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்த  தம்பதியினர்.

சேலத்தில் தெய்வா அறக்கட்டளையின் வாயிலாக ஏழை எளியவர்களுக்கு 100-வது நாள் காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்த தம்பதியினர்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் தெய்வா அறக்கட்டளையின் வாயிலாக ஏழை எளியவர்களுக்கு 100-வது நாள் காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்ந்த  தம்பதியினர்.

சேலம் மாநகராட்சியின் 9-வது கோட்ட மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞரும் சிறந்த சமூக  சேவகருமான தெய்வலிங்கம்,  வழக்கறிஞர் பணி மாமன்ற உறுப்பினர் பணி உள்ளிட்டவைகளுடன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பொது மக்களின் நலனுக்காக பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். அதன் அடிப்படையில் தெய்வா என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றினை தொடங்கி நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஏழை எளியவர்களுக்கும் முதியவர்களுக்கும் காலை சிற்றுண்டிகளை வழங்கி வருகிறார். இதன் தொடர்ச்சியாக தெய்வா அறக்கட்டளை சார்பாக சேலத்தைச் சேர்ந்த சரவணன் தேவி பாலா தம்பதியினர் தங்களது திருமண நாளை கொண்டாடும் விதமாக, தொடர்ந்து 100-வது நாளாக காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் அருகே நடைபெற்றது. தெய்வா அறக்கட்டளையின் நிறுவனர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்  திருமண நாள் கொண்டாடும் தம்பதியினர் சரவணன் தேவிபாலா ஆகியோர் கலந்துகொண்டு ஏழை எளியவர்களுக்கும் முதியவர்களுக்கும் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கி மகிழ்கிறார். இந்த நிகழ்ச்சியில் தெய்வா அறக்கட்டளை நிர்வாகிகள் சுகுமார் வாஞ்சிநாதன் குமரேசன் தர்மலிங்கம் தனபால் மணிமாறன் ரகுபதி விஜயகுமார் மற்றும் ரவி உட்பட  குடும்பத்தார் என திரளானோர்  கலந்து கொண்டனர்.

12 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த நபர் பலி-மங்கலம் போலீசார் விசாரணை!

12 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த நபர் பலி-மங்கலம் போலீசார் விசாரணை!



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அறிவொளி நகர் பகுதி சேர்ந்தவர் முத்து 55. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கண் சிகிச்சை பெற்று விட்டு வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.அப்போது அறிவொளி நகரை சேர்ந்த அப்துல் என்பவர் காண்ட்ராக்ட் மூலம் வேலை செய்து வந்துள்ளார் இந்த நிலையில் அவரிடம் வேலை செய்யும் குமரேசன் என்பவர் முத்துவை மங்கலம் வளையபாளையம் நான்கு சாலை பகுதியில் உள்ள சக்திவேல் என்பவரது வீட்டில் உள்ள சிமெண்ட் சீட்டை கழற்ற வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது முத்து சிமெண்ட் சீட்டை கழற்றி கொண்டிருக்கும்போது சுமார் 12 அடி உயரத்தில் இருந்து சிமெண்ட் சீட் உடைந்ததில் முத்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து பலத்த காயமடைந்த அவரை மீட்ட அப்பகுதியினர் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் முத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கேயம் அருகே கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது!

காங்கேயம் அருகே கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது!


திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படியூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பெறுவதாக போலீசாருக்கு ரகசிய கிடைத்தது.இதனை தொடர்ந்து தாராபுரம் மதுவிலக்கு காவல்துறையினர் உடனடியாக அந்த பகுதியில் உள்ள பேக்கரி அருகே சென்ற போது அங்கு சந்தேகப்படும் வகையில் ஒரு டிராவல் பேக்கை வைத்துக் கொண்டு நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார்.தொடர்ந்து அவரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர் ஹானஸ்ட்ராஜ் (31), என்பதும் சிலோன் காலனி, தம்மநாயக்கன்பட்டி, சேலம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.தொடர்ந்து தற்போது அவர்  திருப்பூர் நாச்சிபாளையம் பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது.மேலும் அவர் சட்ட விரோதமாக கஞ்சாவை ஆந்திரா சித்தூரிலிருந்து வாங்கி வந்து விற்பதற்காக வைத்திருந்ததால் அவரை கைது செய்து செய்த போலீசார் அவரிடமிருந்த சுமார் 10 கிலோ எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றினர்.
சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா. முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமானவர்கள்  பங்கேற்பு.

சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா. முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா. முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமானவர்கள்  பங்கேற்பு.

சேலம் நான்கு ரோடு பகுதியில் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் சேலம் மாநகரம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பிரம்மாண்ட விளையாட்டு மைதானம் உட்பட அனைத்து வசதிகளும் உள்ள நிலையில் கலையரங்கம் என்பது ஒரு குறையாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் பங்களிப்புடன் மிகப் பிரம்மாண்டமான அளவில் கலையரங்கம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர்  செபஸ்தியான் தலைமையில் நடைபெற்ற விழாவில் சேலம் மதுரை மாவட்ட ஆயர் முனைவர் அருள்செல்வம் இராயப்பன், சேலம் மறை மாவட்ட மேநாள் ஆயர் முனைவர் சிங்கராயன் மற்றும் தர்மபுரி மாவட்ட ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ் உள்ளிட்ட ஒரு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பிரமாண்ட அளவில் அமைக்கப்பட்டு இருந்த கலையரங்கத்தினை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பணி நிறைவு காணும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி பாராட்டு விழாவும், தொடர்ந்து களையெரங்கம் அமைப்பதற்கு பொருள் உதவி வழங்கிய நன்கொடையாளர்களுக்கு நன்றி பாராட்டும் விழாவும் நடைபெற்றன. வாழ்த்துரை ஏற்புரை உள்ளிட்ட உள்ளிட்ட நிகழ்வுகளை எடுத்து பள்ளி மாணாக்கர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
இந்த நிகழ்ச்சியில் தொழிற்கல்வி ஆசிரியர் கார்த்திகேயன் இடைநிலை ஆசிரியர் முரளி மற்றும் உடற்கல்வி இயக்குனர் ராபர்ட் உட்பட மாணவரின் முக்கிய பிரமுகர்கள் முன்னாள் மாணவர்கள் அவரிடம் குடும்பத்தார் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.