வெள்ளி, 25 ஜூலை, 2025

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 87 ஆவது பிறந்தநாள் விழா. சேலத்தில் 87 இளைஞர்கள் இரத்தக்கொடை வழங்கி உற்சாகம்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 87 ஆவது பிறந்தநாள் விழா. சேலத்தில் 87 இளைஞர்கள் இரத்தக்கொடை வழங்கி உற்சாகம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 87 ஆவது பிறந்தநாள் விழா. சேலத்தில் 87 இளைஞர்கள் இரத்தக்கொடை வழங்கி உற்சாகம். 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 87 வது பிறந்தநாள் அந்த கட்சியினரால் இன்று ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர் மாவட்ட பாமக சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி சேலம் மாவட்ட பாமக இளைஞர் சங்கம் சார்பில் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கிக்கு 87 இளைஞர்கள் ரத்தக்கொடை வழங்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற இரா அருள் மற்றும் மாவட்ட தலைவர் கதிர்ராசரத்தினம் ஒலி டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ரத்ததான முகாமினை துவக்கி வைத்தனர். முகாமில் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக 87 இளைஞர்கள் தங்களது குருதியை சேலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு தானமாக கொடுத்து விழாவை சிறப்பித்தனர். இதேபோன்று  மாலை சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மிகப்பெரிய அளவிலான கேக் வெட்டி நோயாளிகளின் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

வியாழன், 24 ஜூலை, 2025

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம். சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம். சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம். சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு. 

தமிழக அரசின் சார்பில் மகளிர் நலன் உட்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதனை முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசின் திட்டங்கள் தொடர்பாக  விண்ணப்பித்த அனைவரும் பயன் பெற்று வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் தமிழக அரசின் சட்ட திட்டங்களில் விடுபட்டவர்களை இணைக்கும் விதமாகவும் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாகவும் உங்களுடன்  ஸ்டாலின் என்ற பெயரில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் கடந்த 15 ஆம் தேதி இந்த திட்டம் தமிழக முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் ஊரகப்பகுதியில் மட்டுமே நடைபெற்று வந்த தமிழக அரசின் இந்த திட்டமான உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் தற்பொழுது சேலம் மாநகர பகுதியில் தொடங்கியது. சேலம் அம்மாபேட்டை பகுதியில் நடைபெற்ற முகமை தொடர்ந்து, கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதி மக்களுக்கான சிறப்பு முகாம் சேலம் நேரு கலை அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு சேலம் கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் அசோக் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் திருமதி பிருந்தா தேவி, சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இந்த சிறப்பு முகாமில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரும் சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சில மத்திய மாவட்ட திமுக செயலாளருமான வழக்கறிஞர் இராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற வகையில் துரை ரீதியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பொதுமக்களுக்கான தேவைகள் கோரிக்கைகளாக பெறப்பட்டன. மூகாம்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு உடனடியாக நல உதவிகள் சுற்றுலாத்துறை அமைச்சரால் வழங்கப்பட்டன. மேலும் முகாமினை ஆய்வு செய்த சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் பெறப்படும் அணுக்கள் அனைத்திற்கும் விரைவில் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் அனைவரும் பயன் பெறுவீர்கள் என்ற நம்பிக்கையை ஊட்டியது அங்கு கூடியிருந்த மக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றது.
சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பொன் விழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு விழா.

சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பொன் விழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு விழா.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க பொன் விழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு விழா.

சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொன் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவினை  முன்னின்று நடத்தி ஒத்துழைப்பு நல்கியவர்களுக்கு  பாராட்டி கௌரவிக்கும் விழா சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. SDCBA சங்கத்தின்  தலைவர் ஜெ.மு.இமயவரம்பன் தலைமையில் நன்றி தெரிவிக்கும் விழாவில், பார் கவுன்சில் கோ சேர்மன் சரவணன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாக்காளர்களுக்கு நினைவுப்பரிச, பொன் விழா நினைவுப்பரிசு மற்றும் பொன் விழா நிகழ்வுகளுடன் தற்போது அச்சிடப்பட்டுள்ள பொன் விழா மலரும்  வழங்கப்பட்டது. தொடர்ந்து குழு புகைப்படமும் பாராட்டு விழாவின்போது எடுத்துக் கொள்ளப்பட்டது.  விழாவில் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க முக்கிய நிர்வாகிகள் உட்பட, சங்கத்தின் செயலாளர் முருகன் மற்றும் பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர்  சிறப்பாக செய்திருந்தனர்.
சேலத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 300க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் கட்சியில் இணைந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்பு.

சேலத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 300க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் கட்சியில் இணைந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 300க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் கட்சியில் இணைந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்பு. 

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி மற்றும் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் தாங்கள் சார்ந்து இருந்த அதிமுக பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தங்களை திமுகவில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திமுக தலைமை அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடைபெற்றது. சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்களின் தலைமையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்ட 300-க்கும் மேற்பட்டவர்களுக்கும் கட்சி துண்டுகளை அணிவித்து வாழ்த்தி வரவேற்றார் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன். மேலும் நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் பேசும்போது, பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்து கொண்ட அனைவருக்கும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதோடு திமுகவில் இணைத்து கொண்ட தங்களுக்கு சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் உறுதியளித்தார். 
இந்த நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

புதன், 23 ஜூலை, 2025

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி மக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் குறைகளை கேட்டறிந்தார்.

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி மக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் குறைகளை கேட்டறிந்தார்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி மக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் குறைகளை கேட்டறிந்தார். 

சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உட்பட்ட கோட்டக் கவுண்டம்பட்டி ஊராட்சி பகுதியில்  பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் அவர்களிடம், ஹவுசிங் போர்டு, வசந்தம் நகர் பகுதிகளுக்கு சென்றபோது அந்த பகுதி மக்கள் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் சாலைகள் மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளதாகவும் மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக பணிக்கு செல்லும் வாகனங்கள் பள்ளி கல்லூரி வாகனங்கள் செல்ல இயலாத நிலை உள்ளதாகவும் இதனை சரி செய்து தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை கேட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் அவர்கள் விரைந்து சரி செய்து கொடுக்கிறேன் என்று உறுதி அளித்தார். பின்னர் செல்லப்பிள்ளை குட்டை ஊராட்சி சேலம் ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒப்பாண்டியூர் வழியாக பெரமச்சூர் பாலம் வரை செல்லும் சாலை மிகவும் பழுந்தடைந்துள்ளதாகவும் இதற்கு மாற்றாக தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். பின்னர் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி கரிசல்பட்டி பேருந்து நிறுத்தம் முதல் தொடக்கக்கன் காடு முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி எல்லை வரை கரையோரம் தடுப்பு சுவர் அமைத்து புதிய தார் சாலை அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வுகளில் மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ராஜா முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வெங்கடாஜலம் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் குணசேகரன் சக்தி சுகவன் கரிசல்குணா வெங்கடபதி பிரகாஷ் விக்னேஷ் செந்தில் அழகு மாத எண் கிளைச் செயலாளர் கோவிந்தராஜ் பழனிச்சாமி மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.
சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில்  ஆடிப்பெரு விழாவை ஒட்டி கொடியேற்ற நிகழ்வு..... அம்மனை வழிபட்டு சென்ற ஏராளமான பக்தர்கள்..

சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெரு விழாவை ஒட்டி கொடியேற்ற நிகழ்வு..... அம்மனை வழிபட்டு சென்ற ஏராளமான பக்தர்கள்..

 
சேலம்.
S.K.சுரேஷ்பாபு.

சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில்  ஆடிப்பெரு விழாவை ஒட்டி கொடியேற்ற நிகழ்வு..... அம்மனை வழிபட்டு சென்ற ஏராளமான பக்தர்கள்..

தமிழ் மாதங்களில் வரும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.இதனையொட்டி தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலையங்களில் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அதிலும் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடைபெறும் ஆடிபெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மாதத்தில் ஆடி-1, ஆடி-18, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி என அடுத்தடுத்து விஷேசங்கள் வரும். இதுபோன்ற நாட்களில் கோவில்களில் விஷேச பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி ஆடி மாதம்   தொடங்கியது முதல் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சேலத்தில் உள்ள 8 பட்டிகளுக்கும் காவல் தெய்வமாக விளங்கி வரும், சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில், நாள்தோறும் காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.  சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி பெருவிழாவில் முக்கிய நிகழ்வான  பூச்சாட்டுகள் கோலாகலமாக நடைபெற்றது கண் கணக்கில் மலர்களை குவித்து அம்மனை பூரிக்க வைத்தனர் பக்த கோடிகள். ஆடிபெருவிழா தொடங்கி விட்டது என்பதும் அதனைத் தொடர்ந்து இன்று சேலம் கோட்டை அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி பெருவிழாவையூட்டி கொடியேற்று நிகழ்வு வெகு உற்சாகத்துடன் நடைபெற்றன. திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் முன்னின்று நடத்திய இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை நெடுநேரம் காத்திருந்து வழிபட்டுச் சென்றனர். 
வரும் 29ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் நடுதல் விழா நடைபெற உள்ளது என்பதும், அதனைத் தொடர்ந்து சக்தி அளித்தல் பொங்கல் வைபவம் மாவிளக்கு எடுத்தல் உருளுதண்டம் நிகழ்வுகளுடன் திருக்கோவிலுக்கு புதிதாக கட்டப்பட்ட திருத்தேரோட்டம்  முதன் முறையாக அடுத்த மாதம் 8ம் தேதி இடம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விழாவிற்கான ஏற்பாட்டு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திருக்கோவில் செயல் அலுவலர் மற்றும் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.