சனி, 6 டிசம்பர், 2025

இந்திய அரசியல்  அமைப்பு தந்தையின் 69 வது நினைவு தினம். மக்கள் தேசம் கட்சியின் சார்பில் பாபா சாகேப் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

இந்திய அரசியல் அமைப்பு தந்தையின் 69 வது நினைவு தினம். மக்கள் தேசம் கட்சியின் சார்பில் பாபா சாகேப் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

இந்திய அரசியல்  அமைப்பு தந்தையின் 69 வது நினைவு தினம். மக்கள் தேசம் கட்சியின் சார்பில் பாபா சாகேப் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

இந்திய அரசியலமைப்பின் தலைவரும் சட்ட மாமேதையும் பாபாசாகேப் என்று அனைவராலும் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கரின் 69 ஆவது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சியினராலும் அனுஷ்டிக்கப்பட்டது. அதன்படி மக்கள் தேசம் கட்சியின் சார்பில் சட்ட மாமேதையின் நினைவு தினத்திற்கு மரியாதை செய்யும் நிகழ்வு சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி கலைவாணன் தலைமை தாங்கி, ஓமலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சட்ட மாமேதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார்.
தொடர்ந்து சேலம் மாநகர மாவட்டத்தின் செயலாளர் வீராணம் அம்பேத்கர் அவர்கள் தலைமையில் சேலம் மாவட்டம் மைய நூலகத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள இந்திய அரசியல் அமைப்பின் தலைவர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. 
இந்த நிகழ்வுகளில் சேலம் மாவட்ட நிர்வாகிகள் மேற்கு மாவட்ட மாநகர நிர்வாகிகள், பிர்தீவ், L.K.ராஜ், அன்வர், தர்ஷன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 5 டிசம்பர், 2025

இந்திய அரசியல்  அமைப்பு தந்தையின் 69 வது நினைவு தினம். ராகுல் இளைஞர் விளையாட்டு மற்றும் அனைத்து தற்காப்பு கலை சங்கத்தினர் சட்ட மாமேதையின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

இந்திய அரசியலமைப்பின் தலைவரும் சட்ட மாமேதையும் பாபாசாகேப் என்று அனைவராலும் போற்றப்படும் அண்ணல் அம்பேத்கரின் 69 ஆவது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சியினராலும் அனுஷ்டிக்கப்பட்டது. அதன்படி இந்திய தேசிய காங்கிரஸின் ராகுல் இளைஞர் விளையாட்டு மற்றும் அனைத்து தற்காப்பு கலை சங்கத்தின் சார்பில் சட்ட மாமேதையின் நினைவு தினத்திற்கு மரியாதை செய்யும் நிகழ்வு சேலம் உடையாபட்டி பகுதியில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலையில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் விஜயலட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஓ பி சி பிரிவு மாநில துணை செயலாளர் சுப்ரமணி ராகுல் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் பொதுச் செயலாளர் சீனிவாசன் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் குலாப் ஜான் தேசிய செயலாளர் ராஜேஷ் மாநில ஒருங்கிணைப்பாளர் பகத் எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அண்ணல் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
இதைத் தொடர்ந்து சேலம் அம்மாபேட்டை மஞ்சம்பட்டி பகுதியில் வைக்கப்பட்டிருந்த அலங்கரிக்கப்பட்டிருந்த அண்ணன் அம்பேத்கரின் டிஜிட்டல் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததுடன் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
தமிழக விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாத தமிழக அரசுக்கு நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டி வீட்டிற்கு அனுப்புவார்கள். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுச்சாமி அறிக்கை.

திமுக தலைமையிலான தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகளித்த வாக்குறுதியை எதுவும் தற்போது தற்பொழுது வரை நிறைவேற்றவில்லை என்பது தமிழக விவசாயிகளின் குற்றச்சாட்டாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 
அந்த அறிக்கையில், 
தமிழக விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து, தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யும் பாலின் விலையை உயர்த்தி அறிவிக்க கோரி வைத்த கோரிக்கையை நிறைவேற்றதாத திமுக அரசுக்கு தமிழக விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் வருகின்ற 2026 ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் சமட்டி அடி கொடுத்து வீட்டுக்கு அனுப்புவார்கள் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் மூலம் திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன் என சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 9 வது ஆண்டு நினைவு தினம். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மௌன ஊர்வலம் மற்றும் மணிமண்டபத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அதிமுகவினர்.

மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து காலம் சென்ற அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சர் ஆன செல்வி ஜெயலலிதா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு தினம் அதிமுகவினரால் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் அம்மையாரின் நினைவு தினம் கட்சியினரால் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் அம்மையாரின் 9 வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. முன்னதாக சேலம் நான்கு ரோடு பகுதியில் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஏ கே எஸ் எம் பாலு தலைமையில் திரண்ட அதிமுக நிர்வாகிகள் மௌன ஊர்வலமாக சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டு  உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களது மணிமண்டபத்திற்கு வந்தனர்.
தொடர்ந்து மணிமண்டபத்தில் உள்ள காலம் சென்ற அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதலமைச்சர்களுமான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களின் திருவுருவச் சிலைகளுக்கு அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஏ கே எஸ் எம் பாலு மற்றும் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளர் சிங்காரம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்த இந்த நிகழ்வில், சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன், முன்னாள் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், எம் கே செல்வராஜ் மற்றும் ஏபி சக்திவேல் உட்பட அம்மாபேட்டை பகுதி செயலாளர் யாதவமூர்த்தி மற்றும் எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு இரு பெரும் தலைவர்களின் திருவுருவ சிலைக்கு மரியாதை செய்தனர். 
இந்த நிகழ்வில் முக்கிய நிர்வாகிகள் பெரும்பாலானோர் கருப்பு சட்டையை அணிந்து தங்களது தலைவர்களுக்கான நினைவு தினத்தை அனுஷ்டித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 4 டிசம்பர், 2025

மறைந்த அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 9 ஆவது ஆண்டு நினைவு தினம். சேலம் அஸ்தம்பட்டி பகுதி அதிமுக சார்பில் அம்மையாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.

காலம் சென்ற அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு தினம் அதிமுகவினரால் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் அம்மையாரின் நினைவு தினம் கட்சியினரால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர் மாவட்ட அதிமுக அஸ்தம்பட்டி பகுதி கழகத்தின் சார்பில் அம்மையாரின் 9 வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. 
சேலம் 30 வது கோட்டம் சார்பில் தேர்முட்டி பகுதியில்  நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த செல்வி ஜெயலலிதா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஸ்தம்பட்டி பகுதி கோட்ட செயலாளர் சந்தோஷ் குமார் மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் வெங்கடேஸ்வரன், கட்சியின் அவை தலைவர் இளங்கோ, உட்பட கட்சி நிர்வாகிகள் தேவராஜ் மோகன்ராஜ் ராஜாராம் மற்றும் புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அம்மையாரின் திரு உருவப்படத்திற்கு மலர்களை தூவி மரியாதை செய்தனர்.

செவ்வாய், 2 டிசம்பர், 2025

புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழக முழுவதும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். புரட்சித் தமிழகம் கட்சியின் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி கடும் எச்சரிக்கை.

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புரட்சி தமிழகம் கட்சியின் சேலம் மாவட்டத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சி தமிழகம் கட்சியின் பறையர் பேரவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசை தம்பி தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் சாம்பவர் சிவா தெற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் மாநில முதன்மை செயலாளர் வழக்கறிஞர்  ராஜேந்திரன் மற்றும் மாநில இளைஞரணி தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மாணவர் மாவட்ட செயலாளர் கதிர் ராசரத்தினம் புதிய புரட்சி கழகத்தின் சேலம் மாவட்ட செயலாளர் முருகேசன் தமிழ் தேசிய மலையநாடு மக்கள் கட்சி மாநில தலைவர் ராமசாமி இந்து மக்கள் கட்சியை பாரதி மற்றும் மாவட்ட தலைவர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகின்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், புரட்சித் தமிழகம் கட்சியின் பட்டியல் இன தலைவர் டாக்டர் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளார் தமிழக அரசு உடனடியாக அந்த சட்டத்தை திரும்ப பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும் மற்றும் பட்டியலென பழங்குடி மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 73 ஆயிரத்து 888 நிதியை நான்கு வருடமாக செலவிடாமல் திருப்பி அனுப்பியதை கண்டிப்பது உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.  மேலும் பொய் வழக்குகளின் வாயிலாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் மூர்த்தி அவர்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் தவறும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து பட்டியலின மக்களையும் ஒன்று இணைத்து மிகப் பெரிய அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்ததோடு, எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பட்டியலின மக்களின் நலன் காக்கும் வகையில் உறுதிமொழிகளை கொடுக்கும் கட்சிகளுக்கு மட்டுமே தங்களது ஆதரவு இருக்கும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக புரட்சி தமிழகம் கட்சியின் பறையர் பேரவை சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசை தம்பி தெரிவித்தார். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓமலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் கந்தசாமி, தாரமங்கலம் ஒன்றிய செயலாளர் செல்வம் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சனி, 29 நவம்பர், 2025

சேலத்தில் பிரசித்தி பெற்ற அரிசி பாளையம் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் பெருவிழாவை முன்னிட்டு சிம்மக் கொடி நடும் விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சரண கோஷங்கள் முழங்க கோவில் வளாகத்தில் விமர்சையான வழிபாடு.

சேலம் அரிசி பாளையத்தில் 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பெருவிழா ஜனவரி மாதம் 15 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வெகு விமர்சையாக நடைபெற உள்ளன. சௌடேஸ்வரி அம்மன் பெருவிழாவை முன்னிட்டு இன்று திருக்கோவில் வளாகத்தில் சிம்மக்குடி நடும் விழா பக்தர்களின் சரண கோஷங்களுக்கு இடையே வெகு உற்சாகமாக நடைபெற்றது. முன்னதாக சௌடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து சிம்மக் கொடி நடும் விழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கியது. 
அரிசிபாளையம் தெப்பக்குளம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்ட சிம்மக் கொடி ஊர்வலமானது அரிசி பாளையம் வழியாக சாமிநாதபுரம் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் சென்று அங்கிருந்து மகளிர் தீர்த்த கூட ஊர்வலம் சிம்மக் கொடி ஊர்வலமும் நடைபெற்றது. சிம்மக் கொடி ஊர்வலம் மற்றும் தீர்த்த குட ஊர்வலம் ஆகியவை திருக்கோவிலை வந்து அடைந்ததன் பிறகு. பிரம்மாண்டமான கம்பத்தில் சிம்மக் கொடி ஏற்றப்பட்டு குல இளைஞர்கள் உதவியுடன் திருக்கோவில் வளாகத்தில் கொடிக்கம்பம் வெற்றிகரமாக நடப்பட்டது. அப்பொழுது திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளை தட்டியும் அம்மனின் சரண கோஷங்களை எழுப்பியும் வழிபட்டது விண்ணை பிளக்கும் வகையில் அமைந்திருந்தது. 
தொடர்ந்து சௌடேஸ்வரி அம்மனுக்கு தீர்த்த குட அபிஷேகம் சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது அடுத்து திருக்கோவிலில் பட்டக்காரர் செட்டி தனக்காரர்கள் பெரிய தனக்காரர் மற்றும் குலமக்கள் அனைவரின் முன்னிலையிலும் சௌடேஸ்வரி அம்மனின் பெருவிழாவிற்கான விளம்பர பலூன் ஏற்றுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றன. பின்னர் இரவு 7 மணி அளவில் சிறப்பு வானவேடிக்கை நிகழ்ச்சியுடன் இரவு விருந்தும் வழங்கி விழாவை தொடங்கினர் விழா கமிட்டியினர். 
விழாவிற்கான ஏற்பாடுகளை சேலம் அரிசிபாளையம் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் பெருவிழா கமிட்டி தலைவர் ரசம் ரவி செயலாளர், ஆட்ர கார்த்திகேயன் மற்றும் பொருளாளர் ஆட்ர மோகன் உள்ளிட்ட கௌரவ தலைவர்கள் துணைத் தலைவர்கள் துணைச் செயலாளர்கள் ஆலோசனை குழு உறுப்பினர்கள் துணைப் பொருளாளர்கள் பெருவிழா கமிட்டி செயல் உறுப்பினர்கள் என விழா கமிட்டியினர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். சிம்மக் கொடி நடும் விழாவை தொடர்ந்து நடைபெறும் 48 நாள் மண்டல பூஜையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கமிட்டியின் தலைவர் செயலாளர் மற்றும் பொருளாளர் தெரிவித்திருந்தனர்.