வெள்ளி, 26 டிசம்பர், 2025

த.வெ.க உயர் மட்ட குழு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த தேசிய மக்கள் கட்சி நிர்வாகிகள்.

த.வெ.க உயர் மட்ட குழு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த தேசிய மக்கள் கட்சி நிர்வாகிகள்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

த.வெ.க உயர் மட்ட குழு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த தேசிய மக்கள் கட்சி நிர்வாகிகள்.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தற்பொழுது தமிழக தேர்தல் களம் தற்பொழுதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் உயர்மட்ட குழு மாநில ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழக அமைச்சருமான செங்கோட்டையன் அவர்களை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில், தேசிய மக்கள்  கட்சியின் மாநிலத் தலைவர் சீனிவாசன், தேசிய செயலாளர் அசோக் சாமி மற்றும் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி மற்றும் ஈரோடு மாவட்ட தலைவர் தங்கவேல் உள்ளிட்ட நிர்வாகிகள்  மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
அப்போது செங்கோட்டையன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்தும் மரியாதை செய்த தேசிய மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு, பதிலுக்கு செங்கோட்டையன் அவர்களும்  அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி தனது மரியாதையை திரும்ப செலுத்தினார். மரியாதை நிமித்தமாகவும் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் நடைபெற்ற சிறிய ஆலோசனை கூட்டத்தில்,
இரு கட்சிகளின்  செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும், இதுபோக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த மரியாதை நிமித்த நிகழ்வின் போது தேசிய மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மன் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
தமிழக காங்கிரஸ் சிறுபான்மையினர் துறை மாநில ஒருங்கிணைப்பாளராக சேலம் இர்ஃபான் நியமனம்.

தமிழக காங்கிரஸ் சிறுபான்மையினர் துறை மாநில ஒருங்கிணைப்பாளராக சேலம் இர்ஃபான் நியமனம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக காங்கிரஸ் சிறுபான்மையினர் துறை மாநில ஒருங்கிணைப்பாளராக சேலம் இர்ஃபான் நியமனம். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக சேலம் இர்ஃபான் இப்ராஹீமை சிறுபான்மை துறையின் மாநில தலைவர் முகமது ஆசிப் நியமித்துள்ளார். 
இந்த செய்தியை சிறுபான்மை  துறை மாநிலத் தலைவர் வெளியிட்டுள்ள நியமன கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த பொறுப்பிற்கு தன்னை பரிந்துரை செய்த சிறுபான்மையினர் துறை மாநில முதன்மை துணைத் தலைவர் பர்மா பஜார் நாகூர் கனி அவர்களுக்கு சேலம் இர்ஃபான் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

வியாழன், 25 டிசம்பர், 2025

த.வெ.க உயர் மட்ட குழு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் பூமொழி.

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தற்பொழுது தமிழக தேர்தல் களம் தற்பொழுதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் உயர்மட்ட குழு மாநில ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் தமிழக அமைச்சருமான செங்கோட்டையன் அவர்களை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில், தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் மாநில தலைவரும் வழக்கறிஞருமான சேலம் பூமொழி,  நிர்வாகிகளுடன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். 
அப்போது செங்கோட்டையன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்தும் மரியாதை செய்த பூமொழிக்கு பதிலுக்கு செங்கோட்டையன் அவர்களும் பூமொழி  அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி தனது மரியாதையை திரும்ப செலுத்தினார். 
தொடர்ந்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும், இதுபோக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இந்த மரியாதை நிமித்த நிகழ்வின்போது தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சியின் நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

செவ்வாய், 23 டிசம்பர், 2025

தமிழக விவசாயிகளின் பிரதான கோரிக்கையினை நிறைவேற்ற தவறிய தமிழக அரசனை கண்டித்து வரும் 29ஆம் தேதி மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் கரவை மாடுகளுடன் மறியல் போராட்டம் நடத்திட வேண்டும். தமிழக அரசை கண்டித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக அறிவிப்பு.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக பசு மற்றும் எருமை பால் இருக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காத தமிழக அரசை கண்டித்து போராட்ட அறிவிப்பு ஒன்றினை அறிகையின் வாயிலாக வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழ்நாடு அரசு ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மூலம் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து  கொள்முதல் செய்யும் பசும் பால் மற்றும் எருமைப்பால் ஆகியவற்றுக்கான விலையை தற்போதைய விலையில் இருந்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.15 உயர்த்தி வழங்காததை கண்டித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில்  வருகின்ற 29.12.2025 காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் சங்க அமைப்புக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கால்நடைகளுடன் மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
சேலத்தில் வெள்ளி வியாபாரியிடம் 55 கிலோ மதிப்புடைய வெள்ளியை தராமல், சுமார் 85 லட்சம் ரூபாய் மோசடி செய்து வெள்ளி வியாபாரி. பாதிக்கப்பட்ட வெள்ளி வியாபாரி சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு.

இந்தியாவில் தங்கத்திற்கு நிகராக வெள்ளி விளையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட வியாபாரங்களில் ஈடுபட்டு வருபவர்களிடையே மோசடி புகார்களும் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சார்ந்த வெள்ளி ஆபரண வியாபாரி சந்தோஷ்குமார் தனது வழக்கறிஞர் இம்தியாஸ் அவர்களுடன் புகார் மனு அளிப்பதற்காக சேலம் மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அந்த மனுவில், தனது தந்தை தொடங்கிய ஸ்ரீ மகாலட்சுமி சில்வர்ஸ் என்ற நிறுவனத்தை தொடர்ந்து தானே நடத்தி வருகிறார். 
வெளி மாநிலங்களுக்கு அரசு விதித்துள்ள வரியை முறையாக செலுத்தி வெள்ளி ஆபரண வியாபாரம் செய்து வரும் தன்னிடம் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சார்ந்த சுபம் சில்வர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வேணுகோபால் என்பவர் தொழில் ரீதியாக கடந்த மூன்று ஆண்டுகளாக பழகி தன்னிடம் வெள்ளி வியாபாரம் செய்து வந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி வெள்ளி வாங்குவதற்காக ஸ்ரீ மகாலட்சுமி சில்வர்ஸ் நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து, சம்பந்தப்பட்ட சுபம் சில்வர்ஸ் நிறுவன வங்கி கணக்கிற்கு 17. 4 , 12. 7 , 11. 9 மற்றும் 4. 12 ஆகிய நான்கு தேதிகளில் 1 கோடியே 75 லட்சத்து 16 ஆயிரத்து 200 ரூபாய் மொத்தமாக செலுத்தப்பட்டதாகவும், இந்தத் தொகையில் 91 லட்சத்து 66 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான வெள்ளியை மட்டும் பெற்றுக் கொண்டதாகவும், மீதமுள்ள 83.50 லட்ச ரூபாய் மதிப்பிலான 55 கிலோ மதிப்புள்ள வெள்ளிக்கட்டி பெறவில்லை என்றும் குறிப்பிட்டிருந்த மனுவில் மீதமுள்ள வெள்ளியை சுபம் சில்வர்ஸ் நிறுவன உரிமையாளர் வேணுகோபாலிடம் கேட்டபோது நான் தொடர்ச்சியாக அலை கழித்து ஏமாற்றி வருவதாகவும், சம்பந்தப்பட்ட வேணுகோபால் என்பவர் மீது நடவடிக்கை எடுத்து மீதமுள்ள 83 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புடைய 55 கிலோ வெள்ளியை மீட்டு தர வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். 
மனுவினை பெற்றுக் கொண்ட சேலம் மாநகராட்சி காவல் ஆணையர் மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து மீதமுள்ள வெளியே மீட்டு தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
 
திங்கள், 22 டிசம்பர், 2025

விஜயமங்கலம் துணை மின் நிலையத்தில் வருகின்ற 23.12.2025 செவ்வாய்க்கிழமையன்று மேற்கொள்ள மாதாந்திர பராமரிப்பு

விஜயமங்கலம் துணை மின் நிலையத்தில் வருகின்ற 23.12.2025 செவ்வாய்க்கிழமையன்று மேற்கொள்ள மாதாந்திர பராமரிப்பு

விஜயமங்கலம் 110/33-11 KV துணை மின் நிலையத்தில் வருகின்ற 23.12.2025 செவ்வாய்க்கிழமையன்று மேற்கொள்ள மாதாந்திர பராமரிப்பு பணி வேண்டியுள்ளதாலும் 110/33-11KV விஜயமங்கலம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கைக்கோல பாளையம், வடமலை கவுண்டன்பாளையம், பச்சாக்கவுண்டன்பாளையம், கரட்டூர் மற்றும் கினிப்பாளையம், கிரேநகர். பாப்பம்பாளையம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்கிற விபரத்தினை பொதுமக்கள் நலன் கருதி வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

*கோபி பகுதி மின்தடை அறிவிப்பு*

*கோபி பகுதி மின்தடை அறிவிப்பு*

*கோபி பகுதி மின்தடை அறிவிப்பு* 

நாள்: 22-12-2025
கிழமை: திங்கள் 

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 

கூகலுார், ஒத்தக்குதிரை, எஸ்.கணபதிபாளையம், கவுண்டன்புதூர், கருங்கரடு, தண்ணீர்பந்தல்பாளையம், புதுக்கரைப்புதுார், பொன்னாச்சிபுதுார், தாழைகொம்புதூர், பொலவக்காளிபாளையம், தாசம்பாளையம், பொம்மநாயக்கன்பாளையம், சக்கரைபாளையம், சாணார்பாளையம், மேவாணி, சென்னிமலைகவுண்டன்புதூர், குச்சலூர், சவண்டப்பூர் ஆண்டிகாடு, பெருமுகை, வரப்பள்ளம் மற்றும் கே.மேட்டுப்பாளையம்.

ஆகிய பகுதிகளில் மாதம் பராமரிப்பு காரணமாக மின் வினியோகம் தடை

*தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கோபி*