திங்கள், 12 ஜனவரி, 2026

தமிழக விவசாயிகளுக்கு திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றாததன் எதிரொலி. நடப்பாடு அறுவடை திருநாள் தமிழக விவசாயிகளுக்கு இனிப்பாக இல்லாமல் கசப்பாக உள்ளது. தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக வேதனை.

தமிழக விவசாயிகளுக்கு திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றாததன் எதிரொலி. நடப்பாடு அறுவடை திருநாள் தமிழக விவசாயிகளுக்கு இனிப்பாக இல்லாமல் கசப்பாக உள்ளது. தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக வேதனை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக விவசாயிகளுக்கு திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றாததன் எதிரொலி. நடப்பாடு அறுவடை திருநாள் தமிழக விவசாயிகளுக்கு இனிப்பாக இல்லாமல் கசப்பாக உள்ளது. தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக வேதனை. 

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி நடப்பாண்டு அறுவடை திருநாள் குறித்து வேதனை  அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 
அதில் தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கட்சி தமிழக விவசாயிகளுக்கு தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. ஆனால் இதுவரையிலும் எந்தவிதமான வாக்குறுதிகளையும் செயல்படுத்தவில்லை. தமிழக விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தமிழகத்தில் உள்ள கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் விலையாக டன் ஒன்றிற்கு 4000 ரூபாய் வழங்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம் ஏற்றம் பெறும் வகையில் நீர் வேளாண்மை திட்டத்தின் வாயிலாக நிலத்தடி நீர் செரிவூட்டும் வகையில் 10,000 கோடியில் 1000 தடுப்பணைகள்  கட்டப்படும். தென்னை விவசாயிகளின் நலன் கருதி தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக சந்தை படுத்தப்படும். தமிழக விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு விளை நிலத்தையும் அரசின் பயன்பாட்டிற்காக எடுக்க மாட்டோம். சேலத்தில் இருந்து சென்னை செல்ல மத்திய அரசின் கண்காணிப்பில் உள்ள நெடுஞ்சாலை அமைச்சகத்திலும் எட்டு வழி சாலை அமைக்க அனுமதி வழங்க மாட்டோம் என்று கூறிவிட்டு திமுக கட்சி ஆட்சி பொறுப்பு ஏற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் தருவாயிலும் கூட தமிழக விவசாயிகளுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு இன்று வரை நிறைவேற்றி தரவில்லை என தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். 
தொடர்ந்து தனது அறிக்கையில் நடப்பாண்டு தைத்திங்கள் அறுவடை திருநாள் பொங்கல் பண்டிகை இனிப்பான பொங்கலாக இல்லாமல் கசப்பான பொங்கல் பண்டிகையாக உள்ளது என தமிழக விவசாயிகள் கருதுகின்றனர். மேலும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் திமுக அரசுக்கு இந்த அறிக்கையின் வாயிலாக நினைவுபடுத்திக் கொள்வதாக வேலுச்சாமி வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் சேலம் சிறுமலர் பள்ளி மாணவர்கள் சாதனை.

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் சேலம் சிறுமலர் பள்ளி மாணவர்கள் சாதனை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் சேலம் சிறுமலர் பள்ளி மாணவர்கள் சாதனை. 

சேலம் சிறுமலர் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். மாணவன் பரிதி எழிலழகன் 14 வயதிற்கு உட்பட்ட 42, 44 ஆகிய எடை பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்களையும், இதே போல மாணவன் யோக ரட்சக சித்தார்த்தன் 46, 48 ஆகிய இடை பிரிவுகளில் வெண்கல பதக்கமும் பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோதி பெர்னாண்டோ பதக்கங்கள் அணிவித்து சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார். 
மேலும் உதவி தலைமை ஆசிரியர் டேவிட், உடற்கல்வி ஆசிரியர் சுவாமிநாதன், அல்போன்ஸ், அந்தோணி ராஜ் மற்றும் உடற்கல்வி இயக்குனர் ராபர்ட் உட்பட ஆசிரிய பெருமக்கள் சக மாணவர்கள் சாதனை மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
சேலத்தில் சமத்துவ மகிழ்ச்சி பொங்கல் விழா... பள்ளி குழந்தைகளுக்கு கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களுக்கு உற்சாக பரிசு அளித்து மகிழ்ந்த சேலம் வரலாற்றுச் சங்கத்தினர்.

சேலத்தில் சமத்துவ மகிழ்ச்சி பொங்கல் விழா... பள்ளி குழந்தைகளுக்கு கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களுக்கு உற்சாக பரிசு அளித்து மகிழ்ந்த சேலம் வரலாற்றுச் சங்கத்தினர்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் சமத்துவ மகிழ்ச்சி பொங்கல் விழா... பள்ளி குழந்தைகளுக்கு கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களுக்கு உற்சாக பரிசு அளித்து மகிழ்ந்த சேலம் வரலாற்றுச் சங்கத்தினர்.

சேலம் வரலாற்றுச் சங்கம் மற்றும் அறம் செய்யும் சேலம் மக்கள் குழு ஆகியவை இணைந்து சமத்துவ மகிழ்ச்சி பொங்கல் விழாவினை நடத்தியது. சேலம் வரலாற்று சங்கத்தின் தலைவர் இமானுவேல் ஜெ. ஜெயசிங் தலைமையில் நடைபெற்ற விழாவில், பொருளாளர் ஞானதாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். சேலம் அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ பாலர் ஞான இல்லத்தில் நடைபெற்ற விழாவில், செயல் தலைவர் தாரை. குமரவேலு, பொதுச் செயலாளர் பர்ணபாஸ் மற்றும் அமைப்புச் செயலாளர் பாலாஜி.வீரப்பன் மற்றும் அறம் செய்யும் மக்கள் குழுவைச் சேர்ந்த கோகுலகண்ணன் உள்ளிட்டோர் தமிழர் திருநாளாம் தைத்திருவிழா வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில், புதுப் பானையில் பொங்கலிட்டு இயற்கைக்கு வழிபாடு நடத்தப்பட்டதை அடுத்து பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் அரிமா சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்று அவர்களுக்கு பல்வேறு ஊக்கு பரிசுகள் உட்பட நலத்திட்ட உதவிகளும் அரங்கேறியது. விழாவிற்கான ஏற்பாடுகளை சேலம் வரலாற்றுச் சங்கம், அறம் செய்யும் சேலம் மக்களுக்கு குழு மற்றும் அறம் ரத்த தான குழுவினர் ஆகியோர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு 200கும்  மேற்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்புடன் பண்டிகை தொகையாக வழங்கி மகிழ்ந்த ராகுல் இளைஞர்கள் மற்றும் அனைத்து தற்காப்பு கலைத்துறை நிர்வாகிகள்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு 200கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்புடன் பண்டிகை தொகையாக வழங்கி மகிழ்ந்த ராகுல் இளைஞர்கள் மற்றும் அனைத்து தற்காப்பு கலைத்துறை நிர்வாகிகள்.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு. 

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு 200கும்  மேற்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்புடன் பண்டிகை தொகையாக வழங்கி மகிழ்ந்த ராகுல் இளைஞர்கள் மற்றும் அனைத்து தற்காப்பு கலைத்துறை நிர்வாகிகள். 

தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா வரும் 14ஆம் தேதி போகையுடன் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் நகர்ப்புறம் உட்பட கிராமப்புறங்களிலும் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தேசிய பொதுச் செயலாளர் செல்வகுமார் மற்றும் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி ஆகியோரது பிறந்த நாள் ஆகியவற்றை கொண்டாடும் விதமாக சேலத்தில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பொங்கல் பரிசு தொகுப்பாக தமிழக அரசு 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் ஒரு கிலோ பச்சை அரிசி ஒரு கிலோ சர்க்கரை வேஷ்டி சேலை கரும்பு ஆகியவற்றை வழங்கி மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது என்பது தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாது. 
இந்த நிலையில் ராகுல் இளைஞர்கள் மற்றும் அனைத்து தற்காப்பு கலை துறை சார்பில் ஏழை எளியவர்களுக்கு அரிசி பருப்பு சர்க்கரை வேட்டி சேலை விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பண்டிகை காண ஊக்கத்தொகை வழங்கி கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதி நிர்வாகிகள் சேலத்தில் தங்களது முத்திரையை பதித்துள்ளனர். சேலம் முழு வாலி கேட் பகுதியில் உள்ள சாந்தாஸ்ரமம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு ராகுல் இளைஞர்கள் மற்றும் அனைத்து தற்காப்பு கலை துறையின் தேசிய தலைவர் விஜயலட்சுமணன் தலைமை தாங்க, நிர்வாகிகள் குலாப் ஜான் சுப்பிரமணி யுவராஜ் சிவக்குமார் ஸ்ரீனிவாஸ் பகத் தினேஷ் தில்லை டோர் முன்னிலை வகித்தார் இந்த நிகழ்வில், சுமார் 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரிசி பருப்பு, சர்க்கரை விழா வெட்டி சேலை உள்ளிட்ட தொகுப்புகளுடன், சம்பந்தப்பட்ட குடும்பத்தில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரங்களுடன் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தாருக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா உதவி தொகையாக ஒவ்வொருவருக்கும் 300 ரூபாய் வழங்கி தமிழக அரசுக்கு அடுத்தபடியாக தங்களது முத்திரையை சேலத்தில் பதித்துள்ளனர் என்பது நிதர்சனம்.

சனி, 10 ஜனவரி, 2026

திமுக அரசு தனது நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி ஒன்பது மாதங்களாகியும் கரும்பு டன் ஒன்றிருக்கு 4000 ரூபாய் உயர்த்தி வழங்காதது கண்டித்து, மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம். நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியாக கூட அமர  முடியாமல் திமுக அரசை விரட்டியடிப்போம். நாராயணசாமி நாயுடு அவர்களின்  தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கையுடன் சூளுரை.

திமுக அரசு தனது நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி ஒன்பது மாதங்களாகியும் கரும்பு டன் ஒன்றிருக்கு 4000 ரூபாய் உயர்த்தி வழங்காதது கண்டித்து, மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம். நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியாக கூட அமர முடியாமல் திமுக அரசை விரட்டியடிப்போம். நாராயணசாமி நாயுடு அவர்களின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கையுடன் சூளுரை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

திமுக அரசு தனது நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி ஒன்பது மாதங்களாகியும் கரும்பு டன் ஒன்றிருக்கு 4000 ரூபாய் உயர்த்தி வழங்காதது கண்டித்து, மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம். நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியாக கூட அமர  முடியாமல் திமுக அரசை விரட்டியடிப்போம். நாராயணசாமி நாயுடுவின்  தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கையுடன் சூளுரை.

தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி கரும்பு டன் ஒன்றுக்கு நான்காயிரம் ரூபாய் உயர்த்து வழங்காதத கண்டித்து நாராயணசாமி நாயுடு அவர்களின் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நாமக்கல் மாவட்டம் மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,  தமிழக அரசு 2025 மற்றும் 2026 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மானிய கோரிக்கையின் போது தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளின் நலன் கருதி கரும்பு தன் ஒன்றிற்கு நான்காயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்று கடந்த 9 மாதங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது. தற்பொழுது வரை இந்த அறிவிப்பு தொடர்பான அரசாணை வெளியிடப்படவில்லை. தற்பொழுது இந்த ஆண்டிற்கு உண்டான கரும்பு அறுவை பருவம் தொடங்கி உள்ள நிலையில் கரும்பை வெட்டி சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்ப விவசாயிகளுக்கு ஆளை நிர்வாகம் விவசாயிகளுக்கு பழைய கிரைய தொகையான 3, 290.50 மட்டுமே தான் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வழங்கி வருகிறது வலியுறுத்தப்பட்டது. 
மேலும் கரும்பு டன் கொண்டு இருக்கு நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து ஒன்பது மாதங்கள் ஆகியும் இதுவரை வழங்கப்படவில்லை என்பது வேதனையின் உச்சம் என்றும்  இது தமிழக கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏமாற்றமே என்பது மட்டும் நிதர்சனமான உண்மை என ஆர்ப்பாட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டது. தமிழக அரசின் இந்த செயலை கண்டித்து உடனடியாக கரும்பு டன் ஒன்று இருக்கு கொள்முதல் விலையாக  நான்காயிரம் ரூபாய் வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என் மனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டம் குறித்து நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், 
நாராயணசாமி நாயுடு அவர்களின் தமிழக விவசாயிகள் சங்கத்துடன் பல்வேறு விவசாய சங்கங்கள் ஆதரவில் உள்ளதாகவும் தங்களிடம் 60 சதவிகித வாக்குகள் உள்ளதாகவும், ஏற்கனவே விவசாயிகளின் பாதுகாவலன் விவசாயிகளை நண்பன் என்று பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு தற்பொழுது வரை நிறைவேற்றி தராத தமிழக அரசை நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர வைக்க முடியாமல் தமிழக விவசாயிகள் சங்கம் விரட்டியடிக்கும் என்றும் கடுமையான எச்சரிக்கையை பதிவிட்டார். முன்னதாக நாமக்கல் மாவட்டம் மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு விநியோகஸ்தி வரும் விவசாயிகள் பெரும் திரளானோர் கையில் கரும்புகளுடன் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் ஆதரவாக உள்ள பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகளான பாலசுப்பிரமணியம் தங்கராஜ் ஜெயராஜ் குப்பண்ண முத்து நந்தகுமார் முத்துலட்சுமி மற்றும் பெரியசாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 6 ஜனவரி, 2026

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கூட்டணி அமைப்பது தொடர்பாக பாமக மாநில தலைவர் டாக்டர் அன்புமணி நேரில் சந்திப்பு.

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கூட்டணி அமைப்பது தொடர்பாக பாமக மாநில தலைவர் டாக்டர் அன்புமணி நேரில் சந்திப்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கூட்டணி அமைப்பது தொடர்பாக பாமக மாநில தலைவர் டாக்டர் அன்புமணி நேரில் சந்திப்பு. 

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி தற்பொழுது தமிழக தேர்தல் களம் தற்பொழுதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தற்பொழுது தமிழகத்தில் உள்ள பிரதான கட்சி தலைவர்கள் பல்வேறு பெயர்களில் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை தொடங்கி அதன்படி பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் அன்புமணி அவர்கள் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களை  சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சு வார்த்தையின் போது பாமக மாநில ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்தி, பாமக மாநில பொருளாளர் திலகபாமா, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சதாசிவம், வெங்கடேஷ் மற்றும் சிவக்குமார் உள்ளிட்ட ஒன்பது நிர்வாகிகள் இந்த பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். முன்னதாக கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இல்லத்தில் சந்தித்த போது பாமக தலைவர் டாக்டர் அன்புமணி பொன்னாடை போர்த்தியும், பூங்கொத்து கொளுத்தும் கௌரவித்தார். பதிலுக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் டாக்டர் அன்புமணி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.  இதே போல பாமக மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி உட்பட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அதிமுகவுடன் பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதனையும், பாமகவிற்கு என்று ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் யாரெல்லாம் வேட்பாளர்களாக களம் காண போகிறார்கள் என்பதனையும்  மிக விரைவில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி அறிவிப்பார் என அந்த கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், சேலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்தி தெரிவித்தார்.

திங்கள், 5 ஜனவரி, 2026

சேலம் மாவட்ட வன்னியர் நல அறக்கட்டளை நிர்வாகத்திற்கு எதிராக, போலி ஆவணம் மூலம் VSA கல்வி அறக்கட்டளை இடத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக, நிர்வாக அறங்காவலர் மலர்விழி வீரபாண்டி ராஜா புகார் உண்மைக்கு புறம்பானது. சேலம் மாவட்ட வன்னியர் நல அறக்கட்டளை தலைவர் சிவலிங்கம் ஆதாரப்பூர்வமாக விளக்கம்..

சேலம் மாவட்ட வன்னியர் நல அறக்கட்டளை நிர்வாகத்திற்கு எதிராக, போலி ஆவணம் மூலம் VSA கல்வி அறக்கட்டளை இடத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக, நிர்வாக அறங்காவலர் மலர்விழி வீரபாண்டி ராஜா புகார் உண்மைக்கு புறம்பானது. சேலம் மாவட்ட வன்னியர் நல அறக்கட்டளை தலைவர் சிவலிங்கம் ஆதாரப்பூர்வமாக விளக்கம்..

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மாவட்ட வன்னியர் நல அறக்கட்டளை நிர்வாகத்திற்கு எதிராக, போலி ஆவணம் மூலம் VSA கல்வி அறக்கட்டளை இடத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக, நிர்வாக அறங்காவலர் மலர்விழி வீரபாண்டி ராஜா புகார் உண்மைக்கு புறம்பானது. சேலம் மாவட்ட வன்னியர் நல அறக்கட்டளை தலைவர் சிவலிங்கம் ஆதாரப்பூர்வமாக விளக்கம்..

சேலத்தில் போலி ஆவணம் மூலம் வி.எஸ்.ஏ கல்வி அறக்கட்டளை இடத்தை அபகரிக்க முயற்சிப்பதாக நிர்வாக அறங்காவலர் மலர்விழி ராஜா புகார் கூறியிருந்தார். சேலம் விஎஸ்ஏ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி வீரபாண்டி ராஜா  செய்தியாளர்களை  சந்தித்தபோது, 
சேலத்தில் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, சிறந்த கல்வி வழங்கும் நோக்குடன், கடந்த 2008 ஆம் ஆண்டு விஎஸ்ஏ கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை தொடங்கப்பட்டது. தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு மாவட்ட முனிசிபல் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், சர்வே நிலம் அறக்கட்டளைக்கு கிரயம் செய்யப்பட்டது. அதன் பின்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வன்னியர் நல அறக்கட்டளை சார்பில், 2020 ஆம் ஆண்டு இதற்கு அருகில் உள்ள சர்வே எண் 121-1பி என்ற நிலத்தை வாங்கியுள்ளனர். 
இதனிடையே கடந்த 2023 ஆம் ஆண்டு போலி ஆவணங்கள் மற்றும் உறுதிமொழி பத்திரத்தை தயாரித்து, விஎஸ்ஏ கல்வி அறக்கட்டளையின் நிலத்திற்குண்டான சர்வே எண்ணில், முறைகேடாக பட்டா பெற்றுள்ளனர். இதனை முறையாக விசாரிக்காமல், ஒரே நாளில் பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறையைச் சேர்ந்த 6 அதிகாரிகள் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர் என்று வன்னியர் அறக்கட்டளை தலைவர் சிவலிங்கம் உட்பட சுமார் 10 பேரின் மீது ஏற்கனவே குற்றம் சாட்டி  இருந்தார். 
இந்த நிலையில், சேலம் மாவட்ட வன்னியர் நல அறக்கட்டளையின் தலைவர் சிவலிங்கம் கூறுகையில் சேலம் மாவட்டம் வீரபாண்டி வட்டம் உத்தமசோழபுரம் கிராமத்தில் வன்னிய அறக்கட்டளைக்கு சொந்தமாக சர்வே எண் 121 / 1B, 1B, 121 / 1A, 1A2 ஆகிய 81 செண்ட் நிலம் சொந்தமாக உள்ளது. சம்பந்தப்பட்ட நிலத்திற்கு ஆதாரமாக கரைய பத்திரங்கள் வருவாய்த்துறை வழங்கிய பட்டா, சிட்டா, ஆகிய ஆவணங்களும் எங்களிடம் உள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட இடம் கடந்த ஐந்து வருடங்களாக அறக்கட்டளை சுவாதீனத்தில் இருந்து வருகிறது. VSA கல்வி நிறுவனம் மற்றும் அறக்கட்டளையின் உறுப்பினர் மகேஸ்வரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் W.P.NO 20286 OF 2025 மற்றும் W.P.NO 22876 OF 2025 என்ற ரெட் மனு ஒன்றினை வன்னியர் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தின் பட்டாவை ரத்து செய்யும் படியும் கிரயத்தை ரத்து செய்யும் படியும் தாக்கல் செய்த ரெட் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 11.12.2025 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்துவிட்டது. மேற்படி வன்னிய குல அறக்கட்டளையின் நிலம் தமிழ்நாடு வன்னிய சத்திரிய அறக்கட்டளை நல வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 
அதற்கு அரசு ஆணையும் உள்ளது. அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் தமிழ்நாடு வன்னிய குல சத்திரிய அறக்கட்டளை நல வாரியத்திற்கு சொந்தமானதும் அதன் கட்டுப்பாட்டிலும் உள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட இடத்தில் திருமண மண்டபம் மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக UPSC, TNPSC, TNUSRB மற்றும் இதர போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கவும் 55 ஆயிரம் சதுர அடிக்கு மாடி கட்டிடம் கட்ட தமிழ்நாடு அரசு அரசாங்கத்திடம் அனுமதி பெற்றுள்ளதாகவும் அனைத்து ஆதாரங்களுடன் நிரூபித்தார். மேலும் தங்களிடம் தகராறு செய்து ஜாதி கழகம் கலவரம் விளைவித்து தங்களது அறக்கட்டளை உறுப்பினர்கள் மீது ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த குண்டர்களை வைத்து SC/ ST.s பிரிவில் வழக்கு பதிவு செய்ய திட்டம் தீட்டியுள்ளதாகவும், இது போன்ற செயலுக்கு VSA அறக்கட்டளை உறுப்பினர் மகேஸ்வரி மற்றும் பூலாவரியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜா அவர்களின் மகள் மருத்துவர் மலர்விழி ஆகியோர்தான் பொறுப்பு என்றும் தெரிவித்தார். மேலும் குண்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வன்னியர் நல அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் வேண்டுமென்றே விஎஸ்ஏ கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பேருந்துகளை அகற்றி அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் திருமண மண்டபம் கட்டுமான பணிகள் மேற்கொள்ள பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட சிவலிங்கம், வி எஸ் ஏ கல்வி அறக்கட்டளை நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்து சம்பந்தப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்த அவர், 
சம்பந்தப்பட்ட இடத்தினை கடந்த 1956 ஆம் ஆண்டு முதல் யார் யார் வசம் இருந்தது இதே போல கடந்த 2020 ஆம் ஆண்டு வன்னியர் நல அறக்கட்டளைக்கு சம்பந்தப்பட்ட இடத்தை தாங்கள் பெற்றது வரை அனைத்து மூல பத்திரங்கள் பத்திரங்கள் தாய்பத்திரங்கள் பட்டா சிட்டா மற்றும் தமிழக அரசால் வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தால் வி எஸ் ஏ கல்வி அறக்கட்டளை நிர்வாகத்தினரின் மனுவை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையிலும், சேலம் கொண்டலாம்பட்டி காவல் துறையினரிடம் புகார் அளித்தும் சி எஸ் ஆர் மட்டுமே பதிவு செய்தனர் என்றும் எஃப் ஐ ஆர் பதிவிட மறுத்துவிட்டு வன்னியர் நல அறக்கட்டளை நிர்வாகத்தினர் கூறிய புகார் மனு மீது எந்த விதமான நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.  
அந்த நிகழ்வின் போது சேலம் மாவட்ட வன்னியர் நல அறக்கட்டளை நிர்வாகிகள் மோகன் முத்துமாணிக்கம் பழனிச்சாமி பாலசுப்பிரமணி ரத்தினம் மற்றும் வடிவேல் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.