வியாழன், 23 ஏப்ரல், 2026

திருமண கோலத்தில் ஜனநாயக கடமை ஆற்றிய சேலம் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அஜித் சாக்கோ.

திருமண கோலத்தில் ஜனநாயக கடமை ஆற்றிய சேலம் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அஜித் சாக்கோ.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

திருமண கோலத்தில் ஜனநாயக கடமை ஆற்றிய சேலம் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அஜித் சாக்கோ. 

2026 ஆம் ஆண்டிற்கான சட்டப் பேரவை தேர்தல், தமிழக முழுவதும் என்று ஒரே கட்டமாக நடைபெற்றது. நான்கு முனை போட்டி நிலவிய, சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு சாவடி மையங்களில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். அந்த வகையில்,  தமிழகத்தில் தமிழகத்தில் தேர்தல் திருவிழா ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க,  இன்று அதே நாளில் முக்கிய முகூர்த்த நாளும் கூட. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியவர். 
இது ஒரு புறம் இருக்க, முக்கிய சுப முகூர்த்த நாளான இன்று அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அஜித் சாக்கோவிற்கு இன்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு சுப முகூர்த்த உடையிலேயே கணவனும் மனைவியுமாக அஜித் சாக்கோ தம்பதியினர், ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட, சேலம் மாவட்டம் வலசையூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடி மையத்திற்கு வந்திருந்தனர். அப்போது ஜனநாயக கடமை ஆற்ற நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர் பெருமக்களும், பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவல்துறையினரும், தேர்தல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதிகாரிகள் உட்பட பணியாளர்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இதனை அடுத்து தங்களது வாக்குச்சாவடிக்குள் சென்ற புதுமண தம்பதியினர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவில் கலந்து கொண்டனர். 
திருமணம் முடித்த கையோடு சேலம் கிழக்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளரும் வழக்கறிஞருமான அஜித் சாக்கோ தனது மனைவியுடன் திருமண கோலத்தில் வாக்களிக்க வந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்பது மட்டும் நிதர்சனம். காலை 7 மணிக்கு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6:00 மணிக்கு நிறைவு பெற்றது. அந்த வகையில் ஆறு மணி நிலவரப்படி தமிழக முழுவதும் 84.51 விழுக்காடு வாக்குகளும், இதேபோல 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் மாவட்டத்தில் 90.28 விழுக்காடு வாக்கு பதிவு நடைபெற்று வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது கூடுதல் தகவலாக உள்ளது.
17வது தமிழக சட்டப்பேரவை காண தேர்தலில் தனது மனைவியுடன் ஜனநாயக கடமையாற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர பக்தனான சேலத்தைச் சேர்ந்த பாரப்பட்டி கனகராஜ்.

17வது தமிழக சட்டப்பேரவை காண தேர்தலில் தனது மனைவியுடன் ஜனநாயக கடமையாற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர பக்தனான சேலத்தைச் சேர்ந்த பாரப்பட்டி கனகராஜ்.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு. 

17 வது தமிழக சட்டப்பேரவை காண தேர்தலில் தனது மனைவியுடன் ஜனநாயக கடமையாற்றிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர பக்தனான சேலத்தைச் சேர்ந்த பாரப்பட்டி கனகராஜ். 

தமிழக சட்டப்பேரவைக்கான முதல் சட்டமன்றத் தேர்தல் கடந்த 1952 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2026 ஆம் ஆண்டிற்கான 17 வது, சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக இன்று தமிழக முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனிடையே சேலம் மாவட்டத்தில் உள்ள ரஜினி ரசிகர்கள் தாங்களாக முன்வந்து சேலத்தை சேர்ந்த ரஜினியின் தீவிர பக்தனாக பாரப்பட்டி கனகராஜ் தலைமையில் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அதிமுக தலைமையான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஏற்கனவே, இரண்டாயிரத்திற்கு அதிகமான ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று, எடப்பாடி யார் அவர்களின் இல்லத்தில்  அறிவித்திருந்தனர்.
அந்த வகையில் சமீப தினங்களாக சேலம் மாவட்டத்தின் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு தீவிர சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து அதிமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிக்க ரஜினியின் தீவிர ரசிகர்கள் சேலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டதை தமிழகமே திரும்பி பார்த்தது. அந்த வகையில் தேர்தல் நாளான இன்று ரஜினியின் தீவிர பக்தன் பாரப்பட்டி கனகராஜ் மற்றும் திருமதி பாரப்பட்டி கனகராஜ் ஆகியோர் சேலம் வீரபாண்டி தொகுதிக்கு உட்பட்ட பாரப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். 
மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகள் உட்பட தமிழகத்தில் பெரும்பாலான தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்று அதிமுக தலைமையிலான ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமையும் என்றும் பாரப்பட்டி கனகராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.

திங்கள், 20 ஏப்ரல், 2026

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிகழ்வு.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிகழ்வு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிகழ்வு.

அகில உலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர பக்தரான சேலம் பாரப்பட்டி கனகராஜ்  தனது ஆதரவாளர்கள் ஆயிரத்திற்கும்  மேற்பட்டோருடன் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து, வரும் சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர்களான தங்களின் ஆதரவை தெரிவித்தனர். முன்னதாக கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமான தனது ஆதரவாளர்கள் உடன் ஊர்வலமாக வந்த ரஜினி பக்தன் கனகராஜ் நெடுஞ்சாலை நகரில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை சந்தித்து தங்களது முழு ஆதரவினை 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வழங்கினர்.
பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்தும் ஆதரவு கடிதத்தினை வழங்கிய பாரப்பட்டி கனகராஜ் அவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது அவர் செய்தியாளரிடம் கூறுகையில், அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஒரு வருடத்திற்கு முன்பு  முடிவெடுத்து தலைமைக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும், இது தன்னுடைய தனிப்பட்ட முடிவு என்றும், சேலம் மாவட்டத்தில் மட்டும் 11 தொகுதிகளிலும்  ரஜினி ரசிகர்கள் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கனகராஜ் தெரிவித்தார்.

சனி, 18 ஏப்ரல், 2026

11 சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள். தொகுதி முழுவதும் ரஜினி ரசிகர்களுக்கு மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.

11 சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள். தொகுதி முழுவதும் ரஜினி ரசிகர்களுக்கு மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

11 சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ரஜினி ரசிகர்கள். தொகுதி முழுவதும் ரஜினி ரசிகர்களுக்கு மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. 

2026 சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் மாவட்டத்தில் அதிமுக திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதனிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நற்பணி மன்றம் கலைக்கப்பட்டாலும் கூட, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர பக்தரான பாரப்பட்டி கனகராஜ் தலைமையிலான ரஜினி ரசிகர்கள், அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடிக்கு பழனிச்சாமி அவர்களை சந்தித்து சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் ரஜினி ரசிகர்கள் ஆகிய நாங்கள் முழு ஆதரவு வழங்குவதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தனர். 
அந்த வகையில் கடந்த சில நாட்களாக 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர்கள், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடும் அதிமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதிமுக அரசின் சாதனைகள் குறித்தும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிக்காக சென்ற ரஜினி ரசிகர்களுக்கு சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து ஆரத்தி எடுத்தும் பட்டாசுகளை வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 
இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் மாவட்டம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு என்டிஏ கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக ஆதரவு திரட்டுவதும் வாக்குகளை சேகரிப்பதும் மாவட்ட மக்களிடையே மிகுந்து வரவேற்பினை பெற்றுள்ளது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. இந்த நிகழ்ச்சிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர்களும் நிர்வாகிகளுமான புருஷோத்தமன் இளம்பிள்ளை சின்னமணி, சூரமங்கலம் செல்வராஜ், குருமூர்த்தி, கிச்சிபாளையம் ரமேஷ், ராமன், சுக்கம்பட்டி பிரபு, தமிழ், பூபதி சித்தன், சண்முகம், நவீன் தங்கராஜ், யோகா ராஜா,சேட்டு ஸ்ரீதர், சீனி மற்றும் ஆலமரத்தான் உள்ளிட்ட ஏராளமானூர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வெள்ளி, 17 ஏப்ரல், 2026

சேலத்தில் அனைத்து மதத்தினர் கலந்து கொண்ட ஈகைப் பெருநாள் சந்திப்பு... மனிதநேய பண்பாளர் விருது வழங்கி அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநில இணைச் செயலாளர் ஷேக் இமாம் கௌரவிக்கப்பட்டார்.

சேலத்தில் அனைத்து மதத்தினர் கலந்து கொண்ட ஈகைப் பெருநாள் சந்திப்பு... மனிதநேய பண்பாளர் விருது வழங்கி அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநில இணைச் செயலாளர் ஷேக் இமாம் கௌரவிக்கப்பட்டார்.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் அனைத்து மதத்தினர் கலந்து கொண்ட ஈகைப் பெருநாள் சந்திப்பு... மனிதநேய பண்பாளர் விருது வழங்கி அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநில இணைச் செயலாளர் இமாம் மொஹீதின் கௌரவிக்கப்பட்டார். 

சேலம் பொன்னம்மாபேட்டை சுன்னத் ஜமாத் நிர்வாகம் சார்பாக இதயங்களை இணைக்கும் ஈகைப் பெருநாள் சந்திப்பை அனைத்து மதத்தினர் சார்பாக நடைபெற்றது. பள்ளிவாசலின் முத்தவல்லி சத்தார் மற்றும் செயலாளர் இனாமுல் ஹசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 
முன்னாள் 35வது கோட்ட மாமன்ற உறுப்பினர் நசீர் அகமது,  தற்போதைய 31 வது கோட்ட மாமன்ற உறுப்பினர்  சையது மூசா மற்றும்  அம்மாபேட்டை ஜமாத் நாயக் முத்தவல்லியும் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநில இணைச்செயலாளருமான  இமாம் மொஹிதின், வரலாற்றுச் சங்கம் சார்பாக டிராவல்ஸ் பாபு, தொழிலதிபர் ஈசன் எழில் விழியன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். 
இதில் கலந்து கொண்ட பலரும்  தங்களின் அழகிய கருத்துக்களை பகிர்ந்தனர். மேலும் தனது கருத்துக்களையும் பகிர்ந்த ஷேக் இமாம் அவர்களுக்கு சிறந்த மனிதநேய பண்பாளர் என்கின்ற அடிப்படையில் விருதையும் வழங்கி கௌரவித்தனர். தன்னை  கண்ணியப்படுத்திய ஜமாத்தார்களுக்கும் வல்ல இறைவனுக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் மாநில இணைச்செயலாளர் இமாம். மொஹிதின்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் விடுபட்ட தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை இடம்பெற செய்யும் வகையில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் விடுபட்ட தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை இடம்பெற செய்யும் வகையில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர்.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

அதிமுக தேர்தல் அறிக்கையில் விடுபட்ட தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை இடம்பெற செய்யும் வகையில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். 

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், வருகின்ற 23ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்தும் விவசாயிகளை தொலைநோக்குப் பார்வையுடன் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் வகையில், தமிழக விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கங்களில் வாங்கிய பயிர் கடன்கள் தள்ளுபடி, நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் நிலத்தடி நீரை செறிஊட்டும் வகையில், ஆற்று படுகைகளில் மழை வெள்ள உபரி நீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்கும் வகையில் தடுப்பணை கட்டப்படும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகளுக்கு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக கட்சி வழங்கிய காரணத்தினால், அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு தமிழக விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக கட்சி 2026 இல் தேர்தல் அறிக்கையில் தமிழக விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகளில் ஒரு சில கோரிக்கைகள் இடம்பெறவில்லை. இடம்பெறாத கோரிக்கைகள் தமிழக விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகள் ஆகும். தேர்தல் அறிக்கையில் தற்போது இடம்பெற செய்யும் வகையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தலைமையில், 14 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய படிவத்தை மாநில மற்றும் நிர்வாகிகள், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் நேரில் சந்தித்து வழங்கினர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே பல திட்டங்கள் நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது, தமிழகத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள 16 கூட்டுறவு ஆலைகள் மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளை மீட்டெடுத்து கரும்பு விவசாயிகளுக்கு நல்ல கொள்முதல் விலை கிடைக்கவும் எத்தனால் தயாரிக்க இனிவரும் காலங்களில் தாங்கள் வழிவகை செய்ய வேண்டும், தமிழகத்தில் தென்னை மற்றும் பனை கள்  கலப்படம் என்று கூறி தமிழக அரசு விதிக்கப்பட்டுள்ள நிரந்தர தடையை தென்னை மற்றும் பனை தொழிலாளர்களின் நலன் கருதி நீண்ட கால கோரிக்கையான கள்ளுக்கு தடை நீக்க ஏற்பாடு செய்ய வேண்டும் மற்றும் ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் எருமை மற்றும் பசும்பாலுக்கு தற்பொழுது கொடுக்கப்படும் விலையில் இருந்து இனிவரும் காலங்களில் 15 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 கோரிக்கைகள் அடங்கிய படிவத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சி அமைந்த உடன் தங்களது கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்ததாக வேலுச்சாமி நம்முடைய தெரிவித்தார்.

வியாழன், 16 ஏப்ரல், 2026

சேலம் விநாயக மிஷின் சேர்மன் டாக்டர் கணேசன் பிறந்த நாள் விழா. விம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு ரத்ததான முகாம்.

சேலம் விநாயக மிஷின் சேர்மன் டாக்டர் கணேசன் பிறந்த நாள் விழா. விம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு ரத்ததான முகாம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் விநாயக மிஷின் சேர்மன் டாக்டர் கணேசன் பிறந்த நாள் விழா. விம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு ரத்ததான முகாம். 

சேலம் விநாயக மிஷின் சேர்மனும், விம்ஸ் மருத்துவமனையின் தலைவர் மான டாக்டர் கணேசன் பிறந்த நாள் விழா சிறப்பு ரத்ததான முகாம் சேலம் அரியானுறை தாண்டியுள்ள மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. விம்ஸ் ரத்த வங்கியுடன் இணைந்து நடத்திய இந்த ரத்ததான முகாமிற்கு விம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார்.
விம்ஸ் அலைடு ஹெல்த் கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார், விம்ஸ் மருத்துவமனையில் துணை மருத்துவ இயக்குனர் அசோக், பொது மேலாளர்  வெங்கடேஷ், முதுநிலை மருத்துவர் ஈஸ்வரன், மருத்துவர்கள் கண்ணன் மற்றும் பிரபாகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு முகாமில், மருத்துவர்கள், செவிலியர்கள், அனைத்து துறை  மேலாளர்கள், ஊழியர்கள், விம்ஸ் ஹெல்த் அலாய்டு சயின்ஸ் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, குருதிக்கொடை வழங்கினர்.
அப்போது ரத்ததானம் செய்வதன் சிறப்பு மற்றும் அதன் அவசியம்  குறித்தும் ரத்த வங்கியின்  மருத்துவர் விக்னேஷ் மருத்துவர் களுக்கு விளக்கம் அளித்தார். இந்த நிகழ்வில் மேலாளர் கலை, மார்க்கெட்டிங் மேலாளர் அருள்மணி, செய்தி தொடர்பு துறை அலுவலர் கணேசன் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.