புதன், 15 ஜூலை, 2026

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

சேலம்,
S.K. சுரேஷ் பாபு. 

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக 15.07.2026 புதன்கிழமை  காலை 10.00 மணியளவில்  கல்லூரியின் ஸ்ரீ வள்ளியப்பா கலையரங்க கூடத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக நடைபெற்ற இந்த விழா குத்துவிளக்கேற்றுதலில்  துவங்கி இனிதே ஆரம்பமானது.  கல்லூரியின் ஆங்கிலத்துறை தலைவர் முனைவர். ஜி.அனுராதா அவர்கள் அனைத்து  மாணவர்களையும் வரவேற்றார். கல்லூரியின் தலைவர் திரு சொ.வள்ளியப்பா அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரியின் துணைத் தலைவர்கள் திரு.சொக்கு வள்ளியப்பா, திரு . தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோனா தொழில்நுட்பக் கல்லூரி  முதல்வர் முனைவர். எஸ் . ஆர்.ஆர் செந்தில்குமார் அவர்கள்  மற்றும் தியாகராஜா பல்தொழில் நுட்பக் கல்லூரி , வள்ளியப்பா பப்ளிக் பள்ளியின் இயக்குநர் முனைவர். வி.கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். கல்லூரியின் முதல்வர் முனைவர் கு.மை காதர் நவாஸ் அவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களையும் அவர்களின்  பெற்றோர்களையும் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த திரு. ஜெய் கிருஷ்ணன் Partner & Head of investments, Beyond Next Ventures, Bengaluru  அவர்கள் பெற்றோர் மாணவர்களிடையே சிறப்புரை நிகழ்த்தினார். பள்ளி காலத்தில் இருந்து கல்லூரி வாழ்க்கைக்கு அடி எடுத்து வைக்கும் சிறப்பினையும், மாணவர்கள் எவ்வாறு தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் குறித்து பேசினார். கல்லூரியின் தலைவர் திரு . சொ.வள்ளியப்பா அவர்கள் பேசும் பொழுது மாணவர்கள் கல்லூரி பருவத்தை நன்முறையில் அமைந்து கொண்டு பெற்றோர்களைப் பேணி பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்வின் நிறைவாக உயிர்த்தொழில் நுட்பவியல் துறைத்தலைவர் முனைவர். எம் .புவனேஸ்வரி அவர்கள் நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பெருமகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு பெருமை சேர்த்தனர்.
கல்வி வளர்ச்சி நாளின் தந்தையான கர்மவீரரின் 124 வது பிறந்தநாள் விழா. தாதை.  சேகோ. ரவிக்குமார் தலைமையில் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் ஐயாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

கல்வி வளர்ச்சி நாளின் தந்தையான கர்மவீரரின் 124 வது பிறந்தநாள் விழா. தாதை. சேகோ. ரவிக்குமார் தலைமையில் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் ஐயாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

கல்வி வளர்ச்சி நாளின் தந்தையான கர்மவீரரின் 124 வது பிறந்தநாள் விழா. தாதை.  சேகோ. ரவிக்குமார் தலைமையில் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் ஐயாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

தமிழக முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் (ஜூலை 15) ஆண்டுதோறும் தமிழக அரசால் 'கல்வி வளர்ச்சி நாளாக' (Educational Development Day) கொண்டாடப்படுகிறது. ஏழை மாணவர்களின் கல்விக்காக அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம் மற்றும் இலவச சீருடைத் திட்டங்களை நினைவுகூரும் வகையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது. அந்த வகையில் கர்மவீரரின் 124 வது பிறந்தநாள் விழா சேலத்தில் உள்ள பல்வேறு அமைப்பினரால் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சேலம் 2- வது அகாரம் பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சரும் கல்விச் செம்மலுமான கர்மவீரர் காமராஜரின் திரு உருவ சிலைக்கு சேலம் மாவட்ட மக்கள் சிந்தனையாளர் சங்கத்தைச் சேர்ந்த சேலம்  தாதை.சேகோ.ரவிக்குமார் தலைமையில் ஐயாவின் திருவுரு சிலைக்கு பல்வேறு அமைப்பின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

கர்மவீரர் காமராசர் அவர்களுடைய 
124 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 
அவருடைய திரு உருவ சிலைக்கு 
மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
இன்றைய நிகழ்வில்,  
திரு O.S. கணேஷ், சேலம் மாவட்ட மக்கள் சிந்தனையாளர் சங்க தலைவர்,
திரு சிவசுப்பிரமணியன் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர், 
திரு பிரபு, சமூக நல பேரவை தலைவர், கவிஞர் திரு மா. புகழேந்தி, 
கவிஞர் திரு செல்வராசா, 
சமூக ஆர்வலர்கள் 
 திரு ஜெயவேல் , திரு குணசேகரன், திரு மனோகரன், திருமதி ஸ்ரீ நீலா உள்ளிட்ட ஒரு கலந்து கொண்டு கர்மவீரரின் பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.

திங்கள், 13 ஜூலை, 2026

கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறக்க ஒரே அணியாக திரண்டு வந்து காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பெறுவதற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அழைப்பு.

இது தொடர்பாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி விடுதுள்ள அழைப்பு கடிதத்தில், தமிழ்நாட்டிற்கு இந்த ஆண்டுக்கு உண்டான காவிரி பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா அரசு திறந்துவிடாததை கண்டித்து  அங்கு உள்ள அணைகளில் இருக்கும் காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறக்க  உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் இளம் விவசாயிகள் சங்கம், விவசாய முன்னேற கழகம் மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்க அமைப்புக்கள் இணைந்து நாளை மறுநாள் 15.7.2026 அன்று  புதன்கிழமை காலை 11 மணிக்கு  தமிழக எல்லையான ஓசூர் E S I மருத்துவமனை பகுதியில்  இருந்து,  தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி கர்நாடகா சென்று அங்கு உள்ள அணைகளில்  தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை திறக்கப்படவுள்ளது. எனவே காவிரி பாசனத்தை நம்பியுள்ள  விவசாயிகள் மற்றும்  தமிழகத்தில் காவிரியை  குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ள  22 மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், இளைஞர்கள்  பல தரப்பட்ட அமைப்பை சார்ந்தவர்கள் அனைவரும் ஒரே அணியாக திரண்டு வந்து காவிரி உரிமை பங்கீட்டு தண்ணீரை பெறுவதற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

ஞாயிறு, 12 ஜூலை, 2026

சேலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம். ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனரும் தலைவருமான அதியமான் கலந்து கொண்டு நான்கு மாவட்ட நிர்வாகிகளுடன் முக்கிய முடிவு.

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்து அரசியல் கட்சியினரின் கோரிக்கையாகவே இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் திருவா கவுண்டனூரில் நடைபெற்றது. ஆதித்தமிழர் பேரவையின் சேலம் மத்திய மாவட்ட செயலாளரும் மாநில துணைச் செயலாளருமான ஏ.டி.ஆர். சந்திரன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் 4 மாவட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்த கூட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனரும் தலைவருமான அதியமான் தலைமை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், பேரவையின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. தொடர்ந்து  தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதன் அவசியம் குறித்தும் அதன் தேவைகள் குறித்தும் நிறுவனரும் தலைவருமான அதியமான் 4 மாவட்ட நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். நான்கு மாவட்ட நிர்வாகிகள் பல்வேறு ஆலோசனைகளையும் தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசும் போது, தமிழக அரசு தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது என்றும் அண்டை மாநிலங்களை போன்று தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் வேண்டுமென்று கூறிய ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் உள் ஒதுக்கீடு நியமனம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் ஆதிதிராவிடர் என்பது தனிப்பட்ட ஜாதி என்பதை குறிப்பதால் ஒட்டுமொத்த ஆதிதிராவிடர் நலத்துறையும் சமூக நீதித்துறை என மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றார். மேலும் அவர் கூறுகையில் தமிழக அமைச்சரவையில் 3 அருந்ததியருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றும் தற்பொழுது ஒருவர் மட்டுமே அமைச்சர்  பதவியில் உள்ளதாகவும், ஆதிதிராவிடர் பெயரை மாற்றி சொல்வதால் நாங்கள் திராவிடத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்றும் அதியமான் குறிப்பிட்டார்.

வெள்ளி, 10 ஜூலை, 2026

வெள்ளி தங்கம் மற்றும் நகை தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க ஆவணம் செய்ய வேண்டும். சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நல சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..

சேலம் மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் முக்கிய பாரம்பரிய தொழில்களில் ஒன்றாக வெள்ளி கொலுசு உற்பத்தி தொழிலும் கருதப்படுகிறது. அந்த வகையில் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நலச் சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜ் தெரிவித்துள்ளதாவது, 
வெள்ளி மற்றும் தங்க நகை தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க ஆவணம் செய்ய வேண்டும் என்றும் சேலம், சென்னை, மதுரை, திருச்சி, விருதுநகர் மற்றும் விழுப்புரம் உட்பட தமிழகம் முழுவதும் வெள்ளி மற்றும் தங்கம் தொழிலில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தாருடன் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தனி நலவாரியம் அமைத்து தர என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் தமிழக அரசுக்கு வெள்ளி மற்றும் தங்க நகை தொழில்களில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் நகை விற்பனையில் வரியாக செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் வெள்ளி மற்றும் தங்க நகை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இதுவரை தமிழக அரசின் எந்த விதமான நல வாரியத்திலும் எந்தவிதமான பலன்களும் கிடைக்கவில்லை எனவே உடனடியாக தமிழக அரசு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என்றும் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நலச்சங்கத்தின் சார்பாக சேலம் வெள்ளி குலத்திற்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் புவிசார் குறியீடு பெறுவதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என்றும் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நலச் சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்தராஜன் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 9 ஜூலை, 2026

கர்நாடக அணைகளில் உள்ள காவிரி உரிமை பங்கிட்டு தண்ணீரை திறக்க வலியுறுத்தி கர்நாடக எல்லையில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம். காவிரி பாசன வசதி பெரும் அனைத்து விவசாயிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும். சுற்றறிக்கையின் வாயிலாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அழைப்பு.

இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சேர்ந்த மாநில தலைவர் சுற்றறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளதாவது,
தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டிற்கு உண்டான காவிரி பங்கேற்று தண்ணீரை கர்நாடகா அரசு திறந்து விடாததை கண்டித்து, அங்குள்ள அணைகளில் இருக்கும் காவிரி உரிமை பங்கிட்டு தண்ணீரை திறக்க உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் இளம் விவசாயிகள் சங்கம் இணைந்து வருகின்ற 15.7.2026 அன்று காலை 11 மணியளவில் தமிழ்நாடு கர்நாடகா எல்லையான ஓசூர் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை பகுதியில் இருந்து தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி கர்நாடக சென்று அங்குள்ள அணைகளில் காவிரி உரிமை பங்கேற்று தண்ணீரை திறக்க கோரி போராட்டம் நடத்த உள்ளோம். 
எனவே தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை பங்கேற்று தண்ணீரை திறக்க தமிழ்நாட்டில் உள்ள காவிரி பாசனம் பெரும் அனைத்து விவசாயிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி சுற்றறிக்கையின் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.

திங்கள், 6 ஜூலை, 2026

அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்திற்கு புதிய  சேலம் மாவட்ட செயலாளராக சேலத்தைச் சேர்ந்த சண்முகம் நியமனம்.

அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவராக இருப்பவர்  அருள்வேலன் ஜி. தமிழகம் உட்பட தேசிய அளவில் மாவட்டங்கள் தோறும் பொறுப்பாளர்கள் உள்ள நிலையில் அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் ஆக சேலத்தைச் சேர்ந்த சிறந்த ஆன்மீகவாதியான சண்முகம் அவர்களை,  அருள்வேலன் ஜி நியமனம் செய்துள்ளார். 
இதற்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ள சிறந்த ஆன்மீகவாதியான சண்முகம். மேலும் சேலம் மாவட்டத்தின் புதிதாக பொறுப்பேற்றுள்ள சண்முகம் ஜி அவர்களுக்கு,  ஆன்மீகம் மற்றும் திருக்கோவில்கள் சார்ந்த சேவை பணி சிறக்க மாநகரத்தில் உள்ள பெரும்பாலான முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.