வியாழன், 14 நவம்பர், 2024

சேலத்தில் தனியார் விடுதியில் தனது பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடிய மகிழ்ந்த காங்கிரஸ் நிர்வாகி.

சேலத்தில் தனியார் விடுதியில் தனது பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடிய மகிழ்ந்த காங்கிரஸ் நிர்வாகி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் தனியார் விடுதியில் தனது பிறந்தநாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடிய மகிழ்ந்த காங்கிரஸ் நிர்வாகி. 

ராகுல் ஸ்போர்ட்ஸ் பிரிவின் தேசிய தலைவராக இருப்பவர் விஜயலட்சுமணன். தனது 50 ஆவது பிறந்த நாளான இன்று சேலம் குரங்கு சாவடி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நண்பர்கள் உற்றார் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்கிறார். அவருக்கு நண்பர்கள் மாலை அணிவித்து தலைப்பாகை கட்டியதுடன் பிரம்மாண்ட கேக்கை வெட்டி நண்பர்கள் உற்றார் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஊட்டி மகிழ்ந்தார். 
தொடர்ந்து பிறந்தநாள் கொண்டாடிய காங்கிரஸ் நிர்வாகிக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தியதுடன் அவருடன் சேர்ந்து நண்பர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். 
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் குமரேசன், கோபி குமரன் உட்பட திரளானோர் கலந்து கொண்டு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.
ஈரோட்டில் குழந்தைகள் தின விழா விழிப்புணர்வு நடைபயண பேரணி துவக்கி வைத்து ஆட்சியர் வாழ்த்து

ஈரோட்டில் குழந்தைகள் தின விழா விழிப்புணர்வு நடைபயண பேரணி துவக்கி வைத்து ஆட்சியர் வாழ்த்து

ஈரோட்டில் குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு, விழிப்புணர்வு நடைபயண பேரணியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்து வாழ்த்து தெரிவித்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தை நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், குழந்தைகள் தினவிழாவினை முன்னிட்டு, விழிப்புணர்வு நடைபயண பேரணியினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா துவக்கி வைத்தார்.

ஆண்டு தோறும் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (நவ.14) குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நடைபயண பேரணியினை துவக்கி வைத்து, நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டு நம் மாவட்டத்தை குழந்தைகள் பாதுகாப்பு மிக்க மற்றும் நலமிக்க மாவட்டமாக உருவாக்கிடுவோம். வளமான எதிர்காலத்திற்கு இணைந்திருப்போம் என வாழ்த்து தெரிவித்தார்.

இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கி, சம்பத் நகர் வழியாக சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியரகத்தை வந்தடைந்தது. இப்பேரணியில் குழந்தைகளுக்கான உரிமைகளை நாம் உறுதி செய்வோம், போக்சோ வழக்குகளை உடனே புகால் அளிப்போம், நாங்கள் குழந்தை திருமணத்தை ஆதரிக்கமாட்டோம், குழந்தைகள் பாலியல் குற்றங்களை ஒழிப்போம், நீங்கள் தனியாக இல்லை.


உதவிக்கு அழைக்கவும் 1098, குழந்தைகளுக்காக போதைப்பொருட்கள் இல்லா மாவட்டமாக மாற்றுவோம், பாலினத்தேர்வு நிலையற்ற குழந்தைகள் அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொள்வோம் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர். இப்பேரணியில் தன்வந்திரி நர்சிங் கல்லூரி, அரசு தொழிற் பயிற்சி நிறுவனம், வேளாளர் கல்லூரி, நந்தா நர்சிங் கல்லூரி, ஜே.கே.கே. நர்சிங் உள்ளிட்ட கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழியை அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து, குழந்தைகள் தின விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் மாவட்ட ஆட்சியர் குழந்தைகள் தின விழிப்புணர்வு பலூன்களை பறக்க விட்டு, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்தார். தொடர்ந்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அனைவருக்கும் வழங்கினார்.


இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள்) பூங்கோதை, மாவட்ட சமூகநல அலுவலர் சண்முகவடிவு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி உட்பட அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அரசு, தனியார் மருத்துவர்கள் ஸ்டிரைக்: போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளித்த ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர்

அரசு, தனியார் மருத்துவர்கள் ஸ்டிரைக்: போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளித்த ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர்

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று (நவ.13) மாலை 6 மணி அளவில் தொடங்கியுள்ளனர். அவர்களின் போராட்டம் இன்று (நவ.14) மாலை 6 மணி வரை நடைபெற்றது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் நேற்று மாலை 6 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் சுமார் 400 தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் 1,200 மருத்துவர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுகுறித்த விவரம் மருத்துவமனை முன்பு உள்ள போர்டில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் அதே சமயம் அவசர சிகிச்சை பிரிவு வழக்கம் போல் செயல்பட்டது.

இதேபோல் ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் இன்று 70க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், புறநோயாளிகள் பிரிவில் போலீஸ் பாதுகாப்புடன் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேசன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்.

ஆனால் அதே சமயம் அவசர சிகிச்சை பிரிவு வழக்கம் போல் செயல்பட்டது. மருத்துவர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனையின் நுழைவுவாயில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அங்குள்ள வெளிப்புற சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு என அனைத்து பகுதிகளிலும் சுற்றி வந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல் இதேபோல் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டாலும் பயிற்சி மருத்துவர்கள், பிற மருத்துவர்கள் கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதேபோல்,மாவட்டத்தில் உள்ள அனைத்தும் அரசு மருத்துவமனைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகநாயகன் கமல்ஹாசனின் 70-வது பிறந்தநாள் விழா.. மக்கள் நீதி மையம் கட்சியினர் ஆர்வத்துடன் குருதிக்கொடை.

உலகநாயகன் கமல்ஹாசனின் 70-வது பிறந்தநாள் விழா.. மக்கள் நீதி மையம் கட்சியினர் ஆர்வத்துடன் குருதிக்கொடை.


சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

உலகநாயகன் கமல்ஹாசனின் 70-வது பிறந்தநாள் விழா.. மக்கள் நீதி மையம் கட்சியினர் ஆர்வத்துடன் குருதிக்கொடை. 

தமிழகத் திரை உலகில் உலக நாயகனும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான பத்மஸ்ரீ கமலஹாசனின் 70 வது பிறந்தநாள் விழா அந்த கட்சியினரால் இன்று வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் சேலம் அரசு  மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கிக்கு தங்களது குருதிகளை தானமாக வழங்கினர்.
மக்கள் நீதி மையம் கட்சியின் சேலம் மண்டல தலைவர் கே காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கமல்ஹாசன் நற்பணி மன்றத்தின் மாவட்ட அமைப்பாளர் இஸ்மாயில், நகர செயலாளர் அம்ஜத், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட அமைப்பாளர் சத்யா என்கின்ற சத்தியமூர்த்தி மற்றும் ஊடகத்துறை மாவட்ட செயலாளர் அனிதா உட்பட 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கிக்கு தங்களது குருதிகளை கொடையாக வழங்கினர். 
மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா குறித்து மக்கள் நீதி மைய சேலம் மண்டல செயலாளர் கே காமராஜ் செய்தியாளரிடம் கூறுகையில், கமலஹாசன் அவர்களின் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் தங்களது மன்றம் மற்றும் கட்சியின் சார்பில் எழுச்சி உடன் கொண்டாடப்பட்டு வருவதாகவும், நடப்பாண்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் குருதிக்கொடை வழங்குதல் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிப் பணிகளையும் தொடர்ந்து விரைவுப் படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
சேலம் 9-வது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு.

சேலம் 9-வது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் 9-வது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு. 

60 கோட்டங்களை உள்ளடக்கியது சேலம் மாநகராட்சி.  குறிப்பாக சேலம் 9-வது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொது மக்களின் நலன் கருதி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டவர்கள் திட்ட  பணிகள் அனைத்தையும் மாமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞருமான தெய்வலிங்கம் நாள்தோறும் அதிகாலை முதல் தனது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் நடைபெற்று முடிந்த பணிகளை பொதுமக்களுக்கு அர்ப்பணித்தும் தனது வாழ்வை மாநகர குறிப்பாக ஒன்பதாவது போட்ட மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து வருகிறார். 
இதன் தொடர்ச்சியாக இன்று சேலம் மாநகராட்சியின் 9-வது கோட்டத்திற்கு உட்பட்ட அல்லி குட்டை ஏரியை ஆய்வு செய்ய, மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான தெய்வலிங்கம் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சேலம் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு இந்த ஏரி நீரில் கழிவுநீர் ஏதேனும் கணக்கின்றதா இதனால் பொது மக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 
தொடர்ந்து 9-வது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணிகளையும் மாமன்ற உறுப்பினர் கைலிங்கம் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொது மக்களுக்கு அர்ப்பணிக்க உத்தரவிட்டனர்.

புதன், 13 நவம்பர், 2024

மாநிலம் முழுவதும் 24 மணி நேரம் தனியார் மருத்துவர்கள் ஸ்டிரைக்: ஐ.எம்.ஏ., மாநில தலைவர் பேட்டி

மாநிலம் முழுவதும் 24 மணி நேரம் தனியார் மருத்துவர்கள் ஸ்டிரைக்: ஐ.எம்.ஏ., மாநில தலைவர் பேட்டி

சென்னை, கிண்டி மருத்துவமனையில் அரசு மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டார். 
இச்சம்பவத்தை கண்டித்து மாநில அளவில் டாக்டர்கள் போராட்டத்தை துவங்கி உள்ளனர். இந்நிலையில், இந்திய மருத்துவ சங்க மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது. 
ஈரோட்டில் இருந்து மாநில தலைவர் டாக்டர் அபுல்ஹசன் பங்கேற்று பேசினார். பின்னர், நிருபர்களிடம் டாக்டர் அபுல்ஹசன் கூறுகையில், 

சென்னை கிண்டி மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவம், டாக்டர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவத்தை கண்டித்தும், டாக்டர் பாலாஜி மீது தாக்குதல் நடத்தியவர் மீது தண்டனை சட்டம் 48/2008 ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியும், டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு கோரி நேற்று மாலை, 6:00 மணி முதல் இன்று மாலை, 6:00 மணி வரை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். 

அதன்படி போராட்டம் நடந்து வருகிறது.
இப்போராட்டத்தில் மாநில அளவில், 7,900 தனியார் மருத்துவமனைகள், 28,000 கிளினிக்களில் பணியாற்றும், 45,000 டாக்டர்கள் பங்கேற்கின்றனர். அவசர சிகிச்சை பிரிவு வழங்கம் போல இயங்கும். புறநோயாளிகள் பிரிவு, அவசரம் அல்லாத, அறுவை சிகிச்சைகள் போன்றவை செய்யப்பட மாட்டாது என கூறினார்.
ஈரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்ற ஜவுளி வியாபாரிகள் கால அவகாசம் கேட்டு அதிகாரிகளிடம் கோரிக்கை

ஈரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்ற ஜவுளி வியாபாரிகள் கால அவகாசம் கேட்டு அதிகாரிகளிடம் கோரிக்கை

ஈரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்ற ஜவுளி வியாபாரிகள் கால அவகாசம் கேட்டு அதிகாரிகளிடம் கோரிக்கை

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட நகரின் முக்கிய சாலைகளில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

அதன்படி இன்று முதல் 15ம் தேதி வரை 4 நாட்களுக்கு, மாநகராட்சியின் பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று ஈரோடு மாநகரின் ஜவுளிக்க என்ன பிரத்யேகமான வியாபார இடமாக விளங்கும் மணிக்கூண்டு முதல் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் வரையிலான பகுதியில், சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது.

இதில், சாலையோரத்தில் நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் மற்றும் மேற்கூரைகள் மற்றும் நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள் ஆகியவை அகற்றப்பட்டன. 

மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஸ்வரன்சிங் தலைமையில், நெடுஞ்சாலை துறையினர் முன்னிலையில், மாநகராட்சி பணியாளர்கள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியையொட்டி, காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 
தொடர்ந்து, பன்னீர் செல்வம்பூங்கா பகுதியில் இருந்து, மீனாட்சி சுந்தரனார் சாலையில் அரசு மருத்துவமனை ரவுண்டானா வரையிலும், அங்கிருந்து, மேட்டூர் ரோட்டில், பேருந்து நிலையம் அருகில் சத்திரோடு ரவுண்டானா வரையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவுள்ளன. 

ஏற்கனவே பன்னீர்செல்வம் பார்க்க முதல் மணிக்கூண்டு பகுதி பஸ் நிலையம் ஸ்வஸ்திக் கார்னர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அகற்றப்பட்டன. ஆனால் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. 

இந்த முறை பெயரளவுக்கு மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.