செவ்வாய், 14 ஜனவரி, 2025

சேலத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து ஆரிய வைசிய முன்னேற்ற பேரவை மற்றும் மக்கள் சட்ட உரிமை கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

சேலத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து ஆரிய வைசிய முன்னேற்ற பேரவை மற்றும் மக்கள் சட்ட உரிமை கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து ஆரிய வைசிய முன்னேற்ற பேரவை மற்றும் மக்கள் சட்ட உரிமை கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

திருவள்ளுவர் தினம் இன்று உலக தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 
இதன் ஒரு பகுதியாக ஆரிய வைசிய முன்னேற்ற பேரவை மற்றும் தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பு மற்றும் மக்கள் சட்ட உரிமைகள் கழகத்தின் சார்பில் திருவள்ளுவர் தினமான இன்று அவரது திருவுருவ சிலைக்கு அமைப்புகளின் நிறுவனத் தலைவர் டாக்டர் நாகா. அரவிந்தன் மற்றும் ஆர்.வி.பாபு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
அப்போது, 1330 குறள்கள் அடங்கிய புத்தகத்தையும் அமைப்பின் நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகித்தனர். சேலம் மாநகரின் மையப்பகுதியில் மிகவும் இக்கட்டான சூழலில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையில் ஏறி மாலை அணிவித்து மரியாதை செய்ய மிகவும் சிரமமாக உள்ளது என்று தெரிவித்தனர்.
ஆகவே இந்த அசவுகரியத்தை நீக்கி பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் எளிமையாக மேலே சென்று மாலை அணிவித்து மரியாதை செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தமிழக அரசுக்கும் சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அமைப்பின் நிர்வாகிகள் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சேலத்தில் திருவள்ளுவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின்  சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

சேலத்தில் திருவள்ளுவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் திருவள்ளுவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின்  சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

திருவள்ளுவர் தினம் இன்று உலக தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக சேலம் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 
இதன் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஐயன் திருவள்ளுவர் சிலைக்கு கட்சியின் விளையாட்டு அணி மாநில செயலாளர் பிரசாத் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்ச்சியில், உறுதி மொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி பிரசாரம்

ஈரோடு கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் முத்துசாமி பிரசாரம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை ஆதரித்து அமைச்சர் சு.முத்துசாமி பெரியார் நகரில் நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார்.
இந்த பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் முத்துசாமி, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் எந்த விதி மீறலும் இருக்கக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம். எந்த அதிகாரத்தையும் பிரயோகிக்கவில்லை.

நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டது குறித்து கேட்டபோது, போட்டி இருக்கத்தான் செய்யும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. தந்தை பெரியார் குறித்து பேசிய பிறகு இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் போட்டியிடுவது குறித்து கேட்ட போது தற்போது இதுகுறித்து எதையும் கூற முடியாது.

எந்த விதி மீறலும் இல்லை திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளோம். ஏற்கனவே கொடுத்துள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும் பிரச்சாரத்திற்கு செல்லும் போது பொதுமக்கள் கருத்து தெரிவித்தால் தேர்தல் முடிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த பிரச்சாரத்தின் போது திமுக எம்பி.,க்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ், மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு வாக்குகளை சேகரித்தனர்.
9 புதுப் பானைகளில் பொங்கலிட்டு தூய்மை பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்த 9 வது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினர்.

9 புதுப் பானைகளில் பொங்கலிட்டு தூய்மை பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்த 9 வது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினர்.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு. 

9 புதுப் பானைகளில் பொங்கலிட்டு தூய்மை பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்த 9 வது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினர். 

கலை இலக்கியம் பண்பாடு கலாச்சாரம் என அத்தனையிலும் முத்தாய்ப்பாய்த் திகழும், உலகின் மூத்த மொழி தமிழ் மொழியை உயிரெனக் கருதிக் காத்துப் போற்றிடும் உலக தமிழர்களால் வெகு உற்சாகமாக தை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. 
இதன் ஒரு பகுதியாக 60 கோட்டங்களை உள்ளடக்கிய சேலம் மாநகராட்சியில் 9-வது கோட்ட மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான தெய்வலிங்கம் தனது கோட்டத்திற்கு உட்பட்ட வாய்க்கால் பட்டறை பகுதியில் 9 புதுப்பானைகளில் துப்புரவு பணியாளர்களால் பொங்கல் இடப்பட்டு இயற்கைக்கு நன்றி செலுத்தும் இதமாக தமிழர் திருவிழாவினை கொண்டாடினார். 
சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் மற்றும் தொழிலதிபர் இராசி சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு இந்த சமத்துவ பொங்கல் விழாவினை துவக்கி வைத்தார். 9 புதுப் பானைகளில் பொங்கலிடப்பட்டு பொங்கல் பொங்கி வரும் போது அங்கு திரண்டு இருந்த அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று வாழ்த்து கோஷம் முழங்க இயற்கைக்கு நன்றி செலுத்தி சிறப்பு பூஜையினை மேற்கொண்டனர்.
அதுமட்டுமல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டிகளில் களம் காண தயாராக இருக்கும் சீறிப்பாயும் காளைகளுக்கும் சிறப்பு பூஜைகளை மேற்கொண்டு இயற்கைக்கு நன்றி செலுத்தப்பட்ட இந்த சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டன. 
இந்த சமத்துவ பொங்கல் விழாவில் கட்சி நிர்வாகிகள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் அந்த பகுதி முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் கழண்டு கொண்டனர்.
சமத்துவ பொங்கல் மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுடன் கொண்டாடி மகிழ்ந்த  அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர்.

உலகத் தமிழர்களால் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் சார்பாக சேலம் பெரமனூர் காமராஜர் நகர் பகுதியில் உள்ள அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகம் அருகே சமத்துவ பொங்கல் விழா மற்றும் குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை நடைபெற்றன. 
அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாநிலத் துணைத் தலைவர் ஈரோடு ஜெயராமன், வழிகாட்டு குழு தலைவர் ஆசிர்வாதம் மற்றும் சேலம் மாவட்ட தலைவர் அம்பேத்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த விழாவில், 11-வது கோட்ட மாமன்ற உறுப்பினர் திருமதி வசந்தா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். சமத்துவ பொங்கல் விழா எழுச்சியாகவும் கோலாகலமாகவும் நடைபெற்ற  தைப்பொங்கலை சிறப்பிக்கும் விதமாக சிறுவர்களுக்கு சாக்கு பை கட்டி எதிரி குதித்து வரும் போட்டி, வயிற்றில் முறுக்கு கட்டி எகிரி சாப்பிடும் போட்டி, சிறியவர் மற்றும் பெரியவர்களுக்கான டீ ஸ்பூன் எலுமிச்சை பழம் போட்டி, பெண்களுக்கான கோலப்போட்டி, சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம், உறியடித்தல் போட்டி, இசை நாற்காலி போட்டி, குவளையில் தண்ணீர் நிரப்புதல் போட்டி, பலூன் ஊதி உடைத்தல் போட்டி மற்றும் கூடையில் பந்து ஏறுதல் போட்டி ஊழிட்டவைகள் நடத்தப்பட்டன. 
இதில் கலந்து கொண்ட குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டு தங்களது முழு திறமைகளையும் வெளிப்படுத்தி வெற்றி பெறும் முனைப்புடன் விளையாடி மகிழ்ந்தனர்.
இந்த சமத்துவ விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற நபர்களுக்கு முதல் மூன்று பரிசுகளும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் ஆறுதல் பரிசு ஆகியவையும் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் அமைப்பின் மாநகர தலைவர் முருகன் மாணவரணி செயலாளர் சார்லஸ் உட்பட நிர்வாகிகள் சித்தையன் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திங்கள், 13 ஜனவரி, 2025

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 10ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 10ம் தேதி துவங்கியது. திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக, பாஜக இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து போட்டியிடுகிறது. கோபி அருகே உள்ள ஓடத்துறையைச் சேர்ந்த மா.கி.சீதாலட்சிமி வேட்பாளர் என சீமான் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வருகின்ற பிப்ரவரி 5ம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மா.கி.சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் நிறைஞர்) போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் நடைபெற்ற சர்வம் விருதுகள் 2025 வழங்கும் விழா. சேலத்தைச் சேர்ந்த டாக்டர் நாகா. அரவிந்தன் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகளுக்கான விருது வழங்கி கௌரவிப்பு.

சர்வம் கல்வி அறக்கட்டளையின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த சமுதாய சேவை செய்துபவர்களை கௌரவிக்கும் வகையில் சர்வம் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் சிறந்த சமூக சேவையை தொடர்ச்சியாக செய்து வரும் சேலத்தைச் சேர்ந்த ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவரும், தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனமான Dr. டாக்டர் நாகா. அரவிந்தன் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகளுக்கான சர்வம் விருதுகள் 2025 வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இதுபோன்ற சேவைகளை  தொடர்ந்து மேற்கொள்ள விழாவின் போது அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது.
நாமக்கல் ஸ்பிரோ பிரைம் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற விழாவில் சர்வம் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலையில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோஷ் குமார் மற்றும் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு 2025 சிறந்த சமூக சேவகருக்கான சர்வம் விருதினை Dr. நாகா அரவிந்தன் அவர்களுக்கு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர். 
ஏற்கனவே கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் மற்றும் தேசிய அளவில் இவரது சேவையை பாராட்டி ஏராளமான விருதுகளை சேலத்தை சேர்ந்த மிகச்சிறந்த சமூக சேவகர் டாக்டர் நாகா அரவிந்தன், குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.