வியாழன், 20 பிப்ரவரி, 2025

சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே வழக்கறிஞர்கள் கொலை முயற்சியில் தாக்கப்பட்ட விவகாரம். சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம். வழக்கறிஞர்களின் உயிர் பாதுகாப்பை வலியுறுத்தி ஒவ்வொருவருக்கும் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வழங்க வேண்டும். SDCBA தலைவர் இமயவரம்பன் கோரிக்கை.

சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே வழக்கறிஞர்கள் கொலை முயற்சியில் தாக்கப்பட்ட விவகாரம். சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம். வழக்கறிஞர்களின் உயிர் பாதுகாப்பை வலியுறுத்தி ஒவ்வொருவருக்கும் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வழங்க வேண்டும். SDCBA தலைவர் இமயவரம்பன் கோரிக்கை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே வழக்கறிஞர்கள் கொலை முயற்சியில் தாக்கப்பட்ட விவகாரம். சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம். வழக்கறிஞர்களின் உயிர் பாதுகாப்பை வலியுறுத்தி ஒவ்வொருவருக்கும் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வழங்க வேண்டும். SDCBA தலைவர் இமயவரம்பன் கோரிக்கை. 

சமீபகாலமாக தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே பணியில் சீருடைகள் இருக்கும் வழக்கறிஞர்களை தாக்கும் சம்பவங்களும் கொலை செய்யும் சம்பவங்களும் தொடர்கதை ஆகி வருகிறது என்றே கூறலாம். இது போன்ற சம்பவங்களுக்கு அவ்வப்போது ஒவ்வொரு மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தங்களது எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தி வந்த வண்ணம் தான் உள்ளனர். என்றாலும் தொடர்ந்து அரங்கேறி வரும் இதுபோன்ற சம்பவங்களுக்கு மத்தியில் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் சீருடைகளில் இருந்த வழக்கறிஞர்கள் கவின் மற்றும் தண்டபாணி ஆகிய வழக்கறிஞர்களை வரலாற்று கூற்று பதிவேடு குற்றவாளிகள் இருவர் கஞ்சா போதையில் தாக்கியதோடு மட்டுமல்லாமல் கூர்மையான ஆயுதம் கொண்டு அவர்களை கொலை செய்யும் முயற்சியிலும் ஈடுபட்ட சம்பவம் சேலம் மாவட்ட வழக்கறிஞர்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அதிருத்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம். இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்த 8 காவலர்கள் இந்த சம்பவத்தை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது வேதனையை அழிப்பதாக உள்ளது என்று சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தினரால் தங்களது ஆதங்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இரண்டு வழக்கறிஞர்களும் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது அங்கு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களை மிரட்டி உள்ளார். 
வழக்கறிஞர்களின் உயிர் பாதுகாப்பிற்கு கேள்விக்குறியாக்கும் இந்த சம்பவத்தை கண்டித்து சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற உலகத்தின் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் இமயவரம்பன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் முருகன் மற்றும் கண்ணன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் திரளானோர் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். அப்போது SDCBA தலைவர் இமயவரம்பன் நம்மிடைய குருகையில், சேலம் நீதிமன்ற வளாகத்தில் கொலை முயற்சி தாக்குதல் சம்பவம் நடைபெற்றதை அடுத்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களை மிரட்டிய அஸ்தம்பட்டி சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மீதும், நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் நின்றிருந்த 8 எட்டு காவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட கொடூர குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின்  கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறிய அவர், இது போன்ற சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை தமிழக அரசு முறையாக கையாளவில்லை என்பதே காட்டுகிறது என்பதால் மற்றவர்களின் நலனுக்காக உழைக்கும் தங்களை போன்ற வழக்கறிஞர்களுக்கு துப்பாக்கிகளை வைத்துக் கொள்வதற்கு உண்டான உரிமத்தை வழங்க வேண்டும் என்றும் வழக்கறிஞர்களின் உயிர் பாதுகாப்பிற்கு தமிழக அரசின் மீது நம்பிக்கை இல்லை என்ற காரணத்திற்காக இந்த கோரிக்கையை முன் வைப்பதாக SDCBA தலைவர் இமயவரம்பன் தெரிவித்தார்.
      

புதன், 19 பிப்ரவரி, 2025

மாநிலத்தின் முழு விருப்பமும் 2 மொழி கொள்கையே. அதை மைய அரசு மதிக்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் எம்.யாகூப் பேட்டி

மாநிலத்தின் முழு விருப்பமும் 2 மொழி கொள்கையே. அதை மைய அரசு மதிக்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் எம்.யாகூப் பேட்டி

மாநிலத்தின் முழு விருப்பமும் 2 மொழி கொள்கையே. அதை மைய அரசு மதிக்க வேண்டும்: மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் எம்.யாகூப் பேட்டி.
ஈரோட்டில் கட்சி அலுவலகத்தில் நடந்த கட்சியின் 17 வது ஆண்டு விழாவில் பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதிய கல்வி கொள்கை என்றாலும் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நிரலின் படி மக்கள் மீது இந்தியை திணிப்பதே மெய் அரசின் உண்மையான நோக்கம். எந்தவொரு இந்திய மொழியையும் படிக்க அக்கொள்கை அனுமதிக்கிறது. எனினும் இப்பிரச்சினையில்
மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். 

மற்ற மாநிலங்கள் இந்த கொள்கையை செயல்படுத்தத் தொடங்குகின்றனவா என்பதையும், எத்தனை மாநிலங்கள் தங்கள் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கத் தொடங்கியுள்ளன என்பதையும் இந்த ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும். பாப்ரி மஸ்ஜித் பிரச்சினையில், சங்பரிவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மசூதி கட்டமைப்பை சேதப்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்தனர். ஆனால் அவர்கள் மஸ்ஜித்தை இடித்தனர். 

எனவே புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் எதிர்காலத்தில் இந்தி திணிக்க மாட்டார்கள் என்று மக்கள் எப்படி நம்ப முடியும். எனவே, நாங்கள் இந்த கொள்கையை முற்றிலும் நிராகரிக்கிறோம்.  இதேபோல், முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தலா 3 தனிநபர் சட்டம் உட்பட 300 க்கும் மேற்பட்ட தனிப்பட்ட சட்டங்கள் தேசத்தில் உள்ளன. இந்துக்களிடையே கூட தனிப்பட்ட சட்டங்களில் வேறுபாடுகள் உள்ளன. ஆனால் முஸ்லிம்களைத் பாதிக்கும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர பாஜக அரசு முயல்கிறது.

எதிர்க்கட்சி கருத்துக்களை நிராகரிப்பதன் மூலம் முஸ்லிம்களின் வக்ஃப் சொத்துக்களை பறிக்க வக்பு வாரிய மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் நலனுக்காக பாஜக எதுவும் செய்யவில்லை. சிக்கந்தர் ஹில் மற்றும் தர்கா முஸ்லிம்களுக்கு சொந்தம் என்றாலும், பல விவகாரத்தில் பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்ப திருப்பரங்குன்றம் பிரச்சினையை பாஜக எழுப்புகிறது. பாஜக வின் முக்கிய நோக்கம் ஆர்.எஸ்.எஸ்ஸின் நிகழ்ச்சி நிரலை அமல்படுத்துவதாகும் என்றார். 

கட்சியின் நிர்வாகிகள் சித்திக், ரிஸ்வான், லரிப், சலீம், சுல்தான், அமீர் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஈரோடு மாநகராட்சியில் நடமாடும் வாகனம் மூலம் வரி வசூல்

ஈரோடு மாநகராட்சியில் நடமாடும் வாகனம் மூலம் வரி வசூல்

ஈரோடு மாநகராட்சியில் 2024-2025ம் நிதி ஆண்டுக்கான சொத்துவரி, குடிநீர் வரி, தொழில் வரி, குப்பை வரி உள்ளிட்ட வரிகளோடு, கடந்த ஆண்டு வரை நிலுவையில் உள்ள வரியையும் வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 31ம் தேதிக்குள் 100 சதவீத வரியை வசூலிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக, மாநகராட்சியில் உள்ள வரி வசூலிப்பு மையங்கள் விடுமுறை நாட்களிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜி பே, போன் பே ஆகிய செயலிகள் மூலமாகவும் வரிகள் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் 400 ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களும் வரி வசூலிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வரி செலுத்தாத வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, கடைகளுக்கு 'சீல்' வைப்பு போன்ற நடவடிக்கைகளும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், மாநகராட்சியில் நடமாடும் வாகனம் மூலம் வரி வசூல் செய்யும் பணி நேற்று தொடங்கி உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது. ஈரோடு மாநகராட்சியில் தினசரி ஒரு வார்டு வீதம், மொபைல் வாகனம் மூலம் வரி வசூலிக்கப்படும். வரி செலுத்துவோருக்கு, வாகனத்திலேயே ரசீதும் வழங்கப்படும். பொதுமக்களின் வீட்டுக்கே சென்று வரி வசூலிப்பதால், அவர்களுக்கான நேரம் மிச்சப்படுகிறது என்றனர்.
அந்தியூர் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

அந்தியூர் வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் ஈரோடு ஆட்சியர் ஆய்வு


அந்தியூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (பிப்.19) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பல்வேறு அரசு அலுவலகங்களில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின் போது, அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், எண்ணமங்கலம் ஊராட்சியில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் 1 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.2 லட்சம் மானியத்தில் நிரந்தர கல்பந்தல் அமைத்து விவசாயம் செய்து வரும் ஜயப்பிரதாப் என்பவரின் காய்கறி தோட்டத்தினையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ், 1 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.2 லட்சம் மானியத்தில சிப்பம் கட்டும் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளதை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் 1 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.95 ஆயிரம் மானியத்தில சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டு, விவசாயிகளுடன் திட்டம் குறித்து கேட்டறிந்தார். இயற்கை முறையில் விவசாயம் செய்து வருவதாகவும், மேலும் வாரத்திற்கு சுமார் 1.50 டன் அளவில் காய்கறிகள் ஏற்றுமதி செய்து வருவதாவும் விவசாயி மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து, எண்ணமங்கலம் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.3.13 கோடி மதிப்பீட்டில் 40.4 மீட்டர் நீளத்திற்கு எண்ணமங்கலம்- செலம்பூரம்மன்கோயில் வரை இணைப்பு பாலம் கட்டப்பட்டு வருவதையும், செங்காடு கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் 5 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களின் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறித்து கேட்டறிந்தார். மேலும் நடப்பு கல்வியாண்டில் 100 சதவீதம் தேர்ச்சி ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

தொடர்ந்து, சின்னதம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, புற நோயாளிகள் பிரிவு, பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகளின் இருப்பு ஆகியவை குறித்து கேட்டறிந்தார். மேலும், கீழ்வாணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரம் சேமிப்பு கிடங்கு மற்றும் மூங்கில்பட்டி நியாய விலைக்கடையில் ஆய்வு மேற்கொண்டு அத்தியாவசிய பொருட்களின் இருப்பு மற்றும் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) லோகநாதன், வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கணேசன், அந்தியூர் வருவாய் வட்டாட்சியர் கவியரசு மற்றும் அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், அமுதா உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
பெருந்துறை அருகே மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலி பறிக்க முயன்ற 2 பேர் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு

பெருந்துறை அருகே மூதாட்டியிடம் இருந்து தங்க சங்கிலி பறிக்க முயன்ற 2 பேர் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த கம்புளியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே மொபட் வாகனத்தில் வயதான தம்பதியினர் சென்று கொண்டிருந்தனர். அந்த மொபட்டில் பயணம் செய்த நல்லம்மாள் (வயது 66) என்ற மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை குறிவைத்து அவர்களது வாகனத்தை மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.
தனியார் பள்ளி அருகே மொபட்டை நிறுத்தியதும், அந்த 2 வாலிபர்களும் நல்லம்மாள் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்தனர். மூதாட்டி சங்கிலியை பலமாக பிடித்து கொண்டதால் அவர்கள் தங்க சங்கிலியை பறிக்க முடியாமல் தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது மூதாட்டி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு பிடிபட்ட நபர்களை சரமாரியாக தாக்கினர்.

அந்தப் பகுதி மக்கள் அவர்களுடைய கை, கால்களை கட்டி போட்டு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் பெருந்துறை போலீசாருக்கு தகவல் அளித்து அவர்கள் இருவரையும் போலீசில் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து, பிடிபட்ட வாலிபர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறையை சேர்ந்த சூரியபிரகாஷ் (26), கௌதம் (24) என்பதும் வழிப்பறியில் ஈடுபடுவதற்காக நோட்டமிட்டு வரும் வழியில் சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. 

இவர்களில் சூரிய பிரகாஷ் நாமக்கல்லில் உள்ள ஒரு வெல்டிங் ஒர்க் ஷாப்பில் வெல்டிங் பணி செய்து வந்ததும், கௌதம் பெருந்துறையில் உள்ள ஒரு அட்டை கம்பெனியில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் ஏற்கனவே வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கிறார்களா, வேறு ஏதேனும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களா என்பது குறித்து பெருந்துறை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் வரும் 22ம் தேதி 102, 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோட்டில் வரும் 22ம் தேதி 102, 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோட்டில் வரும் 22ம் தேதி அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்களான 102, 108ல் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

102 சேவையில் சுகாதார ஆலோசனை அதிகாரியாகவும், 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளராகவும் பணிபுரிவதற்கான வேலை வாய்ப்பு முகாம் வருகிற 22ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அமைந்துள்ள டிபி ஹாலில் நடக்கிறது.

102ல் சுகாதார அதிகாரியாக பணிபுரிய அடிப்படை தகுதிகளான, பிஎஸ்சி நர்சிங், ஜி என் எம், ஏ என் எம் முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 19 முதல் 30க்கு முகாமல் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.

108ல் மருத்துவ உதவியாளர்களுக்கான அடிப்படைத் தகுதிகளான, பிஎஸ்சி நர்சிங். அல்லது ஜி என் எம், ஏ என் எம், டி எம் எல் டி (12 ஆம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைஃப் சயின்ஸ், பிஎஸ்சி, ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி, இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு தேர்வு அன்று 19க்கு குறையாமலும் 30க்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாத ஊதியமாக ரூ.16,020 வழங்கப்படும். மருத்துவ நேர்முகம் உடற்கூறியியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பான, மற்றும் மனிதவளத்துறை நேர்முகத் தேர்வுகள் நடைபெறும்.

முகாமில் தேர்வு தேர்வு செய்யப்படுபவர்கள் 50 நாட்கள் முழுமையான வகுப்பறை பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் விவரங்கள் அறிய 7338894971, 8925941108 எண்களை தொடர்பு கொள்ளலாம் என 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2025

சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா. பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை மேயர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா. பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை மேயர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா. பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை மேயர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 

சேலம் கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் நல்லி தலைமையில் நடைபெற்ற விழாவில், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான அமான் என்கின்ற நாசர்கான் உள்ளிட்டோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழாவை தொடக்கி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் விளையாட்டு விழாவிற்கான தீபம் ஏற்றப்பட்டு, தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் கலந்துகொண்ட மாணவர்கள் ஆர்வத்துடன் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி விளையாடினர். இது மட்டுமில்லாமல் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான ஆமான் என்கின்ற நாசர்கான் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ரவி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் நசீர்அகமது உட்பட பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.