சனி, 22 பிப்ரவரி, 2025

ஈரோடு: வெள்ளோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் ரவுண்டானா அமைக்கும் பணி; அமைச்சர், ஆட்சியர் நேரில் ஆய்வு

ஈரோடு: வெள்ளோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் ரவுண்டானா அமைக்கும் பணி; அமைச்சர், ஆட்சியர் நேரில் ஆய்வு

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் சாலைகளை அகலப்படுத்தி ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது. இதனை, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.6.99 கோடி மதிப்பீட்டில் ஈரோடு சென்னிமலை சாலை வரை, சாலை முழுவதும் நகரப்பகுதியில் அகலப்படுத்துதல், வலுப்படுத்துதல் மற்றும் சிறுபாலம் திரும்பக்கட்டுதல், குழாய் பாலம் அகலப்படுத்துதல், பாதுகாப்பு சுவர் கட்டுதல் நடைபாதையுடன் கூடிய வடிகால் கட்டுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதைத் தொடர்ந்து, அவர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, சாலை போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு ஏற்படுத்தாத வகையில் சாலைகளை அகலப்படுத்திட வேண்டும் எனவும், சாலைகளை தரமாக அமைத்து உரிய உரிய காலத்தில் பணிகளை முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், பெருந்துறை ஆர்.எஸ். - அறச்சலூர் சாலை ரூ.2 கோடி மதிப்பீட்டில் சாலை சந்திப்பு மேம்பாடு செய்தல், சிறுபாலங்கள் மற்றும் தடுப்புச்சுவர கட்டும் பணி முடிவுற்றதைத் தொடர்ந்து, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின் போது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.ஜவகர், கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) ரமேஷ்கண்ணா, உதவி பொறியாளர் மணிகண்டன், வட்டாட்சியர் செல்வகுமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

நம்முடைய சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மூன்றாவது மொழி கட்டாயம் தேவை: ஈரோட்டில் பாஜகவின் மாநில துணைத்தலைவர் கே.பி ராமலிங்கம் பேச்சு

நம்முடைய சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மூன்றாவது மொழி கட்டாயம் தேவை: ஈரோட்டில் பாஜகவின் மாநில துணைத்தலைவர் கே.பி ராமலிங்கம் பேச்சு

ஒவ்வொரு இந்தியனும் மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு மொழியை படிக்கணும். இதில் என்ன தவறு இருக்கிறது. நம்முடைய சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மூன்றாவது மொழி கட்டாயம் தேவை என பாஜகவின் மாநில துணைத்தலைவர் கே.பி ராமலிங்கம் ஈரோட்டில் பேச்சு..!

ஈரோடு தெற்கு வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் ஈரோடு சித்தோடு மாரியம்மன் கோவில் அருகே நடைபெற்றது .
ஈரோடு பாஜகவின் தெற்கு மாவட்ட தலைவர் எஸ் எம் செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வடக்கு மாவட்ட தலைவர் எஸ் எம் செந்தில்குமார், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.கே சரஸ்வதி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாநிலத் துணைத் தலைவர் கோகுலகிருஷ்ணன், மாநிலத் துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து விளக்கி பேசினார்,

பாஜகவின் மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் பேசுகையில், பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து இதுவரை 11 நிதி நிலை அறிக்கைகளை பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தந்திருக்கிறார். 

இந்த பதினோரு நிதிநிலை அறிக்கைகளில் ஒரு நிதிநிலை அறிக்கை கூட தேர்தலுக்கான நிதி நிலை அறிக்கை கிடையாது. திமுகவை போல் ஒவ்வொரு தேர்தலுக்குமான நிதிநிலை அறிக்கையாக இல்லாமல், 2042 ல் சுதந்திர நூற்றாண்டை கொண்டாடுகிறபோது.

 இந்தியா வல்லரசு நாடாக கொண்டு வர வேண்டும் என்பதுதான் பாரத பிரதமரின் லட்சியம். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களே வரவேற்கின்ற தலைவராக நமது பாரத பிரதமர் விளங்கி வருகிறார். உலக நாடுகளில் பல்வேறு நாடுகளுக்கு உதவுகின்ற நாடாக இந்தியா விளங்கி வருகிறது.

மோடி அவர்களை கெட் அவுட் மோடி என்று போட்டால் நான் கெட் அவுட் ஸ்டாலின் என்று போடுவேன் என போட்டதில் ஆறு மணி நேரத்தில் 10 லட்சம் பேர் கெட்டவள் ஸ்டாலின் என பதிவிட்டுள்ளனர்.

இங்கு அமர்ந்துள்ள மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், தமிழ்நாடு சட்டப்பேரவையில், மத்திய அரசு அறிவித்துள்ள அறிவிப்பில் மூன்றாவது மொழி ஹிந்தி படிக்க வேண்டும் என எங்கேயாவது கூறியுள்ளதா.? என்ற கேள்வியை கேளுங்கள்.

 ஒவ்வொரு இந்தியனும் மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு மொழியை படிக்கணும். இதில் என்ன தவறு இருக்கிறது, நம்முடைய சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மூன்றாவது மொழி கட்டாயம் தேவை என்பதுடன், மத்திய அரசு கொடுக்கின்ற நிதியை திருடி பதுக்கி வைத்து கொண்டு, வருகின்ற சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக, கல்விக்கான நிதியை இந்த திமுக அரசு கேட்கிறது என குற்றம் சாட்டினார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் சீமான் நின்னதுக்கே ஆயிரம் ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்கினர். முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு முட்டாள் என கலைஞர் கூறியதாக நினைவு கூர்ந்த கேபி ராமலிங்கம், மேலும் கூறுகையில், இதுவரை மத்திய அரசிடம் இருந்து பெற்ற விதிக்கான கணக்குகளை மத்திய அரசுக்கு தமிழகத்தில் உள்ள உதயச்சந்திரன் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் முறையாக வழங்கவில்லை என்பதுடன், துறை வாரியாக கடந்த ஆண்டுகளில் மத்திய அரசால் கொடுக்கப்பட்ட நிதிக்கான முழுமையான அறிக்கையை கொடுக்க வேண்டும்.

திமுகவை எதிர்ப்பவர்கள் தனித்தனியாக பிரிந்து நிற்கின்றனர் என மிகவும் ஆணவமாக கணக்கு போடுகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகள், சொத்துக்கள், தமிழக அரசிடம் தற்போது ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அந்த முதலமைச்சருக்கே இந்த நிலை என்றால், மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சபரீசன் சம்பாதித்த பணத்தை நாட்டுடைமையாக்க தெரியாதா? இது மிக மிக விரைவில் நடைபெறும் என்றார்.

வியாழன், 20 பிப்ரவரி, 2025

புதிய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் 2-நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம். கிழக்கிந்திய கம்பெனியை போல இந்திய பார் கவுன்சில் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு விடும். சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இமயவர்மன் குற்றச்சாட்டு.

புதிய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் 2-நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம். கிழக்கிந்திய கம்பெனியை போல இந்திய பார் கவுன்சில் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு விடும். சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இமயவர்மன் குற்றச்சாட்டு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

புதிய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் 2-நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம். கிழக்கிந்திய கம்பெனியை போல இந்திய பார் கவுன்சில் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு விடும். சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இமயவர்மன் குற்றச்சாட்டு. 

இந்திய பார் கவுன்சில் மத்திய அரசுக்கு வழக்கறிஞர்களுக்கு எதிராக உள்ள சட்ட மசோதாவை வாபஸ் பெற கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள அம்சங்களை வலியுறுத்தி தமிழகம் உட்பட நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் இரண்டு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பிலும் இரண்டு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 
இந்த நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் குறித்து SDCBA தலைவர் இமயவரம்பன் அவர்கள் சங்க நிர்வாகிகள் கண்ணன் உள்ளிட்டோருடன் கூறுகையில், இந்திய சட்டம் பயின்றவர்கள் இந்திய பார் கவுன்சிலில் உறுப்பினராக சேர்ந்து உறுப்பினராக அனுமதித்தவர்கள் மட்டுமே நீதிமன்றங்களில் பணியாற்ற முடியும். 
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள லண்டன் ஆஸ்திரேலியா அமெரிக்கா LAW FORM வாயிலாக அங்கு இருந்தபடியே வழக்கறிஞர்கள் இந்தியாவில் ஜூம் மீட்டிங் வாயிலாக வழக்கு நடத்திக் கொள்ளலாம். இதன் காரணமாக இந்திய வழக்கறிஞர்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளவர்கள். இந்திய வழக்கறிஞர்கள் வழக்காடிகளுக்காக குறைந்த கட்டணத்தில் வழக்காடி வருகின்றோம். இந்த புதிய சட்ட மசோதாவின் காரணமாக ஆரம்ப காலகட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனி எப்படி இந்தியாவை எப்படி ஆக்கிரமித்ததோ பின்பு அவர்கள் வைத்தது தான் சட்டம் என்றாகும் என்றது போல அவர்கள் கொண்டு வரும் புதிய சட்டங்கள் இந்திய அரசு கொண்டு வந்து விடும் என்ற நிலை உள்ளது. இது போன்ற அம்சங்களை எதிர்த்து தான் இந்திய வழக்கறிஞர்கள் தங்களது பாதுகாப்பிற்காக போராட்டத்தை நடத்தி வருவதாகவும், புதிய மசோதாவால் வழக்கறிஞர்களின்  பாதுகாப்பை கருதி போராட்டம் நடத்தினாலும் கூட கண்டம்ட் ஆப் தி கோர்ட் நடவடிக்கை எடுத்து போராடும் வழக்கறிஞர்களை விடுவித்து விடலாம் என கூறப்படுகிறது. இது இந்திய அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்கிய உரிமையை பறிப்பதாக உள்ளது என்று SDCBA தலைவர் இமயவரம்பன் குற்றம் சாட்டியுள்ளார். 
வழக்கஞ்சர்களின் இந்த நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தின் காரணமாக நீதிமன்ற பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம்.
தேய்பிறை அஷ்டமி: தென்னக காசி காலபைரவர் கோயிலில் பாலாபிஷேகம்

தேய்பிறை அஷ்டமி: தென்னக காசி காலபைரவர் கோயிலில் பாலாபிஷேகம்

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தென்னக காசி காலபைரவர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தங்கள் திருக்கரங்களால் காலபைரவருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அடுத்த ராட்டைச் சுற்றி பாளையத்தில் தென்னக காசி காலபைரவர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 39 அடி உயர காலபைரவர் சிலை நுழைவு வாயிலாக கொண்டுள்ளது. அதேபோல் கோயிலை சுற்றிலும் 64 கால பைரவர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் சிறப்பம்சமாக எங்கும் இல்லாத வகையில் பக்தர்கள் மற்றும் பெண்கள் கருவறைக்குள் சென்று சிலையை தொட்டு வணங்கி பாலாபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர். 

தென்னக காசி காலபைரவர் கோயில் ஆன்மீகக்குரு விஜய் சுவாமிஜி தலைமையில் தினசரி காலை மற்றும் மாலை இருவேளைகளில் காலபைரவருக்கு ஸ்வர்ணஷாசன பைரவருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் வெள்ளிக்கிழமை, பௌர்ணமி, அமாவாசை மற்றும் சிறப்பு நாட்களில் அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் காலபைரவருக்கு உகந்த நாளான தேய்பிறை அஷ்டமி நாளில் பக்தர்கள் தங்கள் திருக்கரங்களால் கருவறைக்குள் உள்ள காலபைரவர் சொர்ணகாசன பைரவருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தென்னக காசி காலபைரவர் கோயிலில் இருவேளை பாலாபிஷேக பூஜை நடைபெற்றது. ஆன்மீகக்குரு விஜய் சுவாமிஜி தலைமையில் பாலாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஈரோடு மட்டுமல்லாமல் திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சென்னை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநருமான டி.என்.வெங்கடேஷ் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பெஜ்ஜில்பாளையம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.46.87 லட்சம் மதிப்பீட்டில் பர்கூர் துணை சுகாதார மையம் கட்டப்பட்டு வருவதை அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, பெஜ்ஜில்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு தயாரிக்கும் சமையல் கூடம், உணவின் தரம், காலை உணவிற்கான சமையல் பொருட்களின் இருப்பு ஆகியவற்றை கேட்டறிந்து மாணவர்களுக்கு உணவினை தரமானதாகவும், உரிய நேரத்தில் வழங்குமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், மாணவர்களின் கல்வி தரம் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் வருகை, எடை, உயரம், பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, பர்கூர் பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.49.74 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டப்பட்டு வருவதையும், செல்லம்பாளையம் பர்கூர் கொள்ளேகால் சாலையில் ரூ.70 லட்சம் மற்றும் அதே பகுதியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 தடுப்புச்சுவர்களையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருத்துகள் இருப்பு, பணியாளர்களின் வருகை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், சுகாதார நிலையத்திற்கு வருகை புரிந்த பொதுமக்களிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, எண்ணமங்கலம் ஊராட்சி செங்காடு பகுதியில் தானியங்கி நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மேல்நிலை தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்வது குறித்தும், அதே பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள், ஆதிரெட்டியூர் முதல் எண்ணமங்கலம் வரை 2.7 கி.மீ தூரத்திற்கு ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணி நடைபெற்று வருதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து, கெட்டிசமுத்திரம் ஊராட்சி, புதுராசாங்குளம் குக்கிராமத்தில் மத்திய அரசின் மாநில அரசிற்கான சிறப்பு உதவித் திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நூலகம் கட்டப்பட்டுள்ளதையும், அந்தியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் 5 கூடுதல் வகுப்புறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, அந்தியூர் அரசு மருத்துவமனையில் ரூ.4.25 கோடி மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் கீழ் 2 தளங்களுடன் வரவேற்பறை, பிரசவ அறை, புறநோயாளிகள் பிரிவு, பாலூட்டும் தாய்மார்கள் அறை, அறுவை சிகிச்சை அரங்கு, கழிப்பறை, பல் சிகிச்சை பிரிவு, காத்திருப்பு அறை, பெண்களுக்கு ஊசி செலுத்துமிடம், குழந்தைகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு விரைவில் பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, அந்தியூர் அத்தாணி தவுட்டுப்பாளையம் பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சிறுபாலம் மற்றும் 76 மீட்டர் நீளத்தில் வடிகால் அமைக்கும் பணியினையும், அந்தியூர் பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.23.97 கோடி மதிப்பீட்டில் 6,850 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியினை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.

இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் 36 இடங்களில் முதல்வரின் மருந்தகம் அமைக்கப்பட உள்ள நிலையில், நசியனூர் பகுதியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் முதல்வரின் மருந்தகம் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அர்பித் ஜெயின், பவானி உட்கோட்ட பொறியாளர் (நெடுஞ்சாலைத்துறை) ரமேஷ் கண்ணா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், அந்தியூர் வட்டாட்சியர் கவியரசு, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், அமுதா, உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

அந்தியூரில் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்து ஈரோடு ஆட்சியா் ஆய்வு

அந்தியூரில் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் குறித்து ஈரோடு ஆட்சியா் ஆய்வு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் நேற்று (பிப்.19) தொடங்கிய உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட ஆய்வுப் பணியானது காலை 9 முதல் இரவு வரை பல்வேறு இடங்களில் நடைபெற்றது. மேலும், அனைத்துத் துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் இருந்து 150 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக, 2வது நாளான இன்று (பிப்.20), அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், பச்சாம்பாளையம் ஊராட்சி அண்ணாமடுவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினை அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தினசரி வரப்பெறும் பால் கொள்ளளவு, சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஈவுத் தொகை ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

மேலும், அதே பகுதியில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவு சரிவிகித அளவில் கலந்துள்ளதா என கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, அந்தியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு வழங்க தயாராக இருந்த உணவினை சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டு, பள்ளியில் வழங்கப்படும் உணவின் வகைகள் குறித்து மாணவ, மாணவியர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், அந்தியூர் அரசு பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு விடுதியில் உள்ள சமையலறை, மாணவர்கள் கழிவறை, மாணவர்கள் பயிலும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வராஜ், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
சேலத்தில் விசிக பிரமுகர்களால் மிகப் பெரிய பொருட்டு அளவில் அமைக்கப்பட்ட சுவர் விளம்பரம் சேதம். சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விசிக பிரமுகர் லெனின் குமார் முக்கிய நிர்வாகிகளுடன் COP அலுவலகத்தில் புகார் மனு.

சேலத்தில் விசிக பிரமுகர்களால் மிகப் பெரிய பொருட்டு அளவில் அமைக்கப்பட்ட சுவர் விளம்பரம் சேதம். சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விசிக பிரமுகர் லெனின் குமார் முக்கிய நிர்வாகிகளுடன் COP அலுவலகத்தில் புகார் மனு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் விசிக பிரமுகர்களால் மிகப் பெரிய பொருட்டு அளவில் அமைக்கப்பட்ட சுவர் விளம்பரம் சேதம். சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விசிக பிரமுகர் லெனின் குமார் முக்கிய நிர்வாகிகளுடன் COP அலுவலகத்தில் புகார் மனு. 

ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் ஏன் உலகத் தமிழர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் கட்சியின் மாநில மாவட்ட உறுப்பினர்கள் தமிழக முழுவதும் ஆங்காங்கே சுவர் விளம்பரங்கள் விளம்பர பதாகைகளை வைப்பது வழக்கம். அதன் அடிப்படையில் சேலம் வடக்கு மாவட்ட விசிக சார்பில் சேலம் மணல்மேடு மற்றும் பாரதி வித்யாலயா பள்ளி இடைப்பட்ட பகுதியில் மிகப்பிரமாண்டமான அளவில் அதிகப்படியான பொருட்செலவில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் விசிக மாநகர் மாவட்ட துணை செயலாளர் திருமதி காயத்ரி ஆகியோர்களது புகைப்படங்களை மையப்படுத்தி சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட சுவர் விளம்பரத்தில் உள்ள தொல் திருமாவளவன் மற்றும் திருமதி காயத்ரி ஆகியோரது உருவப்படங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் சேலம் மாநகர் மாவட்ட விசிக துணை செயலாளர் திருமதி காயத்ரி என்ற பெயரையும் வெள்ளை பூச்சால் அளித்துள்ளனர்.
இது அந்த விளம்பரத்தை வெளிப்படுத்திய நபர்களிடையே அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது என்றே கூறலாம். 
இதனை அடுத்து சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த விசிக சேலம் மாநகர் மாவட்ட துணை அமைப்பாளர் மற்றும் இளைஞர் எழுச்சி பாசறையில் சேலம் வடக்கு என்ற பொறுப்பில் உள்ள பிரமுகர் லெனின்குமார் என்பவர் சேலம் மாநகர காவல் துறை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுப்பதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடன் வந்திருந்தார். 
புகார் மனு அளிக்கப்பட்டது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில துணை செயலாளர் நம்மிடையே கூறுகையில், தங்களது கட்சியின் வளர்ச்சியை பிடிக்காமல் சிலர் அது யாராக இருக்கட்டும் அவர்கள் இந்த படுபாதக செயலில் ஈடுபட்டுள்ளனர.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சேலம் மாநகர காவல் துறை ஆணையாளர் அவர்கள் இரும்புக்கரம் கொண்டு கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய அளவிலான மக்கள் திரள் போராட்டம் நடத்தப்படும் என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்தார் விசிக ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில செயலாளர் பாவேந்தன். 
மனுவினை பெற்றுக்கொண்ட சேலம் மாநக காவல்துறை ஆணையர் அவர்கள் யாராக இருப்பினும் அவர்களை பாரபட்சம் பார்க்காமல் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவைத்துள்ளார் என விசிக பிரமுகர்கள் புகார் மனு அளித்த பிறகு நம்மிடையே தெரிவித்தனர்.
இந்த புகார் மனு அளிக்கும் நிகழ்வின் கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் கட்சியினர் என ஏராளமான உடன் இருந்தனர்.