ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

சேலத்தில் ஆடிப்பெரு விழாவை ஒட்டி அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் வழிபாடு மகளிர் மன்றத்தின் சார்பில் நான்காம் ஆண்டு பால்குட ஊர்வலம்.

சேலத்தில் ஆடிப்பெரு விழாவை ஒட்டி அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் வழிபாடு மகளிர் மன்றத்தின் சார்பில் நான்காம் ஆண்டு பால்குட ஊர்வலம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் ஆடிப்பெரு விழாவை ஒட்டி அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் வழிபாடு மகளிர் மன்றத்தின் சார்பில் நான்காம் ஆண்டு பால்குட ஊர்வலம். 

சேலம் லைன்மேடு பிள்ளையார் நகரில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோவிலில் ஆடி பெருவிழா வெகு உற்சாகமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 11-ம் தேதி முகூர்த்த நாள் நடும் விழா உடன் தொடங்கிய ஆடிப்பெருக்கு விழாவில் பூச்சாட்டுதல் கம்பம் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் இன்று அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் வழிபாடு மகளிர் மன்றத்தின் சார்பில் நான்காவது ஆண்டு பால் குட ஊர்வலம் நடைபெற்றது. தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் சிவசங்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நிர்வாகிகள் சம்பத் முருகன் பெருமாள் தேவராஜ் அண்ணாமலை மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து திருக்கோவிலில் உள்ள மூலவர்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அடுத்து கோவில் வளாகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட பால்குடம் ஊர்வலம் தொடங்கியது. அந்தப் பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த பால்குடர் ஊர்வலமானது இறுதியில் கோவிலை அடைந்தது. இதனை அடுத்து ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆகியோருக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் மூலவர்கள்  பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இதனை எடுத்து வரும் ஆறாம் தேதி பொங்கல் வைபவம் மற்றும் உருளுதண்டம் நிகழ்வுகளும் தொடர்ந்து ஏழாம் தேதி ஊஞ்சல் உற்சவம் அதனை அடுத்து வரும் ஒன்பதாம் தேதி மஞ்சள் நீராட்டுடன் விழா இனிதே  நிறைவு பெறுகிறது.
ஆடி 18 தினத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நீர்மோர் மற்றும் கம்மங்கூழ் வழங்கி மகிழ்ந்த சொர்ணாம்பிகை நிறுவன குழுமத்தார்.

ஆடி 18 தினத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நீர்மோர் மற்றும் கம்மங்கூழ் வழங்கி மகிழ்ந்த சொர்ணாம்பிகை நிறுவன குழுமத்தார்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு. 

ஆடி 18 தினத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நீர்மோர் மற்றும் கம்மங்கூழ் வழங்கி மகிழ்ந்த சொர்ணாம்பிகை நிறுவன குழுமத்தார். 

தமிழ் மாதங்களில் வரும் ஆடி மாதத்திற்கும் புராண நிகழ்வான மகாபாரதத்திற்கும் நீண்ட நெடிய தொடர்பு உண்டு என்பது யாராலும் மறுக்கவோ மறந்திடவும் முடியாது. அந்த வகையில் ஆடி 18 தினத்தன்று நீர் நிலைகளில் புதுமண தம்பதிகள் காளி மாற்றி சிறப்பு பூஜைகள் மேற்கொள்வதும் பொதுமக்கள் தங்களது மூதாதையருக்கு திதி கொடுத்து வழிபடுவதும் வழக்கமான ஒன்றாகவே உள்ளது அதன் அடிப்படையில், சேலம் மாவட்டத்தில் மேட்டூர் உட்பட அனைத்து நீர் நிலைகளிலும் இன்று மக்கள் வெள்ளம் அலை மோதியதை கண்கூடாக காண முடிந்தது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரம் மாமாங்கம் ஊத்திக்கிணறு முனியப்பன் திருக்கோவிலில் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் உள்ள பல்வேறு திருக்கோவில்களின் சம்பந்தப்பட்ட கடவுள்களால் பட்டு வரும் ஆயுதங்கள் அனைத்தும் இந்த ஒரு நாளில் சம்பந்தப்பட்ட ஊருக்கு கிணறு முனியப்பன் கோவிலுக்கு கொண்டு வந்து அதனை சுத்தம் செய்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டு மீண்டும் ஊர்வலமாக சம்பந்தப்பட்ட கோவிலுக்கு கொண்டு செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆடி 18 நாளான இந்த ஒரு தினத்தில் மட்டும் சம்பந்தப்பட்ட ஊற்று கிணறு முனியப்பன் திருக்கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக சேலத்தில் பிரபல தொழில் நிறுவனமான ஸ்வர்ணாம்பிகை நிறுவன குழுமத்தினர் சம்பந்தப்பட்ட கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரம் பக்தர்கள் வந்தாலும் சரி அவர்களுக்கு இல்லை என்று சொல்லாத அளவிற்கு நீர்மோர் மற்றும் கம்மங்கூழ் வழங்கி மகிழ்வது வழக்கம். அதன் அடிப்படையில் குமரர் ரத்தினசாமி பிள்ளை மற்றும் காமாட்சி அம்மாள் ஆகியோரது நினைவாக சொர்ணாம்பிகை குழுமத்தில் தலைவர் ஆர் ஜெயக்குமார் மற்றும் ரத்தின விஜய் ஆகியோரது ஏற்பாட்டில் பேரில் நடப்பாண்டு ஆடி 18 என்று சுமார் 10,000 மேற்பட்ட ரத்த கோடிகளுக்கு இலவச நீர் மோர் மற்றும் ஆகியவற்றை வழங்கி மகிழ்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ராகுல் ரத்தினவேல் மிகவும் சிறப்பாக செய்திருந்தார்.
11 ஆம் ஆண்டு ஆடி திருவிழாவையொட்டி 50க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன்.

11 ஆம் ஆண்டு ஆடி திருவிழாவையொட்டி 50க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

11 ஆம் ஆண்டு ஆடி திருவிழாவையொட்டி 50க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன். 

சேலம் லைன்மேடு ஸ்ரீ புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் திருக்கோவில் 11 ஆம் ஆண்டு ஆடிப்பெருவிழா முகூர்த்த காலில் நடுதலுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை அடுத்து அமலுக்கு பூச்சாட்டுகள் கம்பம் நடுதல் உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்றன. ஆடி 18 ஆம் நாளான இன்று ஸ்ரீ புன்னைநல்லூர் முத்துமாரியம்மனுக்கு பால்குடம் எடுக்கும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கோவிலின் தலைவர் வழக்கறிஞர் ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து அந்த பகுதிகளின் முக்கிய வீதிகளின் வழியாக வளம் வந்து பின்னர் கொண்டு வந்த பாலை அம்மனுக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்று மகாதீப ஆராதனையும் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருக்கோவிலின் சார்பில் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவிலில் செயலாளர் பழனி காலி விஸ்வநாதன் உள்ளிட்டோர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.

சனி, 2 ஆகஸ்ட், 2025

ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தீரன் சின்னமலை 220 வது நினைவு தினம். கொங்கு மண்டலம் நாடு மக்கள் தேசிய கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை.

ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தீரன் சின்னமலை 220 வது நினைவு தினம். கொங்கு மண்டலம் நாடு மக்கள் தேசிய கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தீரன் சின்னமலை 220 வது நினைவு தினம். கொங்கு மண்டலம் நாடு மக்கள் தேசிய கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை.

சிவன்மலை சென்னிமலைக்கும் இடையே சின்னமலை அபகரித்துக் கொண்டான் எனக் கூறி ஆங்கிலேயர்களிடமிருந்த வரிப்பணத்தை ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டான் என ஆங்கிலேயரிடம் கொக்கரித்த இந்திய முதல் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையை ஈரோடு மாவட்டம் ஓடா நிலையில் ஆங்கிலேயர்கள் ஆடி 18 நாள் அன்று தூக்கிலிட்டனர். ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய தீரன் சின்னமலை அவரது 220 வது நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் சார்பில் சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே அவரது திருவுருவப்படம் வைத்து பல்வேறு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் லோகநாதன் மாலை அணிவித்து மரியாதை மலர் தூவி மரியாதை  செலுத்தினார். தொடர்ந்து மத்திய மாவட்ட செயலாளர் ரத்தினவேல் மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு அவரது புகழ் குறித்து பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். இந்த நிகழ்வில் மாநகர இளைஞரணி துணை தலைவர் தாமரைச்செல்வன்  மண்டல மாணவர் அணி செயலாளர் மோகன் மண்டல நிர்வாகிகள் கனிஷ்கர் குமார் மணி மண்டல இணை செயலாளர் மதிவாணன் தாமரைக்கண்ணன் துணை செயலாளர் கௌதம் கண்ணன் மோகன் குமார் வீரபாண்டி கிரி கௌரிசங்கர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் பாலம்பட்டி ராஜாஜி பாலிடெக்னிக் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் தீரன் சின்னமலையை போற்றும் விதமாக அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

புதன், 30 ஜூலை, 2025

சேலம் கோரிமேட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.  சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பெயர் மாற்றம் செய்ததற்கான சொத்து வரி ஆணைகளை வழங்கினார்.

சேலம் கோரிமேட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம். சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பெயர் மாற்றம் செய்ததற்கான சொத்து வரி ஆணைகளை வழங்கினார்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலம் கோரிமேட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.  சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பெயர் மாற்றம் செய்ததற்கான சொத்து வரி ஆணைகளை வழங்கினார்.

தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்  கடந்த 15 ஆம் தேதி துவக்கி வைத்தார். இதனை அடுத்து தமிழக முழுவதும் மாவட்டங்கள் தோறும் முகங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட கோரிமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கு உட்பட்ட மக்களுக்கான  சிறப்பு முகாம்  சேலம் கோரிமேட்டில் உள்ள சுபம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமினை சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். முகாமில் 
சேலம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் இளங்கோவன், அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் திருமதி உமாராணி, சேலம் மாநகராட்சி நகர் நல அலுவலர் மருத்துவர் முரளி சங்கர் மற்றும் உதவி ஆணையாளர் லட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படக்கூடிய உதவி திட்டங்களுக்கான விண்ணப்பங்களை பெற்று ஆர்வத்துடன் பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் கொடுத்தனர். இதில் அதிகப்படியாக மாதாந்திர மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களே  அதிக அளவில்  விநியோகிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு முகாமில் சொத்து வரி தொடர்பான பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு சொத்து வரி பெயர் மாற்றம் செய்ததற்கான ஆணைகளை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆணையாளர் இளங்கோவன் மற்றும் மண்டலகுழு தலைவர் திருமதி உமாராணி உள்ளிட்டோர் வழங்கினர். இந்த சிறப்பு முகாமில் அனைத்து அரசு துறை அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
சேலம் அமானி கொண்டலாம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம். சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

சேலம் அமானி கொண்டலாம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம். சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

சேலம் அமானி கொண்டலாம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம். சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். 

தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்  கடந்த 15 ஆம் தேதி துவக்கி வைத்தார். இதனை அடுத்து தமிழக முழுவதும் மாவட்டங்கள் தோறும் முகங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதிக்கு உட்பட்ட மக்களுக்கான  சிறப்பு முகாம் அமானி கொண்டலாம்பட்டி அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமினை சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் குத்துவிளக்கேற்றி  துவக்கி வைத்தனர். முகாமில் 
சேலம் தெற்கு வட்டாட்சியர் ஸ்ரீதர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள்  உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படக்கூடிய உதவி திட்டங்களுக்கான விண்ணப்பங்களை பெற்று ஆர்வத்துடன் பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் கொடுத்தனர். இதில் அதிகப்படியாக மாதாந்திர மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களே  அதிக அளவில்  விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், அந்த விண்ணப்பங்களை பெறும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பூர்த்தி செய்து வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த முகாமில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இருந்தாலுமே கூட அந்த பகுதியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் சீருடையுடன் அந்த முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கான தேவைகளில் மனுக்களாக வழங்கியதுடன், சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார் அவர்களுடன் புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டனர். பின்னர் பொதுமக்களின் மனுக்களுக்கு 40 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டதை நினைவுபடுத்தியவர் பொதுமக்களில் மனுக்களைப் போல துப்புரவு தொழிலாளர்கள் மனுக்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு சம்பந்தப்பட்ட உதவி கிடைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த சிறப்பு முகாமில் அனைத்து அரசு துறை அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 29 ஜூலை, 2025

சேலத்தில் புனரமைக்கப்பட்ட அல்லிக்குட்டை ஏரியை பார்வையிட்ட CBE மற்றும் SLM மாநகராட்சி ஆணையாளர்கள்,

சேலத்தில் புனரமைக்கப்பட்ட அல்லிக்குட்டை ஏரியை பார்வையிட்ட CBE மற்றும் SLM மாநகராட்சி ஆணையாளர்கள்,

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் புனரமைக்கப்பட்ட அல்லிக்குட்டை ஏரியை பார்வையிட்ட CBE மற்றும் SLM மாநகராட்சி ஆணையாளர்கள்,

சேலம் மாநகராட்சியின் 9 வது கோட்டத்திற்கு உட்பட்ட அல்லிக்குட்டை ஏரி ஒரு காலகட்டத்தில் பராமரிப்பு இன்றி மிகவும் துர்நாற்றம் வீசி அந்த பகுதி மக்களுக்கு பெரும் சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தியிருந்தது. இதனைப் போக்க சேலம் மாநகராட்சியின் 9 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் சேலம் மாநகராட்சி மேயர் ஆகியோரிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து  மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக புனரமைக்கப்பட்டு சமீபத்தில் தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி வாயிலாக பொது மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சேலம் மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட மிகச் சிறந்த சுற்றுலா தளமாக விளங்கி வரும் அல்லிகுட்டை ஏரியினை இன்று பார்வையிட்டனர். அப்போது சேலம் மாநகராட்சியின் 9 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் உட்பட இரண்டு மாநகராட்சி அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.