வியாழன், 27 நவம்பர், 2025

காங்கிரஸ் உயிர் போடு தான் இருக்கிறது. களத்தில் பணியாற்றினால் நிச்சயம் வாய்ப்பு உண்டு. காங்கிரஸ் தேர்தல் பார்வையாளர் சோபா ஹோஜா சேலத்தில் பேட்டி.

காங்கிரஸ் உயிர் போடு தான் இருக்கிறது. களத்தில் பணியாற்றினால் நிச்சயம் வாய்ப்பு உண்டு. காங்கிரஸ் தேர்தல் பார்வையாளர் சோபா ஹோஜா சேலத்தில் பேட்டி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

காங்கிரஸ் உயிர் போடு தான் இருக்கிறது. களத்தில் பணியாற்றினால் நிச்சயம் வாய்ப்பு உண்டு. காங்கிரஸ் தேர்தல் பார்வையாளர் சோபா ஹோஜா சேலத்தில் பேட்டி. 

சேலம் மாநகர் மாவட்ட மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியால் அமைப்பு மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கான கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்க தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அகில இந்திய மகிலா காங்கிரஸ் தலைவி சோபா ஹோஜா சேலம் வந்தார். அவர் கடந்த இரண்டு நாட்களாக சேலம் மேற்கு மாவட்டத்தில் மாவட்ட தலைவர் தேர்வுக்காக கருத்துக்களை கேட்டறிந்தார். சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் அமைப்பு மறுசீரமைப்பு மேற்கொண்டு புதிய மாவட்ட தலைவர் தேர்வு செய்வது குறித்து கருத்து மற்றும் விண்ணப்பங்கள் பெரும் பணி முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் மேலிட பார்வையாளர் சோபா ஹோஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாணவர் மாவட்ட தலைவர் ஏ ஆர் பி பாஸ்கர், துணை மேயர் சாரதா தேவி மாணிக்கம் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சோபா ஹோஜா‌ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காங்கிரஸில் மாவட்ட கமிட்டிகளை அமைப்பு ரீதியாக மறுசீரமைப்பு செய்யும் இயக்கம் தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் தற்போது நடைபெற்று வருவதாகவும் ஒவ்வொரு நிர்வாகிகளையும் தனித்தனியாக சந்தித்து பேசி வருவதாக கூறிய அவர், கட்சிக்கு வலு சேர்க்கும் விதமாக கட்சி வளர்ச்சி அடைய செய்யும் வகையிலும் செயல்படும் நபர் மாவட்ட தலைவர் பதவியில் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார். 
இதற்காக விண்ணப்பம் வழங்கும் நபர்களில் இருந்து ஐந்து பேரை தேர்வு செய்து கட்சி தலைமைக்கு வழங்குவேன் என்று கூறியதுடன் அதில் இருந்து நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் 58 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத போதும் காங்கிரஸ் உயிர் போடு இருக்கிறது என்றார். களத்தில் பணியாற்ற தயாராக இருக்கின்றார்கள் என்றும் இந்த மாவட்ட தலைவர் நியமனத்தில் எஸ்சி எஸ்டி ஓபிசி மகளிர் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பிரதமர் மோடி ஒடிசா பீகாரில் தமிழர்களை இழிவு படுத்தி பேசிவிட்டு தற்பொழுது தமிழகத்தில் தேர்தல் வருவதால் பாசாங்கு செய்து உயர்த்திப் பேசுவதாகவும் குற்றம் சாட்டிய அவர் இது தேர்தல் நடக்கும் மாநிலங்களில் அவர் நடத்தும் நாடகம் என்றார். தொடர்ந்து பேசிய அவர் தேர்தல் ஆணையம் விசாரணை அமைப்புகளை கையில் வைத்து கொண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்டம் போடுவதாகவும் விமர்சித்தார். இந்த நிகழ்வில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதன், 26 நவம்பர், 2025

உலக அளவில் நடைபெற்ற திறன் விளையாட்டுப் போட்டியில் சேலம் இளைஞர், வட்டு எறிதல் ஈட்டி எறிதல் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை....சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு....

உலக அளவில் நடைபெற்ற திறன் விளையாட்டுப் போட்டியில் சேலம் இளைஞர், வட்டு எறிதல் ஈட்டி எறிதல் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை....சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு....

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

உலக அளவில் நடைபெற்ற திறன் விளையாட்டுப் போட்டியில் சேலம் இளைஞர், வட்டு எறிதல் ஈட்டி எறிதல் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை....சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு....

உலக அளவில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச உலக திறனறிதல் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்ற சேலம் பெரிய புதூர் பகுதியை சேர்ந்த கே.சஞ்சய் கண்ணா  வட்டு எறிதல் மற்றும்  ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்தார்.
இதனையடுத்து
சேலம் வருகை தந்த அவருக்கு சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விளையாட்டு வீரரின் தந்தை கண்ணன், நாமக்கல் கபடி கழக செயலாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் ஆவின் மேலாளர் சிவலிங்கம், முன்னாள் கபடி வீரரும் காவல்துறை அதிகாரியுமான கென்னடி ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சூர்யா ஸ்போர்ட்ஸ் அகாடமி சூர்யா,கராத்தே குமார், பேட்மிட்டன் பயிற்சியாளர் கிரிவாசன், பெரிய புதூர் பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.
 

செவ்வாய், 25 நவம்பர், 2025

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக ஈரோட்டுக்கு இன்று வருகிறார்.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக ஈரோட்டுக்கு இன்று வருகிறார்.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் பயணமாக ஈரோட்டுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வருகிறார். இதற்காக சென் னையில் இருந்து இன்று விமானத்தில் புறப்பட்டு கோவை செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாலை 6.30 மணிக்கு ஈரோடு புறப்படுகிறார்.

ஈரோடு மாவட்ட எல்லையான விஜயமங்கலம் சுங்கச் சாவடி அருகே ஈரோடு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இது போல் பெருந்துறை மற்றும் ஈரோடு மேட்டுக்கடை பகுதி களில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிர மாண்ட வரவேற்பு அளிக் கப்படுகிறது. இவ்வாறு வழி நெடுகிலும் ஈரோடு தெற்கு, ஈரோடு மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க.வினர் வரவேற்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

அதன்பின்னர் இரவு 8.30 மணிக்கு ஈரோடு காலிங்கரா யன் விருந்தினர் மாளிகைக்கு வந்துசேருகிறார். அங்கு இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார்.
ரூ.605 கோடியில் திட்டங்கள்

காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் இருந்து நாளை (புதன்கிழமை) காலை 9.15 மணிக்கு புறப்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்துறை ரோடு, ரிங் ரோடு, பூந்துறை ரோடு வழி யாக ஜெயராமபுரம் செல்கி றார். காலை 10 மணிக்கு அங்கு புதிதாக அமைக்கப் பட்டுள்ள பொல்லான் உரு வச்சிலையை திறந்து வைத்து, அரங்கையும் திறந்து வைக்கிறார். அங்கிருந்து ஓடாநிலை. செல்லும் அவர், காலை 10.20. மணிக்கு தீரன் சின்னமலை நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.

அங்கிருந்து புறப்படும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் காலை 10.45 மணிக்கு சோலாரில் புதிய பஸ்நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். விழாவுக்கு தலைமை தாங்கி, ஈரோடு மாவட்டத்தில் முடிவுற்றதிட் லு டப்பணிகள், புதிய திட்டங் கள் என ரூ.605 கோடி மதிப் பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைக் கிறார்.
நலத்திட்ட உதவிகள்

விழாவில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் 1 லட்சத்து 84ஆயிரத்து 491பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். காலை 11.45 மணிக்கு அரசு விழா முடிந்து அங்கிருந்து புறப்பட்டு ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு வருகிறார். 
நலத்திட்ட உதவிகள்

விழாவில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 491பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார். காலை 11.45 மணிக்கு அரசு விழா முடிந்து அங்கிருந்து புறப்பட்டு ஈரோடு காலிங்கராயன் விருந் தினர் மாளிகைக்கு வருகிறார். அங்கு மதிய உணவு சாப்பி டும் முதல்-அமைச்சர் மாலை வரை ஓய்வெடுக்கிறார்.

மாலை 4.45 மணிக்கு காலிங்கராயன் மாளிகையில் இருந்து புறப்பட்டு சித்தோடு ஆவின் வளாகத்தில் அமைக் - கப்பட்டுள்ள முன்னாள் எம். பி.யும் கூட்டுறவு பால் பண்ணை நிறுவனருமான எஸ்.கே.பரமசிவம் உருவச்சி லையை மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கிறார். பின்னர் சித்தோட்டில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்கும் அவர் மாலை 6.20 மணிக்கு கோவை புறப்பட்டு செல்கிறார். இரவு கோவை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை சென்று சேருகிறார்.

முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு வரு கையை முன்னிட்டு அவர் வந்து செல்லும் வழி நெடுகி லும் தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணியில் 3,100 போலீசார்
தனயனுக்கான பாராட்டு விழாவில் நெகிழ்ந்த நிகழ்வு. தன் மகனை சான்றோன் எனக்கேட்ட பெற்றோர்கள் கண் கலங்கிய தருணம். சேலம் சோனா கல்லூரியில் அரங்கேறியது.

தனயனுக்கான பாராட்டு விழாவில் நெகிழ்ந்த நிகழ்வு. தன் மகனை சான்றோன் எனக்கேட்ட பெற்றோர்கள் கண் கலங்கிய தருணம். சேலம் சோனா கல்லூரியில் அரங்கேறியது.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தனயனுக்கான பாராட்டு விழாவில் நெகிழ்ந்த நிகழ்வு. தன் மகனை சான்றோன் எனக்கேட்ட பெற்றோர்கள் கண் கலங்கிய தருணம். சேலம் சோனா கல்லூரியில் அரங்கேறியது.

சோனா தொழில்நுட்பக் கல்லூரிக்கு தேசிய அளவில்  இரண்டு விருதுகள்
 கேப்ஜெமினி நிறுவனம் நடத்திய போட்டியில் உயரிய விருது மற்றும் ரூ1.லட்சம் பரிசு தொகை வென்று சோனா கல்லூரி மாணவன் சாதனை.
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி எலக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (EEE) துறையின்  3 ஆம் ஆண்டு மாணவரான திரு. பி. விஜய், நாட்டின் சிறந்த மாணவர்களை தேர்வு செய்யும் கேப்ஜெமினி பிராண்ட் குவெஸ்ட் 2025 போட்டியில் வெற்றியாளராகத் திகழ்ந்துள்ளார். இப்போட்டியின் இறுதி மேடைச் சுற்று நவம்பர் 21, 2025 அன்று புனேயில் உள்ள கேப்ஜெமினி வளாகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வில் உயரிய விருது மற்றும் ரூ1.லட்சம் பரிசு தொகையை கல்லூரியின் மாணவர் விஜய்-க்கு வழங்கப்பட்டது மேலும் சோனா கல்லூரிக்கு சிறந்த பங்கேற்பாளர்கள் விருது கல்லூரியின் முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார்-க்கு  வழங்கப்பட்டது. சோனா கல்லூரியில் நடைப்பெற்ற பாராட்டு விழாவில் சோனா கல்வி நிறுவனத்தின் தலைவர் வள்ளியப்பா, கல்லூரியின் முதல்வர். செந்தில்குமார், துறை தலைவர் பத்மா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்க்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தனர். மாணவர்களின் உளமார்ந்த ஆர்வம், ஆழமான அறிவு மற்றும் பகுப்பாய்வு திறன்களை மதிப்பிடுவதற்காக இந்தப் போட்டி நடத்தப்படுகின்றன.
கேப்ஜெமினி நிறுவனத்தின் வரலாறு, வளர்ச்சி, வணிக துறைகள், தொழில்நுட்ப தீர்வுகள், சந்தை நிலை, போட்டியாளர்கள் மற்றும் நிதிநிலை போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து மாணவர்கள் எவ்வாறு புரிந்துகொண்டுள்ளனர் என்பதே இத்தேர்வின் முக்கிய அம்சமாகும். எனவும் மேலும் நாட்டின் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்களில் இருந்து, விஜய் தன்னுடைய தனி திறனை வெளிப்படுத்தி முன்னிலை பெற்றுள்ளார் என கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் தெரிவித்தார்.
கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா மற்றும் கல்லூரியின் முதல்வர் ஆகியோர் பேசும் பொழுது ஒரு சாமானிய பெற்றோரின் மகன் இந்த அரிய சாதனையை படைத்து இந்த விருதினை பெற்றது பெருமைக்குரியதாகும் மேலும் சோனா கல்லூரிக்கு சிறந்த பங்கேற்பாளர்கள் விருது என இரண்டு உயரிய விருதுகளை பெற்றுள்ளது  சிறப்புடையதாகும் எனவும் அவர்கள் தெரிவித்த போது ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் என்ற வள்ளுவரின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் விதமாக தன்னை அறியாமல் பெற்றோர்கள் கண்கலங்கியது அங்கு காண முடிந்தது. 
மாணவர் விஜய் அவர் கலந்து கொண்டு போட்டியில் ஒரு லட்ச ரூபாய் கடந்து கொண்டு வெற்றி பெற்று இருந்தாலுமே கூட மாணவனின் திறமை தனித்துவம் அறிவுத்திறன் ஆகியவற்றை பாராட்டி கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட மாணவனுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா தெரிவித்தது அங்கு இருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிகழ்வில் எலக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறையின்  தலைவர் பத்மா, வேலைவாய்ப்பு துறை இயக்குனர் சரவணன், உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவனின் பெற்றோர் ஆகியோர் பங்கேற்றனர்.

திங்கள், 24 நவம்பர், 2025

தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதமாக உள்ள நெல் ஈரப்பத  கொள்முதலை 22 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மத்திய அரசுக்கு கோரிக்கை.

தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதமாக உள்ள நெல் ஈரப்பத கொள்முதலை 22 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மத்திய அரசுக்கு கோரிக்கை.

சேலம். 
எஸ் கே சுரேஷ் பாபு.

தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதமாக உள்ள நெல் ஈரப்பத  கொள்முதலை 22 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மத்திய அரசுக்கு கோரிக்கை.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் தற்போது குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் மணிகள் மழையில் நனைந்தவாறு  உள்ளது. 
மத்திய அரசு 17% ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய அனுமதி கொடுத்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22% ஆக  உயர்த்த மத்திய அரசிடம் அனுமதி  கேட்டது ஆனால்  மத்திய அரசு 22%  ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி தரவில்லை.   தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு உடனடியாக  மறு பரிசீலனை செய்து 22% இருப்பதும் உள்ள நிலை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் மூலம் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.
தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் பலி!

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் பலி!

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் பலி!

தென்காசி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பெண், ஒரு ஆண் என 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, விபத்தில் காயமடைந்தவர்களில் 5க்கும் மேற்பட்டோர் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

தென்காசி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி – மதுரை சாலையில் அச்சம்பட்டி அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து, படுகாயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றுகொண்டிருந்த பேருந்தும் கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்த பேருந்தும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, காயமடைந்தவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்படுகிறன்றனர். இடைக்கால் அருகே துரைசாமிபுரம் என்ற இடத்தில் இந்த விபத்து நடக்கவே, அருகில் இருந்த கிராமத்தை சேர்ந்த பலரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு உதவியுள்ளனர். மேலும், உடனடியாக காவல்துறைக்கும், ஆம்புலன்ஸூக்கும் விபத்து குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

பலி எண்ணிக்கை உயரும் அபாயம்:
உடனடியாக சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ், தனியார் தொண்ட நிறுவன ஊழியர்களும் விரைந்தனர். அவர்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்து காயமடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று வருகின்றனர். அதோடு, காயடைந்தவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
கனமழையால் சாலைகள் துண்டிப்பு:
ஏற்கெனவே, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, முக்கிய சாலைகள் கூட துண்டிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, காரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்வது என்பதே சற்று கடினமான காரியமாகியுள்ளது.

ஞாயிறு, 23 நவம்பர், 2025

14-ஆம் ஆண்டு தலைசிறந்த ஆசிரியர் விருது விழா

14-ஆம் ஆண்டு தலைசிறந்த ஆசிரியர் விருது விழா

14-ஆம் ஆண்டு தலைசிறந்த ஆசிரியர் விருது விழா – ஈரோடு

JCI ஈரோடு எக்ஸெல், ஈரோடு எக்ஸெல் பதிப்பகம் மற்றும் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தலைசிறந்த ஆசிரியர்களுக்கான 14-வது ஆண்டு விருது வழங்கும் விழா இன்று திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி கஸ்தூரீபா கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் இந்திய உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் கேரள மாநில முன்னாள் ஆளுநர் நீதியரசர் P. சதாசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 324 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
விழாவில் வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் மற்றும் தாளாளர் சந்திரசேகர், டிரஸ்டி யுவராஜா மற்றும் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயராமன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் பற்றிய 10,000-க்கும் மேற்பட்ட தகவல்களை கொண்ட JCI Excell Yellow Pages 2025 புத்தகத்தை நீதியரசர் P. சதாசிவம் வெளியிட்டார்.
விழா ஏற்பாடுகளை ஈரோடு எக்ஸெல் பதிப்பக CEO முருகானந்தம், JCI ஈரோடு எக்ஸெல் தலைவர் நம்பி ஆரூரன், எக்ஸெல் எடுகாம் இயக்குநர் ராஜேந்திர பிரசாத், உதவித்தலைவர் பிரபாகரன், Women Empowerment Cell மற்றும் JCI உறுப்பினர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.