திங்கள், 15 டிசம்பர், 2025

சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தல். வெற்றியாளர்களுக்கு ஆசிரியர் பெருமக்கள் வாழ்த்து.

சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தல். வெற்றியாளர்களுக்கு ஆசிரியர் பெருமக்கள் வாழ்த்து.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு

சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தல். வெற்றியாளர்களுக்கு ஆசிரியர் பெருமக்கள் வாழ்த்து.

சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட இளம் வயது தடகள வீரர்களுக்கான கண்டுபிடிப்பு போட்டியில்  100 மீட்டர், 200 மீட்டர் ,400 மீட்டர் ஓட்டத்திலும் மற்றும்  600 மீட்டர் ஓட்டத்திலும்,  நீளம் தாண்டுதல் ,உயரம் தாண்டுதல் ,குண்டேறிதல் வட்டு எறிதல்  ஆகிய  போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற  மாணவர்களுக்கான சான்றிதழ்கள், பதக்கங்களை முன்னாள் மாணவரும், மாநில வருவாய்த்துறை துணைத் தலைவரும் அர்த்தநாரி அவர்கள்  மாணவர்களுக்கு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மற்றும் மாவட்ட தடகளப்  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் யுதிஷ்டன் குண்டு எறிதல்  போட்டியில் முதலிடம், வட்டு எறிதல்  போட்டியில் இரண்டாம் இடம், உயரம் தாண்டுதலில் உதயகுமார் இரண்டாம் இடமும் பெற்று மாநில அளவிலான குடியரசு தின போட்டிக்களிலும் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கான பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இப்பள்ளியின்  தலைமையாசிரியர் அருட்திரு ஜோதி பெர்னாண்டோ உதவி தலைமை ஆசிரியர் அருட்திரு டேவிட் கலந்துகொண்டு மாணவர்களை பாராட்டினர். பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் ராபர்ட் அவர்களும், உடற்கல்வி ஆசிரியர்கள் சுவாமிநாதன்,அல்போன்ஸ், அந்தோணி ராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களை ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் பாராட்டினர்.
காளிங்கராயன் கால்வாய் தூய்மையுற விழிப்புணர்வு மாரத்தான் ஆலோசனைக் கூட்டம்

காளிங்கராயன் கால்வாய் தூய்மையுற விழிப்புணர்வு மாரத்தான் ஆலோசனைக் கூட்டம்

காளிங்கராயன் கால்வாய் தூய்மையுற விழிப்புணர்வு மாரத்தான் ஆலோசனைக் கூட்டம் :

டிச: 15- மொடக்குறிச்சி

 சோளாங்காபாளையம்  தனியார் மண்டபத்தில் காலிங்கராயன் கால்வாய் நீர்வளம் நிலவலம் தூய்மையுற காளிங்கராயன் பாசன  விவசாயிகள் சங்கம் சார்பாக விழிப்புணர்வு மாரத்தான் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு காலிங்கராயன் பாசன விவசாயிகள் சங்கம் தலைவர் வெந்தபாளையம் நடராஜ், தலைமை தாங்கினார்,செயலாளர் செல்வகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் கந்தசாமி, 
கோம்புபாளையம் தேவராஜ்  ஆகியோர், காலிங்கராயன் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கம் தலைவர் P. K சேதுராஜ், செயலாளர் A.நல்லசாமி பொருளாளர் S.அசோக்குமார் மற்றும் விவசாயிகள் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் புதிய சோலார் பேருந்து நிலையத்திற்கு காலிங்கராயன் பெயர் சூட்ட வேண்டும் என்றும் 
காலிங்கராயன் வாய்க்கால் தூய்மை பெற வேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்தி வரும் ஜனவரி 18ஆம் தேதி விழிப்புணர்வு மாறத்தான் போட்டி கணபதிபாளையம் நால் ரோட்டில் துவங்கி நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
, இதில் 100 க்கும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) செயல் வீரர்கள் கூட்டம்

ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) செயல் வீரர்கள் கூட்டம்

*ஈரோட்டில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) செயல் வீரர்கள் கூட்டத்தில் அதன் பொதுச்செயலாளர் N. ஆனந்த், முன்னாள் அமைச்சரும், மாநில ஒருங்கிணைப்பாளருமான கே.ஏ. செங்கோட்டையன் அவர்களைப் பார்த்து பேசினார். அப்போது, "அண்ணே, தெளிவா சொல்றேன் இன்னைக்கு.. நீங்கள் என்ன சொன்னாலும் நாங்க அத கேட்டு செய்வோம் ண்ணே" என்று பாசத்துடன் அவர் குறிப்பிட்டது, இரு தலைவர்களுக்கும் இடையேயான அரசியல் பிணைப்பைக் காட்டியது.*
*கோபி பகுதி மின்தடை அறிவிப்பு*

*கோபி பகுதி மின்தடை அறிவிப்பு*

*கோபி பகுதி மின்தடை அறிவிப்பு* 

நாள்: 17-12-2025

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 

கெட்டிசெவியூர்,சிறுவலுார், ஆயிபாளையம்,சுள்ளிக்காடு, பூச்சநாயக்கன்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், லட்சுமாய்புதுார், நீலாம்பாளையம், வாக்கரைபுதூர், செஞ்சிலாபாளையம், தோரணவாவி, நல்லக்காபாளையம், வடக்குபாளையம்,
ராசாகவுண்டம்பாளையம்,செரகோயில்,மற்றும் பள்ளக்காடு
ஆகிய பகுதிகளில் மாதம் பராமரிப்பு காரணமாக மின் வினியோகம் தடை
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கோபி
சேலத்தில் வாக்கு பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி. மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் பிருந்தா தேவி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு..

சேலத்தில் வாக்கு பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி. மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் பிருந்தா தேவி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு..

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் வாக்கு பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி. மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் பிருந்தா தேவி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு..

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழக தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் தேர்தல் பணிகள் முழுவீச்சில் முடக்கி விடப்பட்டுள்ளது. அந்த வகையில் 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் மாவட்டத்தில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களான EVM மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதனை அறியும் V V PAT இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி கடந்த 11ம் தேதி முதல் தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 5 வது நாளான இன்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி நடைபெற்றன. சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் சேலம் மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுப் பணியில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
 
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் நடைபெற்ற இந்த ஆய்வு பணியில் தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி, கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மன் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோரும் பங்கேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் நடைபெற்ற சரிபார்ப்பு பணிகளை  உன்னிப்பாக கவனித்தனர். மேலும் சரிபார்ப்பு என்ற பெயரில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் இந்த வாக்குப்பதிவு இயந்திர மையத்திற்கு எவ்வாறான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தும் கேட்டறிந்தனர். தேசிய மற்றும் மாநில கட்சி நிர்வாகிகள் சந்தேகங்களுக்கு பதில் அளித்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் சேலம் ஆட்சியருமான டாக்டர் பிருந்தா தேவி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, சேலம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டு அதனை  கடைப்பிடிப்பதோடு மட்டுமல்லாமல், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு மத்திய மாநில காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இந்த ஆய்வு பணியில் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஊழிட்ட கட்சிகளும் மாநில கட்சிகளான அதிமுக திமுக பாமக தேமுதிக தவெக மற்றும் தவாக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 14 டிசம்பர், 2025

ஈரோட்டில் இன்று தனியார் திருமண மண்டபத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது

ஈரோட்டில் இன்று தனியார் திருமண மண்டபத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது

ஈரோட்டில் இன்று தனியார் திருமண மண்டபத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது என்றும் அதில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஷி ஆனந்த் கலந்து கொள்ள உள்ளார் என தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் மக்கள் சந்திப்பு கூட்டம் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து பார்வையிடுவதற்காக  இன்று பொதுச் செயலாளர் புஜ்ஸி ஆனந்த் ஈரோடு வருகை தந்தார். அவரை  தவெக தலைமை ஒருகிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன்,

தவெக சார்பாக திருச்செங்கோட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நாளை செயல்வீர்ரகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெறுகிது. இதில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பங்கேற்கிறார்.
18.ம் தேதி நடைபெறும் விஜய் பிரசார கூட்டத்திற்கு பணிகள் வேகமாக நடைபெறுகிறது. நிபந்தனைகளை முடித்து கூட்டத்துற்கு தயார் செய்வோம். அதன் பின் காவல்துறையில் அனுமதி் பெற்று அனைவரும் பாராட்டும் வகையில் கூட்டம் நடைபெறும்..
இந்த நிகழ்ச்சிக்காக காவல் துறை சார்பில்  2 மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.. இது வரலாறு படைக்கும் நிகழ்ச்சியாக இருக்கும். 
அனைவரும் இணைந்து இயக்கத்திற்காக தன்னலம் கருதாமல்  எதிர்காலத்தில் தூய்மையான மக்கள் விரும்பும் ஆட்சியை உருவாக்குவோம். 
 பாண்டிச்சேரிக்கு அடுத்ததாக ஈரோட்டில் கூட்டம் நடைபெறுகிறது. நாளை மறுதினத்திற்குள் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும். அதன் பின் காவல் துறை மூலம் அனுமதி பெறப்படும் என்றார்.
தங்கத்தை போலவே ஜெட் வேகத்தில் உயரும் வெள்ளியின் விலை. சேலத்தில் வெள்ளி கொலுசு உற்பத்தி முடக்கம்.

தங்கத்தை போலவே ஜெட் வேகத்தில் உயரும் வெள்ளியின் விலை. சேலத்தில் வெள்ளி கொலுசு உற்பத்தி முடக்கம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தங்கத்தை போலவே ஜெட் வேகத்தில் உயரும் வெள்ளியின் விலை. சேலத்தில் வெள்ளி கொலுசு உற்பத்தி முடக்கம். 

மாங்கனி நகரமான சேலம் உட்பட மாவட்ட முழுவதும் பிரதான மற்றும் பாரம்பரிய தொழில்களில் வெள்ளி கொலுசு உற்பத்தியும் ஒன்றாகும். அந்த வகையில் சேலத்தை எடுத்துள்ள சிவதாபுரம் பனங்காடு திருமலை கிரி உட்பட சேலம் மாநகரில் செவ்வாய் பேட்டையின் பெரும்பாலான பகுதிகள் என மாவட்ட முழுவதும் இந்த தொழிலையே நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சமீப காலமாக, தங்கத்தை போலவே வெள்ளியின் விளையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவதால் சேலத்தில் வெள்ளி கொலுசு உற்பத்தி தொழில் முடங்கி உள்ளதோடு போதிய ஆர்டர்கள் இல்லாமல் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் தவிர்த்து வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களாக வெள்ளியின் விலை இரு மடங்காக  உயர்ந்துள்ளதால் வெள்ளி கொலுசு உட்பட வெள்ளி பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த தொழிலை நம்பி உள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் மாற்றுத் தொழிலுக்கு செல்ல வேண்டிய சூழல் தற்பொழுது எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட கொலுசின் விலை தற்பொழுது 10,000 ரூபாய் அளவிற்கு அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் இந்த தொழிலையே நம்பியுள்ள தொழிலாளர்கள். இதனால் பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாகவும், நடைபாண்டே இந்த அளவு விலை உயர்ந்துள்ள வெள்ளியின் விலை அடுத்த ஆண்டு எவ்வளவு அதிகரிக்கும் என தெரியவில்லை என ஐயம் எழுப்பும் அவர்கள் இந்த தொழிலையே நம்பி உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மாற்று தொழிலை நாடி செல்ல வேண்டிய ஒரு சூழலும் ஏற்படும் என்றனர். வெள்ளி பொருட்களை சேமிப்பாக நினைத்து பயன்படுத்தினால் அவர்களுக்கு பிற்காலத்தில் பயனுள்ளதாக அமையும் என்றும் பயன்படுத்தியும் கொள்ளலாம் இக்கட்டான சூழலில் அதை அடகு வைத்து அதன் மூலம் கடன்  தொகையும் பெறலாம் என்று தெரிவித்தார் சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர்கள் நல சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்த ராஜன்.
கொரோனா காலகட்டத்தில் கொலுசு உள்ளிட்ட வெளி பொருட்கள் மட்டுமே அனைத்து தரப்பினருக்கும் உதவியாக இருந்தது என்றும் தெரிவித்தார். மேலும் தமிழகம் உட்பட  கேரளா கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வட மாநில ஆர்டர்களையே பெரிதாக நம்பி உள்ள சேலம் மாவட்ட வெளி கொலுசு உற்பத்தியாளர்களுக்கு தற்பொழுது இந்த வெள்ளியின் விலை தங்கம் விலை போன்று ஜெட் வேகத்தில் உயர்ந்து, ஆர்டர்கள் இல்லாமல் தவித்து வருவதாகவும் வேதனை தெரிவித்தார்.