திங்கள், 9 பிப்ரவரி, 2026

பல கோடி ரூபாய் ஊழல் மோசடி செய்துள்ள சன் சைன் ப்ரமோட்டர்ஸ் நிறுவன உரிமையாளர்களை கைது செய்து அந்த நிறுவனம் சேலத்தில் இயங்க தடை விதிக்க வேண்டும். தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு நிறுவன தலைவர் சரஸ்ராம் ரவி ஆட்சியருக்கு வலியுறுத்தல்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

இதுகுறித்து அவர் கூறியதாவது, சேலம் மாநகரில் கடந்த பல ஆண்டுகளாக சன் சைன் புரமோட்டர்ஸ் ( Sun Shine Promotors  )  என்கிற பெயரில்  பல நூறு அப்பாவி பொது மக்களை ( சேலம் - நாமக்கல் - தர்ம்புரி ) ஏமாற்றி  நில மோசடி மற்றும்  பல கோடி ரூபாய் பண மோசடி செய்து  வரும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள. சரன்யா, கவிதா, சுகுமார், குமார் ஆகியோரை கைது செய்ய வேண்டும். தொடர்ந்து அந்த மோசடி  நில ஊழல் நிறுவனம் சேலம் மாநகர், சேலம் முல்லை நகரில் இயங்க தடை விதிக்க வேண்டும். 
மேலும் சேலம் சூரமஙலகலம் காவல் திலையத்தில் சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள்  மீது குவிந்துள்ள பல நில மற்றும் பண மோசடி புகார் மனுக்கள் மீது வழக்கு பதிவு செய்ய சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சேலம் மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீதும் நில மற்றும் பண மோசடி செய்த உரிமையாளர்களை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வரும் 13ஆம் தேதி, சூரமங்கலம் தபால் நிலையம் முன்பாக நடத்த அனுமதி வழங்கிட கோரி சேலம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் அனுமதி மனு  அளிக்கபட உள்ளதாகவும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவன தலைவர் சரஸ்ராம் ரவி தெரிவித்துள்ளார்.

சனி, 7 பிப்ரவரி, 2026

சேலம் கோட்டை அண்ணா நகரில் மாற்றுக் கட்சியை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இரா. இராஜேந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்த விழா.

சேலம் மத்திய மாவட்ட திமுகவின் முப்பத்தி ஒன்னாவது கோட்ட இளைஞர் அணி சார்பில் இளைஞர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் கோட்டை பகுதியைச் சார்ந்த ஷபி பூங்கொத்து  கொடுத்து சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வழக்கறிஞர் இரா இராஜேந்திரன் முன்னிலையில் தன்னை முழுமையாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.
தொடர்ந்து கோட்டை ஷபி மற்றும் 31வது கோட்ட திமுக செயலாளர் இப்ராஹிம் ஆகியுறது ஏற்பாட்டின் பேரில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியில் இருந்து விலகிய நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமைச்சர் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் கட்சி துண்டுகளை அணிவித்து வாழ்த்தி வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். 
முன்னதாக விழாவிற்கு வந்திருந்த சுற்றுலாத்துறை அமைச்சருக்கு புலி வேடமிட்ட இஸ்லாமிய இளைஞர்களால் உற்சாக நடனம் ஆடி வரவேற்றதோடு மட்டுமல்லாமல் அவருக்கு மாலை அணிவித்தும் மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோட்டை ஷபி மற்றும் இப்ராஹிம் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 11 லட்சம் ரூபாய் ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடமே வாங்கி ஏமாற்றிய சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் பணியாற்றும் ஊழியர்களான பால்ராஜ் பால்ராஜ் மற்றும் கதிர்வேலன். ஆட்சியரின் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வேதனையுடன் ஆதங்கம்.

சேலம் கன்னங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த அறிவழகன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருக்கு சரோஜா என்ற மனைவியும், 
மகனும் உள்ளனர். இவர்களின் மகனின் அரசு பணிக்காக சேலம் மாவட்ட வருவாய் துறையில் பணி புரிந்து வரும் பால்ராஜ்( வட்டாச்சியர் - ஆவண காப்பகம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ) மற்றும் அவரது சகோதரர் கதிர்வேல் ஆகியோர் அரசு பணி வாங்கி தருவதாக நம்ப வைத்து ரூ 11,00,000/ எங்களிடம் பெற்று 7 ஆண்டுகள் கடந்தும், பணம் திருப்பி தராமல் மோசடி செய்த அவரை துறை வாரிய விசாரணைக்கு உத்தரவிட்டு நீதி வழங்கிட கோரி வேதனையின் உச்சத்தில் ஆதங்கப்பட்டது சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
சேலம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் அரசு வேலை  வாங்கி தந்துள்ளதாக  ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து ரூபாய்  11லட்சம் எங்களிடம் பெற்றனர். வேலை ஏதும் பெற்று தராமல், பணத்தையும் திரும்ப கொடுக்காமல் கடந்த 7 ஆண்டுகளாக ஏமாற்றி வருகின்றனர். தொடர்ந்து அவர்களை  பணத்தை திருப்பி கொடுக்க வற்புறுத்தியதால் ரூ 4.50 லட்சம் சில ஆண்டுகளுக்கு முன் அளித்தனர். மீதி 6.50,000 ரூபாய் வேலைக்கு நேர்காணல் கடிதம் வந்து விடும் இல்லை என்றால் பணத்தை தந்து விடுவதாக  கூறினர். ஆனால் காலம் கடந்த போதும், சேலம்  மாவட்ட  ( ஆவண காப்பக அதிகாரி ) பால்ராஜ.மற்றும் அவரது சகோதரர் கதிர்வேல் இருவரும் ஏமாற்றி  அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம்  , எங்களிடமும் பண மோசடி செய்து வருவது மிக வேதனை அடைகின்றோம். கடன் வாங்கி கொடுத்த பணத்திற்கு வட்டி கட்டி மீள முடியவில்லை. என்பதை மிக மிக வருத்ததுடன் தங்களிடம் தெரிவித்து கொள்கின்றோம்.
இந்த அரசு அதிகாரி தனது அதிகார  துஷ்பிரயோகம் செய்து பல நபர்களை பண  மோசடி செய்து வரும் பால்ராஜ் மற்றும் அவரது சகோதரர் கதிர்வேல் ஆகியவரது மீதும், இந்த பண மோசடி புகார் மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு, சேலம் மாவட்ட கோட்டாச்சியர்,  ( RDO)  (அ)  மாவட்ட வருவாய் அதிகாரி ( DRO )அவர்களின்  விசாரணைக்கு உத்தரவிட கோருவதாகவும் தவறும் பட்சத்தில், 
அதற்கான ஆவணம்/ ஆடியோ  சாட்சியங்களை அளிக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ள ஓய்வு பெற்ற அரசு ஊழியரான அறிவழகன் தவறும் பட்சத்தில் வரும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் திருமதி டாக்டர் பிருந்தா தேவி அவர்களால் நடத்தப்படும் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்பத்தாருடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளது சேலம் மாவட்ட அரசு துறை அதிகாரிகள் வட்டத்தில் மிகுந்த பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில் ஜியா பிரியாணி மல்டிகுஷன் ரெஸ்டாரன்டின் புதிய கிளை திறப்பு விழா..

சேலத்தில் ஜியா பிரியாணி மல்டிகுஷன் ரெஸ்டாரன்டின் புதிய கிளை திறப்பு விழா..

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் ஜியா பிரியாணி மல்டிகுஷன் ரெஸ்டாரன்டின் புதிய கிளை திறப்பு விழா..

சேலம் பேர்லேண்ட்ஸ் கிரீன்வேஸ் ரோட்டில் புதிதாக அமைந்துள்ள “ஜியா பிரியாணி” அசைவ ஹோட்டலின் புதிய கிளை திறப்பு விழா மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. இவ்விழாவில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜியா பிரியாணி குழுமத்தின் உரிமையாளர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் முக்கிய அழைப்பாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அசைவ உணவு பிரியர்கள் குடும்பத்துடன் அமைதியாகவும் வசதியாகவும் அமர்ந்து உணவருந்தும் வகையில், இந்த ஹோட்டல் விசாலமான இருக்கை வசதிகள், சுத்தமான சமையல் அறை மற்றும் தரமான சேவைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஸ்ரீவாரி கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் உரிமையாளர் கௌதமன் அவர்கள் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். இந்த புதிய கிளை மூலம், தரமான சுவையும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையும் வழங்கப்படும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மேலும், புதிய கிளை திறப்பை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 8 வரை ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால், ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

சேலம் சர்க்கார் கொல்லப்பட்டியில் ஸ்ரீ மாரியம்மனின் கணவரின் இறந்த தூக்கம் தாளாமல் திருத்தேர் தூக்கி வழிபாடு செய்த நூதனத் திருவிழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட ஊர்வலம்.

சேலத்தை எடுத்துள்ள சர்க்கார் கொல்லப்பட்டியில் ஆண்டுதோறும் மாசி மாத துவக்கத்தில் அங்குள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் விழா எடுப்பது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டிற்கான திருவிழா இன்று தொடங்கியது. சர்க்கார் கொல்லப்பட்டி மேட்டுக்காடு தண்ணீர் டேங்க் அருகே அலங்கரிக்கப்பட்ட மலர் பள்ளத்தில் அம்மனின் கணவர் இறந்ததைப் போன்று சித்தரித்து, சேலம் தாரமங்கலம் பிரதாத சாலையின் வழியாக ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட அம்மனின் கணவனாக கருதப்படும் இந்த வினோத ஊர்வலத்தில் ஏராளமான ஆண் பெண் பக்தர்கள் கலந்து கொண்டு வண்ணத்தில் வண்ண வண்ண பொடியை பூசிக்கொண்டும், வழி நெடுங்கிடும் சவ ஊர்வலத்தில் என்னென்ன சாங்கிய சம்பிரதாயங்கள் செய்வார்களோ அதன்படி மேற்கொண்டு இந்த விழா நடைபெற்றது. 
இந்த தேர்த்துக்கும் விழாவானது இறுதியில் சர்க்கார் கூறப்பட்டிய ஸ்ரீ மாரியம்மன் கோவிலை அடைந்ததும் அங்குள்ள ஒரு முச்சந்தியில் இதற்கான சாங்கிய சம்பிரதாயங்கள் அனைத்தையும் செய்து அனைவரும் விடை பெற்றனர் என்பது இந்த விழாவின் நிதர்சனம். இந்த விழாவை பொருத்தவரை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் இந்த விழா முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த விழாவில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் அதாவது எந்த விதமான தீட்டும் இல்லாமல் சுத்தபத்தமாக கலந்து கொள்ளும் மக்களுக்கு அம்மனின் அருளால் அத்துணை செல்வ வளங்களும் கிடைக்கும் என்பதால் அதீத ஆர்வத்துடன் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்வதாக அந்த திருக்கோவிலை சேர்ந்த நிர்வாகியும் அந்தப் பகுதியை சேர்ந்த மூத்தவருமான கோபால் நம்மிடையே தெரிவித்தார். தேர் தூக்கும் நண்பர்கள் குழுவின் சார்பாக 56 ஆவது ஆண்டாக நடத்தப்படும் இந்த விழா மிக சிறப்புடன் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டதாக அந்த தேர் தூக்கும் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த கோபால், இளங்கோ ராமமூர்த்தி கண்ணன் மற்றும் சென்ராயன் என்பவர்களால் தெரிவிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்திலுள்ள முழுமையான பஞ்சமி நிலங்கள் குறித்த மாவட்ட வருவாய்  அலுவலரின் விசாரணை அறிக்கை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். பஞ்சமி  நில மீட்பு உண்மை அறியும் குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி மாவட்ட ஆட்சியருக்கு மனு வாயிலாக வலியுறுத்தல்..

சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவன தலைவரும், பஞ்சமி நில மீட்பு உண்மை அறியும் குழுவின் சார்பில் அதன் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சரஸ்ராம் ரவி கோரிக்கை மனு ஒன்றினை அளித்துள்ளார். 
அந்த மனுவில், சேலம் மாவட்டம்  முழுவதும், அனைத்து வட்டங்களிலும்,( தாலுக்கா அலுவலகங்கள் ) பஞ்சமி நிலங்கள்- / AD கன்டிசன் நிலங்கள் பல ஆயிரம் ஏக்கர் அந்தந்த வட்டாச்சியர்கள் + வட்டார வளர்ச்சி அதிகாரிகள் + வருவாய் ஆய்வாளர்கள் + கிராம நிர்வாக அதிகாரிகளால் சட்டதிற்கு எதிராகவும் + DC Land + AD condition  Land  விதிகளுக்கு எதிராக பட்டா ஏற்படுத்தி பல  கோடிகள் ஊழல் நடந்து வருவதை  உடனடியாக தடுக்க DRO salem விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். 
சேலம் மாவட்ட வருவாய்  அலுவலரின் விசாரணை அறிக்கை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இது குறித்த முழு விசாரணை தகவல் அறிக்கை  எமது பஞ்சமி  நில மீட்பு உண்மை அறியும் குழு  தங்களிடம் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும். தங்களது மேலான நடவடிக்கை வலியுறுத்தும் புகார் மனு என்று
சரஸ்ராம்ரவி
MA.,BED.,AIII.,SLET.,LLB/
(  CHIEF  COORDINATOR ) வலியுறுத்தியுள்ளார். 
Advocate -C EZHUMALAI. BCOM,.,BL.,
(  AYOTHITHASAR SELF RESPECT MOVEMENT ).

C Nallathambi.
C Arivazhagsn
A Sathiyapriyan
M Balasubramaniam
Jagatheesvaran.
C Kamaraj
( CoOrdinators - Fact Finding Committee - TamilNadu ) .
உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடு அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா. கோவை வையம்பாளையத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மாலை அணிவித்தும், மலர் வளையம் வைத்தும் மரியாதை.

தமிழக விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர் கடன் மற்றும் பண்ணை அபிவிருத்தி கடன்  பெற்றுள்ளதில் இருந்து ஜப்தியில்  விடுதலை மற்றும் விவசாயிகள் தினந்தோறும் விவசாயத்திற்கு உபயோகப்படுத்தும் கிணற்று மோட்டாருக்கு இலவச மின்சாரம் பெறுவதற்காக  தமிழ்நாடு அரசிடம் 1970 முதல் 1980 வரை தமிழக விவசாயிகள் சங்கம்  மூலம்  தமிழக விவசாயிகளை மிகப்பெரிய அளவில் ஒன்று திரட்டி உச்சக்கட்ட போராட்டம் நடத்தி விவசாயிகளின் உரிமைக்காகவும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயிகள் நலனுக்காக தமிழக விவசாயிகள் சங்கத்தை உருவாக்கி தோற்றுவித்த மறைந்த உழவர் பெருந்தலைவர் C.நாராயணசாமி நாயுடு அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் கோயில்பாளையம் அருகே உள்ள வையம்பாளையம் கிராமத்தில் உள்ள உழவர் பெருந்தகையின்  மணிமண்டபத்தில், மறைந்த உழவர் பெருந்தலைவர் C.நாராயணசாமி அவர்களின் திருவுருவச்சிலைக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் திரு.R.வேலுசாமி அவர்கள் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. தொடர்ந்து அவரது சமாதியில் மலர் வளையம் வைத்தும் மலர் தூவையும் மரியாதை செய்யப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் திரு.A.மோகன் குமார், மாநில துணைத் தலைவர் திரு K.ராஜாபெருமாள், மாநில துணை பொதுச்செயலாளர் திரு.G.P.A.கணபதி, சேலம் மாவட்டத் தலைவர் திரு.E.S.M.ஏழுமலை மற்றும் மாநில ,மாவட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டு  மறைந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் மரியாதை செலுத்தப்பட்டது.