திங்கள், 16 பிப்ரவரி, 2026

பட்டியலின மற்றும் பழங்குடியினர் மக்களின் எதிர்கால நலனை கருதி, தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு நிறுவனத் தலைவர் சரஸ்ராம் ரவி மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு கேள்விகள்.

பட்டியலின மற்றும் பழங்குடியினர் மக்களின் எதிர்கால நலனை கருதி, தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு நிறுவனத் தலைவர் சரஸ்ராம் ரவி மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு கேள்விகள்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

பட்டியலின மற்றும் பழங்குடியினர் மக்களின் எதிர்கால நலனை கருதி, தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு நிறுவனத் தலைவர் சரஸ்ராம் ரவி மத்திய மாநில அரசுகளுக்கு பல்வேறு கேள்விகள். 

அறிக்கையின் வாயிலாக பல்வேறு கேள்விகளை மத்திய மாநில அரசுகளுக்கு வெளிப்படுத்தியுள்ள சரஸ்ராம் ரவி கூறியிருப்பதாவது, பட்டியலின & பழங்குடினர் மதரதிய நிதி ஆதாரங்கள் சுமார் 12 ஆயிரம் கோடி வேறு திட்டங்களில் செலவு செய்த மாநில  அரசுகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் பட்டியலுன & பழங்குடியினர் மக்களுக்கு, மாணவர், மாணவியர்களுக்கு... நிலம் இல்லாதவர்களுக்கு நிலம். வீடு இல்லாதவர்களுக்கு வீடு. உயர்கல்வி பயில கல்வி நிதி உதவி. அவர்கள் வாழும் பகுதியில் குடிநீர் வசதி+ சாலை வசதி+ மயான வசதி + கல்வி மேம்பாடு வசதி + இப்படி பல வகையில் கல்வி- பொருளாதாரத்தில் மேம்பட மத்திய அரசு + மாநில அரசு ஒதுக்கும் நிதி எல்லாம்  எங்கே போகின்றது ? , புது பல ஆயிரம் கோடி பணம் திருப்பி அனுப்படுகின்றது.
பாதி பல ஆயிரம் கோடி பணம் வேறு திட்டங்களில் போடபடுகின்றது.
இதை வேடிக்கை பார்க்கும் தலித் கட்சிகள். 
இவற்றை கண்டித்து சட்டசபையில் குரல் எழப்பாத 44 தனி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள். தனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள். இந்த மக்கள் என்ன பாவம் செய்தார்கள் ? , படித்தவர்கள் , பதவியயில்  சுகம் காணும் SC/ ST ஊழியர்கள், அதிகாரிகள்  பட்டியலுன & பழங்குடியினர் மக்களை திரும்பு பார்பதில்லை. 44 தனி தொகுதி சட்டமன்ற தொகுதி மக்களே. உங்கள்  வாக்குகளை வீண் அடிக்கலாமா ?, கடந்த 25 ஆண்டுகளாக உங்களை நிமியை பல லட்சம் கோடிகளை வீண் அடிக்கும் அவர்களுக்கா உங்கள்  வாக்கு ?, தேர்தலை புறக்கணிப்பீர். உங்களது 12.& எக்டர் பஞ்சமி நிலத்தை எங்கே என்று சட்டசபையில் பேசுபர்களுக்கே உங்கள் வாக்கு. 1 லட்சம் அரசு காலி பின்னடைவு( SC/ ST/ OBC Backlog Vacancies )   இடங்களை  நிரப புவர்களுக்கு உங்கள் வாக்கு. தாட்கோ என்கிற பெயரில் வருடம் பல ஆயிரம்  கோடி பட்டியலின மக்கள் பெயரில் மோசடி போவதை தடுக்க தாட்கோ தனி வங்கி ஏற்படுத்தி கொடுப்பவர்களுக்கே உங்கள் வாக்கு. தீர்மானிங்கள்..
ஏமாற்றும் 44 தனி தொகுதி வேட்பாளர்களை விரட்டுவோம். உங்கள் உரிமைகளை சட்டசபையில் பேசுபவர்களுக்கே  44 தனி தொகுதி ( Reserve Constituency )  வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் சரஸ்ராம்ரவி*
MA.,BED.,AIII.,SLET.,LLB/
நிறுவனர் & தலைவர். தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு-* ( இந்தியா ), வழக்கறிஞர். ளழுமலை. ( மாநில தலைவர் , தமிழ்நாடு ), கைலாசம்.க
மகாராசன், ஜெய்சங்கர்.
புகழேந்தி ஆகியோருடன் கேட்டுக் கொண்டு உள்ளார்.

சனி, 14 பிப்ரவரி, 2026

அரசு பணிகளில் பார்வையற்றவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சதவிகிதத்தை தமிழக அரசு முயற்சி தர வேண்டும். பார்வையற்ற ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை.

அரசு பணிகளில் பார்வையற்றவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சதவிகிதத்தை தமிழக அரசு முயற்சி தர வேண்டும். பார்வையற்ற ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு. 

அரசு பணிகளில் பார்வையற்றவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சதவிகிதத்தை தமிழக அரசு முயற்சி தர வேண்டும். பார்வையற்ற ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை.

தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தில் நிர்வாகிகள் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் சேலம் கிளை தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்க, பேராசிரியர் ஜாகிர் உசேன், மதுரை கிளை முருகேசன், பாலாஜி மற்றும் சேலம் கிளை பொருளாளர் கருணாநிதி போலிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் சேலம் கிளை செயலாளரும் தமிழ்நாடு பார்வையற்றோர் ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளருமான ரஜினிகாந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்ட கூட்டத்தில்,  பார்வையற்ற ஆசிரியர்களுக்கான கோரிக்கைகள் குறித்து பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. 
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், தங்களது நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயம் தொடர்பான சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசு கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி வெளியிட்ட அரசாணையில் மாற்றுத்திறனாளி தேர்வுகளுக்கு டெட் தேர்வில் 50 சதவீதம் குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் தமிழ்நாடு அரசு கடந்த 25 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி வெளியிட்ட அரசானையில் சிறுபான்மையினர் பணிநிலை தொடர்ச்சி மற்றும் பதவி உயர்விற்காக டெட் தேர்வு எழுத தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பார்வையற்ற திறன் குறைபாடு உடையவர்களுக்கான கல்வி பயிற்சி மற்றும் தாமதமான வேலை வாய்ப்பு ஆகியவை தங்களது வாழ்க்கையில் மிகவும் கடினமான நிலைக்கு தள்ளியுள்ளதாக வேதனை தெரிவிக்கப்பட்ட கூட்டத்தில் தங்களது பல்வேறு கோரிக்கைகள் குறித்து தமிழக அரசிடம் பலமுறை போராட்டங்கள் மாநாடு வாயிலாக தெரிவிக்கப்பட்ட போதும் தமிழக அரசால் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் தமிழக அரசை வலியுறுத்தும் வகையில் அனைத்து ஜனநாயக முறையிலும் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்வதாக சங்க நிர்வாகிகளால் தெரிவிக்கப்பட்டது. 
ஏற்கனவே தங்களுக்கு பல்வேறு கோரிக்கைகள் தமிழக அரசால் தற்பொழுது வரை நிறைவேற்றப்படாமல் உள்ளதாகவும், குறிப்பாக பார்வையற்ற ஆசிரியர்களுக்கான அரசு உள் இட ஒதுக்கீட்டில் தற்போது உள்ள சதவிகிதத்தில் இருந்து கூடுதல் சதவிகிதம் வழங்கினால் மேலும் உள்ள தகுதியான நபர்கள் பயன் பெறுவார்கள் என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, புதிதாக அமையும் அரசின் முதலமைச்சர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்றும் தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தினர். 
இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மகாசபை கூட்டம் திருவண்ணாமலை வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அழைப்பு.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாகாசபை கூட்டம் வருகிற 27.2.2026 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தோக்கவாடி சந்தோஷம் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், தமிழக விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றுவது குறித்தும் அரசியல் கட்சிகள்‌ தமிழக விவசாயிகளுக்கு வாக்குறுதி அளிப்பது சம்பந்தமாகவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு எதிராக  பல்வேறு நேரங்களில் செயல்படுவது குறித்தும் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுப்பது குறித்து கூட்டத்தில் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது.
எனவே நடைபெறவுள்ள மாகாசபை கூட்டத்திற்கு மாநில மற்றும் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் விவசாயிகள் அனைவரும் பங்கேற்க  வேண்டும் என செய்தி குறிப்பின் மூலம் அழைப்பு விடுக்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தமிழக விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் வேலுச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நடந்து வரும் அத்துமீறல்கள்,  இன்னல்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர் இணை ஆணையர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனர் சரஸ்ராம் ரவி வலியுறுத்தல்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் ஜங்ஷன் இரயில்வே சரக்கு லாரி  ஒப்பந்த உரிமையாளர்கள் + ஓட்டுநர்கள் + கூலி தொழிலாளர்கள்  பல்வேறு இன்னல்கள் கொடுமைகள் , அத்து மீறல்கள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக தொழிலாளர் இணை ஆணையர் விசாரணைக்கும், அங்கு நிலவும் அத்துமீறல் குறித்து சேலம் கோட்டாச்சியர் அவர்களின் விசாரணைக்கு உத்தரவு வழங்கி நீண்ட நாள் நிலவி வரும் சட்டத்திற்கு பறம்பான, தொழிலாளர்களுக்கு எதிரான, கலவரத்தை, சட்ட ஒழங்கை பாதுகாத்திட சேலம் கோட்டம்  இரயில்வே நிர்வாகத்தை  அழைத்து  விசாரித்து வெள்ளை அறிக்கை வெளியிட தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு ( இந்தியா ) வலியுறுத்துகின்றது.
மேலும் இது குறித்து உண்மை அறியும் குழ ( Fact Finding Committee ) அங்கே சென்று விசாரணை  செய்து முழு அறிக்கை மாவட்ட ஆட்சியர் மற்றும்  சேலம் மாநகர காவல் ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனங்கள் மற்றும் தலைவருமான சரஸ்ராம் ரவி, வழக்கறிஞர். எழமலை
( மாநில தலைவர் - தமிழ்நாடு ), சி.அறிவழகன்
சி.நல்லநம்பி
அ சத்தியபிரியன்
ஜங்ஷன்ஜான்பீட்டர், வழக்கறிஞர்.TK ரமேஷ்குமார்
வழக்கறிஞர்.பூமொழி.
வழக்கறிஞர்.விஜயகுமார் உள்ளிட்டோரியின் சார்பாக செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

புதன், 11 பிப்ரவரி, 2026

மத்திய அரசு இந்திய விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு அமெரிக்கா அரசாங்கத்திடம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்யும் பட்சத்தில்,  தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் NDA கூட்டணி  வெற்றிவாய்ப்பை இழக்க நேரிடும்.... மத்திய அரசுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சூசக எச்சரிக்கை.

விவசாய பெருங்குடி மக்களின் நலன் கருதி பல்வேறு போராட்டங்களை நடத்தி விவசாய மக்களின் தேவையை உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் பூர்த்தி செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்க அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதையும் ஆட்சி நிறைவடையக்கூடிய இந்த காலகட்டத்தில் கூட  தற்பொழுது வரை திமுக அரசு செயல்படுத்தவில்லை என்பதும் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் கூட திமுகவை அமர வைக்கப் போவதில்லை என்பது தமிழக விவசாயிகள் சங்கத்தின் குற்றச்சாட்டாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக சூசக எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 
அதன்படி சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி தெரிவித்துள்ளதாவது, மத்திய அரசிடம் அமெரிக்க அரசாங்கம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கு கடந்த 2025 ஆண்டில் பலமுறை முயற்சித்த போது, உள்நாட்டு உணவு தானியம் வேளாண் சார்ந்த பொருட்கள் இறக்குமதி செய்ய ஒருபோதும் இந்திய அரசு அனுமதிக்காது, உள்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் தான் எனக்கு முக்கியம் என்று தெரிவித்தும், எனது தனிப்பட்ட  நலனில்  எவ்வளவு நெருக்கடி நிலை வந்தாலும் நான் அதை எதிர்கொள்ள  தயார், உள்நாட்டின் வேளாண் கட்டமைப்புகளுக்கும் உணவுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும் எவ்வளவு நிதி வேண்டுமானாலும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய தயார் என்று அமெரிக்க அரசாங்கத்துக்கு கணத்த குரலோடு பதிலடி கொடுத்தார் மாண்புமிகு இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். ஆனால் சமீபத்தில் அதற்கு மாறாக அமெரிக்க அரசாங்கம் இந்திய வர்த்தக பொருட்களுக்கு வரிவிதிப்பு குறைத்ததன் காரணமாக மத்திய அரசு மீண்டும் அமெரிக்க அரசாங்த்திடம் நல்லுறவு ஏற்படுத்தும்  வகையில் அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து இந்தியாவிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு தானியங்களை இறக்குமதி செய்ய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கு முயன்று வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி இந்திய விவசாயிகள் மனதில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 
மேலும் இதனால் உள்நாட்டின் பொருளாதரம் பாதிக்கப்பட்டு இந்தியாவின் முன்னேற்றம் பின்தங்கிவிடும் என்பதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மாண்புமிகு இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நன்கு உணரவேண்டும் என இந்த அறிக்கையின் மூலம் நினைவுபடுத்துகிறது என்றும் மேலும் மத்திய அரசு இந்திய விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு அமெரிக்கா அரசாங்கத்திடம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்யும் பட்சத்தில் தமிழகத்தில் சமீபத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் அனைத்தும் வெற்றிவாய்ப்பை இழக்க நேரிடும் என்பதை மத்திய அரசுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் எச்சரிக்கை விடுக்கிறது என பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு சூசக எச்சரிக்கையை விடுத்துள்ளார் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி.

திங்கள், 9 பிப்ரவரி, 2026

அரசு பொதுத்தேர்வு நடைபெறும் காலகட்டங்களில் உலகக்கோப்பை T20 கிரிக்கெட் போட்டிகளை நடத்தக்கூடாது. மத்திய அரசுக்கு தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு மத்திய அரசுக்கு கோரிக்கை.

உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணாக்கர்களின் நலன் கருதி தேசிய ஒழிக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனர் மற்றும் தலைவர் மத்திய அரசை வலியுறுத்தி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, 
பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் நடபெற உள்ள கால கட்டத்தில்  உலக கோப்பை T 20  கிரிக்கெட் போட்டிகள்  மாணவர்களின் படிப்பை கெடுக்கும் விதமாக இருப்பதால், 
இந்த கிரிக்கெட்  போட்டிகள் தேர்வு முடிந்து ஏப்ரல் மே மாதங்களில் நடத்தலாம் யோசனை தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட கூடாது என்றும் மாணவர்களின் நலன் கருதி. தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு நிறுவனர் & தலைவருமான
சரஸ்ராம்ரவி அறிக்கையின் வாயிலாக குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பின் விழிப்புணர்வு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது

தேசிய மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பின் விழிப்புணர்வு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது

தேசிய மக்கள் உரிமை பாதுகாப்பு அமைப்பின் விழிப்புணர்வு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது 

தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் மாதாந்திர விழிப்புணர்வு கூட்டம் ஈரோடு பஸ் நிலையம் அருகில் உள்ள வசந்தம் பேலஸ் இன் வளாகத்தில் நடைபெற்றது

இக்கூட்டத்தில் தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் சின்னராஜ் ராமசாமி, அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மனித உரிமைகள் மற்றும் தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடுகள் பற்றியும் உரை நிகழ்த்தினார்.

தமிழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மத்தியில் சிறப்பாக உரையாற்றினார். 

இக்கூட்டத்தில் தேசிய செயலாளர் செந்தில்குமார் மற்றும் தமிழ் மாநிலத் தலைவர் அந்தோணி ராஜ் மற்றும் மாநில மகளிர் அணி செயலாளர் சி.மகேஸ்வரி உட்பட அனைத்து மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட, அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் என ஏராளமான மக்கள் உரிமை காப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

முன்னதாக ஈரோடு மாவட்ட தலைவர் அ.ரசூல் முகைதீன் அனைவரையும் வரவேற்று பேசினார்

தேசிய செயலாளர் செந்தில் குமார் மற்றும் ஆனந்தன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள், 

ஈரோடு மாவட்ட செயலாளர்  வேல்முருகன் வாழ்த்துரை வழங்கினார், முடிவில் ஈரோடு மாவட்ட அமைப்பாளர் மன்சூர் அலி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.