புதன், 2 ஜூலை, 2025

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது..!

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது..!

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவர் போக்சோவில் கைது..!

ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி வயிற்று வழி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். அப்போது பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் கொடுமுடி போலீசில் புகார் அளித்தனர். 

இதையடுத்து போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபர் மூலம் கர்ப்பமானதாக முதலில் அந்த கல்லூரி மாணவி தகவல் தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் கல்லூரி மாணவியின் இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் செல்போனை ஆய்வு செய்தபோது, அவர் கூறிய தகவல் பொய் என்பது தெரியவந்தது. 


பின்னர் மாணவியிடம் நடத்திய தீவிர விசாரணையில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டி வரும் இந்திரஜித் (25) என்ற நபருடன் பழகி கர்ப்பமானது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து இந்திரஜித்தை கொடுமுடி போலீசார் போக்சோ வழக்கு பதிந்து நேற்று கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். கைதான இந்திரஜித்திற்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 1 ஜூலை, 2025

உயர்த்தப்பட்ட மின் கட்டணத்திலிருந்து விலக்கு அளித்த தமிழக முதல்வருக்கு நன்றி - தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு

உயர்த்தப்பட்ட மின் கட்டணத்திலிருந்து விலக்கு அளித்த தமிழக முதல்வருக்கு நன்றி - தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் இரா.வேலுச்சாமி கூறியதாவது... 

1000 யூனிட் இலவச மின்சாரத்தை வழங்கி விசைத்தறியாளர்களின் மின் சுமையை குறைத்துக் கொடுத்ததோடு, இந்த ஜூலை மாதத்தில் உயர்த்தப்பட்ட 3.16 சதவீத மின் கட்டண உயர்வை அரசே ஏற்றுக்கொண்டு விசைத்தறியாளர்களின் நலனுக்காகவும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்காகவும், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்திலிருந்து விலக்கு அளித்ததற்கு, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும்,  பரிந்துரைத்த, அமைச்சர் அனைத்து அமைச்சர்களுக்கும், நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்,

மேலும் விலை இல்லா வேஷ்டி சேலை ரகங்களை விசைத்தறிகளில் உற்பத்தி செய்வதற்காக, 680 கோடி ரூபாயை ஒதுக்கி, விசைத்தறி நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பும், வாழ்வாதாரமும் வழங்குவதோடு விசைத்தறிகளை நவீனப்படுத்துவதற்காக, 30 கோடி ரூபாயும், பொது பயன்பாட்டு மையத்திற்கு 20 கோடி ரூபாயை ஒதுக்கி விசைத்தறியாளர்களின் நலனுக்காக பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுப்பதை போல, விசைத்தறிகளுக்கு தேவையான மின் உற்பத்தியை, விசைத்தறிக்கூடங்களிலே உற்பத்தி செய்வதற்கு, நெட் மீட்டர் வசதியுடன் கூடிய 50% மானியத்துடன், சோலார் பேனல் அமைப்பதற்கு, திட்டத்தை வகுத்து, நடைமுறைப்படுத்தி கொடுத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

புதன், 25 ஜூன், 2025

ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம்

ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம்

ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய காயத்ரி தேவிக்கு சிறப்பு அபிஷேகம்


ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய காயத்ரி தேவிக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி, அரிசி மாவு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக காயத்ரி தேவிக்கு பட்டாளை உடுத்தி, வண்ண மாலை அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

தொடர்ந்து சுவாமிக்கு தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய காயத்ரி தேவிக்கு நடைபெற்ற ஆனி மாத அமாவாசை நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

திங்கள், 23 ஜூன், 2025

கொடுமுடி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என சங்கு ஊதும் போராட்டம்..!

கொடுமுடி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என சங்கு ஊதும் போராட்டம்..!


வெளி மாநில பக்தர்கள் வருகை புரிவதால் கொடுமுடி ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என காங்கிரஸார் சங்கு ஊதும் போராட்டம்..!

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடைபெற்ற அரசியலமைப்பை காப்போம் எனும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப் பெருந்தகையிடம், வருகின்ற 30/06/2025 அன்று ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடைபெறும் ஈரோடு ரயில் நிலைய நிர்வாகத்தை கண்டித்து, சங்கு ஊதும் போராட்டம் நடைபெறும் என முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினரும் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவரான கே. என்.பாஷா ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் ம. முகமது அர்சத், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ஜி ராஜன் ஆகியோர் கோரிக்கை மனுவாக வழங்கினர்.

அதில், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.ராபர்ட் ப்ரூஸ் அவர்களிடம், இந்த நடைபெறும் ஆர்ப்பாட்டக் கோரிக்கையை கொடுத்தபோது அவர் படித்துப் பார்த்தபின் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கொடுமுடி மிகவும் புகழ் பெற்ற ஆன்மீக சிறப்பு வாய்ந்த ஊராகும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி  மகுடேஸ்வரர் ஆலயத்திற்கும் காவிரி ஆற்றங்கரைக்கும் பல வெளி மாநில பக்தர்கள் வருகை புரிவதால் கொடுமுடி ரயில் நிலையத்தில் அனைத்து  ரயில்கள் நின்று சென்றன, 2021 கொரோனா பெருந்தொற்றுக்குப் பின் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் கொடுமுடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வரும் பாராளுமன்ற கூட்டர் தொடரில்  குரல் கொடுப்பேன் என்பதுடன்,


ஒருவேளை ரயில்வே துறை இந்த கோரிக்கையை நிறைவேற்றமல் மெத்தன போக்கில் இருந்தால் ஈரோடு மாவட்டம் கொடுமுடி மக்களோடு, காங்கிரசார் சேர்ந்து நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்றார்.
உலக யோகா தினத்தில் அசத்திய வலசையூர் அரசு பள்ளி மாணாக்கர்கள்.

உலக யோகா தினத்தில் அசத்திய வலசையூர் அரசு பள்ளி மாணாக்கர்கள்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

உலக யோகா தினத்தில் அசத்திய வலசையூர் அரசு பள்ளி மாணாக்கர்கள். 

உலக யோகா தினத்தை முன்னிட்டு வலசையூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயலேந்திரன் தலைமை ஏற்று துவங்கி வைத்தார். ஓய்வு பெற்ற ஆசிரியை  மணமல்லி மூச்சுப் பயிற்சி மற்றும் ஆசனங்களின் நன்மைகளை எடுத்துரைத்தார்.  இதில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை  பயிலும் சுமார் 650 மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு வகையான ஆசனங்களை செய்து காண்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற் கல்வி ஆசிரியர்கள் யோகநாதன், ஸ்டாலின், அன்பன் டேனியல் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் ரவி, ஜோயல்  ஞானதாஸ், ருத்ர கண்ணன், ராஜேஷ், அறிவழகன், சித்ரா ஆகியோர்  கலந்து கொண்டனர்.
தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 68-வது முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா.

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 68-வது முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 68-வது முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா.


சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான 68-வது Fresher’s Day, 21 ஜூன் 2025, திங்கட்கிழமை, காலை 10.30 மணியளவில் மிகச்சிறப்பாக ஸ்ரீ வள்ளியப்பா கலை அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், திரு.LS. லக்ஷ்மணன், Head – Campus Hiring, VVDN Technologies  மற்றும் திரு.T. ஞானசேகரன், Block Education Officer, School Education ஆகியோர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டனர். முதலாமாண்டு மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
கல்லூரியின் தலைவர் திரு.C.வள்ளியப்பா அவர்கள் தனது தலைமையுரையில், கடந்த 68 வருடங்களாக ஒழுக்கத்துடன் கூடிய சிறப்பான கல்வியை இக்கல்லூரி வழங்கி வருகிறது என்று கூறினார். மேலும், இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் உலகளவில் சிறந்த தொழில்முனைவோர்களாகவும், முன்னணித் தொழில்நிறுவனங்களில் உயர் பதவிகளிலும் வாழ்வில் உயர்ந்த நிலையில் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி, புதிதாக சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் இக்கல்லூரியிலுள்ள நவீன தொழில்நுட்ப வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்தி, வாழ்வில் மேன்மேலும் வளர்ந்து கல்லூரிக்கும், பெற்றோருக்கும் நற்பெயரை பெற்றுத்தர வேண்டும் என்றும் வாழ்த்தினார். கல்லூரியின் துணைத்தலைவர் திரு.சொக்கு வள்ளியப்பா அவர்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்து, மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். கல்லூரியின் துணைத்தலைவர் திரு.தியாகு வள்ளியப்பா அவர்கள், மாணவர்கள் Industry relatedProjects செய்ய வேண்டும் என்றும், Start-up Activities மூலமாக இளம்
தொழில்முனைவோர்களாக முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
கல்லூரியின் முதல்வர் Dr.A. கனகராஜ்  அவர்கள் தமது உரையில் கல்லூரியின் தோற்றம் மற்றும் வளர்ச்சி, புதுமையான கற்றல் முறைகள், கல்லூரி பெற்ற சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விருதுகள், மாணவர்களின் சாதனைகள், கல்லூரியின் தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். முதலாமாண்டு மாணவ, மாணவியர் இக்கல்லூரியில் வழங்கப்படும் எண்ணற்ற வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்தி, தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று வாழ்த்தினார். கல்லூரியின் இயக்குனர் Dr. V. கார்த்திகேயன், சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், தங்களின் சிறப்பான அனுபவங்களை முதலாமாண்டு மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். மேலும் 2500 மேற்பட்ட முதலாமாண்டு மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருடன் கலந்து
கொண்டனர்.

ஞாயிறு, 22 ஜூன், 2025

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வேனில் படையெடுத்துச் சென்ற கட்சியினர்

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வேனில் படையெடுத்துச் சென்ற கட்சியினர்


கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பாஜக நகர தலைவர் பிரகாஷ் தலைமையில் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு கலந்து கொள்ள பெருந்திரளாக பொதுமக்கள் வேன்களில் படையெடுத்து சென்றனர். இதில் ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் பவித்ரா குமார் மற்றும் காசிராஜன்,பிரதாப் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆத்துப்பாளையம் கிளை தலைவர் மணிகண்டன், மதன்குமார்,சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வேனில் புறப்பட்டு மாநாட்டிற்கு கிளம்பி சென்றனர்.