சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சோனா தொழில்நுட்பக் கல்லூரியின் ஓமலூர் செக்காரப்பட்டியில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தினை சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் துவக்கி வைத்தார்.
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி அரசின் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செக்காரப்பட்டியில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் திறப்பு விழா நடைப்பெற்றது. சோனா கல்வி நிறுவனங்களின் தலைவர் வள்ளியப்பா தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவில் சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார். இதனை தொடர்ந்து அறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் முதன்மை ஆய்வாளர் முனைவர் சத்தியபாமா திட்ட விளக்க உரையாற்றினார். பின்னர் சந்தியூர், வேளாண்மை கழக திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் வாழ்த்துரை வழங்கினார். இந்த விழாவில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் அவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தை துவக்கி வைத்து விழா பேருரையாற்றினார்.
அவர் பேசும் பொழுது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றுதல், மகளிர் சுயஉதவி குழுக்களை மேம்படுத்துதல், போன்ற செயல்களை முன்னேடுத்து இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தி வரும் சோனா கல்வி நிறுவனத்திற்கு தனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும் இத்திட்டத்தில் பங்கேற்று பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய சோனா கல்வி நிறுவனத்தின் தலைவர் வள்ளியப்பா சோனா நிறுவனம் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பொது மக்களுக்கு ஏராளாமான வாய்ப்புகளை வழங்கி வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல் போன்ற ஏரளமான வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றது. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் ஒமலூர் செக்காரப்பட்டி பொதுமக்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக இத்திட்டத்தின் இணை ஆய்வாளர் முனைவர் இராஜேஸ்வரி நன்றி உரையாற்றினார்.