திங்கள், 24 நவம்பர், 2025

தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதமாக உள்ள நெல் ஈரப்பத  கொள்முதலை 22 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மத்திய அரசுக்கு கோரிக்கை.

தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதமாக உள்ள நெல் ஈரப்பத கொள்முதலை 22 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மத்திய அரசுக்கு கோரிக்கை.

சேலம். 
எஸ் கே சுரேஷ் பாபு.

தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 17 சதவிகிதமாக உள்ள நெல் ஈரப்பத  கொள்முதலை 22 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மத்திய அரசுக்கு கோரிக்கை.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் தற்போது குறுவை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக விவசாயிகள் உற்பத்தி செய்த நெல் மணிகள் மழையில் நனைந்தவாறு  உள்ளது. 
மத்திய அரசு 17% ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய அனுமதி கொடுத்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22% ஆக  உயர்த்த மத்திய அரசிடம் அனுமதி  கேட்டது ஆனால்  மத்திய அரசு 22%  ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி தரவில்லை.   தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு உடனடியாக  மறு பரிசீலனை செய்து 22% இருப்பதும் உள்ள நிலை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் மூலம் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.
தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் பலி!

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் பலி!

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் பலி!

தென்காசி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பெண், ஒரு ஆண் என 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, விபத்தில் காயமடைந்தவர்களில் 5க்கும் மேற்பட்டோர் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

தென்காசி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி – மதுரை சாலையில் அச்சம்பட்டி அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து, படுகாயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றுகொண்டிருந்த பேருந்தும் கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி வந்த பேருந்தும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, காயமடைந்தவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்படுகிறன்றனர். இடைக்கால் அருகே துரைசாமிபுரம் என்ற இடத்தில் இந்த விபத்து நடக்கவே, அருகில் இருந்த கிராமத்தை சேர்ந்த பலரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு உதவியுள்ளனர். மேலும், உடனடியாக காவல்துறைக்கும், ஆம்புலன்ஸூக்கும் விபத்து குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

பலி எண்ணிக்கை உயரும் அபாயம்:
உடனடியாக சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ், தனியார் தொண்ட நிறுவன ஊழியர்களும் விரைந்தனர். அவர்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்து காயமடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று வருகின்றனர். அதோடு, காயடைந்தவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
கனமழையால் சாலைகள் துண்டிப்பு:
ஏற்கெனவே, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, முக்கிய சாலைகள் கூட துண்டிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, காரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்வது என்பதே சற்று கடினமான காரியமாகியுள்ளது.

ஞாயிறு, 23 நவம்பர், 2025

14-ஆம் ஆண்டு தலைசிறந்த ஆசிரியர் விருது விழா

14-ஆம் ஆண்டு தலைசிறந்த ஆசிரியர் விருது விழா

14-ஆம் ஆண்டு தலைசிறந்த ஆசிரியர் விருது விழா – ஈரோடு

JCI ஈரோடு எக்ஸெல், ஈரோடு எக்ஸெல் பதிப்பகம் மற்றும் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி ஆகிய மூன்று அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் தலைசிறந்த ஆசிரியர்களுக்கான 14-வது ஆண்டு விருது வழங்கும் விழா இன்று திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி கஸ்தூரீபா கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் இந்திய உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் கேரள மாநில முன்னாள் ஆளுநர் நீதியரசர் P. சதாசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 324 ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
விழாவில் வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் மற்றும் தாளாளர் சந்திரசேகர், டிரஸ்டி யுவராஜா மற்றும் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜெயராமன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் பற்றிய 10,000-க்கும் மேற்பட்ட தகவல்களை கொண்ட JCI Excell Yellow Pages 2025 புத்தகத்தை நீதியரசர் P. சதாசிவம் வெளியிட்டார்.
விழா ஏற்பாடுகளை ஈரோடு எக்ஸெல் பதிப்பக CEO முருகானந்தம், JCI ஈரோடு எக்ஸெல் தலைவர் நம்பி ஆரூரன், எக்ஸெல் எடுகாம் இயக்குநர் ராஜேந்திர பிரசாத், உதவித்தலைவர் பிரபாகரன், Women Empowerment Cell மற்றும் JCI உறுப்பினர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
சேலத்திற்கு அருகே  அதிநவீன உடற்பயிற்சி நிலையம் திறப்பு விழா. பாமக வன்னியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி துவக்கி வைத்தார்.

சேலத்திற்கு அருகே அதிநவீன உடற்பயிற்சி நிலையம் திறப்பு விழா. பாமக வன்னியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி துவக்கி வைத்தார்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்திற்கு அருகே  அதிநவீன உடற்பயிற்சி நிலையம் திறப்பு விழா. பாமக வன்னியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி துவக்கி வைத்தார். 

சேலத்தை அடுத்துள்ள சர்க்கார் கொல்லப்பட்டி, சாமியார் கடை பேருந்து நிறுத்தம் அருகே அதிநவீன முறையில் மாஸ்டர்ஸ் ஜிம் பிட்னஸ் ஸ்டுடியோ என்ற பெயரில் உடற்பயிற்சி 3 வது மையம் திறப்பு விழா நடைபெற்றது. பாமக முன்னால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ்  அவர்களின் நல்லாசியுடன் துவக்கப்பட்ட இந்த புதிய அதி நவீன உடற்பயிற்சி  மையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, பயிற்சி மையத்தின் உரிமையாளர் இளங்கோ  தலைமை தாங்கினார். பயிற்சி மையத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில், பாமக வன்னியர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கார்த்தி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய உடற்பயிற்சி மையத்தினை துவக்கி வைத்தார். 
தொடர்ந்து பயிற்சி மையத்தினை பார்வையிட்ட அவர் உடற்பயிற்சியையும் மேற்கொண்டு அசத்தினார்.
சேலம் மாநகரில் எத்தனையோ உடற்பயிற்சி நிலையங்கள் இறந்தபோதிலும், தற்பொழுது சேலத்திம் சர்க்கார் கொல்லப்பட்டியில் புதிதாக துவங்கப்பட்டுள்ள  மாஸ்டர்ஸ் ஜிம் பிட்னஸ் ஸ்டுடியோ பயிற்சி மையத்தில், வழக்கமான உடற்பயிற்சிகளுடன், கூடுதலாககொழுப்பு குறைப்பு, கார்டியோ பயிற்சி, எடை பயிற்சி, தசை பயிற்சி, தனிப்பட்ட பயிற்சி, உணவு திட்டமிடல் ஆகிய பயிற்சிகளும், இது போக தரமான உபகரணங்கள், சிறந்த பயிற்சி, விளையாட்டு சார்ந்த பயிற்சி,  உடற்பயிற்சி மற்றும் ஆற்றல் நிலைகள், பாடி பில்டர் & பவர் லிஃப்டிங் பயிற்சி ஆகியவை வழங்கப்பட உள்ளதாக பயிற்சி மையத்தின் உரிமையாளர் இளங்கோ தெரிவித்தார். 

அதுமட்டுமல்லாமல் இந்த பயிற்சி மையத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ள ஆண்கள், பெண்களுக்கு மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு என தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த பயிற்சி மையத் துவக்க விழாவில் பாமக மாவட்ட செயலாளர் சரவண கந்தன் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் குமார் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தங்கராசு மேற்கு தொகுதி பொறுப்பாளர் சண்முகம் அமைப்பு செயலாளர் சிவா மற்றும் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயிற்சி மைய உரிமையாளருக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும்தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

சனி, 22 நவம்பர், 2025

சேலத்தில் 56 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ராஜ முருகன் சிலை பிரதிஷ்டை. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து சுவாமி தரிசனம்.

சேலத்தில் 56 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ராஜ முருகன் சிலை பிரதிஷ்டை. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து சுவாமி தரிசனம்.

சேலம். 
எஸ் கே சுரேஷ் பாபு.

சேலத்தில் 56 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ராஜ முருகன் சிலை பிரதிஷ்டை. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து சுவாமி தரிசனம். 

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பேச விளக்கு கிராமம் அணை மேடு பகுதியில் உள்ள அருள்மிகு ராஜ முருகன் ஆசிரமம் 56 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 56 ஆண்டுகளை நினைவு படுத்தும் விதமாக ஆசிரம வளாகத்தில் பிரம்மாண்ட முருகன் சிலை அமைக்க திட்டமிட்டு அதற்கான படியும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் முருகப்பெருமானுக்கு அழகன் முருகன் என்ற பெயரும் உண்டு. அந்த அழகை சீர்குலைக்கும் விதமாக அவளைச் சின்னமாக முதற்கட்டமாக அமைக்கப்பட்ட சிலை அமைந்து தமிழகத்தில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. இதனை அடுத்து சிற்பக் கலை மாமணி விருது பெற்ற ஸ்தபதிகள் முருகன் மற்றும் அசோகன் ஆகியோரின் வாயிலாக ஆசிரம நிர்வாகம் 56 அடி உயரத்தில் அருள்மிகு ஸ்ரீ ராஜமுருகன் திருவுருவச் சிலை அமைக்க முடிவு செய்தது. தனது ஒரு ஆண்டுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்த சிலை அமைக்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவு பெற்று அழகன் முருகன் என்ற பெயருக்கு ஏற்ப மிக கம்பீரமான முறையில் ராஜா அலங்காரத்தில் காட்சி அமைக்கும் விதமாக அமைக்கப்பட்டு ஆசிரம நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்களையே மிகுந்த வரவேற்பினையும் மகிழ்ச்சியினையும் ஏற்படுத்தியது என்றால் அது மிகை அல்ல. 
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் இரண்டாவது அதிக உயரம் கொண்ட மிகப் பிரமாண்ட முருகப்பெருமானுக்கு நாளை குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனிடையே கடந்த 17 ஆம் தேதி முகூர்த்தக்கால் நடுதல் முளைப்பாரி போடுதல் கங்கணம் கட்டுதலுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் இன்று காலை மங்கல இசையுடன் கணபதி ஹோமம் நடைபெற்றன. தொடர்ந்து பக்தர்கள் தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த பகுதியின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்ற தீர்த்தக்கோட ஊர்வலமானது திருக்கோவிலை அடைந்ததும் விநாயகர் பூஜை புண்ணியாகும் வாஸ்து சாந்தி மிருத்சங்கரனம் கும்பலங்காரம் முதல் கால யாக பூஜைகள் பூர்ணாஹுதியும் நடைபெற்றன. திருக்கோவிலைடைந்து தீர்த்தக்கரை ஊர்வலம் ஆனது நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் 56 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அருள்மிகு ஸ்ரீ ராஜமுருகன் பாதத்தில் தீர்த்தத்தை ஊற்றி வணங்கி வழிபட்டு சென்றனர். இதனை தொடர்ந்து நாளை இரண்டாம் காலை ஆக பூஜைகள் நாடி சந்தானம் பரிசாஹுதி பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை உடன் 56 அடி உயரம் கொண்ட அழகன் எம்பெருமான் ஸ்ரீ ராஜ முருகப்பெருமானுக்கு மகா கும்பாபிஷேகம் மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற உள்ளன. 
இதனை அடுத்து ஆசிரம நிர்வாகத்தின் சார்பில் நாளை விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் ஞானகுரு வெங்கடாசலம் சுவாமிகள் ராஜேந்திரன் மற்றும் கண்ணன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
ஈரோடு பிரைட் ஆப்டிகல்ஸ் 53ம் ஆண்டு விழா! ரேபான் ஏஐ மெட்டா கேமரா கிளாஸ் அறிமுகம்!!

ஈரோடு பிரைட் ஆப்டிகல்ஸ் 53ம் ஆண்டு விழா! ரேபான் ஏஐ மெட்டா கேமரா கிளாஸ் அறிமுகம்!!

ஈரோடு பிரைட் ஆப்டிகல்ஸ் 53ம் ஆண்டு விழா! ரேபான் ஏஐ மெட்டா கேமரா கிளாஸ் அறிமுகம்!!

ஈரோட்டில் கண் கண்ணாடிகள் மற்றும் பிரேம்களுக்கென பிரத்யேக நிறுவனமாக பிரைட் ஆப்டிகல்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் 53ம் ஆண்டு துவக்க  விழா நடைபெற்றது. விழாவை நிறுவன உரிமையாளர் கேசவன்,மங்கையர்க்கரசி கேசவன் கேக் வெட்டி துவக்கி வைத்தனர். வருகை தந்த  அனைவரையும் குமரேசன்,சங்கீதா குமரேசன் ஆகியோர் வரவேற்றனர்.விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சக்தி மசாலா துரைசாமி,சாந்தி துரைசாமி, பி.வி.பி பள்ளி தாளாளர் டாக்டர். எல்.எம்.ராமகிருஷ்ணன், எஸ்.கே.ஆர். மஞ்சள் மண்டி முத்துக்குமார்,கண் மருத்துவர்கள் எஸ்.எஸ்.சுகுமார், எல்.வி.சண்முகநாதன்,  வி.பன்னீர்செல்வம், என்.வி.கோவிந்தராஜீ, எஸ்.எஸ்.ராகவேந்திரன்,தோல் டாக்டர் சின்னச்சாமி மற்றும் பலர்  கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்பொழுது உரிமையாளர் கேசவன் கூறியதாவது: வாடிக்கையாளர்களின் பேராதரவுடன் 
53ம் ஆண்டில்  அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில்  ஈரோட்டில் முதல் முறையாக ரேபான் ஏஐ மெட்டா கேமரா கிளாஸை அறிமுகப்படுத்தி உள்ளோம். இதில் ப்ளூடூத், வாய்ஸ் ரெக்கார்டிங், வீடியோ ரெக்கார்டிங், போட்டோ கேப்சர், வீடியோ கால் வசதி, வாய்ஸ் கால் வசதி ஆகிய அனைத்து சிறப்பம்சங்களும் உள்ளது. மேலும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற டோம் போர்ட், மௌன் பிளாக், குஷி,ஹோஹோ பாஸ், டிடா லேன்சர், மைக்கேல் கோர்ஸ், மினா மோடோ, ரேபான் மெட்டா,  பார்பரி,  போன்ற பிரேம் வகைகளும், மௌவி ஜிம், ரேபான், போலிஸ் போன்ற சன் கிளாஸ்களும்,  பிரசித்தி பெற்ற ஜெய்ஸ், ரோடன் ஸ்டாக், ஹோயா,நிகான் போன்ற லென்ஸ் வகைகளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் விற்பனை செய்து வருகிறோம். 53ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வருகிற டிசம்பர் 20ந் தேதி வரை சன் கிளாஸ், ஸ்பெக்டக்கல்ஸ் ரூ.3000த்திற்கு மேல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சபா செய்திகளுக்காக 
பவானி குட்டி
விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலைப் பொருள்களுக்கு M.S.P யை அறிவித்து விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை போல தமிழகத்திலும் விவசாயிகள் வெற்றி பெற வைப்பார்கள். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலைப் பொருள்களுக்கு M.S.P யை அறிவித்து விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை போல தமிழகத்திலும் விவசாயிகள் வெற்றி பெற வைப்பார்கள். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை.

சேலம், 
எஸ் கே சுரேஷ் பாபு. 

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலைப் பொருள்களுக்கு M.S.P யை அறிவித்து விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை போல தமிழகத்திலும் விவசாயிகள் வெற்றி பெற வைப்பார்கள். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கை.

கோவையில் நடைபெற்ற ‌தென்னிந்திய‌ இயற்கை விவசாயிகள் மாநாடுட்டிற்கு கடந்த 19.11.2025 அன்று மாண்புமிகு  பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகை தந்து மாநாட்டு விழாவில் உரையாற்றிய போது விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் உற்சாகத்தையும் ஆரவாரத்தையும் கண்டு மேடையில் இருந்தவாறு  சமீபத்தில் பீகார் மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றததைப்போல தமிழ்நாட்டிலும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெறுவது போல் அலை வீசுகிறது என்று பேசிய வார்த்தை மாநாட்டில் பங்கேற்ற தென்னிந்திய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் முக்கிய பேசு பொருளாக பார்க்கப்பட்டது. 
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றததைப்போல் தமிழ்நாட்டிலும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி அலை வீச வேண்டுமென்றால்  நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொட்களுக்கு  உண்டான குறைந்தபட்ச ஆதார விலை MSP_ யை மத்திய அரசு விரைவில் அறிவித்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். மேலும் மாண்புமிகு பாரத பிரதமர்  அவர்கள்  விவசாயம் சார்ந்த மத்திய அரசு கூட்ட மேடைகளில்  பேசும் போது விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும் என கூறியது போல விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு பெறுவதற்கு உண்டான நடைமுறை சாத்தியக்கூறுகளை   காலம் தாழ்த்தாமல் நடைமுறைக்கு கொண்டு வரும் பட்சத்தில் மட்டுமே சமீபத்தில் பீகார் மாநிலத்தில் நடந்தது முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றததைப்போல் தமிழ்நாட்டிலும் தமிழக விவசாயிகள் வெற்றி பெற வைப்பார்கள் என மாண்புமிகு  பாரத பிரதமர் பேசிய வார்த்தைக்கு உண்டான விளக்க அறிக்கையை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில்  இந்த செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன் என அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.