ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

மகா சிவராத்திரி மாசி திருவிழாவை முன்னிட்டு சேலம் கிச்சிபாளையம் அங்கு அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் முகூர்த்த கால் நடுவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மகா சிவராத்திரி மாசி திருவிழாவை முன்னிட்டு சேலம் கிச்சிபாளையம் அங்கு அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் முகூர்த்த கால் நடுவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

மகா சிவராத்திரி மாசி திருவிழாவை முன்னிட்டு சேலம் கிச்சிபாளையம் அங்கு அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் முகூர்த்த கால் நடுவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 

தமிழ் மாதங்களில் வரும் மாசி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான மயான கொள்ளை தமிழக முழுவதும் முயற்சியுடன் நடத்த ப்படுகிறது என்பது அனைவராலும் மறந்துவிடவும் மறுகவும் முடியாது. சேலத்தில் இதற்கு முத்தாய்ப்பாக புராண காலத்தில் அம்மன் நடத்திய நிகழ்வை மெய்ப்பிக்கும் விதமாக நடத்தப்படும் மயான கொள்ளை தமிழக அளவில் ஏன் உலக அளவில் பிரசித்தி பெற்றது. அந்த வகையில் சேலம் கிச்சிப்பாளையம் செல்வ விநாயகர் இணைந்த கைகள் நண்பர்கள் குழு தொடர்ந்து கந்த குடில் நண்பர்கள் குழுவின் மூன்றாவது தலைமுறையாக சுமார் 80 ஆண்டுகள் கடந்தும் சேலம் கிச்சிபாளையத்தில் உள்ள ஸ்ரீ அங்கு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் மகா சிவராத்திரி மாசி திருவிழாவினை மிக எழுச்சியுடன் கொண்டாடி வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்தது. 
அந்த வகையில் மாசி திருவிழாவை முன்னிட்டு இன்று முகூர்த்தக்கால் நட்டு விழா தொடங்கப்பட்டது. சேலம் கிச்சிபாளையம் செல்வவிநாயகர் இணைந்த கைகள் நண்பர்கள் குழு, கந்தகுடில் நண்பர்கள் குழு மற்றும் ஸ்ரீ அங்கு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முதற்கட்டமாக திருக்கோவிலில் வீட்டில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று முகூர்த்தக்கால் நடைபெற்றது தொடர்ந்து, ஆங்கார அங்காயி மற்றும் பரிவார தெய்வங்கள் பக்தர்களின் பக்தி பரவசத்துடன் அந்த பகுதிகளின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, திருக்கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு பக்தர்களின் சரண கோஷங்களுக்கு இடையே விமர்சையாக நடைபெற்றது.
பரிவார தெய்வங்களுடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களின் பரவசத்துடன் திருக்கோவில் வளாகத்தில் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் நடைபெற்ற அருள் வாக்கு கொடுக்கும் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை அம்மனிடம் தெரிவித்து அதற்கான தீர்வையும் பெற்றனர். மாசித் திருவிழாவில் முதல் நாளான இன்று விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் பிரசாதங்களாக வழங்கப்பட்டன. தொடர்ந்து, வரும் 16 ம் தேதி, ஸ்ரீ அங்கு அங்காளம்மன் பதிக்கள் திறப்பு மற்றும் காவலாளிகளுக்கு கண் திறப்பு நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து கோவில் தலைமை பூசாரியும் தலைவருமான பன்னீர்செல்வம் குறத்தி வேடம் அணிந்து குறை கூடை ஊர்வலம் நிகழ்வும் நடைபெற உள்ளன. தொடர்ந்து மாலை சத்தாபரணத்தில் அம்மன் பவனி சக்தி அளித்து சக்தி கிரகத்துடன் முளைப்பாரி பூசை கூடை ஊர்வலமும் நடைபெற உள்ளது. இதனை அடுத்து வரும் 17ஆம் தேதி நிறைந்த அமாவாசை அன்று புராண நிகழ்வை மெய்ப்பிக்கும் மயான கொள்ளை புறப்பாடு பக்தர்களின் ஆரவாரம் எழுச்சி மற்றும் முயற்சியுடன் நடைபெற உள்ளது. 
வரும் 18ஆம் தேதி 101 பால்குட ஊர்வலம் எடுக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து பொங்கல் வைத்து கிடா கோழி அம்மனுக்கு பலியிட்டு நேர்த்திக்கடன் செய்யும் நிகழ்வும் சிறப்பு படையல் பூஜையும், 19ஆம் தேதி அம்மனுக்கு அலங்கார பூஜை நடத்தப்பட்டு விழா இனிதே நிறைவு பெற உள்ளதாக, கோவிலின் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மாசி மயான கொலை விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தையும் கோவில் நிர்வாகிகள் செல்வராஜ் மணிகண்டன் பாலசுப்பிரமணி ஆகியோர் மிகவும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

சனி, 31 ஜனவரி, 2026

குடியரசு கல்வி கலைக்கூடம் ரீபப்ளிக் எஜிகேசன் அகாடமி சேலத்தில் திறப்பு... எதிர்காலத்தில் தமிழக முழுவதும் 38 மாவட்டங்களிலும் விரிவுபடுத்த உள்ளதாக அகாடமியின் நிறுவனர் சரஸ்ராம் ரவி தகவல்.

குடியரசு கல்வி கலைக்கூடம் ரீபப்ளிக் எஜிகேசன் அகாடமி சேலத்தில் திறப்பு... எதிர்காலத்தில் தமிழக முழுவதும் 38 மாவட்டங்களிலும் விரிவுபடுத்த உள்ளதாக அகாடமியின் நிறுவனர் சரஸ்ராம் ரவி தகவல்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

குடியரசு கல்வி கலைக்கூடம் 
ரீபப்ளிக் எஜிகேசன் அகாடமி சேலத்தில் திறப்பு... எதிர்காலத்தில் தமிழக முழுவதும் 38 மாவட்டங்களிலும் விரிவுபடுத்த உள்ளதாக அகாடமியின் நிறுவனர் சரஸ்ராம் ரவி தகவல்.

சேலம் மாநகரம் அஸ்தம்பட்டி பகுதியில் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு கட்சியின் சேலத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் குடியரசு கல்வி கலைக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ரிபப்ளிக் எஜுகேஷனல் அகாடமி என்ற புதிய அமைப்பை நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அமைப்பின் மாநில மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில், அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் குடியரசு கல்வி கலைக்கூடத்தின் நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி செய்தியாளர்களை சந்தித்தபோது, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் குறிப்பாக யுபிஎஸ்சி டிஎன்பிஎஸ்சி வங்கி ரயில்வே இன்சூரன்ஸ் பொதுத்துறை போன்ற வேலைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது மேலும் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான கவுன்சிலிங் பாடமுறை கல்வி தாட்கோ கடன் வசதி அனைத்து வங்கி கடன் வசதி வாகன காப்பீடு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் எனவும், 
தற்போது அனைத்தும் தனியார் மையமாக மாற்றப்படுவதால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையை நிலைநாட்டும் போரிட்டு தனியார் பணியிடங்களில் இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படவில்லை எனவும் இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி ஒடுக்கப்பட்ட மற்றும் சாதாரண ஏழை எளிய மக்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும்,
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் பயிற்சி மையங்கள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர் மேலும் முதற்கட்டமாக சேலம் கோவை செங்கல்பட்டு மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களில் பயிற்சி மையங்கள் துவங்கப்பட்டுள்ளது எனவும் தொடர்ந்து பயிற்சிகள் வழங்க உள்ளதாக அமைப்பின் நிறுவனர் சரஸ்ராம் ரவி தெரிவித்தார்.
ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் பிரிவு சாலை பகுதியில் தனியார் நிறுவனத்தில் தனி அறையில் அடைத்து வைத்து பட்டியலின பெண் ஊழியர் சித்திரவதை செய்து தாக்குதல் நடத்திய கொடூரம். சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது தற்போது வரை வழக்கு பதிவு செய்தாத வெண்ணந்தூர் காவல்துறை. நிர்வாகத்திற்கு ஆதரவாக பஞ்சாயத்து செய்வதிலேயே குறியாக இருக்கும் வெண்ணந்தூர் காவல்துறையினர் என அகிம்சை வெற்றிக் கழக நிறுவனர் Dr இரா. காந்திசங்கர் குற்றச்சாட்டு.

ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் பிரிவு சாலை பகுதியில் தனியார் நிறுவனத்தில் தனி அறையில் அடைத்து வைத்து பட்டியலின பெண் ஊழியர் சித்திரவதை செய்து தாக்குதல் நடத்திய கொடூரம். சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது தற்போது வரை வழக்கு பதிவு செய்தாத வெண்ணந்தூர் காவல்துறை. நிர்வாகத்திற்கு ஆதரவாக பஞ்சாயத்து செய்வதிலேயே குறியாக இருக்கும் வெண்ணந்தூர் காவல்துறையினர் என அகிம்சை வெற்றிக் கழக நிறுவனர் Dr இரா. காந்திசங்கர் குற்றச்சாட்டு.

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் பிரிவு சாலை பகுதியில் தனியார் நிறுவனத்தில் தனி அறையில் அடைத்து வைத்து பட்டியலின பெண் ஊழியர் சித்திரவதை செய்து தாக்குதல் நடத்திய கொடூரம். சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது தற்போது வரை வழக்கு பதிவு செய்யாத வெண்ணந்தூர் காவல்துறை. நிர்வாகத்திற்கு ஆதரவாக,  பஞ்சாயத்து செய்வதிலேயே குறியாக இருக்கும் வெண்ணந்தூர் காவல்துறையினர் என அகிம்சை வெற்றிக் கழக நிறுவனர் Dr இரா. காந்திசங்கர் குற்றச்சாட்டு. 

சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சி கார்மெண்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இரண்டு ஷிப்டுகளாக பணிகள் நடைபெறும் இந்த நிறுவனத்தில் வெண்ணந்தூர் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட பெண்கள் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் CEO ஆக மணிவண்ணன் என்பவரும், ஸ்ரீதர், அமர்தீப், ரஞ்சிதா மற்றும் கனகா உள்ளிட்டவர்கள் CEO விற்றுக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனிடையே ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் என்பவரின் மனைவி தேவி சம்பந்தப்பட்ட மீனாட்சி கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பெண் ஊழியராக கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 4  குழந்தைகளுக்கு தாயான பட்டியல் இனத்தைச் சார்ந்த தேவி, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தான் பணி செய்யும் இடத்தில், தான் மரியாதை குறைவாக நடத்தப்படுவதாகவும், தான் மனரீதியாக தன்னை அவமானப்படுத்துவதாகவும், தகாத வார்த்தைகளால் தன்னை திட்டுவதாகவும் மனவேதனையில் இருந்துள்ளார். இந்த பிரச்சனை குறித்து தனது இளைய மகள் நந்தினியின் கணவர் மோகன் ராஜ் இடம் கூறியதாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட மீனாட்சி கார்மெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகமான சென்னைக்கு இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மீனாட்சி கார்மெண்ட்ஸ் நிறுவனத்தின் CEO மணிவண்ணன் ஸ்ரீதர் அமர்தீப் ரஞ்சிதா மற்றும் கனகா ஆகியோர், பட்டியலினத்தைச் சார்ந்த பெண் ஊழியர் தேவியை நிறுவனத்தில் உள்ள தனி அறையில் அடைத்து வைத்ததோடு மட்டுமல்லாமல் தங்களுக்கு எதிராக தலைமை அலுவலகத்தில் புகார் தெரிவிப்பாயா ? என்ற தோணியில் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு மட்டுமல்லாமல் அவரை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி கண்மூடித்தனமாக தாக்கியும் உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மிகுந்த  படுகாயங்களுடன், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலின பெண் தேவி புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் தேவியின் புகார் மீது சிஎஸ்ஆர் அல்லது எ ஃப் ஐ ஆர் எதுவும் பதிவு செய்யாமல் சம்பந்தப்பட்ட மீனாட்சி கார்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக பஞ்சாயத்து செய்வதிலேயே குறியாக இருந்து வருவது வேதனையின் உச்சமாக இருக்கிறது என்று அகிம்சை வெற்றி கழகத்தின் நிறுவனர் Dr. இரா.காந்திசங்கர் மற்றும் அவரது நிர்வாகிகளுடன் வேதனை தெரிவித்துள்ளார்.
1500 க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வரும் இந்த நிறுவனத்தில் தற்பொழுது வெளிவந்துள்ள இந்த அவலத்தை குறித்து நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தகவல் தெரிவித்தும் தற்பொழுது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனையின் உச்சம் என்றும், சம்பந்தப்பட்ட மீனாட்சி கார்மெண்ட்ஸ் நிறுவனத்தின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையிலும் கூட CEO என்று கூறிக்கொண்டு பெண்களை இழிவு படுத்தி வரும் மணிவண்ணனின் அறையில் எந்த ஒரு கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்படாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருவதாகவும், தேவியை போன்று எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது காவல்துறையினர் விசாரித்தால் மட்டுமே தெரியும் என்று குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மீனாட்சி கார்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் தெரிவித்தார். பெண் தெய்வத்தின் பெயரைக் கொண்டு இயங்கி வரும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில், பணியாற்றும் 1500 பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது என்று குற்றம் சாட்டிய அவர், தேவியை போன்று இன்னும் எத்தனை பெண்கள் இந்த மணிவண்ணன் என்பவரால் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர் என்பது தெரியவில்லை என்றார். மேலும் இந்த பிரச்சனையில் தமிழக அரசும் நாமக்கல் மாவட்ட நிர்வாகமும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் தனி கவனம் செலுத்தி உரிய விசாரணை மேற்கொண்டால் மட்டுமே தேவையைப் போன்று எத்துனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது வெளிச்சத்திற்கு வரும் என்று குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல், இந்த சம்பவத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது உற்றார் உறவினர்கள் மற்றும் பொதுமக்களை திரட்டி கடுமையான போராட்டங்களில் மேற்கொள்ள உள்ளதாகவும்,  எச்சரித்துள்ளார். 
இந்த சம்பவத்தை செய்தி  சேகரிப்பதற்காக மீனாட்சி கார்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு சென்ற நமது செய்தி குழுவினர்  செய்தி சேகரித்துக் கொண்டிருக்கும் பொழுது நொடி பொழுதில் வெண்ணந்தூர்  காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருகின்றனர்,  எதற்காக இந்த வீடியோ பதிவு இங்கு என்ன சம்பவம் நடந்தது என்று ஒன்றுமே தெரியாமல் காவல்துறையினர் கேள்வி கேட்டது வேடிக்கையாகவே இருந்தது. அது மட்டுமல்லாமல் தேசிய நெடுஞ்சாலை ரோந்து காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரிடம் பேசினார்களே தவிர, செய்தி சேகரிக்க சென்ற செய்தி குழுவினரிடம் அவர்கள் பேசவே இல்லை. காரணம் மீனாட்சி கார்மெண்ட்ஸ் நிறுவனத்தின் இடம் காவல்துறையும்,  நெடுஞ்சாலை காவல் துறையிலும் விலை போய் விட்டார்களா ? என்பதை தமிழக அரசு தான் வெளிப்படுத்த வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசியல் கட்சியினர் இருந்தபொழுதும் ஒரு கட்சியினர் கூட சம்பந்தப்பட்ட நிர்வாகத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து இந்த பிரச்சனையை கையில் எடுக்கவில்லை என்பது வேதனையின் உச்சகட்டம். இந்த நிகழ்வின் போது அகிம்சை வெற்றி கழகத்தின் தேசிய பொருளாளர் திவாகர், மாநில தலைவர் மாதேஸ்வரன் மற்றும் மாநில செயலாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் நிறுவனர் காந்தி ஷங்கர் உடன் இருந்தனர். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு சட்டங்களை இயற்றி செயல்படுத்தி வரும் தமிழக அரசு இந்த நாமக்கல் வெண்ணந்தூர் பிரச்சனையில் தலையிட்டு அங்கு பணியாற்றும் 1500 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யுமா பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்திய தேசத்தின் விடுதலைக்காக தங்களது இன்னுயிரை இணைத்த தியாகிகள் தினத்தை போற்றும் வகையில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சேவை இயக்கம் சார்பில் அசோகர் நினைவு ஸ்தூபி உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாலை அணிவித்து மலர் தூவையும் மரியாதை.

இந்திய தேசத்தின் விடுதலைக்காக தங்களது இன்னுயிரை இணைத்த தியாகிகள் தினத்தை போற்றும் வகையில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சேவை இயக்கம் சார்பில் அசோகர் நினைவு ஸ்தூபி உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாலை அணிவித்து மலர் தூவையும் மரியாதை.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

இந்திய தேசத்தின் விடுதலைக்காக தங்களது இன்னுயிரை இணைத்த தியாகிகள் தினத்தை போற்றும் வகையில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சேவை இயக்கம் சார்பில் அசோகர் நினைவு ஸ்தூபி உள்ளிட்ட முக்கிய இடங்களில் மாலை அணிவித்து மலர் தூவையும் மரியாதை.

இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்திய விடுதலைக்காக தன் இன்னுயிரையும் நீத்தவர்களை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 ஆம் தேதி தேசிய அளவில் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தியாகிகள் தினமான இன்று சேலம் வரலாற்றுச் சங்கம் சார்பில் தியாகிகள் தினம் ( Martyrs Day ) அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள தியாகிகள் தினத்தை போற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது அசோகர் சிம்ம  ஸ்தூபிக்கு, மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மக்கள் சேவை இயக்கத்தின் சார்பாக தியாகிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள  ஸ்துபித்தூனில் மாவட்ட செயலாளர் ஆர் வி பாபு தலைமையில் தொழிற்சங்க அமைப்பாளர் KSA.ஆனந்தன் மாலை அணிவித்து தீபம் ஏற்றி தியாகிகள் நினைவு நாளை போற்றும் விதமாக வணங்கினர் உடன் ஆசிரியர் செவ்வேல், மணிகண்டன், விநாயகா கார்த்திகேயன், சந்தோஷ்குமார், ரமேஷ், பெருமாள், மனோ, மற்றும்  அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 30 ஜனவரி, 2026

ஈரோடு சூளை அந் - நூர் மஸ்ஜித் & மதர்ஷாவின் 6 ஆம் ஆண்டு விழாவில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு..!

ஈரோடு சூளை அந் - நூர் மஸ்ஜித் & மதர்ஷாவின் 6 ஆம் ஆண்டு விழாவில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு..!

ஈரோடு E.B.P.. நகர் சூளை அந் - நூர் மஸ்ஜித் & மதர்ஷாவின் 6 ஆம் ஆண்டு (மக்தப் மதர்ஷா) குழந்தைகள் ஆண்டு விழா மற்றும் சிறப்பு பயான் மதரஸா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது.

இவ்விழாவில் ஈரோடு கனி ராவுத்தர் குளம் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் தலைவர் ஷாஹுல் ஹமீது ஹாஜியார் தலைமை வகித்தார், அந் அந் - நூர் மஸ்ஜித் & மதர்ஷா நிர்வாக செயலாளர் அ.ரசூல் முகைதீன் வரவேற்புரை ஆற்றினார்,

பள்ளிவாசல் இமாம் முகமது  சல்மான் கிராத் ஓதிய பின்னர், ஆண்டு விழா துவங்கியது, மதர்ஷா ஆண்டு விழா போட்டியில் பெண் மற்றும் ஆண் குழந்தைகள் 50 பேர் கலந்து கொண்டு இஸ்லாமிய சட்டங்கள், நோன்பின் மாண்புகள், குரான் ஆயத்துகள், யாசீன் சூரா என சிறப்பாக மேடையில் ஓதி காட்டினர், பின்னர்  சிறப்பாக ஓதிய மாணவர்களை தேர்ந்தெடுத்து அந்த மாணவர்களுக்கு  முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, வழங்கப்பட்டது..

விழாவில் பங்கேற்ற அனைத்து சிறுகுழந்தைகளுக்கும் சிறப்பு பரிசுகள் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் மௌலானா ஹபீஸ் தாவூதி ஜமாத் உலமா மண்டல செயலாளர் மற்றும் மௌலானா ஷாலிக் மற்றும் மௌலானா முஹம்மது அனஸ் மற்றும் மௌலானா கரீம் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்,

மேலும் பெண்கள் மதரசா உஸ்தாபிகள் ராபியத்தில் அரபியா ஆலிமா மற்றும் ஃபிர்தவ்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கினர்,

பள்ளிவாசல் நிர்வாகிகள் பொருளாளர் சாதிக் பாட்ஷா, நஸீர் துணைத் தலைவர் இஸ்மாயில் துணைச் செயலாளர் ஜான் அலி துணைப் பொருளாளர் பஷீர் பாஷா 
மற்றும் பள்ளி வாசல் உறுப்பினர்கள் முஹம்மது தாஹா, பாபு உட்பட பல உறுப்பினர்கள் மற்றும் மார்க்க ஆலோசகர் தஸ்தகீர் மற்றும்  மகளாவை சேர்ந்த  தாய்மார்கள் பெரியவர்கள் குழந்தைகள் ஜமாத்தார்கள் என திரளானோர் பங்கேற்றனர்
சேலம் வரலாற்றுச் சங்கத்தின் சார்பில் தேச தியாகிகளின் தினம் அனுசரிப்பு. அசோகர் ஸ்தூபி மற்றும் மகாத்மாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

சேலம் வரலாற்றுச் சங்கத்தின் சார்பில் தேச தியாகிகளின் தினம் அனுசரிப்பு. அசோகர் ஸ்தூபி மற்றும் மகாத்மாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் வரலாற்றுச் சங்கத்தின் சார்பில் தேச தியாகிகளின் தினம் அனுசரிப்பு. அசோகர் ஸ்தூபி மற்றும் மகாத்மாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்திய விடுதலைக்காக தன் இன்னுயிரையும் நீத்தவர்களை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 ஆம் தேதி தேசிய அளவில் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தியாகிகள் தினமான இன்று சேலம் வரலாற்றுச் சங்கம் சார்பில் தியாகிகள் தினம் ( Martyrs Day ) அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர மத்தியில், சேலம் ஆட்சியரகம் எதிரில் அமைந்துள்ள இந்திய சுதந்திரப் போரில் உயிர்நீத்த தியாகிகள் ஞாபகச் சின்னமான அசோகர் ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, மலரஞ்சலியும், வீரவணக்கமும், செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள மஹாத்மா காந்தி திருவுருவ சிலைக்கும், மலரஞ்சலியும், வீர வணக்கமும் செலுத்தப்பட்டன.
இந்த நிகழ்வுகளுக்கு, சேலம் வரலாற்று சங்கத்தின் தலைவர் இமானுவேல் ஜெ. ஜெயசிங் தலைமையில் நடைபெற்ற விழாவில், பொருளாளர் ஞானதாஸ், செயல் தலைவர் தாரை. குமரவேலு, பொதுச் செயலாளர் பர்ணபாஸ் மற்றும் அமைப்புச் செயலாளர் பாலாஜி.வீரப்பன் மற்றும் ஜென்னிஸ் அறக்கட்டளையின் தலைவர் திருமதி கரோலின் எபி உள்ளிட்ட ஒரு கலந்து கொண்டு இந்திய தேசத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் அர்ப்பணிப்பை நினைவு கூறினர். இந்த நிகழ்வுகளில் செயற்குழு உறுப்பினர் பாபு,  ஷானவாஸ்கான், மற்றும் உறுப்பினர்கள் மகாதேவன், அயூப், மோகன்ராஜ், வருணதேவன், இராஜேந்திரன், பிரகாஷ், ரூபன் சீனிவாசன், மணிகண்டன் உள்ளிட்டோர் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்றனர்.

புதன், 28 ஜனவரி, 2026

சேலம் சாரதா கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தமிழக அரசின் மடி கணணிகளை வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சர்.

சேலம் சாரதா கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தமிழக அரசின் மடி கணணிகளை வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சர்.

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

சேலம் சாரதா கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தமிழக அரசின் மடி கணணிகளை வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சர்.

தமிழக அரசு சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் சாரதா மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கோமதி வரவேற்று பேசினார். மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார் தலைமை தாங்கி பேசினார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பள்ளி கல்வித்துறைக்கு 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கி சிறந்த கல்வியை தமிழக முதல்வர் அளித்து வருகிறார். 

இந்தியாவில் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது. புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் கல்வியில் முன்னேற புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார். காலை உணவு திட்டத்தின் ன் மூலம் 20 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெறுகிறார்கள். 10 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இன்று இந்த கல்லூரியில் 524 மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதனை மாணவிகள் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி அடைய மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் சாரதா கல்வி அறக்கட்டளை இயக்குனர் யதிதீஸ்வரி விநாயக பிரியா அம்பா, செயலாளர் யதீஸ்ஸ்வரி சுகப்பிரியா அம்பா மற்றும் யதீஸ்வரி அம்பாக்கள், துணை மேயர் சாரதா தேவி, மண்டல குழு தலைவர் உமாராணி உள்பட பங்கேற்றனர். முடிவில் கல்லூரி மடிக்கணினி திட்ட அலுவலர் செல்வ லட்சுமி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் துறை தலைவர்கள் மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.