வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

சேலம் கணேஷ் பொறியியல் கல்லூரியில் 15 வது ஆண்டு விழா கொண்டாட்டம். RAZZMATZZ 2026 என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள்.

சேலம் கணேஷ் பொறியியல் கல்லூரியில் 15 வது ஆண்டு விழா கொண்டாட்டம். RAZZMATZZ 2026 என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் கணேஷ் பொறியியல் கல்லூரியில் 15 வது ஆண்டு விழா கொண்டாட்டம். RAZZMATZZ 2026 என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள். 

சேலம் அம்மாபேட்டை கணேஷ் பொறியியர் கல்லூரியில் 15 நமது ஆண்டு விழா கொண்டாட்டம் வெகு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் தாளாளர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கல்லூரியில் செயலர் விஜய கணேஷ் பொருளாளர் செந்தில்குமார் மற்றும் முதல்வர் முனைவர் சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு என RAZZMATZZ RAZZMATZZ 2026 என்ற பெயரில் நடைபெற்ற இந்த ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகளின் தனி திறமைகளை மேம்படுத்தும் விதமாக தனிநபர் நடனம் குழு நடனம் பரதநாட்டியம் குரு நாடகம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும் பல்கலைக்கழக அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர்களின் பத்திரிக்கையாளர்கள் உடனான சந்திப்பு நிகழ்வும் அரங்கேறியது. இந்த ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் அனைவரும் லேசர் லைட் மின் ஒளி மற்றும் பிரத்தியேக ஒலி அமைப்புகளுடன் நீக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட மேடையில் தங்களது முழு திறமைகளையும் வெளிப்படுத்தி அரங்கையே அதிர வைத்தனர் என்பது மட்டும் நிதர்சனம். இந்த விழாவில் கல்லூரியில் துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மாணாக்கர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக விவசாயிகளின் பக்கம் அரசியல் கட்சிகளின் கவனம் திரும்பும் வகையில், 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழக விவசாயிகள் சங்கத்தின் மகாசபை கூட்டம்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக விவசாயிகளின் பக்கம் அரசியல் கட்சிகளின் கவனம் திரும்பும் வகையில், 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழக விவசாயிகள் சங்கத்தின் மகாசபை கூட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக விவசாயிகளின் பக்கம் அரசியல் கட்சிகளின் கவனம் திரும்பும் வகையில், 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழக விவசாயிகள் சங்கத்தின் மகாசபை கூட்டம். 

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மகாசபை கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் தோக்கவாடியில் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த மகாசபை கூட்டத்தில், மாநிலத் துணைத் தலைவர்கள் மூர்த்தி, ராஜா பெருமாள், மாநில பொதுச்செயலாளர் ஏழுமலை, மாநில பொருளாளர் மோகன் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற மகாசபை கூட்டம் நடைபெற்றது. 
உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் வளர்ச்சி பணிகள் குறித்தும் தமிழக விவசாயிகளின் எதிர்கால நலன் மற்றும் தேவைகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்ட இந்த மகாசபை கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சில நிர்வாகிகள் மாற்றம் குறித்தும் சங்க பைலாவில் உள்ள சில விதிமுறைகளை திருத்தம் செய்வது சம்பந்தமாகவும் தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினரிடம் தேர்தல் வாக்குறுதிகள் பெறுவது சம்பந்தமாக விவசாயிகளின் கோரிக்கைகளை அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அரசியல் கட்சியை தலைவர்களை ஈர்க்கும் வகையில் நடைபெற்ற மகாசபை கூட்டத்தில் 32 தீர்மானங்கள் கொண்டு வந்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி முன்மொழிந்தார். அதன் பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றுவது சம்பந்தமாக  நிர்வாகிகள் அனைவரும் விவாதித்து ஏக மனதாக 32 தீர்மானங்களும் திருவண்ணாமலையில் நடைபெற்ற மகாசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 

32 தீர்மானங்களில் முக்கிய மூன்று தீர்மானங்களாக, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் ஏற்றம் பெற நாடு முழுவதும் விவசாயிகள் உற்பத்தி செய்த வழி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும், அமெரிக்காவுடன் உணவு தானியங்கள் மற்றும் வேளாண் சார்ந்த பொருட்களுக்கு தடையற்ற ஒப்பந்தம் செய்ய மத்திய அரசு மீண்டும் முயற்சித்தால் நாடு முழுவதும் ஒரே அணியாக திரண்டு மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளவும் தயங்க மாட்டோம் மற்றும் தமிழக விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்ற பயிர் கடன் மற்றும் பண்ணை சாரா கடன்களை தமிழக அரசு முழுவதும் தள்ளிப்படை செய்ய வேண்டும் இதே போல மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தமிழக விவசாயிகள் பெற்ற பயிர் கடன்கள் மற்றும் பண்ணை சாரா கடன்களையும் மத்திய அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உட்பட தமிழக விவசாயிகளின் நலன் கருதி 32 முக்கிய தீர்மானங்கள் இந்த மகாசபை கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. 2026 சட்டமன்ற தேர்தல் தேதி தற்போது வரை அறிவிக்கப்படாத நிலையிலேயே தமிழக தேர்தல்களும் தற்பொழுது சுட்டெரிக்க தொடங்கியுள்ள வெயிலை காட்டிலும் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் தற்போது தமிழக விவசாயிகளின் மகாசபை கூட்டம் அனைத்து அரசியல் கட்சிகளின் கவனத்தையும் ஈர்க்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

புதன், 25 பிப்ரவரி, 2026

அன் ரிசர்வேஷன் கோச்சில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் - கே.இ.பிரகாஷ் எம்.பி. வலியுறுத்தல்..!

அன் ரிசர்வேஷன் கோச்சில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் - கே.இ.பிரகாஷ் எம்.பி. வலியுறுத்தல்..!


முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ( அன் ரிசர்வேஷன் கோச்சில் ) கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் - 
கே.இ.பிரகாஷ் எம்.பி. வலியுறுத்தல்..!

ஈரோடு ரயில் நிலையம் வளாகம் மற்றும் நடைமேடைப் பகுதிகளில் மத்திய அரசின் ( AMRUT Bharat Scheme ) திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை, தி.மு.க. இளைஞரணி துணைச் செயலாளரும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினருமான கே.இ.பிரகாஷ் எம்.பி. இன்று நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பிறகு, நிலைய மேலாளர் மூர்த்தி அலுவலகத்தில் பயணிகள் அளித்த புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக மதிப்பாய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

முன்பதிவு இல்லாத (Unreserved) ரயில் பெட்டிகளில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாக டிக்கெட் வழங்கப்படுவதாகக் குற்றம்சாட்டினார். 

100 பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டிய பெட்டிகளில் 300-க்கும் மேற்பட்டோர் ஏறுவதால் கடும் நெரிசல் உருவாகி, 

பயணிகள் மூச்சுத்திணறலுக்கும் அவதிப்படுவதாகவும், சில நேரங்களில் தகராறுகள் கூட ஏற்படுவதாகவும் தெரிவித்தார். 

குறிப்பாக வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் இந்த பிரச்சனை தீவிரமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனைத் தீர்க்க, ரயில் புறப்படும் நேரங்களில் தனி அலுவலரை நியமித்து, நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் பயணிகள் ஏற அனுமதிக்கக் கூடாது என்றும், முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற்றவர்களை அதே திசையில் செல்லும் அடுத்த ரயிலில் பயணிக்க அறிவுறுத்தும் நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், ரயில் நிலைய வளாகத்தில் உள்ள சில கடைகளில் ஜிஎஸ்டி வசூலித்தும் முறையான பில் வழங்கப்படவில்லை எனவும், சில ரசீதுகள் போலியானவை எனவும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளதாக கூறினார். 

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் உடனடி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெறப்பட்ட புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையை சம்பந்தப்பட்ட பயணிகளுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் காலதாமதமின்றி, தரத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஆய்வின்போது கடைகளில் பொருட்கள் வாங்கிய எம்.பி., ரசீது பெற்றதுடன், அனைத்து பயணிகளுக்கும் கட்டாயமாக ரசீது வழங்க வேண்டும் என்றும், ரயில் நிலைய வளாகத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தினார்.

திங்கள், 23 பிப்ரவரி, 2026

ஈரோடு சட்டக் கல்லூரியில் இளைஞர் பாராளுமன்றம் -  மாணவர்கள் அரங்கேற்றிய மாதிரி நாடாளுமன்றம் நெகிழ்ச்சியூட்டியது

ஈரோடு சட்டக் கல்லூரியில் இளைஞர் பாராளுமன்றம் - மாணவர்கள் அரங்கேற்றிய மாதிரி நாடாளுமன்றம் நெகிழ்ச்சியூட்டியது

ஈரோடு சட்டக் கல்லூரியில் இளைஞர் பாராளுமன்றம் -  மாணவர்கள் அரங்கேற்றிய மாதிரி நாடாளுமன்றம் நெகிழ்ச்சியூட்டியது

ஈரோடு சட்டக் கல்லூரியில் இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வு மற்றும் சட்ட அறிவை மேம்படுத்தும் நோக்கில் இளைஞர் பாராளுமன்றம் சிறப்பாக நடைபெற்றது. 

நாடாளுமன்ற அமர்வு போலவே ஒழுங்குபடுத்தப்பட்ட இந்த நிகழ்வு, மாணவர்களின் திறமையையும் சமூகப் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தியதாக அமைந்தது

நிகழ்ச்சியில், ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.இ.பிரகாஷ், , மற்றும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஈஸ்வரசாமி, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தினர்.

கல்லூரி தலைவர் சிந்து ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், துணைத் தலைவர் காயத்ரி அருண்பாலாஜி வரவேற்புரையாற்றினார். 

தொடர்ந்து, இளைஞர் பாராளுமன்ற அமர்வு தொடங்கப்பட்டது.

"இந்த அமர்வு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் மற்றும் Bharatiya Nyaya Sanhita (BNS) ஆகியவற்றை உள்ளடக்கிய சட்டமன்ற விவகார மசோதாவை நிறைவேற்றும் நோக்கத்துடன் நடைபெற்றது. மாணவர்கள் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சியினராக பங்கெடுத்து விவாதத்தில் ஈடுபட்டனர்"

"40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்நிகழ்வில் விவசாயம், இரயில்வே, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா, பழங்குடியினர் விவகாரங்கள், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட துறைகள் தொடர்பான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன"

"மேலும், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு கடுமையான தண்டனைகள் விதிப்பது குறித்தும் தீவிரமான கருத்துக்கள் பகிரப்பட்டன"

நிகழ்ச்சியில் உரையாற்றிய எம்பி கே.இ.பிரகாஷ் அவர்கள், போக்குவரத்து அமைச்சகத்தின் செயல்பாட்டு நடைமுறைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார். 

எம்பி ஈஸ்வரசாமி அவர்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் மற்றும் பூஜ்ஜிய நேரம் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதைக் குறித்து தெளிவுபடுத்தினார். மாணவர்கள் நேரடியாக கேள்விகள் எழுப்பி விளக்கங்கள் பெற்றனர்.

போட்டியில் சிறந்து விளங்கிய வேதாம்பாள் மற்றும் சுஜனந்த் பாரத் ஆகியோர் முதல் பரிசையும், இளம்பிறை இரண்டாம் பரிசையும், இனியா பொன்னுசாமி மூன்றாம் பரிசையும் பெற்றனர். 

வெற்றியாளர்களுக்கும் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் நிறைவாக கல்லூரி முதல்வர் டாக்டர் அக்பர் அலி பெய்க் நன்றியுரை வழங்கினார், 

இளைஞர்களின் சிந்தனைத் திறன், சட்ட அறிவு மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்த புரிதலை வளர்த்த இந்த இளைஞர் பாராளுமன்றம், பங்கேற்ற அனைவருக்கும் மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

சேலத்தில் விபத்து மற்றும் சர்க்கரை நோயால் கால் இழந்தவர்களுக்கு செயற்கை கால் பொருத்தும் விழா. நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்.

சேலத்தில் விபத்து மற்றும் சர்க்கரை நோயால் கால் இழந்தவர்களுக்கு செயற்கை கால் பொருத்தும் விழா. நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் விபத்து மற்றும் சர்க்கரை நோயால் கால் இழந்தவர்களுக்கு செயற்கை கால் பொருத்தும் விழா. நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன். 

சேலம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்கம் மற்றும் சம்பந்தம் பின்னிங் மில் லிமிடெட் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய கால் இழந்தவர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கும் விழா சேலம் அம்மாபேட்டையில் உள்ள எஸ் பி எம் எம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. சேலம் மிட் டவுன் ரோட்டரி கிளப் தலைவர் திருமதி ருக்மணி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சேலம் வருவாய் கோட்டாட்சியர் உதயகுமார், ரொட்டேரியன் சிவசுந்தரம் ரோட்டரி மாவட்ட ஆளுநர், உதவி கரம் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்க தலைவர் டாக்டர் அத்தியண்ணா மற்றும் ஸ்ரீ எம் எம் மருத்துவமனை தலைமை நிர்வாகி தேவராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, சேலம் நாமக்கல் விழுப்புரம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 120 பயனாளிகளுக்கு செயற்கை கால்களை பொருத்தி விழாவினை சிறப்பித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் இழந்த பயனாளிகள் செயற்கைகால் பொருத்திய பிறகு பெற்ற அனுபவத்தை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சேலம் மிட் டேம் ரோட்டரி சங்க செயலாளர் கனிகாசலம் சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினைஞர்கள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீ ஆனந்த ராஜன் உட்பட சேலம் மாநகரின் முக்கிய பிரமுகர்கள் பயனாளிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல் ராசிபுரத்தில் பட்டியலின ஊழியர் மீது விரோத போக்கை கடைபிடிக்கும், வேளாண் உற்பத்தி கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக. தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவன தலைவர் வலியுறுத்தல்.

நாமக்கல் ராசிபுரத்தில் பட்டியலின ஊழியர் மீது விரோத போக்கை கடைபிடிக்கும், வேளாண் உற்பத்தி கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக. தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவன தலைவர் வலியுறுத்தல்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

நாமக்கல் ராசிபுரத்தில் பட்டியலின ஊழியர் மீது விரோத போக்கை கடைபிடிக்கும், வேளாண் உற்பத்தி கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக. தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவன தலைவர் வலியுறுத்தல். 

சேலம் மாவட்டம் உட்பட தமிழக முழுவதிலும் பட்டியலின ஊழியர்கள் மீது அரசு அதிகாரிகள் அத்து பெறும் போது தொடர்ச்சியாக நடைபெற்ற வண்ணமே உள்ளன. அதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலும் தற்பொழுது அரங்கேறி உள்ளது. இதனை கண்டித்து தேசிய ஒடுக்கப்பட்டு மக்கள் குடியரசின் நிறுவன தலைவர் சரஸ்ராம் ரவி கண்டன அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், நாமக்கல் மாவட்டம் இராசிபுரம்  வேளாண்மை உற்பத்தி கூட்டுறவு சங்கத்தின் பொது மேலாளர் ( பொ) திருமதி. P சாந்தி மற்றும் துணை பதிவாளர் திரு K.நாகராசன் ஆகியோர் பட்டியலின ஊழியர் ( ராசிபுரம் கடை எண்-7  விற்பனையாளர் திரு சண்முகம் ) மீது சட்ட விதி மீறல்,மற்றும் சாதிய வன்கொடுமை கூட்டுறவு சங்க விதி மீறல் செய்து தற்காலிக பணி நீக்கம் உத்தரவு வழங்கி தவறு என்று அறிந்து திரும்ப  பெற்றது. பட்டியலின ஊழியர் மீது  எந்த முகாந்திரம் உண்மை விசாரணை இல்லாமல் காலி சாக்கு பைகள் குறித்து கடந்த 4 ஆண்டுகளாக ஆய்வு செய்யாமல் உண்மை நிலை அறியாமல் பட்டியலின ஊழியர் திரு  சண்முகம் மீது பொய் கூற்றசாட்டு பிணைந்து, அவருக்கு கிடைக்க வேண்டிய பணி மூப்பு வாய்ப்பை நிறுத்த முயலும் இரு சாதி இந்து அதிகாரிகள் மீதும், அவர்கள் மீது அளிக்கபடும் புகார் மீது நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உயர்திரு கோட்டாச்சியர் அவர்களின்  விசாரணைக்கு உத்தரவு வழங்கிட கோரிக்கை வைப்பதாகவும், அவர்கள் இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டம் -1989
( amended 2015 & 2018) கீழ் வழக்கை பதிய ராசிபுரம் காவல் துறைக்ககு பரிந்துரை செய்ய வேண்டும் என்று கோருவதாக   சரஸ்ராம்ரவி தனது கண்டன அறிக்கையில் பதிவிட்டு உள்ளார்.

வியாழன், 19 பிப்ரவரி, 2026

வருவாய் கிராம ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றி தர வேண்டும். சேலத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் சேலம் வட்ட வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தில் வலியுறுத்தல்.

வருவாய் கிராம ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றி தர வேண்டும். சேலத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் சேலம் வட்ட வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தில் வலியுறுத்தல்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

வருவாய் கிராம ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றி தர வேண்டும். சேலத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் சேலம் வட்ட வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தில் வலியுறுத்தல். 

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் தமிழ்நாடு முழுவதும் வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக சேலம் வட்டத்தின் சார்பில் அஸ்தம்பட்டியில் உள்ள சேலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் வட்டத் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்தில் நிர்வாகிகள் சரவணன் இளவேந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணை தலைவர் அர்த்தனாரி, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் மற்றும் அருள் பிரகாசம் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வருவாய் கிராம ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 
தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தின்போது வருவாய் கிராம ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றி தர வேண்டும் என்றும், தமிழக அரசின் திட்டங்களை கடைகோடிக்கு கொண்டு சேர்க்கும் கிராம ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை  ஊதியம் வழங்கப்பட வேண்டும், தமிழக முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தமிழக முழுவதும் பணியாற்றும் கிராம ஊழியர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் கிராம ஊழியர்கள் பணியின் போது உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டால் அவர்களது வாரிசுகளுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசிய தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் அர்த்தனாரி, தமிழக முதலமைச்சர் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி உரிய தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 
மேலும் அடுத்த கட்டமாக தொடர் காத்திருப்பு போராட்டம் மேற்கொள்ளப் போவதுடன் வரும் 24ஆம் தேதி முதல் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்துடன் இணைந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திலும் மேற்கொள்ளப் போவதாக வட்டத் தலைவர் சரவணன் தெரிவித்தார்.