செவ்வாய், 14 ஏப்ரல், 2026

விரைவில் ஊழல்- சீர்கேடுகளை கண்டித்து, எருமாபாளைம் கிளை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்..மத்திய- மாநில அரசு பொதுதுறை-  ஊழியர்கள் தொழிலாளர்கள் / ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு முடிவு..

விரைவில் ஊழல்- சீர்கேடுகளை கண்டித்து, எருமாபாளைம் கிளை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்..மத்திய- மாநில அரசு பொதுதுறை- ஊழியர்கள் தொழிலாளர்கள் / ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு முடிவு..

சேலம்,
S.K.சுரேஷ்பாபு.

விரைவில் ஊழல்- சீர்கேடுகளை கண்டித்து, எருமாபாளைம் கிளை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்..
மத்திய- மாநில அரசு பொதுதுறை-  ஊழியர்கள் தொழிலாளர்கள் / ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு முடிவு..

சேலம் எருமாபாளையம் -E1/2  கிளை அலுவலகம் முன் இருக்கும் நிலை நிலை குறித்தும் அதனை செயல்படுத்த வலியுறுத்தியும், மத்திய மாநில அரசு பொதுத்துறை ஊழியர்கள் தொழிலாளர்கள் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு நிறுவன தலைவர் சரஸ்ராம் ரவி கூறுகையில், படு  கேவலமாக கழிவு நீர் போக வழி இல்லாமல் கிளை அலுவலகம் டிப்போ முன் இருக்கும் அவல்நிலை. சேலம் மண்டல கோட்ட அதிகாரிகள்  இதை கண்டுகொள்வதில்லையா ஏன் ? என்று கேள்வி எழுப்பினார். மேலும் பொது  மக்கள் பல ஆண்டுகளாக இதை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.
இத்தனை  ஆண்டுகள் பராமரிப்புக்கு ஒதுக்கும் நிதி எங்கே போனது.
ஊழல் நடப்பதை உறுதி செய்கிறது என்று தெரிவித்துள்ள சரஸ்ராம் ரவி, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு பெண்  ஊழியர் தடுமாறுவதை கண்ட கொள்ளாத கிளை மேலாளர்கள் இருவர். E1 & E2 .
கண்ணன் என்கிற அதிகாரி அலுவலகமே சரியாக வருவதில்லை  என்ற குற்றசாட்டு. எப்படி இதை சரி செய்வார் கிளை மேலாளர் கண்ணன் என்றும்
விரைவில் இந்த  ஊழல்- சீர்கேடுகளை கண்டித்து  எருமாபாளைம் கிளை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும் சரஸ்ராம் ரவி குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 13 ஏப்ரல், 2026

சேலம் வடக்கு தொகுதி தவெக வேட்பாளரை திட்டமிட்டு அவதூறு செய்யும் எதிர்க்கட்சியினர் என வேட்பாளர் குற்றச்சாட்டு....தலைவர் விஜயின் பாடலை கேட்டு குழந்தைகள் தன் எழுச்சியாக நோட்டீசை எடுத்து நடனம் ஆடினர் இதில் கட்சியின் நிர்வாகிகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை ....தளபதி விஜய் மீது கொண்டுள்ள பாசத்தாலும் ஈர்ப்பின் காரணமாக குழந்தைகள் தன்னெழுச்சியாக அவரின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ள துண்டு பிரசுரங்களை தூக்கி செல்வதாகவும் விளக்கம் ....

சேலம் வடக்கு தொகுதி தவெக வேட்பாளரை திட்டமிட்டு அவதூறு செய்யும் எதிர்க்கட்சியினர் என வேட்பாளர் குற்றச்சாட்டு....தலைவர் விஜயின் பாடலை கேட்டு குழந்தைகள் தன் எழுச்சியாக நோட்டீசை எடுத்து நடனம் ஆடினர் இதில் கட்சியின் நிர்வாகிகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை ....தளபதி விஜய் மீது கொண்டுள்ள பாசத்தாலும் ஈர்ப்பின் காரணமாக குழந்தைகள் தன்னெழுச்சியாக அவரின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ள துண்டு பிரசுரங்களை தூக்கி செல்வதாகவும் விளக்கம் ....

சேலம்,
S.K. சுரேஷ் பாபு.

சேலம் வடக்கு தொகுதி தவெக வேட்பாளரை திட்டமிட்டு அவதூறு செய்யும் எதிர்க்கட்சியினர் என வேட்பாளர் குற்றச்சாட்டு....தலைவர் விஜயின் பாடலை கேட்டு குழந்தைகள் தன் எழுச்சியாக நோட்டீசை எடுத்து நடனம் ஆடினர் இதில் கட்சியின் நிர்வாகிகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை ....தளபதி விஜய் மீது கொண்டுள்ள பாசத்தாலும் ஈர்ப்பின் காரணமாக குழந்தைகள் தன்னெழுச்சியாக அவரின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ள துண்டு பிரசுரங்களை தூக்கி செல்வதாகவும் விளக்கம் ....

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சிவகுமார் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அதன் ஒரு பகுதியாக சேலம் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட 12 வது வார்டு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார் அப்பொழுது அவர் வீதி வீதியாக நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார் அப்பொழுது வாகனங்கள் முழுவதும் விஜயின் பாடல் ஒழிக்கப்பட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது இதில் ஒரு சில குழந்தைகள் விஜயின் புகைப்படம் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை எடுத்துக்கொண்டு அவர்களாகவே ஆங்காங்கே கொண்டு சென்ற நிகழ்வு அரங்கேறியது இதனை ஒரு சில அரசியல் கட்சியினர் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்பி புகார் தெரிவித்து வருவதாகவும் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக பரவி வந்தது. இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சேலம் வடக்கு தொகுதி தவெக
வேட்பாளர் சிவகுமார்
செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்,
நாங்கள் 12 ஆவது டிவிஷன் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது விஜயின் பாடல் ஒளிபரப்பு செய்துதான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம் அப்பொழுது குழந்தைகள் அவர்களாக ஆர்வத்துடன் வந்து விஜயின் புகைப்படம் இருந்த துண்டு பிரசுரங்களை எடுத்துக் கொண்டு அவரவர்களே பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்வது போல் கொண்டு நோட்டீசை ஆங்காங்கே கொடுத்தனர் இது எங்களுக்கு தெரியாது நாங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்குகளை கேட்டு வருகிறோம் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் விஜயின் பாடலை கேட்டு அவர் மீது உள்ள பாசம் மற்றும் ஈர்ப்பு காரணமாக பாடலுக்கு நடனம் ஆடியவர் அதிக அளவில் குழந்தைகள் வெளியில் வந்தனர். எங்களுடைய தளபதியும் குழந்தைகளை ஈடுபடுத்தக் கூடாது என்று கூறியுள்ளார் நாங்களும் அரசியல் தெரிந்தவர்கள் தான் 18 வயதுக்கு கீழ் உள்ள யாரையும் பிரச்சாரத்தில் நாங்கள் ஈடுபடுத்துவதில்லை எதிர்க்கட்சியினர் இதை வேண்டுமென்றே சமூக வலைத்தளங்களில் பரப்ப விட்டு வருகின்றனர். எங்கள் மீது எந்த அவதூரம் சொல்ல முடியாது இதன் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள எதிர்க்கட்சியினர்
இந்த வீடியோவை வேண்டுமென்றே எடுத்து பதிவு செய்து வருகின்றனர்.
நாங்கள் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்ட பகுதியில் ஓர் இடத்தில் கூட இதுபோல நடந்தது இல்லை. தளபதியின் பாடல் கேட்டு தான் ஒவ்வொரு இடத்திலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம் அப்பொழுது தன்னெழுச்சியாக குழந்தைகள் வந்து விஜயின் புகைப்படம் அடங்கிய பிரசுரங்களை எடுத்து செல்கின்றனர். எப்பொழுதும் நாங்கள் குழந்தைகளை வைத்து பிரச்சாரம் மேற்கொண்டதே கிடையாது இனிவரும் காலங்களிலும் மேற்கொள்ள மாட்டோம் என்று விளக்கம் அளித்தார். இதற்காக தேர்தல் ஆணையத்தில் விளக்கம் கேட்டுள்ளார்கள் அதற்கான முழு விளக்கத்தையும் நாங்கள் தெரிவிப்போம் என்று கூறினார்.


ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

சேலத்தில் ரஜினி ரசிகர்கள் அதிமுகவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு கொடுத்ததன் எதிரொலி. திமுகவின் தூண்டுதலின் பேரில் ரஜினி மன்ற நிர்வாகி எஸ் கே கணேசன் தற்போது தேவையில்லாத பிரச்சனை செய்து வருவதாக ரஜினி ரசிகர்கள் குற்றச்சாட்டு. இதேநிலை நீடித்தால் எஸ் கே கணேசன் மீது மானஸ்து வழக்கு தொடர்வேன் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான பாரப்பட்டி கனகராஜ் ஆவேசம்.

சேலத்தில் ரஜினி ரசிகர்கள் அதிமுகவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு கொடுத்ததன் எதிரொலி. திமுகவின் தூண்டுதலின் பேரில் ரஜினி மன்ற நிர்வாகி எஸ் கே கணேசன் தற்போது தேவையில்லாத பிரச்சனை செய்து வருவதாக ரஜினி ரசிகர்கள் குற்றச்சாட்டு. இதேநிலை நீடித்தால் எஸ் கே கணேசன் மீது மானஸ்து வழக்கு தொடர்வேன் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான பாரப்பட்டி கனகராஜ் ஆவேசம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தில் ரஜினி ரசிகர்கள் அதிமுகவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவு கொடுத்ததன் எதிரொலி. திமுகவின் தூண்டுதலின் பேரில் ரஜினி மன்ற நிர்வாகி எஸ் கே கணேசன் தற்போது தேவையில்லாத பிரச்சனை செய்து வருவதாக ரஜினி ரசிகர்கள் குற்றச்சாட்டு. இதேநிலை நீடித்தால் எஸ் கே கணேசன் மீது மானஸ்து வழக்கு தொடர்வேன் என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான பாரப்பட்டி கனகராஜ் ஆவேசம்.

தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் சேலம் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களின் தரப்பில் என்டயே கூட்டணி கட்சியின் தலைவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகரான பாரப்பட்டியைச் சேர்ந்த கனகராஜ் நிபந்தனை அற்ற முழு ஆதரவினை 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு இனி வரமாட்டார் என்ற சூழலில் தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர் மன்றங்கள் அனைத்தும் முற்றிலுமாக கலைக்கப்பட்டன. என்றாலும் கூட ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய நிர்வாகிகளை மட்டுமே தற்பொழுது வரை ரஜினிகாந்த் அவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் பாரப்பட்டி சேர்ந்த கனகராஜ் அதிமுகவிற்கு நிபந்தனை ஏற்று முழு ஆதரவினை 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு தெரிவித்ததை தொடர்ந்து தற்பொழுது சேலம் மாவட்ட ரஜினி மன்றங்களில் பெரும் பூதாகரத்தை கிளப்பி உள்ளது என்பது சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் உச்சகட்ட பரபரப்பினை எட்டி உள்ளது. 
இந்த நிலையில் சேலம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகே உள்ள பாரப்பட்டி கனகராஜன் இல்லத்தில் முக்கிய ரஜினி ரசிகர்கள் மட்டும் கலந்து கொண்ட ரகசிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்ற சேலத்தில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரஜினியின் தீவிர பக்தரான பாரப்பட்டி கனகராஜ் நம்மிடையே கூறுகையில், தமிழகம் மட்டும் அல்ல உலக சூப்பர் ஸ்டார் என்று தற்பொழுதும் அனைவராலும் உற்றக்கூடிய கடந்த 1996 ஆம் ஆண்டு அரசியல் கட்சிக்கு நான் வரப்போவதில்லை என்றும் எந்த அரசியல் கட்சிகளுக்கும் எனக்கு ஆதரவு இல்லை என்பதையும் அவர் திட்ட பட்டமாக கூறியிருந்த நிலையில், கடந்த 22 ஆம் ஆண்டு பாரப்பட்டி கனகராஜ் ஆகிய எனது தலைமையில் திருப்பதிக்கு ரஜினி ரசிகர்கள் அனைவரும் ஒன்று திரண்டு நடை  பயணமாகவே சென்று ரஜினிகாந்த் அவர்கள் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து மீண்டும் அரசியல் வர வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டதாக குறிப்பிட்ட பாரப்பட்டி கனகராஜ், இதே போல கரண்ட் 2013 ஆம் ஆண்டு மிகப் பெரிய அளவிலான யாகம் வளர்க்கப்பட்டு மீண்டும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டதாக தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகளாக ரஜினி மன்றத்தில் தான் பொறுப்பில் இல்லை என்றாலும் கூட ரஜினிகாந்த் அவர்களுக்காக எண்ணற்ற நல உதவிகளை செய்து கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். 
மேலும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் மக்கள் சொல்லொனா துயரத்திற்கு ஆளாகி வருவதாகவும், சேலத்தை சேர்ந்தவர் மண்ணின் மைந்தர் முதலமைச்சர் வேட்பாளர் என்ற அடிப்படையில் மட்டுமே வரும் சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டும் ரஜினி ரசிகர்களின் முழு ஆதரவு வழங்குவதாக தெரிவித்ததாக குறிப்பிட்ட பாரப்பட்டி கனகராஜ், மன்றத்திலிருந்து விலகி இருந்தாலும் கூட முக்கிய நிர்வாகிகள் அனைவரின் ஒப்புதல் பெற்று மட்டுமே இந்த அறிவிப்பை தான் கூறியதாகவும், நிலைமை இப்படி இருக்கும்போது ரஜினி ரசிகர் மன்ற இணைச்செயலாளர் எஸ் கே கணேசன் என்பவர், பாரப்பட்டி கனகராஜன் இந்த முடிவுக்கு ரஜினி மன்றத்திற்கும் எந்த தொடர்பும் சம்மந்தமும் இல்லை என்று குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல் சம்பந்தமே இல்லாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து அதிமுகவிற்கு சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் முழு ஆதரவு என கூறி இருப்பதும் இதற்கும் மன்றத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என அவர் தேவையில்லாமல் குறிப்பிட்டார் என்று கடுமையாக எஸ் கே கணேசன் அவர்களை சாடிய அவர், சேலத்தின் மண்ணின் மைந்தரான எடப்பாடி யார் அவர்களின் ஆட்சி அமைய வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் எஸ் கே கணேசன் அவர்களின் இந்த செயல் வன்மையாக த்தகதி என்றும் ஏற்கனவே குறிப்பிட்டது போல ரஜினிகாந்த் அனைத்து மன்றங்களையும் கலைத்து விட்டார் ஆனால் முக்கிய நிர்வாகிகளை மட்டும் கட்டுப்பாட்டில் தற்பொழுதும் வைத்துள்ள சூழ்நிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டு திமுகவின் சதியில் சிக்கி திமுகவின் தூண்டுதலில் பெயரில் எஸ்.கே கணேசன் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றார் என்று குற்றம் சுமத்திய பாரப்பட்டி கனகராஜ் 11 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி உறுதி என்றும் திமுகவின் சதி ஒருபோதும் எடுபடாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தேர்தல் அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து இருந்தாலுமே கூட சேலம் மாவட்டத்திற்கு என பல திட்டங்களை செய்து தருவதாக உறுதி அளித்துள்ளார். ரஜினி ரசிகர்கள் என்றாலும் கூட சேலத்தின் வளர்ச்சிக்கு பல திட்டங்களை செய்து தருவதாக கூறி மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளதாகவும் கே கணேசன் மீண்டும் இதே நிலையில் தனது செயல்பாட்டை தொடர்ந்தார் என்றால் எஸ் கே கணேசன் மீது மான நஷ்ட வழக்கு தொடங்குவேன் என்றும் மிக வன்மையான எச்சரிக்கையும் விடுத்துள்ள பாரப்பட்டி கனகராஜ், நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறுவது உறுதி என்றும் சூளுரைத்துள்ளார். அப்போது நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2026

சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ரஜினி ரசிகர்கள் அ.தி.மு.க விற்கு ஆதரவு.

சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ரஜினி ரசிகர்கள் அ.தி.மு.க விற்கு ஆதரவு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு

சேலத்தில் 
எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ரஜினி ரசிகர்கள் அ.தி.மு.க விற்கு ஆதரவு

சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாரப்பட்டி கனகராஜ். தொழிலதிபரான இவர் கடந்த 30 ஆண்டுகளாக எந்த அரசியல் அமைப்பையும் சாராமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீர பக்தனாகவே பயணித்து வந்தவர். ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகரான இவர் இன்று தனது பிறந்தநாளை தனது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்கிறார். முன்னதாக, சேலம் மாவட்ட ரஜினி ரசிகர்கள் சேலம் பாரப்பட்டி கனகராஜ் தலைமையில், அ.தி.மு.க பொது செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவர்  முதல்வராக இருந்தபோது விவசாயிகளுக்கு எண்ணற்ற  திட்டங்கள் செயல்படுத்தி உள்ளார்.
குறிப்பாக மேட்டூர் உபரிநீரை 100  ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம், குடிமாரத்து திட்டம், குளம் ஏரிகளில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கும் திட்டம், மீன்தேன் திட்டத்தை தடுக்க  டெல்டா மாவட்டம் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தார். தற்போது  விவசாயிகள் கடன் தள்ளுபடி என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார். நாங்கள் அவரிடம் சில கோரிக்கைகள் வைத்துள்ளோம். அதில் சேலம் பனமரத்துப்பட்டியை தூர் வாரி ஏரியில் நீர் நிரப்பி சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும். இதனால் பனமரத்துப்பட்டி பகுதியில் குடிநீர்  பிரச்சனை தீர்க்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி நம்ம ஊரைச் சேர்ந்தவர் அவர் முதலமைச்சராக வரவேண்டும். அவரை எப்போது வேண்டு மானாலும் சந்தித்து நமது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்றார். சேலம் மாவட்ட 11 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற அயராது பாடுபடுவோம் என்றார். மேலும் தமிழகத்தை பொறுத்தவரை எத்தனை அரசியல் கட்சிகள் புதிதாக உதய மாநாடுமே கூட தமிழக வரலாற்றில் அதிமுக திமுக என்ற இரு திராவிட கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும் போதெல்லாம் தமிழக மக்களும் விவசாய பெருமக்களும் எந்த விதமான எந்த விதமான பாதிப்புக்கும் உள்ளானது கிடையாது அதே வேளையில், திமுக ஆட்சி காலத்தின் போது எல்லாம் சட்டம் ஒழுங்கு என்பதை கேள்விக்குறியே ஆகியுள்ளதோடு தமிழக மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழலே எப்பொழுதும் நிகழும் என்று குறிப்பிட்ட பாரப்பட்டி கனகராஜ், 11 சட்டமன்ற எல்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாகவும், அதிமுக அரசின் சாதனைகளை குறித்து பட்டியலிட்டு வாக்கு சேகரிக்க உள்ளதாகவும் தெரிவித்ததோடு விரைவில் தமிழக முழுவதும் உள்ள அத்தனை ரஜினி ரசிகர்களையும் அதிமுகவின் வசம் ஆதரவு செலுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்வுகளின் போது சேலம் மாவட்ட நிர்வாகிகள் புருசோத்தமன், குருமூர்த்தி, சூரமங்கலம் செல்வராஜ், பெத்தநாயக்கன்பாளையம் வேலுசாமி, இளம்பிள்ளை சின்னமணி, வீரபாண்டி பூபதி, சித்தன், ராஜா, சீரகாபாடி துரை சண்முகம், ஏத்தாப்பூர் சுரேஷ், பார்த்திபன் குமரவேல் உள்பட பலர் உடன் இருந்தனர்.
சேலம் மேற்கு தொகுதி NDA கூட்டணி வேட்பாளர் மு. கார்த்திக்கு பூக்களை வாரி இறைத்து உற்சாக வரவேற்பு அளித்த வாக்காள பெருமக்கள்.

சேலம் மேற்கு தொகுதி NDA கூட்டணி வேட்பாளர் மு. கார்த்திக்கு பூக்களை வாரி இறைத்து உற்சாக வரவேற்பு அளித்த வாக்காள பெருமக்கள்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் மேற்கு தொகுதி NDA கூட்டணி வேட்பாளர் மு. கார்த்திக்கு பூக்களை வாரி இறைத்து உற்சாக வரவேற்பு அளித்த வாக்காள பெருமக்கள். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழக முழுவதும் நடைபெற உள்ளது. இந்திய மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் மாவட்டத்தில், NDA கூட்டணியில் பாமகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மு. கார்த்தி சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடுகின்றார். கடந்த ஆறு நாட்களாக மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் நல்லாட்சி மலர்ந்திடவும், அவரது ஆசி பெற்ற சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மு கார்த்தி கொண்ட நாயக்கன்பட்டி மற்றும் செட்டிச்சாவடி ஊராட்சிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். 
பிற்பகல் மல்லமூப்பம்பட்டி மற்றும் ஐயம்பெருமான் பட்டி ஊராட்சிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திறந்தவெளி வாகனத்திலும், ஒரு சில பகுதிகளில் நடந்தே சென்றும்  மாம்பழம் சின்னத்தில் தன்னை மாபெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார். என் டி ஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள் புடை சூழ மேற்கு தொகுதி பாமக வேட்பாளர் கார்த்தி சென்ற இடங்கள் வழி நெடுங்கிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர்களை வாரி இறைத்தும்,  வீட்டின் மொட்டை மாடியில் இருந்து மலர்களை தூவியும் பட்டாசுகளை வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 
அப்போது அவர் செய்தியாளரிடம் கூறுகையில், மேற்கு தொகுதி உட்பட 11 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு அதீத வரவேற்பை பொதுமக்கள்  வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்றும், மேற்கு தொகுதியை பொருத்தவரை இதுவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏராளமான மனுக்கள் கொடுத்தும் தற்பொழுது வரை நடவடிக்கை எடுக்கப்படாததால் தற்போது அது போன்ற மனுக்கள்  தன்னிடம் பொதுமக்கள்  கொடுத்து வருவதாகவும் தெரிவித்த மு கார்த்தி, வெற்றியடைந்த உடன் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதி மக்களின் தேவைகளை அனைத்தையும் ஒன்று கூட விடுபடாமல் பூர்த்தி செய்து தருவேன் என்று உறுதியளித்தார். வாக்கு சேகரிப்பு மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அந்த பகுதியைச் சேர்ந்த கோபால் மற்றும் இளங்கோ உள்ளிட்டோர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.
வேலுச்சாமி தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில். NDA கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம். போலிச் சங்கத்தின் பெயரில் சேலத்தில் நடைபெற்று வந்த மாநில தலைவர்கள் பிரச்சனையில் முற்றுப்புள்ளி.

வேலுச்சாமி தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில். NDA கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம். போலிச் சங்கத்தின் பெயரில் சேலத்தில் நடைபெற்று வந்த மாநில தலைவர்கள் பிரச்சனையில் முற்றுப்புள்ளி.

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

வேலுச்சாமி தலைமையிலான தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில். NDA கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவித்து ஒருமனதாக தீர்மானம். போலிச் சங்கத்தின் பெயரில் சேலத்தில் நடைபெற்று வந்த மாநில தலைவர்கள் பிரச்சனையில் முற்றுப்புள்ளி.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த அதி முக்கியமான ஆலோசனை கூட்டத்திற்கு மாநிலத் துணைத் தலைவர்கள் ராஜா பெருமாள், மூர்த்தி, மாநில செயலாளர் கணபதி, மாநில பொருளாளர் சீட்டு உளிட்டோர் முன்னிலை வகித்த இந்த தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஏழுமலை வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க செயல்பாடுகள் குறித்தும் தற்பொழுது நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் சங்கம் எடுக்கப்படவுள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. 
தொடர் நடைபெற்ற கூட்டத்தில், ஏற்கனவே நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகள் தமிழக விவசாயிகளுக்கு என்று தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை என்பது தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த சாட்டாகவே இருந்து வரும் நிலையில், விவசாயிகளின் நலனை பாதுகாக்க தவறிய திமுக அரசை கண்டிப்பது என உட்பட 14 தீர்மானங்கள் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளின் முழு ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்பட்டன. அது மட்டுமில்லாமல் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் போலிச் சங்கம் ஒன்று தற்பொழுது தமிழகத்தில் தொடங்கப்பட்டு தேவையற்ற குழப்பங்களை விளைவித்து வருவது தொடர்பாகவும் பல்வேறு கண்டன தீர்மானங்களும் பல்வேறு குற்றச்சாட்டுகளும் அந்த சங்கத்தின் மாநில தலைவர் சிவபெருமாளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.
இதனை எடுத்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக விவசாயிகளின் நலன் காக்கும் திட்டங்களை அதிமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணி தலைவர் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தனது தேர்தல் அறிக்கையில் கூறியது வரவேற்கத்தக்க இருந்ததாகவும் அதன் காரணமாக இந்த முடிவு அதிமுகவிற்கு நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு அளிப்பது என்றும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த எந்த ஒரு விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் திட்டங்களை எதுவும் செயல்படுத்தாததால் இந்த முடிவை எடுத்ததாக திட்டவட்டமாக தெரிவித்தார் தலைவர் வேலுச்சாமி. 
தமிழக தேர்தல் என்னவோ வரும் 23ஆம் தேதி தான் நடைபெற உள்ளது. அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை அதனைத் தொடர்ந்துதான் வெற்றி யாருக்கு என்று அறிவிக்க ப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் இதனிடையே உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தங்களுக்கு தான் சொந்தம் என்று போட்டியிட்டவர்களுக்கு மத்தியில் நேற்று சேலத்தில் நடைபெற்ற வேலுச்சாமி அவர்களின் தலைமையிலான கூட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் நிதர்சனம். 
விவசாயிகள் சங்க பிரச்சனை தீர்ந்தது என்று எடுத்துக் கொண்டாலுமே கூட, தமிழகத் தேர்தல் முடிவுருக்காக காத்திருக்கத்தான் வேண்டும் மக்களே.

செவ்வாய், 7 ஏப்ரல், 2026

சேலம் மேற்கு தொகுதி NDA கூட்டணி வேட்பாளர் மு. கார்த்தி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த வாக்காள பெருமக்கள். மகிழ்ச்சியின் திளைத்த பாமக வேட்பாளர் மு கார்த்தி.

சேலம் மேற்கு தொகுதி NDA கூட்டணி வேட்பாளர் மு. கார்த்தி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த வாக்காள பெருமக்கள். மகிழ்ச்சியின் திளைத்த பாமக வேட்பாளர் மு கார்த்தி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் மேற்கு தொகுதி NDA கூட்டணி வேட்பாளர் மு. கார்த்தி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த வாக்காள பெருமக்கள். மகிழ்ச்சியின் திளைத்த பாமக வேட்பாளர் மு கார்த்தி. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழக முழுவதும் நடைபெற உள்ளது. இந்திய மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் மாவட்டத்தில், NDA கூட்டணியில் பாமகவை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மு. கார்த்தி சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடுகின்றார். கடந்த மூன்று நாட்களாக மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட அவர், இன்று சேலம் அழகாபுரம் தென் அழகாபுரம், மிட்டாபுதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திறந்தவெளி வாகனங்களில் சென்றும் நடந்தே சென்றோம் மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார். என் டி ஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள் புடை சூழ மேற்கு தொகுதி பாமக வேட்பாளர் கார்த்தி சென்ற இடங்கள் வழி நெடுங்கிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து மலர்களை தூவியும் பட்டாசுகளை வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மிட்டா புத்தூர் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்ற பாமக வேட்பாளர்கள் கார்த்தி சுவாமி தரிசனம் செய்து தனது வாக்கு சேகரிப்பு பணியை மீண்டும் தொடங்கினார். 
அப்போது அவர் செய்தியாளரிடம் கூறுகையில், மேற்கு தொகுதி உட்பட 11 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு அதீத வரவேற்பை பொதுமக்கள் வரவேற்பை வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்றும், மேற்கு தொகுதியை பொருத்தவரை இதுவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏராளமான மனுக்கள் கொடுத்தும் தற்பொழுது வரை நடவடிக்கை எடுக்கப்படாததால் தற்போது அது போன்ற மனுக்களில் தன்னிடம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்த மு கார்த்தி, வெற்றியடைந்த உடன் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதி மக்களின் தேவைகளை அனைத்தையும் ஒன்று கூட விடுபடாமல் பூர்த்தி செய்து தருவேன் என்று உறுதியளித்தார்.