சேலம்,
S.K. சுரேஷ்பாபு.
சேலம் ஸ்ரீ ராமானுஜர் மணி மண்டபத்தில் சகஸ்ர 1001 கலசபிஷேக வைபவம். கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிட்டும் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்பு.
சேலம் எருமாபாளையத்தில் உள்ள ஸ்ரீ பகவத் ராமானுஜர் கைங்கரிய சொசைட்டி ஸ்ரீ ராமானுஜர் மணி மண்டபத்தில் உலக நன்மை கருதி சகஸ்ர 11 கலசாபிஷேக வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று தொடங்கிய இந்த விழாவில் முதல் பூஜையாக கோ பூஜையுடன் தொடங்கியது. தொடங்கு மகா சுதர்சன ஹோமம் 1001 கலச ஸ்தாபடும் வேத பிரபந்த பாராயணம் சாற்றுமுறை உள்ளிட்ட நிகழ்வுடன் தொடங்கிய இந்த விழாவில் இன்று கோ பூஜை சுப்ரபாதம் விஸ்வரூபம் தோமாலை அர்ச்சனை திருவாராதனம் தீர்த்த பிரசாதம் உள்ளிட்டவைகள் நடைபெற்றது தொடர்ந்து ஸ்ரீ ரங்கநாத பெருமாள் உற்சவருக்கும் ஸ்ரீ ராமானுஜர் உற்சவருக்கும் 1001 சகஸ்ர கலச அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றன.
நாராயண ராமானுஜர் ஜி எஸ் சுவாமிகள் திருக்கோவிலூர் எம்பெருமானார் தேஹளீச ராமானுஜர் ஜி எஸ் சுவாமிகள் மற்றும் திருச்சித்ர கூடம் ரங்காச்சாரியார் சுவாமிகள் திருக்கடையூர் நம்பிகள் சுவாமிகள் ஆகியோர் மங்களா சாசனத்துடன் நடைபெற்ற இந்த விழாவில், கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிட்டும் எல்லா யாகங்களின் பலன் தீட்டும் எல்லா தானியங்களின் பலன் கிட்டும் அனைத்து பாவங்களையும் போக்க வல்லது என்பன உள்ளிட்ட 8 ம்ச காரணிகளின் காரணத்தால் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கலசாபிஷேக விழாவினை சிறப்பித்தனர்.
விழா குறித்து ஸ்ரீ பகவத் ராமானுஜர் கைங்கரிய சொசைட்டியின் செயலர் முரளிதரன் கூறுகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சேலம் கோட்டை பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் பக்தி சபையினர் நடத்தியதற்கு பிறகு தற்பொழுது இப்பொழுதுதான் இந்த சகஸ்ர கலசாபிஷேக நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் இதில் கலந்துகொண்டால் ஏராளமான புண்ணியங்கள் கட்டும் என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு எம்பெருமானை வழிபட்டு சென்றதாக தெரிவித்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் ஸ்ரீராமன் பொருளாளர் நரசிம்மமூர்த்தி சேலம் ராமகிருஷ்ணா எலெக்ட்ரிக்கல்ஸ் ரவிச்சந்திரன் சேலம் ஜெயகிருஷ்ணா பெஸ்டிசைட்ஸ் பிரைவேட் லிமிடெட் இன் ரவி சுந்தர் மற்றும் துணைச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.


