திங்கள், 10 ஆகஸ்ட், 2026

பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்டம் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி. இலட்சோப லட்ச நன்றிகளை தெரிவித்து சேலம் மாநகரம்  முழுவதும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பச்சைப்பட்டி பழனிச்சாமி சுவரொட்டிகள்.

பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்டம் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி. இலட்சோப லட்ச நன்றிகளை தெரிவித்து சேலம் மாநகரம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பச்சைப்பட்டி பழனிச்சாமி சுவரொட்டிகள்.

சேலம்,
S.K.சுரேஷ்பாபு.

பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்டம் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி. இலட்சோப லட்ச நன்றிகளை தெரிவித்து சேலம் மாநகரம்  முழுவதும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பச்சைப்பட்டி பழனிச்சாமி சுவரொட்டிகள். 

முதல்வரின் காலை உணவு திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் காலை உணவு திட்டம் என்று பெயர் மாற்றி பெருந்தலைவர் கல்வி சேவைக்கு உரிய மதிப்பளித்து இந்த திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வர் மாண்புமிகு திரு ஜோசப் விஜய் அவர்களுக்கு லட்சோப லட்ச காங்கிரஸ் தொண்டர்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து  நன்றி போஸ்ட் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் பச்சப்பட்டி பழனிசாமி மற்றும் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் 40 வது டிவிசன் தலைவர் P.வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து, சேலம் மாநகரம் முழுவதும் போஸ்டர் விளம்பரங்கள் அடித்து ஒட்டி உள்ளார். 
அந்த சுவரொட்டிகளில் 
பசி இல்லா காலை...
கல்வி நிறைந்த நாளை...
பெருந்தலைவர் காமராஜர் வழியில், எதிர்காலம் நம்முடையதாக இருக்கட்டும் என்றும் அச்சிடப்பட்டிருந்தது. 

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

சேலம் மாவட்ட தன்னார்வலர்கள் அறிமுக விழா மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி. விழாவில் சுற்றுச்சூழல் மாதத்தை முன்னிட்டு 3000 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

சேலம் மாவட்ட தன்னார்வலர்கள் அறிமுக விழா மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி. விழாவில் சுற்றுச்சூழல் மாதத்தை முன்னிட்டு 3000 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

சேலம்,
S. K.சுரேஷ்பாபு.

சேலம் மாவட்ட தன்னார்வலர்கள் அறிமுக விழா மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி. விழாவில் சுற்றுச்சூழல் மாதத்தை முன்னிட்டு 3000 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம் கருப்பூரில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்திற்கு எதிரில் உள்ள பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வி த லீடர்ஸ் சார்பில்  சேலம் மாவட்ட தன்னார்வலர்கள் அறிமுக விழாவும் சுற்றுலா சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வீத லீடர்ஸ் கோவை தன்னார்வலர் பாலாஜி உத்தம ராமசாமி, கோவை குளங்களின் பாதுகாவலர் மணிகண்டன், அத்திக்கடவு அவிநாசி திட்டம் சுப்பிரமணியன், நொய்யல் ஆறு அறக்கட்டளை அரசூர் அசோகன், சிப்காட் எதிர்ப்பு போராட்ட குழு மகேஸ்வரி, சத்தியமங்கல காடுகள் ஆராய்ச்சி மாணவி செல்வி ஹரி ராஜஸ்ரீ, அனாதை பிணங்களின் பிதாமகன் மேட்டூர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்தோடு சேலம் எஸ் கே எஸ் மருத்துவமனை வழங்கிய இலவச பொது மருத்துவ முகாம் துவக்க விழாவும், மாருதி ரத்த வங்கி வழங்கிய இலவச ரத்ததான முகாமும், அரவிந்த் கண் மருத்துவமனை வழங்கிய இலவச கண் பரிசோதனை முகாமும், வள்ளி மருத்துவமனை வழங்கிய எலும்பியல் மருத்துவ முகாமும் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றல் நிகழ்வும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. வீ த லீடர்ஸ்-ன் தலைமை சேவகர்  திரு. அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தல் படி ஆகஸ்ட் மாதத்திற்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழியினை தன்னார்வலர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து தீர்மானங்களை முன்மொழிந்து அதை நிறைவேற்றினர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பாலாஜி உத்தம ராமசாமி, கோவை குளங்களின் பாதுகாவலர் மணிகண்டன்  ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களும் பொதுமக்களும் சுமார் 900 பேர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து தன்னார்வலர்கள் பொது மக்களுக்கும் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட தன்னார்வலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.விழாவில் சுற்றுச்சூழல் மாதத்தை முன்னிட்டு 3000 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

சனி, 8 ஆகஸ்ட், 2026

காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக  அரசை கண்டித்து ஆகஸ்ட் 13 முதல்,  கர்நாடகாவில் உள்ள தொழில் வளங்களைப் பாதிக்கும் வகையிலான தீவிர தொடர் போராட்டம். தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் ஆர். வேலுச்சாமி கடும் எச்சரிக்கை.

காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசை கண்டித்து ஆகஸ்ட் 13 முதல், கர்நாடகாவில் உள்ள தொழில் வளங்களைப் பாதிக்கும் வகையிலான தீவிர தொடர் போராட்டம். தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் ஆர். வேலுச்சாமி கடும் எச்சரிக்கை.

நாமக்கல், 
S.K. சுரேஷ்பாபு.

காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக  அரசை கண்டித்து ஆகஸ்ட் 13 முதல்,  கர்நாடகாவில் உள்ள தொழில் வளங்களைப் பாதிக்கும் வகையிலான தீவிர தொடர் போராட்டம். தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் ஆர். வேலுச்சாமி கடும் எச்சரிக்கை.

தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் வகையில் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை வெடிக்கும் வகையில், உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக தொடர் போராட்டங்கள் அறிவித்து அறிக்கையின் வாயிலாக கர்நாடக அரசிற்கு தலைவர் வேலுசாமி பகிரங்க  எச்சரிக்கை விடுத்துள்ளார். 
அந்த அறிக்கையில், கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை உயிர் பங்கீட்டு தண்ணீரை தர தொடர்ந்து மறுத்துள்ளது. காவிரி  உரிமை உயிர் பங்கீட்டு தண்ணீரை தமிழ்நாட்டிற்கு    உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறபித்தும் மற்றும் காவிரி மேலாண்மை ஆணைய நடத்திய 54 கூட்டம் நடத்தப்பட்டதில் அதில் தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை உயிர் பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என பலமுறை உத்தரவு பிறப்பித்தும் உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவையும் மதிக்காமலும் அதேபோல் தமிழ்நாட்டின் உரிமையை பரிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டும் முயற்சியை  மேற்கொள்ளும் அடாவடி தனமாக கர்நாடகா அரசு  தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுகிறது.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி ஒருபுறம் கர்நாடகா அணைகளில் தற்போது போதிய அளவு தண்ணீர் இருப்பு வைத்துக்கொண்டு தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை உயிர் பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி இந்தாண்டு முற்றிலும் பாசன வசதி இல்லாமல் பொய்த்து விட்டது.  தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை உயிர் பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா அணைகளில் தற்போது போதிய தண்ணீர் இருப்பு வைத்துக்கொண்டு தண்ணீர் திறந்து விடாமல் துரோகம் விளைவித்ததற்கு கர்நாடகா அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் எனது தலைமையில் வருகின்ற 13 ந் தேதி அன்று முதல் கர்நாடகாவில் இருந்து தமிழகம் மற்றும்  கேரளா செல்லும் சரக்கு மற்றும் பயணிகள் இரயில்கள் மேலும்  தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் சரக்கு மற்றும் பயணிகள் இரயில்கள் போக்குவரத்தை முற்றிலும் முடக்குவோம். மேலும் தமிழகம் வழியாக கர்நாடகா செல்லும் எரிவாயு மற்றும் தமிழகத்தில் இருந்து உற்பத்தி செய்து கர்நாடகா செல்லும் மின்சாரம் உட்பட அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகத்தில் பலகட்ட தொடர் போராட்டம் வாயிலாக கர்நாடகாவில்  உள்ள தொழில்வளம் பாதிக்கும் வகையில் முடக்கி காட்டுவோம் என்பதை கர்நாடகா அரசுக்கு இந்த அறிக்கையின் வாயிலாக எச்சரிக்கை விடுக்கிறேன் என்று இந்த அறிக்கையின் வாயிலாக கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுவதாக பகிரங்க எச்சரிக்கையினை வேலுசாமி அறிவித்துள்ளார்.


மத்திய சட்டக் கல்லூரியில் நடைபெற்ற நிறைவு விழாவுடன் 2026 உள்ளக மாதிரி நீதிமன்ற சாம்பியன்ஷிப் போட்டி நிறைவடைந்தது. மூத்த சட்ட வல்லுநர்கள் வெற்றிபெற்ற நீதிமன்ற உத்திகளைப் பகிர்ந்துகொண்டதோடு, சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கினர்.மூத்த வழக்கறிஞர் திரு. ஏ. துரைசாமி அவர்களைக் கௌரவிக்கும் வகையிலும், அவரது நினைவாகவும் மொத்தம் ரூ. 22,500 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

மத்திய சட்டக் கல்லூரியில் நடைபெற்ற நிறைவு விழாவுடன் 2026 உள்ளக மாதிரி நீதிமன்ற சாம்பியன்ஷிப் போட்டி நிறைவடைந்தது. மூத்த சட்ட வல்லுநர்கள் வெற்றிபெற்ற நீதிமன்ற உத்திகளைப் பகிர்ந்துகொண்டதோடு, சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கினர்.மூத்த வழக்கறிஞர் திரு. ஏ. துரைசாமி அவர்களைக் கௌரவிக்கும் வகையிலும், அவரது நினைவாகவும் மொத்தம் ரூ. 22,500 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

சேலம்,
S.K.சுரேஷ்பாபு.

மத்திய சட்டக் கல்லூரியில் நடைபெற்ற நிறைவு விழாவுடன் 2026 உள்ளக மாதிரி நீதிமன்ற சாம்பியன்ஷிப் போட்டி நிறைவடைந்தது. மூத்த சட்ட வல்லுநர்கள் வெற்றிபெற்ற நீதிமன்ற உத்திகளைப் பகிர்ந்துகொண்டதோடு, சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்குப் பரிசுகளையும் வழங்கினர்.
மூத்த வழக்கறிஞர் திரு. ஏ. துரைசாமி அவர்களைக் கௌரவிக்கும் வகையிலும், அவரது நினைவாகவும் மொத்தம் ரூ. 22,500 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

சேலம் மத்திய சட்டக் கல்லூரியில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த சி.எல்.சி உள்ளக மாதிரி நீதிமன்ற சாம்பியன்ஷிப் போட்டிக்கான பரிசளிப்பு விழா இன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்களாகப் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், கல்லூரியின் 49 அணிகளிலிருந்து சுமார் 147 மாணவர்கள் பங்கேற்றனர்.  பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரியின் தலைவர் திரு. சரவணன் தனபாலன் தலைமை தாங்கினார். சென்னை உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அரசு வழக்கறிஞர் திரு. இளம்வழுதி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் திரு. டி. சிவகுமார் மற்றும் வழக்கறிஞர் திரு. ஆர். ராமசுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். சேலம் மத்திய சட்டக் கல்லூரியின் தலைவர் திரு. சரவணன் தனபாலன் தலைமைரை ஆற்றினார். இப்போட்டிக்கான மாதிரி வாத முன்மொழிவு, கட்சித் தாவல் தடைச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றின் விதிகளை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சட்ட விதிகள் குறித்த புரிதலை உருவாக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இப்போட்டியில், பெருமளவில் (147 மாணவர்கள்—84 பெண் மற்றும் 63 ஆண் மாதிரி வாதப் போட்டியாளர்கள்—குறிப்பிடத்தக்க வகையில் 86 பேர் முதல் முறையாகப் பங்கேற்றவர்கள்) பங்கேற்ற மாணவர்களைப் பாராட்டி அவர் தனது உரையைத் தொடர்ந்தார்.  மேலும், மாணவர்கள் நாளை வழக்கறிஞர்களாகப் பதிவுசெய்து நீதிமன்றங்களில் வாதிடும்போது, ​​நீதிபதிகள் கேள்விகள் எழுப்பும் போது அமைதியாக இருக்கும் குணத்தையும், தெளிவாகப் பதிலளிக்கும் பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், எதிர்காலச் சிறப்பை உறுதிசெய்ய இது போன்ற மாதிரி நீதிமன்றப் போட்டிகள் மூலம் இப்பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
நிறைவுரை ஆற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அரசு வழக்கறிஞர் திரு. இளம்வழுதி, மாணவர்கள் சட்டப் பாடங்களை நடப்பு நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்திப் படிப்பது அவசியம் என்று கூறித் தனது உரையைத் தொடங்கினார். சட்டப் புத்தகங்களைப் படிப்பதால் மட்டுமே ஒருவர் முழுமையான வழக்கறிஞராக ஆகிவிட முடியாது என்றும், இந்தத் தலைமுறை தினமும் செய்தித்தாள்களைப் படிப்பதன் அவசியத்தை உணர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மனுநீதி சோழனின் கதை மற்றும் கம்பராமாயணம் போன்ற இதிகாசங்களை மேற்கோள் காட்டி, தமிழர்களின் அறநெறி வாழ்க்கைக் கொள்கைகளை மாணவர்களுடன் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டார். ஒரு வழக்கறிஞருக்கு, நீதிபதியின் கேள்வியைத் தெளிவாகப் புரிந்துகொள்வது, இரண்டு வினாடிகளுக்குள் உடனடியாகச் சிந்திப்பது, மற்றும் இரண்டு நிமிடங்களுக்குள் நீதிபதிக்கு விளக்கம் அளிப்பது ஆகியவை முக்கியமான திறன்கள் என்றும் அவர் கூறினார். இக்கலையில் தேர்ச்சி பெறுவது அவர்களைப் பெரும் உயரங்களை அடைய உதவும் என்று குறிப்பிட்டு, மாணவர்களை வாழ்த்தி அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
சட்டப் பயிற்சிக்கான முக்கியத் திறன்கள் குறித்துப் பேசிய திரு. ராம்சுந்தர், வாய்மொழி வாதத்தில் உள்ள பொதுவான குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, மாணவர்கள் தங்கள் வாதங்களின் போது, ​​உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் முன்னுதாரணங்களை வெறுமனே மேற்கோள் காட்டக்கூடாது என்று அறிவுறுத்தினார். அதற்குப் பதிலாக, அவர்கள் ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து, தாங்கள் கற்றவற்றைத் தொகுத்து, தங்களது சொந்த பாணியில் சுதந்திரமாக வாதங்களை முன்வைக்க வேண்டும்.
வழக்கறிஞர் திரு. சிவகுமாரன், பெண்களின் அதிகப் பங்கேற்பை, பெண்கள் அதிகாரமளித்தலின் ஓர் அடையாளமாகப் பாராட்டினார். விவாதப் போட்டிகள், கல்விசார் கோட்பாட்டையும் நீதிமன்ற நடைமுறையையும் இணைப்பதாகவும், நீதிபதிகளின் கேள்விகளுக்குப் பதிலளிப்பது, முதல் 30 வினாடிகளுக்குள் தாக்கத்தை ஏற்படுத்துவது, ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவது மற்றும் நெறிமுறைகளைப் பேணுவது போன்ற முக்கியப் பாடங்களை வழங்குவதாகவும் அவர் வலியுறுத்தினார். விருதுகள் மற்றும் நிறுவன ரொக்கப் பரிசுகள் வழங்குதலுடன் விழா நிறைவடைந்தது.  
சிறப்பு அரசு வழக்கறிஞர் திரு. இளம்வலூதி, (கிருத்திகா எஸ், லலித் கே எஸ், மற்றும் ரிஜு எஸ் வி) ஆகியோரை வெற்றியாளர்களாகவும் (₹15,000 ரொக்கப் பரிசு), (சீதா எஸ், முகமது சஃபி எம், மற்றும் அஞ்சுஸ்ரேயா ஜி) ஆகியோரை இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்களாகவும் (₹7,500 ரொக்கப் பரிசு) அறிவித்தார். இந்தப் ரொக்கப் பரிசுகள், வழக்கறிஞர் திரு. சிவகுமாரன் அவர்களால், அவரது தந்தையும், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தின் சிரேஷ்ட வழக்கறிஞரும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான காலஞ்சென்ற திரு. ஏ. துரைசாமியின் நினைவாக நிறுவப்பட்ட அறக்கட்டளை நிதியிலிருந்து வழங்கப்பட்டன.
தனிநபர் விருதுகளில், முகமது சஃபி எம் மற்றும் லலித் கே எஸ் ஆகியோர் சிறந்த மற்றும் இரண்டாம் சிறந்த ஆண் வழக்கறிஞராகவும் இளவரசி கே மற்றும் ரித்திகா டி ஆகியோர் சிறந்த மற்றும் இரண்டாம் சிறந்த பெண் வழக்கறிஞராகவும்; அஞ்சுஸ்ரேயா ஜி மற்றும் நிதின் கே ஆகியோர் சிறந்த மற்றும் இரண்டாம் சிறந்த மனுதாரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் பிருந்தா எஸ், லத்திகா கே.எம், சதாந்த் ஏ மற்றும் ரித்திகா ஹர்ஷிதா சிவகுமார், காந்திமதி நிதின் கே ஆகியோர் மிகவும் மற்றும் இரண்டாவது மிகவும் ஒழுக்கமான அணிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உதவிப் பேராசிரியர் திருமதி. ஐஸ்வர்யா லட்சுமி வரவேற்புரை வழங்கினார். பிரியதர்ஷினி வழங்கிய முறைப்படியான நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆடி பெருவிழாவில் அம்மன் திருத்தேர் விழாவை ஒட்டி மாபெரும் அன்னதானம். அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மகா அன்னதானம்.

சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆடி பெருவிழாவில் அம்மன் திருத்தேர் விழாவை ஒட்டி மாபெரும் அன்னதானம். அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மகா அன்னதானம்.

சேலம், 
S.K. சுரேஷ் பாபு. 

சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் ஆடி பெருவிழாவில் அம்மன் திருத்தேர் விழாவை ஒட்டி மாபெரும் அன்னதானம். அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மகா அன்னதானம். 

சேலத்தில் உள்ள எட்டு பட்டிகளுக்கும் காவல் தெய்வம், நவகிரகங்களின் நாயகி மற்றும் கிரகண காலங்களில் திருக்கோவில் நடையை அடைக்காமல் சிறப்பு பூஜை மேற்கொள்ளும் திருத்தலம் என்பன உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவில் ஆடி பெருவிழாவை முன்னிட்டு விழாவின் முக்கிய நிகழ்வான அம்மனின் திருத்தேர் ஊர்வலம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. 
விழாவினை ஒட்டி கோட்டை பெரிய மாரியின் திருத்தேர் விழா பவணியை காண வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கும் நிகழ்வுக்கு அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநில இணை செயலாளர் வி கே ஆர் சண்முகவேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சேலம் மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
இந்த மகா அன்னதான விழாவில், தேசியத் தலைவர் குருஜி அருள்வேலன், கௌரவ தலைவர்கள் சுவாமி இராமானந்தா மற்றும் ஸ்ரீலஸ்ரீ தண்டபாணி தேசிகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, ஆடி பெருவிழாவில் சேலம் கோட்டை மாரி, சேலம் மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வரும் திருத்தேர் விழாவினை காண வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானங்களை வழங்கி மகிழ்ந்தனர். 
காலை 10:30 மணி அளவில் தொடங்கிய இந்த மகா அன்னதானம் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அமைப்பின் சேலம் மாவட்ட செயலாளர் சண்முகம், மாநில மகளிர் அணி செயலாளர் ஷர்மிளா சரவணன், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் செவ்வாய் ஜே கே சுதன், எஸ் எஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை  சேர்ந்த சரவணன் மற்றும் விஸ்வநாதன் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழக  விவசாயிகளின் கோரிக்கையை முழுமையாக ஏற்று அறிவிப்பு வெளியிடாதது, தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக TVK அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கருத்து.

தமிழக விவசாயிகளின் கோரிக்கையை முழுமையாக ஏற்று அறிவிப்பு வெளியிடாதது, தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக TVK அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கருத்து.

நாமக்கல், 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக  விவசாயிகளின் கோரிக்கையை முழுமையாக ஏற்று அறிவிப்பு வெளியிடாதது, தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக TVK அரசுக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி கருத்து. 

தமிழக வேளாண் பட்ஜெட்டை,  தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆனந்த் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சுமார் 2 மணி நேரம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் பல்வேறு கோரிக்கைகளை ஏற்கனவே முன்வைத்து அதில் ஒரு கோரிக்கை கூட தமிழக அரசால் இந்த விவசாயிகளின் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறாதது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர்.  வேலுச்சாமி தனது வரவேற்பு மற்றும் ஏமாற்றம் குறித்து அறிக்கையின் வாயிலாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 
தமிழகத்தில் தவெக அரசின் 2026 -2027 ஆம் ஆண்டிற்கு உண்டான இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டில்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாக்கோட்டையில் இயற்கை வேளாண் கல்லூரி மற்றும் மாணவர்கள் பட்டையபடிப்பு வசதியும் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பும்,  கோவை மற்றும் திருச்சி பகுதியை மையமாக கொண்டு வேளாண் பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதிக்கு அனுப்பும்  மண்டலம் உருவாக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட்டதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வரவேற்கிறோம்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தவெக  தமிழக விவசாயிகளுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிப் படி கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4500/ம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500/ ம்  வழங்கப்படும், கூட்டுறவு பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்பன பற்றிய எந்த அறிவிப்பும் இன்று நடைபெற்ற நிதிநிலை அறிக்கையில் இல்லை, மேலும் கூட்டுறவு பயிர் கடன் வழங்க கடந்த ஆண்டை விட ‌இந்த ஆண்டு ரூ.2000/கோடி குறைத்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதேப்போல காவிரி டெல்டா பகுதியில் பாசனத்திற்கும் தூர் வாருவதற்கும் கடந்த ஆண்டு ஒதுக்கிய அதே தொகையான ரூ.125 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது, கூடுதல் ஒதுக்கீடு எதுவும் இடம்பெறவில்லை. தவெக அரசு விவசாயிகளின் கோரிக்கையை முழுமையாக ஏற்று அறிவிப்பு வெளியிடாதது, தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

புதன், 5 ஆகஸ்ட், 2026

ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்திற்கான ஆணையத்திடம் சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லுாரி சார்பில் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்திற்கான ஆணையத்திடம் சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லுாரி சார்பில் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் சட்டக் கல்லூரியில் மாதிரி பாராளுமன்ற போட்டி. ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டத்திற்கான நீதியரசர் கே என் பாட்ஷா தலைமையிலான ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பரிசளித்து விழாவினை சிறப்பித்தனர்.

சேலம் மத்திய சட்டக் கல்லூரி, கௌரவக் கொலைகள் தடுப்பு ஆணையத்துடன் ஒரு உயர்மட்ட கலந்துரையாடல் அமர்வுடன், கல்லூரி அளவிலான ஒரு விறுவிறுப்பான மாதிரி நாடாளுமன்றப் போட்டியையும் நடத்தியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், புகழ்பெற்ற சட்ட வல்லுநர்களும் நிர்வாகப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர். ஆணையத்தின் தலைவர் மாண்புமிகு நீதிபதி கே.என். பாஷா அவர்களின் வருகை இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற ஒரு விரிவான அமர்வின் போது, ​​பேராசிரியர்களும் மாணவர்களும் கௌரவக் குற்றங்களை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட விரிவான பரிந்துரைகளையும் ஒரு மாதிரிச் சட்டத்தையும் முன்வைத்தனர். சேலம் மத்திய சட்டக் கல்லூரியின் தலைவர் திரு. சரவணன் தனபாலன், இந்த அதிகாரப்பூர்வத் தொகுப்பை நீதிபதி கே.என். பாஷாவிடம் வழங்கினார். சட்ட சீர்திருத்தத்திற்காக மாணவர் மற்றும் பேராசிரியர்களின் கருத்துக்களை முன்முயற்சியுடன் திரட்டிய தமிழ்நாட்டின் முதல் நிறுவனம் என்ற வகையில் மத்திய சட்டக் கல்லூரியை ஆணையம் பாராட்டியதுடன், இது சமூகப் பொறுப்பின் ஒரு முன்மாதிரியான வெளிப்பாடு என்றும் புகழ்ந்தது. மாதிரி நாடாளுமன்றத்தின் நிறைவு விழாவில் உரையாற்றிய மாண்புமிகு நீதிபதி கே.என். பாஷா, தனது நிறைவுரையில், நீதித்துறை அனுபவம், அரசியலமைப்பு அறநெறி மற்றும் குடிமைக் கடமை ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்துகொண்டார். தற்போதைய அரசியலமைப்பு உத்தரவாதங்கள், 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் நீடித்த கடினமான விவாதங்களின் மூலம் உருவாக்கப்பட்டன என்பதை அவர் மாணவர்களுக்கு நினைவூட்டினார். மேலும், இந்தக் கட்டமைப்பைப் பாதுகாப்பது சட்ட சமூகத்தின் இன்றியமையாத கடமை என்பதையும் அவர் வலியுறுத்தினார். ஜனநாயகம் என்பது எழுதப்பட்ட சட்டத் தொகுப்புகள் அல்லது தேர்தல்களை விட மேலானது என்று நீதிபதி பாஷா குறிப்பிட்டார். அது, குணநலன், அறநெறித் துணிவு மற்றும் தனிப்பட்ட லட்சியங்களுக்கு மேலாகப் பொதுநலனை முன்னிறுத்துதல் ஆகியவற்றைச் சார்ந்த ஒரு நீடித்த உடன்படிக்கையாகும். உண்மையான தலைமை என்பது, வெறும் ஆரவாரத்தாலோ அல்லது உணர்ச்சிகரமான சொல்லாட்சியாலோ அல்ல, மாறாக பகுத்தறிவு, சரிபார்க்கப்பட்ட உண்மை மற்றும் அசைக்க முடியாத கண்ணியம் ஆகியவற்றால் வரையறுக்கப்படுகிறது என்று அவர் வலியுறுத்தினார். ஒழுக்கமற்ற அதிகாரம் குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்றும், மனசாட்சியால் வழிநடத்தப்படும் பேச்சு ஒரு நீதியான சமூகத்தை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்தார். நாளைய நீதியின் பாதுகாவலர்களாகச் செயல்படுமாறு இளம் சட்ட அறிஞர்களை வலியுறுத்திய அவர், வசதிக்காக ஒருபோதும் உண்மையின் மீது சமரசம் செய்துகொள்ள வேண்டாம் என்றும், அவநம்பிக்கை தங்களது இலட்சியவாதத்தைக் குலைக்க அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். மேலும், தனிநபர்கள் தங்களது நேர்மையைத் தீவிரமாகப் பாதுகாக்க வேண்டும், ஏனெனில் அது ஒருமுறை சமரசம் செய்யப்பட்டால் ஒருபோதும் முழுமையாக மீட்டெடுக்க முடியாத ஒரே சொத்து என்றும் அவர் கூறினார். நீதிபதிகள் வி.ஆர். கிருஷ்ண ஐயர் மற்றும் பி.என். பகவதி போன்ற சட்ட மேதைகளை முன்னிலைப்படுத்திய அவர், மாணவர்கள் தொழில்முறைச் சிறப்பிற்காகப் பாடுபடவும், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி மோகனா போன்ற முன்னோடிகளைப் பின்பற்றவும் ஊக்குவித்தார். 
இந்த விழாவில் மற்ற முக்கியத் தலைவர்களின் ஆழ்ந்த உரைகளும் இடம்பெற்றன. திரு. சரவணன் தனபாலன் ஆற்றிய தலைமை உரையில், அரசியல் கட்சித் தாவல் மற்றும் தேர்தல்களின் போது நிலவும் சமமற்ற களங்கள் போன்ற ஜனநாயக செயல்முறைகளில் உள்ள முக்கிய சவால்களை எடுத்துரைத்ததோடு, பாரபட்சமற்ற நிர்வாகத்தின் முக்கியப் பங்கையும் அவர் வலியுறுத்தினார். பொது மன்றங்கள். வழக்கறிஞர் செல்வாகோமதி, ஹன்சா மேத்தா உள்ளிட்ட அரசியலமைப்புச் சபையின் 15 பெண் உறுப்பினர்களின் பங்களிப்புகளை நினைவு கூர்ந்ததோடு, மாணவர்கள் மனித உரிமைப் பாதுகாவலர்களாக முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தி, அனைவருக்கும் மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்த மாதிரி நாடாளுமன்றத்தின் மாதிரி மசோதாவைப் பாராட்டினார். ஆணைய உறுப்பினர்களான திரு. ராமநாதன் ஐபிஎஸ் மற்றும் திரு. பழனிகுமார் ஐஏஎஸ் ஆகியோரும், தொகுதி மறுவரையறைச் சட்டம் மற்றும் வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் போன்ற சிக்கலான தலைப்புகளில் மாணவர்களின் விவாதத் திறனைப் பாராட்டினர். மாதிரி நாடாளுமன்றப் போட்டியில் சிறந்து விளங்கிய செல்வி கோபிகா, செல்வி மெர்லின் சோபியா மற்றும் திரு. யஷ்வந்த் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி நிகழ்ச்சி நிறைவடைந்தது. 
உதவிப் பேராசிரியர் ஜெசிந்தாவின் வரவேற்புரை மற்றும் சுவாமிநாதனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. மாண்புமிகு நீதிபதி கே.என். பாஷா, திரு. ராமநாதன் ஐ.பி.எஸ், திரு. பழனிகுமார் ஐ.ஏ.எஸ், நீதிபதி திரு. ரவீந்திர போஸ், உறுப்பினர் செயலாளர் மற்றும் வழக்கறிஞர் செல்வி செல்வகோமதி ஆகியோர் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களில் அடங்குவர்.