புதன், 21 ஆகஸ்ட், 2024

கோபி கல்குவாரி விபத்து: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி

கோபி கல்குவாரி விபத்து: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21ம் தேதி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- 

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், வாணிபுத்தூர் உள்வட்டம், புஞ்சைதுறையம்பாளையம் 'அ' கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த தனியார் கல்குவாரியில் நேற்று (20ம் தேதி) மாலை சுமார் 5.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த வெடி விபத்தில், கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கோபிசெட்டிபாளையம் வட்டம் அயலூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 50) மற்றும் கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் மாட்டவள்ளி பகுதியைச் சேர்ந்த அஜீத் (வயது 27) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்த குடும்பத்தினருக்கும் அவர்களது வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

உங்களைத் தேடி உங்கள் ஊரில்: சத்தியமங்கலம் வட்டத்தில் ஈரோடு ஆட்சியர் கள ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில்: சத்தியமங்கலம் வட்டத்தில் ஈரோடு ஆட்சியர் கள ஆய்வு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், பல்வேறு அரசு அலுவலகங்களில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (21ம் தேதி) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 தமிழ்நாடு முதலமைச்சர் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்.‌ இந்தத் திட்டத்தின்படி ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி, மக்களின் சேவைகள், தங்கு தடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில், கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து வருகிறார்

அந்த வகையில், இன்று (21ம் தேதி) உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சத்தியமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட மாக்கினாம்கோம்பை பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனையில், கால்நடைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, மாக்கினாம்கோம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் சங்கத்தில் செயல்படும் இ-சேவை மையம் ஆகியவற்றினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, கடன் சங்கத்தில் வழங்கப்படும் வேளாண் கடன் குறித்து கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து, இண்டியம்பாளையம் நியாயவிலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டு, நியாய விலை பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

இதனையடுத்து, நியாய விலைக்கடையில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, அரசூர்புதூர் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, மையத்திற்கு வருகை புரியும் குழந்தைகளின் விபரங்கள் மற்றும் குழந்தைகளின் எடை, உயரம் ஆகியவற்றை அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, உக்கரம் வட்டார அரசு துணை சுகாதார நிலையம் மற்றும் இண்டியம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, பிரசவ பிரிவு, தடுப்பூசி பிரிவு, உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும், நாள்தோறும் சிகிச்சை மேற்கொள்ள வரும் நோயாளிகள் குறித்து கேட்டறிந்து, மருத்துவமனையில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகளின் காலாவதி நாள் ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டார்.

அதனையடுத்து, சத்தியமங்கலம் அரசினர் மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவியர்களுடன் கலந்துரையாடினார். மேலும் மாணவியர்களுக்கு வழங்க தயாராக இருந்த மதிய உணவினை சாப்பிட்டார்.

தொடர்ந்து, சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் துறைச் சார்ந்த முதன்மை அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து, அலுவலர்களுடன் விவாதித்தார். மேலும், ஆய்வுகளில் கண்டறியப்பட்ட குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்று, தொடர்புடைய துறை அலுவலர்களிடம் வழங்கி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரெ.சதீஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், சத்தியமங்கலம் வட்டாட்சியர் சக்திவேல் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி சேலம் மாவட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி சேலம் மாவட்டம் முழுவதிலும் உள்ள 385 ஊராட்சி செயலாளர்களை கடை நிலை ஊழியர்களாக பாவித்து தங்களை அரசு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையினை வலியுறுத்தி சேலம் மாவட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் முதற்கட்ட போராட்டம் நடைபெற்றது. 
அந்த சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்து ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பலரும் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தங்களுக்கு ஏற்கனவே உள்ள பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷமிட்ட அவர்கள் தங்களது முக்கிய கோரிக்கையான ஒற்றை கோரிக்கை அதாவது ஊராட்சி செயலாளர்களை அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 
இது குறித்து சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவசங்கர் நம்மிடையே  கூறுகையில், முதற்கட்டமாக சேலம் கோட்டை மைதானத்தில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருக்கிறோம் என்றும் தமிழக அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை எனில் செப்டம்பர் 27ஆம் தேதி மாநில அளவிலான பெருந்திரள்  முறையீட்டு இயக்க போராட்டம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை முன்பாக நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

பள்ளிக்கல்வி துறையின் சார்பில் ரோட்டரி சங்க ஒருங்கிணைப்புடன் நடைபெற்று வரும் தடகள விளையாட்டு  போட்டிகள்... தங்களது திறமைகளை வெளிப்படுத்தி மாணாக்கர்கள் உற்சாகம்.

பள்ளிக்கல்வி துறையின் சார்பில் ரோட்டரி சங்க ஒருங்கிணைப்புடன் நடைபெற்று வரும் தடகள விளையாட்டு போட்டிகள்... தங்களது திறமைகளை வெளிப்படுத்தி மாணாக்கர்கள் உற்சாகம்.


சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

பள்ளிக்கல்வி துறையின் சார்பில் ரோட்டரி சங்க ஒருங்கிணைப்புடன் நடைபெற்று வரும் தடகள விளையாட்டு  போட்டிகள்... தங்களது திறமைகளை வெளிப்படுத்தி மாணாக்கர்கள் உற்சாகம். 

சேலம் மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் சேலம் ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் பங்களிப்புடன் 2024-2025 கல்வி ஆண்டிற்கான வாழப்பாடி மைய கல்வி குறுவட்ட அளவிலான குழு மற்றும் தடகள போட்டிகள் சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் முழுவதிலும் இருந்து 70க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு உள்ள இந்த குறுமைய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர், 400 மீட்டர், குண்டு எறிதல், வட்டி எறிதல், தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், மற்றும் நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு உடனுக்குடன் பதக்கங்களும் பரிசு பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த மாணாக்கர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக நடத்தப்படும் இந்த முதற்கட்ட போட்டியில், வெற்றி பெறும் மானா கர்கள் அடுத்த கட்டமாக மாவட்ட அளவில் நடத்தப்படும் போட்டிகளிலும் மாநில அளவில் நடத்தப்படும் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது என்று சேலம் ரோட்டரி சங்கத்தின் தலைவர் டாக்டர் செந்தில் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் ரோட்டரி சங்க சேலம் மாவட்ட ஆளுநர் சிவகுமார், முன்னாள் மாவட்ட ஆளுநர் வேலாயுத ரவீந்திரன், மற்றும் நிர்வாகிகள் செந்தில்குமார் மற்றொரு செந்தில்குமார் ஈஸ்வர குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாக்குறுதிப்படி ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரப்படுத்த வலியுறுத்தி ஈரோட்டில் சிஐடியு தர்ணா

வாக்குறுதிப்படி ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரப்படுத்த வலியுறுத்தி ஈரோட்டில் சிஐடியு தர்ணா

தேர்தல் வாக்குறுதிப்படி மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரப் படுத்த வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஈரோடு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா நடைபெற்றது.
பிரிவிற்கு இரண்டு பேரை கள உதவியாளராக ஒப்பந்ததாரர் மூலம் நியமனம் செய்யும் முடிவை கைவிட்டு வாரியமே ஊழியர்களை நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். அரசு உத்தரவிற்கு எதிராக நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த தொழிலாளர் முறையில் புகுத்தக்கூடாது. பல ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். 

அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம்,  பொதுக் கட்டுமான வட்டங்களில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெற்ற தர்ணாவிற்கு கிளை தலைவர் எம்.ஆர்.பெரியசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் எச்.ஸ்ரீராம் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார். மண்டல செயலாளர் சி.ஜோதிமணி மற்றும் பலர் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கீழ்பவானி வாய்க்காலில் நீர் கசிவு: அமைச்சர், ஆட்சியர் ஆய்வு; 2 நாளில் தற்காலிக தீர்வு

கீழ்பவானி வாய்க்காலில் நீர் கசிவு: அமைச்சர், ஆட்சியர் ஆய்வு; 2 நாளில் தற்காலிக தீர்வு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த நல்லாம்பட்டி செந்தாம்பாளையம் குளம், ஒட்டங்காடு பகுதியில் கரையை ஒட்டியுள்ள கீழ்பவானி (எல்பிபி) வாய்க்காலில் நீர் கசிவு ஏற்பட்டு, வாய்க்காலிற்கு கீழ்பகுதியில் செல்லும், மழைநீர் வடிகாலில் தண்ணீரானது வெளியேறி வருகிறது.
இதுகுறித்து, தகவலறிந்து வந்த நீர்வளத்துறை அதிகாரிகள், கசிவு ஏற்பட்டுள்ள இடத்தை ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, அங்கு நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, கீழ்பவானி வாய்க்காலில் அனைத்து இடங்களிலும் நடைபெற்ற பராமரிப்பு பணிகள் நன்றாக நடந்துள்ளது. எந்த பிரச்சனையும் இல்லை. தற்போது கசிவு ஏற்பட்டுள்ள பகுதி மிக பழமையான பகுதி. சில காரணங்களால் இப்பகுதியை சீரமைக்கும் பணி இந்தாண்டு எடுக்கப்பட முடியவில்லை. அடுத்தாண்டு பணிகள் மேற்கொள்வதற்கான திட்டம் உள்ளது.

இந்தாண்டு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வந்ததால், முழுமையான தண்ணீர் வந்த பிறகு இடையிலே பிரச்சனை ஏற்பட்டால், தண்ணீர் நிறுத்தப்பட்டு பணிகளை முடித்து தான் கொண்டு போகும் சூழ்நிலை ஏற்படும். தற்போது கசிவு ஏற்பட்டுள்ள இடத்தை ஆட்சியர் மற்றும் விவசாயிகளுடன் சேர்ந்து பார்வையிட்டுள்ளோம்.

கசிவு ஏற்பட்டுள்ள இடத்தில் தற்காலிக நடவடிக்கை எடுப்பதற்கான ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்குள் மீண்டும் தண்ணீரை திறந்து விடும் வகையில் இந்த பணிகள் முடிக்கப்படும் என கருதுகிறோம். இந்த பிரச்சனையை நிரந்தரமாக சரிசெய்ய 15 நாட்கள் ஆகும் என்பதால், தற்போது தற்காலிக பணிகள் நடத்தப்பட்டு பாசனத்திற்கு தேவையான தண்ணீர் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்த முறை தண்ணீர் திறக்கும் போது இதுபோன்ற பிரச்சனைகள் இல்லாத வகையால் முறையாக திட்டமிட்டு தண்ணீர் திறக்கப்படும். கீழ்பவானி வாய்க்காலில் மற்ற இடங்களில் எந்த பிரச்சனையும் இல்லாமல் உள்ளது. ஏதேனும் ஏற்பட்டால் அதனை சரிசெய்யப்படும். தற்போது ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் பணிகள் நிறைவு பெற்று தண்ணீர் திறக்கப்படும்.

கூடுதல் நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தால், அணையில் தண்ணீர் இருப்பு பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். பேட்டியின் போது, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் முருகேசன் (கோவை மண்டலம்), கண்காணிப்பு பொறியாளர் கோபி (நீர்வளத்துறை, ஈரோடு), செயற்பொறியாளர் திருமூர்த்தி உட்பட தொடர்புடைய துறை உயர் அலுவலர்கள், விவசாயிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
தாழ்த்தப்பட்ட நபரின் இறைச்சிக் கடையை முன் அனுமதியின்றி அடித்து நொறுக்கிய அரசுத்துறை அலுவலர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக அதிகார துஷ் பிரயோகம் செய்த வாழப்பாடி பேரூராட்சி அரசு அதிகாரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா ???????????

தாழ்த்தப்பட்ட நபரின் இறைச்சிக் கடையை முன் அனுமதியின்றி அடித்து நொறுக்கிய அரசுத்துறை அலுவலர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக அதிகார துஷ் பிரயோகம் செய்த வாழப்பாடி பேரூராட்சி அரசு அதிகாரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா ???????????

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

வேலியே பயிரை மேயும் கதை. சேலம் வாழப்பாடியில் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த நபரின் இறைச்சி கடையை அடித்து நொறுக்கிய E.O கணேசன் என்பவர். E.O. க்கு லஞ்சம் தர மறுத்ததால் காவல்துறையினர் ஒத்துழைப்புடன் அட்டூழியம்........

சேலம் மாவட்டம் வாழப்பாடி அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர் வினோத். இவர் அதே பகுதியில் வாழப்பாடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் இறைச்சி கடையை நடத்தி வருகிறார். அதே பகுதியில் பஞ்சாயத்திற்கு சொந்தமான இடத்தில் பல்வேறு கடைகளும் இயங்கி வருகின்றன. சேலம் மாவட்டம் வாழப்பாடி E.O. கணேசன் என்பவர் கால் புணர்ச்சியின் காரணமாக மேற்கண்ட சமுதாயத்தை சார்ந்தவர் தொடர்ந்து இறைச்சிக்கடை நடத்தக் கூடாது என்பதற்காக பொய்யான புகார் மனு என்பதை வைத்துக்கொண்டு நேற்று மாலை எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் காவல்துறை பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட இறைச்சி கடைக்கு சென்று அவர் தனது அதிகாரத்தை பிரயோகம் செய்து கடையை அடித்து நொறுக்கி உள்ளார். 
ஒரு அரசு அலுவலருக்கு கடையை காலி செய்ய சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரிடம் நோட்டீஸ் வழங்க வேண்டும் அல்லது ஜப்தி செய்ய வேண்டும் இது அரசு விதிமுறை
அரசு அதிகாரத்தை யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் சம்மந்தப்பட்ட E.O. கணேசன் மேற்கொண்ட இந்த சம்பவம் வாழப்பாடி மட்டுமல்ல சேலம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முறையாக பாதுகாப்பு வழங்க வேண்டிய சேலம் வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகம் அரசு விதிமுறைகளை எல்லாம் காட்டில் பறக்க வைத்து விட்டு யாரோ ஒருவர் தூண்டுதலின் பேரில் E.O. கணேசன் என்பவர் அங்குள்ள மற்ற கடைகளுக்கெல்லாம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் சம்பந்தப்பட்ட பட்டியல் இனத்தைச் சார்ந்த வினோத் என்பவரது இறைச்சி கடைக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறை பாதுகாப்புடன் தடையை அகற்றி உள்ளார் அதாவது துவம்சம் செய்துள்ளார்..
இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பின் மாநில துணை செயலாளரும், தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் முதன்மை ஒருங்கிணைப்பாளருமான சரஸ்ராம் ரவி, நம்முடைய கூறுகையில், இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த சம்பவம் தொடர்பாக சேலம் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், சம்பந்தப்பட்ட பட்டியல் இனத்தைச் சார்ந்த வினோத் என்பவர் அதே பகுதியில் தொடர்ந்து இறைச்சி கடை நடத்த பேரூராட்சி நிர்வாகம் பாதுகாப்பு வழங்க வேண்டும் மற்றும் அடித்து நொறுக்கப்பட்ட பட்டியல் இன சமுதாயத்தைச் சேர்ந்த வினோத் என்பவரின் இறைச்சி கடைக்கு உண்டான நஷ்ட ஈடை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனை வாழப்பாடி பேரூராட்சி நிர்வாகம் ஏற்க தவறும் பட்சத்திலும் அல்லது வழங்க மறுக்கும் பட்சத்திலும் கூடிய விரைவில் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பை சேர்ந்த அத்தனை நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் போராட்டம் விரைவில் வாழப்பாடியில் நடக்கும் என்றும் அதுவும் பேரூராட்சி நிர்வாக அலுவலகத்திற்கு முன்பாகவே நடக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார் சரஸ்ராம் ரவி.
உடன் பாதிக்கப்பட்டவர் உட்பட அமைப்புகளின் சட்ட ஆலோசகர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் என பலரும் உடன் இருந்தனர்.