திங்கள், 14 ஜூலை, 2025

ஈரோட்டில் நாவலடியான் பியூல்ஸ் நிறுவனத்தின் புதிய பெட்ரோல் பங்குகள் உதயம்

ஈரோட்டில் நாவலடியான் பியூல்ஸ் நிறுவனத்தின் புதிய பெட்ரோல் பங்குகள் உதயம்


ஈரோட்டில் நாவலடியான் பியூல்ஸ் நிறுவனத்தின் சார்பில் புதிய பெட்ரோல் பங்குகள் உதயமானது...

ஈரோடு ஆனைக்கல் பாளையம் பாளையம் ரிங் ரோட்டில் இன்று நாவலடியான் பியூல்ஸ் நிறுவனத்தின் சார்பில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களின் புதிய பெட்ரோல் பங்குகள் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இவ்விழாவில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ ஆர் ஈஸ்வரன் எம் எல் ஏ,  தமிழ்நாடு வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ பிரகாஷ், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்று பெட்ரோல் பங்குகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்,


இவ்விழாவில் ஈரோடு மாநகராட்சி மேயர் எஸ் நாகரத்தினம், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.கே சரஸ்வதி,  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் எஸ் சூரியமூர்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளர் கே.கே.சி பாலு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பிரபாகரன், அஇஅதிமுக எம் ஜி ஆர் மன்ற இளைஞர் அணி இணைச் செயலாளர் வி.பி சிவசுப்பிரமணியம், எம்.எஸ்.கே தங்கராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்,


நவலடியான் பியூல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் நவலடியான் ஆர்.வேலுச்சாமி, வி.பொன் விக்னேஷ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.


மேலும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் சி எஸ் சதீஷ்குமார் டி.டி சுரேஷ் சந்திரசேகர் தேஷ்முக், குமார் கவுரவ், பிரதீப் குமார் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் நிர்வாகிகள் பங்கஜ் மீனா, ஆர் ஷங்கர், வருண் யாதவ், ஜீவன் அவினாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வியாழன், 10 ஜூலை, 2025

சேலம் ஆத்தூர் புத்தரகவுண்டன் பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான முத்து மலை முருகன் கோவிலில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம்.

சேலம் ஆத்தூர் புத்தரகவுண்டன் பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான முத்து மலை முருகன் கோவிலில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் ஆத்தூர் புத்தரகவுண்டன் பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான முத்து மலை முருகன் கோவிலில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டன் பாளையத்தில் உலகிலேயே அதிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோவில் அமைந்துள்ளது.  விழுப்புரம் மாவட்டத்தில் இன்று அதிமுக பொதுச் செயலாளரும்,  சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மன எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்திற்காக சென்றார். அப்பொழுது வழியல் முத்துமலை முருகன் கோவிலில் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் பூரண கும்ப மரியாதை அளித்து கோவிலில் தீபாராதனை பெற்று சுவாமி தரிசனம் செய்தார். அப்பொழுது அவருக்கு வெள்ளி வால் வழங்கப்பட்டது. வால் கையில் ஏந்தி கோவிலில் வலம் வந்து 146 அடி உயரம் கொண்ட முருகன் சுவாமியின் மேலே சென்று வேலுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபாடு செய்த அவர்,  மீண்டும் தனது பயணத்தை விழுப்புரத்திற்கு தொடங்கினார்.  அதிமுக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

புதன், 9 ஜூலை, 2025

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா.

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா.

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக  கல்லூரியின் ஸ்ரீ வள்ளியப்பா கலையரங்க கூடத்தில் நடைபெற்றது. கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக நடைபெற்ற இந்த விழாவிற்கு கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். கல்லூரியின் துணைத் தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா மற்றும் தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் காதர் நவாஸ் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவேற்று பேசினார்.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த ராம் குமார் சேசு எழுத்தாளர் பெற்றோர் மாணவர்களிடையே சிறப்புரை நிகழ்த்தினார். பள்ளி காலத்தில் இருந்து கல்லூரி வாழ்க்கைக்கு அடி எடுத்து வைக்கும் சிறப்பினையும், மாணவர்கள் எவ்வாறு தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் குறித்து பேசினார். கல்லூரியின் தலைவர் திரு .சி.வள்ளியப்பா அவர்கள் பேசும் பொழுது மாணவர்கள் கல்லூரி பருவத்தை நன்முறையில் அமைந்து கொண்டு பெற்றோர்களை பேணி பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
மேலும் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மாநிலக் கல்வி பிரிவில் பயின்று 550 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கும், மத்திய கல்வியில் (சிபிஎஸ்சி) பயின்று 450க்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 இந்த நிகழ்வின் நிறைவாக கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் முனைவர். எஸ். மோகனப்பிரியா அவர்கள் நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சோனா நிறுவனங்களின் இயக்குனர் டாக்டர்.கார்த்திகேயன், முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டு பெருமை சேர்த்தனர்.

செவ்வாய், 8 ஜூலை, 2025

கோட்டை அருள்மிகு ஸ்ரீ  பெரிய மாரியம்மன் கோவில் திருத்தேர் வெள்ளோட்டம். ஏராளமான மக்கள் சக்தி கோசமிட்டு வடம் பிடித்து இழுத்தனர்.

கோட்டை அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் திருத்தேர் வெள்ளோட்டம். ஏராளமான மக்கள் சக்தி கோசமிட்டு வடம் பிடித்து இழுத்தனர்.

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

கோட்டை அருள்மிகு ஸ்ரீ  பெரிய மாரியம்மன் கோவில் திருத்தேர் வெள்ளோட்டம். ஏராளமான மக்கள் சக்தி கோசமிட்டு வடம் பிடித்து இழுத்தனர்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ  கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். எட்டு பட்டிகளுக்கு காவல் தெய்வமாக விளங்கும் சேலம் கோட்டை பெரியமாரி திருவிழாவானது 22 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில்  உற்சவ அம்மன் திருவீதி உலா கொண்டு செல்ல தேர் இல்லாதது பக்தர்களிடையே வருத்தம் இருந்தது. திருக்கோவிலில் தேரோட்டம் நடத்த பக்தர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 32 அடி நீளம், 16 அடி அகலம் கொண்டு ஆறு சக்கரங்களுடன் திருத்தேர் செய்யும் பணி தொடங்கப்பட்டது.  ஆடி திருவிழா தொடங்குவதற்கு ஒரு மாத காலமே உள்ள நிலையில் திருத் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், வெள்ளோட்டம் நடத்த அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு எடுத்து இன்று பல்வேறு நதிகளில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் வேள்விகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து இன்று சிறப்பு கேள்வி நடந்தது இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பால் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி வண்ண மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.  அர்ச்சனைகள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வேள்வியில் பூஜை செய்த கலச நீர் ஆனது தேரில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  பின்னர் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க தேருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்ட பின்னர் திருத்தேர் வெள்ளோட்டத்தை தமிழக  சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்  மற்றும் சேலம் மாநிலங்களவை உறுப்பினர் எஸ் ஆர் சிவலிங்கம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சக்தி கோஷங்கள் விண்ணை பிளக்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு  கோலாட்டம் மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் சிவன் பார்வதி முருகன் விநாயகர் வேடம் தரித்து நடனம் ஆடினர். இந்த தேரானது முதல் அக்கரகாரம் தேர்வீதி இரண்டாவது அக்ரஹாரம் பட்டை கோவில் சின்ன கடைவீதி கன்னிகா பரமேஸ்வரி கோவில் வழியாக மீண்டும் திருக்கோவிலை வந்தடைந்தது. தேரை இழுக்கும்போது பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என கோஷங்களை எழுப்பி தேரை இழுத்தது பரவசத்தை ஏற்படுத்தியது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி மாணிக்கம் மற்றும் சேலம் ஸ்ரீ கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோவில் அறங்காவலர் சக்திவேல் மற்றும் செயல் அலுவலர் உட்பட  இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திமுக அயலக அணியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் சேலம் நேரு கலையரங்களில் நடைபெற்றது.

திமுக அயலக அணியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் சேலம் நேரு கலையரங்களில் நடைபெற்றது.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு

திமுக அயலக அணியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் சேலம் நேரு கலையரங்களில் நடைபெற்றது.

திமுக அயலக அணியின் மாநில செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கழக துணை பொது செயலாளர் திருச்சி சிவா மற்றும் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன், அயலக அணி மாநில தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம் மாநிலத் துணைச் செயலாளர்ரும் சேலம் அஸ்தம்பட்டி மண்டலகுழு தலைவருமான திருமதி உமாராணி உள்ளிட்டோ கலந்து கொண்டு அயலக அணி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தில் அமைச்சர்  ராஜேந்திரன் பேசும் போது,.
பாஜகவிற்கு தூதி பாடும் அதிமுகவிற்கு பதில் கொடுக்கும் பணியை முழுமையாக செய்து கொண்டு இருக்கும் திருச்சி சிவாவிற்கு உறுதுணையாக இருந்து வரும் 2026 ஆம் ஆண்டு மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ஆட்சி அமைய அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிட வேண்டும் என்று பேசினார்.
கூட்டத்தில் திமுக துணை பொது செயலாளர் திருச்சி சிவா பேசும் போது, பெயருக்கு பின்னால் ஜாதி பெயரையும், மதத்தின் பெயரையும் போடாமல் படிப்புகளை போடும் நிலையை உருவாக்கியது திராவிட ஆட்சிகள் தான், இந்த தேர்தல் போர் தத்துவ போராக உள்ளது என்றும், ஒன்றிய அரசு மாநிலத்தின் உரிமையை பறிக்கிறது, மொழியை நசுக்குகிறது இதனை தடுக்க வேண்டும் என்று பேசினார்.
இந்த தேர்தலில் அனைவரும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள இருளை நீக்கும் தீ குச்சிகளாக இருக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று கூறிய அவர் கழக தலைவர் கூறும் செயல்களை செய்யும் தீ குச்சியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
திமுகவில் உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், இந்த தேர்தலில் அயலக அணியினரின் பங்கு என்ன என்பதை புரிந்து செயல்படுங்கள் என்றும் குறிப்பாக ஒவ்வொரு வாக்குசாவடிகளில் உள்ள வாக்களர்களில் 30 சதவிகித சேர்த்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கூறியதை நிறைவேற்றும் வகையில் இந்த ஆட்சியின் சாதனைகளை, திட்டங்களை எடுத்துரைத்து செல்லும் கழக குழுவினருடன் சென்று, வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு என்ன உதவியாக இருந்தாலும் திமுக உதவும் என்று நம்பிக்கையை கொடுங்கள் என்று கூறினார். வெளிநாட்டில் உள்ள தமிழர்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உருவாக்கி உள்ளார் என்றும் குறிப்பாக உக்ரேன் போரின் போது அங்குள்ள தமிழ்நாட்டின் மாணவர்களை தமிழகத்திற்கு அழைத்து வர தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகளை எடுத்துரைத்த அவர், அவரவர் தங்கள் பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் கழக நிர்வாகிகளும் திமுக வெற்றி பெற உழைக்க வேண்டும் என்றும் உறுப்பினர்களை சேர்க்கும் பட்டாளத்தில் சிப்பாய்களாக சேர்த்து பணியாற்றிட வேண்டும் என்றும் அதற்கான உறுதியை ஏற்க வேண்டும் என்றும் நமது எதிர்பவர்கள் பலமானவர்கள் அல்ல ஆனால் மிகவும் மோசமனவர்கள் என்பதை நினைவில் கொண்டு பணியாற்றிட வேண்டும் என்றார்.

ஞாயிறு, 6 ஜூலை, 2025

திமுகவையும் பாஜகவையும் தனது எதிரி என குறிப்பிடும் விஜய், அதிமுகவை மட்டும் தனது எதிரி என்று சொல்லாதது ஏன்? என ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுகவையும் பாஜகவையும் தனது எதிரி என குறிப்பிடும் விஜய், அதிமுகவை மட்டும் தனது எதிரி என்று சொல்லாதது ஏன்? என ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

திமுகவையும் பாஜகவையும் தனது எதிரி என குறிப்பிடும் விஜய், அதிமுகவை மட்டும் தனது எதிரி என்று சொல்லாதது ஏன்? என ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான், திமுக அரசை எந்த மாநிலத்தோடும் ஒப்பிட முடியாது சர்வதேச நாடுகளுடன்தான் ஒப்பிட முடியும்; ஏனெனில் திமுக அரசின் ஆட்சி அந்த அளவிற்கு உள்ளது. எனவே 2026ல் மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்றார். மேலும், 11 தேர்தல்களில் தோல்வியை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, தற்போது 12 ஆவது தோல்வியை சந்திக்க நாளை துவக்கமாவதாவும், முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை துவங்குவதால் வெற்றி பெற்றுவிடலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி தப்பு கணக்கு போடுவதாகவும் தெரிவித்த அவர் எடப்பாடி பழனிச்சாமியின் குடுமி அமித்சாவின் கையில் உள்ளது என்றார். 
திமுகவையும் பாஜகவையும் தனது எதிரி என குறிப்பிடும் விஜய், அதிமுகவை மட்டும் தனது எதிரி என்று சொல்லாதது ஏன் ? என்று கேள்வி எழுப்பிய அவர், எம்ஜிஆரை போன்று வெற்றி பெற்று விடலாம் என விஜய் கனவு காண்கிறார்; எம்ஜிஆர் நடிகராக இருந்தபோது திமுகவில் பொருளாளராக இருந்து கட்சி பணியாற்றினார். ஆனால் பனையூரை விட்டு வெளியே வராத விஜயை எம்ஜிஆர் - உடன் ஒப்பிட கூடாது என்றார்.
இஸ்லாமியர்களின் தியாக திருநாளில் இறைத்தூதரின் பேரன்களுக்காக இஸ்லாமிய இளைஞர்களின் தியாகத்தை போற்றிப் பாராட்டிய சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஷபி.

இஸ்லாமியர்களின் தியாக திருநாளில் இறைத்தூதரின் பேரன்களுக்காக இஸ்லாமிய இளைஞர்களின் தியாகத்தை போற்றிப் பாராட்டிய சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஷபி.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

இஸ்லாமியர்களின் தியாக திருநாளில் இறைத்தூதரின் பேரன்களுக்காக இஸ்லாமிய இளைஞர்களின் தியாகத்தை போற்றிப் பாராட்டிய சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஷபி.

இஸ்லாமியர்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மொஹரம் திருநாள் உலக இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்பட்டு  வருகிறது. இறைதூதர் நபிகள் நாயகத்தின் பேரர்களான ஹசேன் மற்றும் உசேன் கொல்லப்பட்டதை நினைவு கூறும் விதமாகவும், அவர்களது தியாகத்தை போற்றும் விதமாக கொண்டாடப்படும் இந்த திருநாளையொட்டி சேலத்தில் இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்பட்டது. தியாகத் திருநாளாக கருதப்படும் இந்த மொகரம் விழாவையொட்டி சேலம் கோட்டை சுன்னத் ஜமாத் சார்பில் புலி ஆட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் கோட்டை பகுதியில் உள்ள ஃபிரண்ட்ஸ் மஹாலில் துவங்கிய இந்த புலி ஆட்ட நிகழ்வில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புலிவேடமிட்டு மேளதாளம் இசைக்கு ஏற்றவாறு புலி நடனமாடி இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் பேரர்களின்  தியாகத்தை போற்றினார். கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த புலி நடன ஊர்வலமானது அந்த பகுதியில் உள்ள மிகச்சிறந்த சமூக செயற்பாட்டாளர் தன்னிறன் பாராமல் பொதுநலன் கருதி ஏழை எளிய இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமல்லாமல் ஏனைய மக்களுக்கும் இதுவரை சேவை செய்து வரும் கோட்டை பகுதியை சேர்ந்து சிறந்த சமூக செயற்பாட்டாளர் ஷபி அவர்கள் வீட்டின் அருகில் சென்ற இந்த திருநாள் ஊர்வலத்தில் பங்கேற்ற புலி வேடம் தரித்து ஷல் அல்லாவின் பேரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் நடனமாடிய சிறியவர் முதல் பெரியவர்களுக்கு தன்னாலான மரியாதையை செலுத்தி மகிழ்ந்தார் உடன் அவரது குடும்பத்தார் அனைவரும் உடன் இருந்தனர்.