புதன், 16 ஜூலை, 2025

ஆடி முதல் நாளையொட்டி சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு.....ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்..

ஆடி முதல் நாளையொட்டி சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு.....ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்..

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

ஆடி முதல் நாளையொட்டி சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு.....ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்..

தமிழ் மாதங்களில் வரும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.இதனையொட்டி தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலையங்களில் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அதிலும் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடைபெறும் ஆடிபெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மாதத்தில் ஆடி-1, ஆடி-18, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி என அடுத்தடுத்து விஷேசங்கள் வரும். இதுபோன்ற நாட்களில் கோவில்களில் விஷேச பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று ஆடி-1 என்பதால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆளையங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குறிப்பாக சேலத்தில் உள்ள 8 பட்டிகளுக்கும் காவல் தெய்வமாக விளங்கி வரும், சேலத்தில் பிரசித்திபெற்ற காவல் தெய்வமாக விளங்கி வரும் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில், இன்று காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அம்மனுக்கு உகந்த மாதம் என்ற ஐதீகம் உள்ளதால் இன்று காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபாட்டு சென்றனர். வரும் 22-ம் தேதி அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் ஆடிபெருவிழா தொடங்க உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விழாவிற்கான ஏற்பாட்டு பணிகளை கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
ஆடி மாதத்தின் முதல் நாளையொட்டி சேலத்தில் தேங்காய் சுடும் திருவிழா கோலாகல கொண்டாட்டம். திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் குடும்பத்தாருடன் தேங்காய் சுட்டு கொண்டாட்டம்.

ஆடி மாதத்தின் முதல் நாளையொட்டி சேலத்தில் தேங்காய் சுடும் திருவிழா கோலாகல கொண்டாட்டம். திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் குடும்பத்தாருடன் தேங்காய் சுட்டு கொண்டாட்டம்.

சேலம்,
S.K.சுரேஷ்பாபு.

ஆடி மாதத்தின் முதல் நாளையொட்டி சேலத்தில் தேங்காய் சுடும் திருவிழா கோலாகல கொண்டாட்டம். திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் குடும்பத்தாருடன் தேங்காய் சுட்டு கொண்டாட்டம்.

ஆடி மாதம் முதல் நாளையொட்டி, தேங்காய் சுடும் திருவிழா சேலம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த பண்டிகை கொண்டாடப்படும் நிகழ்ச்சி மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. அதற்மத்துக்கும், தற்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் முதல் தேதி தொடங்கி  18 நாட்கள் நடைபெற்று ‘‘ஆடி-  18 அன்று முடிவுக்கு வந்தது. இந்த போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி முதல் நாள்  மக்கள் அனைவரும் வேண்டி அதற்காக விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்கிறார்கள்.இதுபோல் தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாக படைத்து வழிபட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது. ஆண்டாண்டு காலமாக அந்த பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வகையில் சேலம் மாவட்டத்தில் ஆடி மாதப் பிறப்பன்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் சேலம் மாநகராட்சியின் ஒன்பதாவது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் சிறந்த சமூக சேவகருமான தெய்வலிங்கம் பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்களுடன் தேங்காய் சுட்டு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். 
இதேபோல  அரிசிபாளையம், கோட்டை அண்ணா நகர், அம்மாபேட்டை,சாமிநாத புரம், கிச்சிபாளையம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  இன்று  தேங்காய் சுடும் பண்டிகை சிறுவர், சிறுமிகளின் உற்சாகத்துடன் வீடுகள் தோறும் கொண்டாடப்பட்டது. துளையிட்ட தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல், எள், ஏலக்காய் ஆகியவை கலந்த கலவையை இட்டு, நீண்ட ஒரு முனை கூராக சீவப்பட்ட அழிஞ்சி மர குச்சியில் அந்த தேங்காயை சொருகுவார்கள். பின்னர் அந்த குச்சியை சுற்றி மஞ்சளை பூசி துளையை மூடுவர். அதைத் தொடர்ந்து வீட்டு வாசலில் ஒரு இடத்தில் நெருப்பு மூட்டி,அந்த நெருப்பில் குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை காட்டி சுடுவர். ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் தேங்காய் சுடப்பட்டபின் அதை அருகில் உள்ள பிள்ளையார் கோவில்களுக்கு எடுத்துச்சென்று வழிபடுவதும், பின்னர் தேங்காயை வீட்டிற்கு எடுத்துவந்து, அதை உடைத்து உள்ளே இருந்த கலவை உணவை உற்றார், உறவினர்களுடன் உண்டு மகிழ்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது. சிலர் வீட்டில் உள்ள சாமி படங்களுக்கு முன்பு படைத்து, பூஜைகள் செய்துவிட்டு சாப்பிடுவார்கள்.
இப்படி நெருப்பில் பக்குவப்பட்ட தேங்காயும் அதனுள்ளே இருக்கும் பூரணமும் மிகவும் சுவையாக இருக்கும். ருசி பார்த்தவர்கள் இதனை உணர்வார்கள்.

14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி. முதன்முறையாக சேலம் மாவட்ட அணியினர் முதல் பரிசை வென்று சாதனை.

2025-2026 ஆம் ஆண்டிற்கான 14 வயதுக்குட்பட்ட மாவட்டங்களுக்கு இடையேயான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் 
கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றன. இதன் இறுதிப்
போட்டியில் சேலம் மாவட்ட அணியும் காஞ்சிபுரம் மாவட்ட அணியும் மோதின. சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சேலம் மாவட்ட அணி முதன் முதலாக கோப்பையை வென்றது. முதலில் விளையாடிய சேலம் மாவட்ட அணி 1st Innings 239-7 ( 90 Overs ) காஞ்சிபுரம் மாவட்ட அணி 70-10 (43.2 Over) 2nd Innings சேலம் மாவட்ட அணி 156-1 DEC ( 26 Overs ) காஞ்சிபுரம் மாவட்ட அணி 96-9 (40 Overs). கோப்பையை வென்ற சேலம் மாவட்ட அணி வீரர்கள் சேலம் ரயில் நிலையம் வந்தடைந்தனர். அவர்களை வரவேற்க மாவட்ட செயலாளர் பாபு குமார் தலைமையில் சேலம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தலைவர்: திரு. R பிரகாஷ் செயலாளர்: திரு. V பாபு குமார் துணை செயலாளர்: திரு. M ராஜு துணைத் தலைவர்: திரு. M.V ராஜ்குமார் நிர்வாக குழு உறுப்பினர்கள் திரு. D.S. சந்தோஷ் குமார திரு. M.V. ராஜ்குமார் திரு. D. சுதர்சன்
திரு. வசந்த் ராஜ் திரு. துரை
தேர்வாளர்கள் திரு.குமார் திரு.முரளி திரு. சங்கரநாராயணன்
திரு.சரவணன் பயிற்சியாளர்கள்
திரு. சாரதி திரு. ரமேஷ் உள்ளிட்ட ஒரு கலந்து கொண்டு வெற்றி பெற்ற சேலம் மாவட்ட அணி வீரர்களை வாழ்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

செவ்வாய், 15 ஜூலை, 2025

பாட்டாளி மக்கள் கட்சியின் 37 ஆம் ஆண்டு தொடக்க விழா. மூவர்ண கொடியினை ஏற்றி வைத்து கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்கிறது பாமக சட்டமன்ற உறுப்பினர்.

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 36 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 37 ஆம் ஆண்டு தொடக்க விழா. இந்த நிகழ்வை தமிழகம் முழுவதும் உள்ள பாமகவினர் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர மாவட்ட பாமக அலுவலகத்தில் மூவர்ண கொடியினை ஏற்றி நிர்வாகிகள்  அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார் சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள். இதனை அடுத்து, பாட்டாளி சொந்தங்களுக்கு மருத்துவர் ஐயா அவர்களின் என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே அன்பு மடல் ஒரு லட்சம் பிரதிகளை சேலம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக எம்.பி சதாசிவம் அவர்கள் வெளியிட சிவதாபுரம் PV. மகாதேவன் (PV மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர்) மாவட்ட துணை செயலாளர் பெற்றுக்கொண்டார்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி பூம்புகாரில் நடைபெறும் மகளிர் மாநாடு குறித்து மாநகர மாவட்ட  நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் கதிர்.இராஜரத்தினம், மாநில தேர்தல் பணிக்குழுத்தலைவர் MP சதாசிவம்,மாவட்டதலைவர், கோவிந்தன், மாவட்ட அமைப்பு செயலாளர் சேகர், மாவடட்ட துனை செயலாளர் ராஜமாணிக்கம், பகுதி செயலாளர் சின்னசாமி, பகுதி தலைவர் பூபதி, மாவட்ட மகளிரணி தங்கம், கிருஷ்ணாம்பாள்,மாநில உழவர் பேரியக்க தலைவர் செந்தில், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கல்வித் தந்தையின் 123 வது பிறந்தநாளில்,   சேலம் பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் மாலை அணிவித்து மரியாதை.

தமிழக முன்னாள் முதலமைச்சரும் கல்வி தந்தையுமான கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா அனைத்து தரப்பினராலும் நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் கமலா ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜரின் திருஉருவ சிலைக்கு சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சேலம் மாநகர் மாவட்ட பாமக தலைவர் இராசரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் கல்விக்கண் திறந்த கர்மவீரரின் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்வில் அவரைப் போற்றி பல்வேறு கோஷங்களையும் உறுப்பின. நிகழ்வில், கோவிந்தன்  உழவர் பேரை இயக்க தலைவர் செந்தில் மாவட்டம் அமைப்பு தலைவர்  சேகர் மாநில இளைஞரணி துணைத் தலைவர் அண்ணாமலை மாவட்ட வன்னியர் சங்க செயலாளர்பூபதி மாவட்ட துணை செயலாளர் சுமன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் தங்கம் மாவட்ட தேர்தல் பணிக்குழு செயலாளர் விஜயகுமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயகுமார் அம்மாபேட்டை பகுதி செயலாளர் வால் காடு  காடு கார்த்தி மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர்   தலைவர் காஜாமீதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திங்கள், 14 ஜூலை, 2025

கல்வித் தந்தையின் 123 வது பிறந்தநாளில்,  தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் நாகா அரவிந்தன் மாலை அணிவித்து மரியாதை.

தமிழக முன்னாள் முதலமைச்சரும் கல்வி தந்தையுமான கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா அனைத்து தரப்பினராலும் நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் கமலா ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜரின் திருஉருவ சிலைக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனரும் ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவர் மான டாக்டர் நாக அரவிந்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைப்புகளின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

கல்வித் தந்தையின் 123 வது பிறந்தநாளில், தேசிய மக்கள் கட்சியின் சேலம் மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், கல்வி தந்தையுமான கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா இன்று அனைத்து தரப்பினராலும் நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் கமலா ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள கர்மவீரர்  காமராஜரின் திருஉருவ சிலைக்கு தமிழ்நாடு தேசிய மக்கள் கட்சியின் சார்பில் கல்வி தந்தைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது அந்த கட்சியின் மாநில செயலாளர் ராம்ஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாநில தலைவர் ஸ்ரீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருவரும் ஒரு சேர்ந்தவாறு கர்மவீரரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
இதனை அடுத்து அதே பகுதியில் தமிழ்நாடு தேசிய மக்கள் கட்சியின் சேலம் மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழாவும் நடைபெற்றது. சேலம் மாவட்ட தலைமை அலுவலகத்தினை அந்த கட்சியின் மாநிலத் தலைவர் சீனிவாசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து கட்சியில் பணிகளையும் செயல்பாடுகளையும் துவக்கி வைத்தார். மேலும் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் கிழக்கு மாவட்ட தலைவர் தர்மன் விவசாய அணி மாவட்ட தலைவர் ராமன் விவசாய அணியின் மாவட்ட பொதுச் செயலாளர்கள் விக்னேஷ் செல்வராஜ் சித்தேஸ்வரன் சரவணன் உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.