புதன், 23 ஜூலை, 2025

மேட்டூர் நகராட்சியில் 80 அடி சாலையில் உள்ள ஆக்கிரமப்புகளை அகற்ற தவறும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி தலைமை செயலகம் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் மக்கள் மையம் எச்சரிக்கை.

மேட்டூர் நகராட்சியில் 80 அடி சாலையில் உள்ள ஆக்கிரமப்புகளை அகற்ற தவறும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி தலைமை செயலகம் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் மக்கள் மையம் எச்சரிக்கை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

மேட்டூர் நகராட்சியில் 80 அடி சாலையில் உள்ள ஆக்கிரமப்புகளை அகற்ற தவறும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி தலைமை செயலகம் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் மக்கள் மையம் எச்சரிக்கை. 

சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி முல்லை நகர் மற்றும் ஜீவா நகர் பகுதிகளில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் வாசித்து வருகின்றனர். அரசு வழிகாட்டுதலின்படி இங்குள்ள 80 அடி சாலை கடந்த 50 வருட காலமாக மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், தற்போது பண பலம் மற்றும் அரசியல் பலம் கொண்ட பத்துக்கும் மேற்பட்ட பிரமுகர்களால் சம்பந்தப்பட்ட இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அந்த இடத்தில் வணிக வளாகங்கள் கட்டி தனிநபர் வருமானம் செய்து வருகின்றனர். மேலும் அங்குள்ள காலியிடங்களில் கம்பி வேலிகள் அமைத்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர் ஆக்கிரமிப்பாளர்கள். இது சம்பந்தமாக முல்லை நகர் மற்றும் ஜீவா நகர் பகுதி மக்கள் வலக்கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை அரசு துறை அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கோட்டை மைதானத்தில் சம்பந்தப்பட்ட பகுதி மக்களால் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அம்பேத்கர் மக்கள் மையத்தின் நிறுவன தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உரிமையாளர்கள் சங்க தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்த ஆர்ப்பாட்டத்தில், இந்த ஆக்கிரமிப்பு குறித்து குடியிருப்பு வாசிகளான அசோக்குமார் தியாகராஜன் பார்த்திபன் மற்றும் அன்புநாதன் ஆகியோர் தொடர்ந்து வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி அரசு நடவடிக்கை மேற்கொண்டு அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி அரசு நிலத்தை அரசே பாதுகாக்குமாறு மேட்டூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் சார் ஆட்சியர் மனு மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டி பல்வேறு கோஷங்களை எழுப்பிய அவர்கள், தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இந்த பிரச்சனையில் தலையிட்டு ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து சம்பந்தப்பட்ட இடத்தை மீட்க தவறும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சங்கத்தின் துணைத் தலைவர் மார்ட்டின் ஜோசப் அம்பேத்கர் மக்கள் மையம் மகளிர் அணி மாநில செயலாளர் பூங்கொடி மேட்டூர் நகர செயலாளர் சண்முகம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சங்கத்தின் செயலாளர் பார்த்திபன் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 22 ஜூலை, 2025

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம். சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம். சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம். சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு. 

தமிழக அரசின் சார்பில் மகளிர் நலன் உட்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதனை முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசின் திட்டங்கள் தொடர்பாக  விண்ணப்பித்த அனைவரும் பயன் பெற்று வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் தமிழக அரசின் சட்ட திட்டங்களில் விடுபட்டவர்களை இணைக்கும் விதமாகவும் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாகவும் மக்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால் கடந்த 15 ஆம் தேதி இந்த திட்டம் தமிழக முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் ஊரகப்பகுதியில் மட்டுமே நடைபெற்று வந்த தமிழக அரசின் இந்த திட்டமான மக்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் தற்பொழுது சேலம் மாநகர பகுதியில் இன்று தொடங்கியது. சேலம் அம்மாபேட்டை பகுதியில் நடைபெற்ற இந்த முகாம் துவக்க விழாவிற்கு சேலம் அம்மாபேட்டை மண்டல குழு தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் திருமதி பிருந்தா தேவி முன்னிலை வகித்த இந்த சிறப்பு முகாமில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சரும் சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சில மத்திய மாவட்ட திமுக செயலாளருமான வழக்கறிஞர் இராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழக அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற வகையில் துரை ரீதியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பொதுமக்களுக்கான தேவைகள் கோரிக்கைகளாக பெறப்பட்டன. முகாமினை ஆய்வு செய்து சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் இராஜேந்திரன் பெறப்படும் அணுக்கள் அனைத்திற்கும் விரைவில் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் அனைவரும் பயன் பெறுவீர்கள் என்ற நம்பிக்கையை ஊட்டியது அங்கு கூடியிருந்த மக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். 

மணலாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக முழுவதும் மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர்கள் நல சங்கத்தின் சார்பாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அந்த சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் கண்ணையன் சந்திரன், செல்வம் மாரியப்பன் மற்றும் ராஜாமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அந்த சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் பழனிச்சாமி கலந்துகொண்டு மணல் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை உரையாற்றினார். அப்போது, சேலம் மாவட்டத்தில் கட்டுமான தொழிலை பாதுகாக்க  நொரம்பு கிராவல், செம்மண், மண்பானை மண், கருங்கல் உள்ளிட்டவைகளுக்கு உடனடியாக பர்மிட் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார். 
இந்த ஆர்ப்பாட்டத்தில், தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட பொறுப்பாளர்கள் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சேலம் மத்திய மாவட்ட ஜே சி பி உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ஜேசிபி உரிமையாளர்கள் சங்கத்தினர் செங்கல் சூளை உரிமையாளர்கள் கட்டுமான பொருள் விற்பனையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திங்கள், 21 ஜூலை, 2025

தமிழக முதலமைச்சர் பூரண  குணம் பெற வேண்டி சேலத்தில் ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவிலில் டாக்டர் நாகா.  அரவிந்தன் சிறப்பு பூஜை.

தமிழக முதலமைச்சர் பூரண குணம் பெற வேண்டி சேலத்தில் ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவிலில் டாக்டர் நாகா. அரவிந்தன் சிறப்பு பூஜை.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழக முதலமைச்சர் பூரண  குணம் பெற வேண்டி சேலத்தில் ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவிலில் டாக்டர் நாகா.  அரவிந்தன் சிறப்பு பூஜை.

அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் அவர்கள் பூரண குணமடைய வேண்டி தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு மாநில தலைவர் நாகா ஆர்.அரவிந்தன் தலைமையில் சேலம் ராஜகணபதி திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து 108 தேங்காய் உடைத்து வழிபாடு செய்யப்பட்டது இதில் நிர்வாகிகள் முரளி, கேசவன், வெங்கடேஷ் பலர் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 20 ஜூலை, 2025

விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்ட எஸ்டிபிஐ கட்சியினருக்கு பாராட்டுக்கள்..!

விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்ட எஸ்டிபிஐ கட்சியினருக்கு பாராட்டுக்கள்..!


ஈரோடு மாவட்டம், கோபி அருகே சாலை விபத்தில் சிக்கி தவித்த இளைஞரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த எஸ்டிபிஐ கட்சியினர்..!

ஈரோடு - சத்தியமங்கலம் செல்லும் சாலையில் வெள்ளாளபாளையம் பிரிவு அருகே நேற்று மாலை ( 20.07.2025 ) இருசக்கர வாகனத்தில் வந்த கார்த்திக். வயது 27 என்ற இளைஞர் தீடீர் விபத்து ஏற்பட்டு  சுயநினைவின்றி மயக்க நிலையில் இருந்துள்ளார்,

இந்நிலையில், அந்த வழியாக வந்த கோபி தொகுதி செயலாளர் s. சர்ஜித் ரகுமான், நகர செயலாளர் M.கோபி யாசின், நகர செயற்குழு உறுப்பினர் 
M.முகம்மது யாசர் ஆகிய எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள், அந்த இளைஞரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்து உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டனர், 


விபத்தில் சிக்கிய கார்த்திக்-கின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததுடன், கோபிசெட்டிபாளையம் காவல்துறையினரின் முன்னிலையில் விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தையும் ஒப்படைத்துள்ளதாக எஸ்.டி.பி கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்,

மனிதநேயத்துடன் உயிர் காக்கும் இந்த உதவியை செய்த எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
விசைத்தறி தொழிலாளர்கள் கிட்னியை விற்கும் அவல நிலையை போக்க "மஞ்சள் பை" திட்டம்..!

விசைத்தறி தொழிலாளர்கள் கிட்னியை விற்கும் அவல நிலையை போக்க "மஞ்சள் பை" திட்டம்..!


விசைத்தறி தொழிலாளர்கள் கிட்னியை விற்கும் அவல நிலையை போக்க "மஞ்சள் பை" உற்பத்தி திட்டத்தை விசைத்தறிகள் மூலம் செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் ..!

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் வேலுச்சாமி செய்தி குறிப்பில் ...


தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்த படியாக,
இன்னும் சொல்லப்போனால், விவசாயத்துக்கு ஈடாக வேலைவாய்ப்பு வழங்கி வருவது நெசவுத் தொழில், இந்த நெசவுத் தொழிலில், விசைத்தறிகள் வாயிலாக, 20 லட்சத்துக்கு மேற்பட்ட நெசவாளர்களுக்கு நேரடியாகவும் 10 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்,

ஒரு நெசவாளிக்கு குடும்ப உறுப்பினர்கள் நான்கு முதல் ஐந்து என்று கணக்கிட்டால் தமிழகத்தின் ஆறு கோடி மக்கள் தொகையிள் 
ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகைக்கு நேரடியாகவும் 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகைக்கு மறைமுகமாகவும் வாழ்வாதாரம் வழங்கி வரும் இந்த விசைத்தறி தொழில், 


கொரோனா காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரை அழிவின் பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாலும், உலக பொருளாதாரத்தின் மந்த நிலை காரணங்களாலும், நாடா இல்லா நவீனமயமாக்கப்பட்ட தறிகளின் மூலம், குறைந்த நபர்களை வைத்து, அதிக உற்பத்தியை மேற்கொள்வதனால், ஏற்படும் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம், விசைத்தறி தொழிலை செய்பவர்களுக்கு ஏற்படும் தொழில் நஷ்டம், உள்ளிட்ட காரணங்களால், விசைத்தறிகளை பழைய இரும்புக்கு உடைத்து விற்கும் அவல சூழ்நிலைக்கு இந்த இரண்டு வருட காலமாக தள்ளப்பட்டு இருப்பதாலும்,

விசைத்தறி உரிமையாளர்களுக்கு உரிய லாபமும் கிடைக்காமல், நஷ்டம் அடைவதாலும், விசைத்தறி தொழிலாளர்களுக்கு, முழு வேலை வாய்ப்பு கிடைக்காமல், ஊதிய இழப்பு ஏற்படுவதால் குடும்பம் நடத்த கூட இயலாமல், குடும்பச் சுமையை சரி செய்வதற்காக, வாங்கிய கடன்களை அடைப்பதற்காக, உடம்பின் மிக முக்கிய உறுப்பாக கருதப்படும் கிட்னியை விற்கும் அவலம், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் நடந்திருப்பது, விசைத்தறி தொழில் எந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்து இருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. 

இதன் தாக்கம் மேலும் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால், விசைத்தறியாளர்களுக்கு, விசைத்தறி நெசவாளர்களுக்கு முழு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்ய வேண்டிய கடமை, மத்திய மாநில அரசுகளுக்கு உண்டு என்பதை உணர்ந்து, போர்க்கால அடிப்படையில், இந்த குற்றங்கள் மேலும் நடக்காமல் இருப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன்,

விசைத்தறி தொழிலை மேம்படுத்துவதற்காகவும்,  விசைத்தறிகளுக்கான தனி ரக ஒதுக்கீடு சட்டம், அரசு துறையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்குமான சீருடைகளை, விசைத்தறிகளும் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள், சுற்றுச்சூழலை காப்பதற்கு மஞ்சள் பைத்திட்டம், விசைத்தறிக்கூடங்களுக்கு தேவைப்படும் மின் உற்பத்தியை, விசைத்தறிக்கூடங்களிலே, உற்பத்தி செய்வதற்கான நெட் மீட்டர் வசதியுடன் கூடிய, சோலார் பேனர்களை நிறுவுவதற்கு, 50 சதவீத மானியமும், மீதமுள்ள 50 சதவீதத்திற்கு, குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குவது, காட்டன் நூல்களுக்கு விதிக்கப்படும் 5% ஜிஎஸ்டி வரி போன்று செயற்கை நூல் இலை ரயானுக்கும் 5% விதிப்பது, போன்ற திட்டங்களை வகுத்து, விசைத்தறிகளையும், விசைத்தறி தொழிலை நம்பி இருக்கும், ஒரு கோடி 50 லட்சத்துக்கு மேற்பட்ட, தமிழ்நாட்டு மக்கள் தொகைக்கு, வாழ்வாதாரத்துக்கு வழி வகுக்க வேண்டும் என்று, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக, மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுகிறோம் என்றார்.
சேலத்தில் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய 15-வது மாபெரும் சிறப்பு இலவச மருத்துவ முகாம்.

சேலத்தில் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய 15-வது மாபெரும் சிறப்பு இலவச மருத்துவ முகாம்.

சேலம். 
S.K. சுரேஷ் பாபு.

சேலத்தில் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்திய 15-வது மாபெரும் சிறப்பு இலவச மருத்துவ முகாம். 

சேலம் மண்டல சர்வதேச உரிமைகள் கழகம், இளம்பிள்ளை ஸ்ரீ காவியா கன்ஸ்ட்ரக்ஷன், சுவாசம்  அறக்கட்டளை மற்றும் விநாயகா மிஷன் கிருபானந்த வாரியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய 15 வது மாபெரும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் சேலம் அன்னதானபட்டி பகுதியில் நடைபெற்றது. சேலம் மண்டல சர்வதேச உரிமைகள் கழகத்தின் அமைப்புச் செயலாளர் தேவராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுவாசம் அறக்கட்டளை மாநில ஒருங்கிணைப்பாளர் கௌதம் பாஸ்கரன் மற்றும் சேலமண்டலம் மனித உரிமைகள் கழகத்தின் நிர்வாக இயக்குனர் அய்யனார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு முகாமில் சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் அசோகன் 56வது கோட்டை மாமன்ற உறுப்பினர் சரவணன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு முகாம்மீனை துவக்கி வைத்தனர். இந்த சிறப்பு முகாமில் காது மூக்கு தொண்டை மருத்துவம் தோல் சிகிச்சை பிளாஸ்டிக் சர்ஜரி கழுத்து வலி தோள்பட்டை வலி மூட்டு வலி இடுப்பு வலி, முதுகு தண்டுபடும் வழி குழந்தைகள் நலம் மற்றும் கண் மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிறந்த ஆலோசனையும் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு முகாமில்பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுச் சென்றனர். இந்த சிறப்பு முகாமில் சர்வதேச மனித உரிமைகள் கழக மாநில மகளிர் அணி இணை செயலாளர் அம்முலதா உட்பட நிர்வாகிகள் சித்துராஜ் சித்தேஸ்வரன் மணிவண்ணன் கணேசன், பீம ராஜன் சண்முகசுந்தரம் முருகன் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.