செவ்வாய், 29 ஜூலை, 2025

தனது கோட்டத்தை சார்ந்தவரின் வீட்டில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பு. லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம்.

தனது கோட்டத்தை சார்ந்தவரின் வீட்டில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பு. லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம்.

சேலம். 
S.K.சுரேஷ்பாபு.

தனது கோட்டத்தை சார்ந்தவரின் வீட்டில் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பு. லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்ட மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம். 

60 கோட்டங்களை உள்ளடக்கிய சேலம் மாநகராட்சியின் ஒன்பதாவது கோட்டத்திற்கு உட்பட்ட அல்லிகுட்டை வீராணம் பிரதான சாலையில் உள்ள ஒருவரது வீட்டில் கொடிய விஷம் கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பு புகுந்து விட்டதாக 9 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி சென்று தன்னால் இயன்றதை செய்து வரும் மாமன்ற உறுப்பினர்,  இதுகுறித்து தகவல் அறிந்த உடன் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று பாம்பு பிடிப்பவர்களின் உதவி இல்லாமல் வீட்டிற்குள் புகுந்த ஐந்தரை அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட  கொம்பேறி மூக்கன் பாம்பினை உயிருடன் லாவகமாக பிடித்தார். பிடிபட்ட பாம்பினை ஒரு சாக்கு பையில் செலுத்தி அதனை அடர்ந்த வனப்பகுதியில் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வலிங்கம் மற்றும் அவரது நண்பர்களால் கொண்டு சென்று விடப்பட்டது. இதனை எடுத்து சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கத்திற்கு தங்களது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். இது அந்த பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது என்றால் அது மிகையல்ல.

திங்கள், 28 ஜூலை, 2025

சேலம் அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைத்து தர வலியுறுத்தி 1000ற்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

சேலம் அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைத்து தர வலியுறுத்தி 1000ற்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைத்து தர வலியுறுத்தி 1000ற்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே வேங்காம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் சுரங்கபாதை அமைத்து தர வலியுறுத்தி, மல்லூர் பேரூராட்சி துணை தலைவர் அய்யனார் தலைமையில் சுற்றியுள்ள கிராம மக்கள் 1000க்கும் மேற்பட்டோர் மல்லூர் ரயில் நிலையத்தை முற்றுகைட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் 
அவர்களிடம்கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலகுமார் தலைமையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கோரிக்கை பாதாகைகளை ஏந்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இந்த போராட்டத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மல்லூர் ரயில் நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது வேங்காம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் சுரங்கபாதை அமைக்காவிட்டால், இனி ரயில்களை இப்பகுதி வழியாக ரயில் பாதையில் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மத்திய மாநில அரசு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது ஒரு வார காலத்திற்குள் தங்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். மேலும் மத்திய மாநில அரசுத்துறை அதிகாரிகள் கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கிராம மக்களை ஒன்று திரட்டி ரயில்வே கேட் முன்பு மிகப்பெரிய அளவிலான மறியல் போராட்டம் மேற்கொள்ளப்படும் என்றும் ஊர்மக்கள் சார்பில் மல்லூர் பேரூராட்சி தலைவர் வேங்கை அய்யனார் எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு மேலும் அதிகரித்தது. 
சேலத்தை சேர்ந்த சிறந்த சமூக சேவகருக்கு மேலும் ஒரு நம்பிக்கை நாயகன் விருது.

சேலத்தை சேர்ந்த சிறந்த சமூக சேவகருக்கு மேலும் ஒரு நம்பிக்கை நாயகன் விருது.

சேலம்.
S.K.சுரேஷ் பாபு.

சேலத்தை சேர்ந்த சிறந்த சமூக சேவகருக்கு மேலும் ஒரு நம்பிக்கை நாயகன் விருது.
 
ஜெய்டன் production மற்றும் நியூஸ் 7 இணைந்து அப்துல் காலம் விருதுகள் சென்னையில்  நடைபெற்ற விழாவில்  ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை மாநில தலைவர் நாகா ஆர். அரவிந்தனுக்கு சிறந்த 
சேவைக்காக நம்பிக்கை நாயகன் விருதை வேளச்சேரி  சட்டமன்ற உறுப்பினர் 
ஜே.எம்.எச்.அசன் மவுலானா அவர்கள்  மற்றும் திரைப்பட நடிகை நளினி அவர்கள் கலந்து கொண்டு  நம்பிக்கை நாயகன் விருதை வழங்கினார்கள் இதில் முக்கிய நிர்வாகிக‌ள்  பலர்  கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 27 ஜூலை, 2025

வலது கை கொடுப்பதை இடது கை அறியாது என்பதற்கு உதாரணமாக சேவையாற்றி வரும் வழக்கறிஞர் தெய்வா.

வலது கை கொடுப்பதை இடது கை அறியாது என்பதற்கு உதாரணமாக சேவையாற்றி வரும் வழக்கறிஞர் தெய்வா.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

வலது கை கொடுப்பதை இடது கை அறியாது என்பதற்கு உதாரணமாக சேவையாற்றி வரும் வழக்கறிஞர் தெய்வா.

சமூக சேவையில் தனக்கு நிகர் தானே என்பதை மெய்ப்பிக்கும் வகையில் நாள்தோறும் பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வருபவர் சேலம் ஒன்பதாவது கோட்டு திமுக மாமன்ற உறுப்பினரும் வழக்கறிஞரும் சிறந்த சமூக சேவகர்மான வழக்கறிஞர் தெய்வலிங்கம். தெய்வா அறக்கட்டளையின் சார்பில் நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட ஏழை எளிய மற்றும் முதியவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி, அமரர் உறுதி சேவை மற்றும் தாமாக முன்வந்து ஆதரவற்ற சகலங்களை அவர்களது குல வழக்கப்படி அடக்கம் செய்வது என்பது போன்ற இவரது செயல்பாடுகள் அதிகம் என்றால் அது மிகையாகாது. அந்த வகையில் 36 ஆவது கோட்டை மேலூர் நகர் பகுதியை சேர்ந்த மோனிகா என்ற மாணவி கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் அவதிப்படுவது குறித்து தகவல் அறிந்த தெய்வா அறக்கட்டளையின் நிறுவனர் வழக்கறிஞர் தெய்வம் இன்று சம்பந்தப்பட்ட மாணவியை அழைத்து தெய்வா அறக்கட்டளை நிறுவனம் அருகே சம்பந்தப்பட்ட மாணவிக்கான கல்லூரி கட்டணத்தை கொடுத்து உதவி மகிழ்ந்தார் தெய்வா. உதவித்தொகையை பெற்றுக் கொண்ட மாணவி மோனிகா மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கறிஞர் தெய்வலிங்கத்தின் செயல்பாட்டிற்கு தங்களது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். உடன் அறக்கட்டளை நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
தமிழக முதலமைச்சராக விரைவில் தொல் திருமாவளவன் அலங்கரிப்பார் என ஒவ்வொரு சிறுத்தைகளும் மனதில் உறுதி ஏற்க வேண்டும்.  வரலாற்றிலேயே முதன்முறையாக சேலத்தில் பகலில் நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட விசிக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில துணை பொது செயலாளர் கலியமுதன் எழுச்சி உரை.

S.K. சுரேஷ்பாபு 

சேலம்  மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது. இந்த  கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் காஜாமைதீன், மொழியரசு, மெய்யழகன், கருப்பையா, தெய்வானை, தமிழன் ஆகியோர் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர்கள் இமயவர்மன், ஆறுமுகம், நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர்கள் சசிகுமார், ராமன் ஆகியோர் வரவேற்பு பேசினார். இதில் மாநில துணைப் பொதுச் செயலாளர் களியமுதன், முன்னாள் மண்டல செயலாளர் நாவரசன், ஜெயசந்திரன் ஆகியோர் வக்பு திருத்தச் சட்டம் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.தேசிய மக்கள் தொகை பதிவேடு தேசியக் குடிமக்கள் பேரோடு ஆகியன தயாரிப்பதை கைவிட வேண்டும் மதவாத வன்முறை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஜம்மு காஷ்மீர் மீண்டும் மாநிலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்களை தீர்மானம் விளக்கி பேசினர்.
வரலாற்றிலேயே முதன் முறையாக பட்டப்பகலில் நடைபெற்ற சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட விசிக கூட்டத்தில் பேசிய கலியமுதன், அரசியல் கட்சிகளின் பொதுவான கோட்பாடுகளை தகர்த்தெறியும் ஒரே கட்சி விடுதலை சிறுத்தைகள் மட்டுமே என்று குறிப்பிட்டார் அவர், வழக்கமாக பொதுக்கூட்டங்கள் என்பது மாலை பொழுதில் மட்டுமே நடைபெற்று வந்த மற்றும் நடைபெற்று வரும் நிலையில் மாறாக பட்டப்பகலில் ஒரு கட்சியின் பொதுக்கூட்டம் நடத்திய பெருமை சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட விசிக கட்சிக்கு மட்டுமே சாரும் என்றும்,  இதேபோன்று தமிழக அரசின் முதலமைச்சர் ஆக தலைவர் திருமாவளவன் அலங்கரிப்பார் என்று கூறும் கூற்றினை தகர்த்தெறிந்து மிக விரைவில் தமிழக முதலமைச்சராக தொல் திருமாவளவன் அமருவார் என்ற ஒவ்வொரு உறுதியினை னையும், ஒவ்வொரு சிறுத்தைகளும் தங்களது மனதில் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். நமது இலக்கு 2026 அல்ல 2031-ல் நிச்சயம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் தமிழக அரசு அமையும் என்பதை உறுதிப்படக் கூடிய அவர், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகளை கடுமையாக விமர்சித்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள், அதிமுக கூட்டணியிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறிய போது அவர் கூறிய கருத்து தம்பி தொல் திருமாவளவன் நன்றாக இருக்க வேண்டும் அவர் கூட்டணி குறித்து அவசர முடிவு எடுத்திருக்கக் கூடாது என்று மட்டுமே குறிப்பிட்டதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பெருமைப்பட பேசினார் கலியமுதன். தொடர்ந்து மத்திய அரசை பலவாறு விமர்சித்து பேசிய அவர் புராண காலங்களில் இலங்கையை ஆஞ்சநேயரால் எரிக்கப்பட்டது என்றும் தற்பொழுது இந்திய திருநாட்டை விரைவில் மோடி  எரித்து விடுவார் என்றும் குற்றம் சாட்டினார்.
முன்னதாக தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்டோர் சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விசிக துணை பொது செயலாளர் முன்னிலையில் தங்களை விடுதலை சிறுத்தைகளாக இணைத்துக் கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டம் விசிக வட்ட, மாநில தொகுதி, நிர்வாகிகள்  ஒன்றிய, நகராட்சி செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர்கள் சாமுராய் குரு, அறிவழகன் ஆகியோர் நன்றி கூறினர்.

வெள்ளி, 25 ஜூலை, 2025

பாமக மாணவர் சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா. கோவில்களில் சிறப்பு பூஜை மேற்கொண்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.

பாமக மாணவர் சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா. கோவில்களில் சிறப்பு பூஜை மேற்கொண்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

பாமக மாணவர் சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா. கோவில்களில் சிறப்பு பூஜை மேற்கொண்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்   அவர்களின் 87 ஆவது பிறந்தநாள் விழா,பசுமை தாயகத்தின் மாநிலத் தலைவர்  திருமதி சௌமியா அன்புமணி அவர்களின் பிறந்தநாள் விழா, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் தமிழக மக்களின் உரிமை மீட்பு நடைபயணம் வெற்றி பெறவும் வேண்டி முப்பெரும் விழாவானது பாட்டாளி மக்கள் கட்சியின்  மாணவர் சங்கத்தின் சார்பில் மாநில மாணவர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் விஜயராசா தலைமையில் சேலம் உடையப்பட்டியில்   நடைபெற்றது.மாநில சட்டக் கல்லூரி பிரிவு செயலாளர்கள் மோகன்ராஜ், கோகுல கண்ணன்,வீரபாண்டி நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சட்டக் கல்வி பிரிவு மாவட்ட அமைப்பாளர் பெரம்பலூர் பாலகிஷோர், மாநில பொதுக்குழு உறுப்பினர் குமாரசாமி, காட்டூர் கவியரசு, சங்க மாவட்ட நிர்வாகிகள் வீரபாண்டி யுவராஜ், பெரம்பலூர் பாலகிஷோர்,தர்மபுரி ஹரி சுதன்,மேச்சேரி ரகு,தர்மபுரி நிஷாந்த், சஞ்சய், ஆட்டையாம்பட்டி யுவ பிரசாந்த், பூபதி, தர்ஷன், ஆட்டையாம்பட்டி பூபதி, நாமகிரிப்பேட்டை கண்ணன், கனகராஜ், வசந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேற்கண்ட நிகழ்ச்சியில் உடையாபட்டி ஓம் ஸ்ரீ கருமாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜையும். ,பொதுமக்களுக்கு இணைப்புகள் வழங்கியும், ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சேலம் மாநகராட்சியின் இயல்பு கூட்ட  நிகழ்வுகளை ரகசியமாக படம் படம் பிடித்து தவறான செய்தி வெளிப்படுத்தும் அதிமுகவை சார்ந்த ஐடி விங் நிர்வாகிகள். இதற்கு திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் எதிர்ப்பு தெரிவித்ததால் சேலம் மாநகராட்சியில் கடுமையான பரபரப்பு.

சேலம் மாநகராட்சியின் இயல்பு கூட்ட  நிகழ்வுகளை ரகசியமாக படம் பிடித்து தவறான செய்தி வெளிப்படுத்தும் அதிமுகவை சார்ந்த ஐடி விங் நிர்வாகிகள். இதற்கு திமுக மாமன்ற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சேலம் மாநகராட்சியில் கடுமையான பரபரப்பு. 

சேலம் மாநகராட்சியின் இயல்பு கூட்டம் மாநகர மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. துணைமேயர் திருமதி சாரதாதேவி மாணிக்கம் மற்றும் ஆணையாளர் இளங்கோவன் முன்னிலை வகித்த இயல்பு கூட்டத்தில், 60 கோட்டங்களைச் சார்ந்த மாமன்ற உறுப்பினர்கள் தங்களது கோட்டத்திற்கு உட்பட்ட பகுதி மக்களின் பிரச்சனைகளை குறித்து பேசினர். அப்பொழுது குறுக்கிட்ட சேலம் மாநகராட்சியின் 9 வது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான நெய்வலிங்கம், நடைபெற்றுக் கொண்டிருக்கும் சேலம் மாநகராட்சி இயல்பு கூட்டத்தில் மாற்றுக் கட்சியைச் சார்ந்த ஐடி விங் நிர்வாகிகள் சிலர் கலந்து கொண்டு இங்கு நடக்கும் நிகழ்வுகளை படம் பிடித்து தவறான செய்தியை மக்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்றும் அவர்களை இந்த கூட்டத்தில் இருந்து உடனடியாக கண்டறிந்து வெளியேற்ற வேண்டும் என்று மாநகர மேயர் துணை மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்தார். சேலம் மாநகராட்சி பொருத்த வரை ஆளும் கட்சி திமுக, எதிர்க்கட்சி அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்  மற்றும் சுயேட்சை வேட்பாளரும் சேலம் மாநகராட்சியில்  இருக்கின்றனர் 
அப்படி இருக்கும் பட்சத்தில்,  ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சியான அதிமுக ஐடி விங் நபர்கள் தான் என்று திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் குற்றம் சுமத்தினார்.  அப்பொழுது குறுக்கிட்ட அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கத்தின் குற்றச்சாட்டிற்கு வாதத்தில் ஈடுபட்டதால் நடைபெற்றுக் கொண்டிருந்த இயல்பு கூட்டத்தில் கடுமையான பரபரப்பு நிலவியது.