வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில்  ஆடிப்பெரு விழாவை ஒட்டி முதன்முறையாக திருத்தேர் பவனி.....சக்தி கோஷங்கள் விண்ணை பிளக்க திருத்தேரினை வடம் பிடித்து இழுத்த ஏராளமான பக்தர்கள்..

சேலம்.
S.K.சுரேஷ்பாபு.

தமிழ் மாதங்களில் வரும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.இதனையொட்டி தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலையங்களில் திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். அதிலும் குறிப்பாக சேலம் மாவட்டத்தில் நடைபெறும் ஆடிபெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மாதத்தில் ஆடி-1, ஆடி-18, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி என அடுத்தடுத்து விஷேசங்கள் வரும். இதுபோன்ற நாட்களில் கோவில்களில் விஷேச பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி ஆடி மாதம்   தொடங்கியது முதல் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சேலத்தில் உள்ள 8 பட்டிகளுக்கும் காவல் தெய்வமாக விளங்கி வரும், சேலத்தில் பிரசித்திபெற்ற கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில், நாள்தோறும் காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.  சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி பெருவிழா முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கிய ஆடி திருவிழாவில், முக்கிய நிகழ்வுகளாக அம்மனுக்கு பூச்சாட்டுகள், கம்பம் நடுதல், சக்தி அழைத்தல், பொங்கல் மற்றும் உருளுதண்டம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது அடுத்து இன்று வரலாற்று சிறப்புமிக்க கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி திருத்தேரோட்டம் நடைபெற்றது. தமிழக அரசால் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மிகப் பிரம்மாண்டமான முறையில் வடிவமைக்கப்பட்ட திருத்தேரினை சிறப்பாக அலங்கரித்து அதில் சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் உற்சவர் படியமர்த்தப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சக்தி கோஷங்கள் விண்ணை பிளக்க திருத்தேரணி வடம் பிடித்து இழுத்தனர். சேலம் மாநகரின் முக்கிய வீதிகள் ஆன முதல் அக்ரஹாரம், ராஜகணபதி திருக்கோவில், கமலா ஜங்ஷன், 2 வது அக்ரஹாரம், பட்டை கோயில், சின்ன கடை வீதி மற்றும் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் வழியாக மீண்டும் திருத்தேரானது கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் அடைந்தது. வழி நெடுங்கிலும் ஆடி அசைந்து வந்த திருத்தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்ததோடு வழிபாடுகள் மேற்கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திருக்கோவில் அறங்காவலர் குழு நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

ஈரோட்டில் வருகின்ற 11ந்தேதி மின் தடை | முழு விபரம்

ஈரோட்டில் வருகின்ற 11ந்தேதி மின் தடை | முழு விபரம்

ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற ( ஆகஸ்ட் ) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

சூரியம்பாளையம் மற்றும் மேட்டுக்கடை ஆகியதுணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 11ந்தேதி நடக்கிறது, அதனால் கீழ்கண்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

சித்தோடு, ராயபாளையம், சுண்ணாம்பு ஓடை, அமராவதி நகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், பெருமாள்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிளம்பரப்பு, செல்லப்பம்பாளையம், மாமரத்துப்பாளையம், தயிர்பாளையம், கொங்கம்பாளையம், நரிப்பள்ளம், எல்லப்பாளையம், சேமூர், சொட்டையம்பாளையம், 

பி.பி.அக்ரஹாரம், மரவபாளையம், சி.எம்.நகர், கே.ஆர்.குளம், காவிரிநகர், பாலாஜி நகர், எஸ்.எஸ்.டி.நகர், வேலன் நகர், ஊத்துக்காடு, பெரியபுலியூர், சேவக்கவுண்டனூர், மேல்திண்டல், கீழ்திண்டல், சக்திநகர், செல்வம்நகர், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம், செங்கோடம்பாளையம், வள் ளிபுரத்தான்பாளையம், வேப்பம்பாளையம், பவளத்தாம்பா ளையம், மாருதிநகர், வித்யாநகர், வில்லரசம்பட்டி, நால் ரோடு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, 

நத்தக்காட்டுப்பாளையம், இளையகவுண்டன்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், கதிரம்பட்டி, வண்ணான்காட்டுவலசு, 

நசியனூர் - ஈரோடு ரோடு, தொட்டிபாளையம், ராயபாளையம், சிந்தன்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது,

இந்த தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட நகரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் காங்கிரஸ் சிறுபான்மை மற்றும் மனித உரிமை துறை சார்பில் இலவச பல் மருத்துவ முகாம். ஏராளமான பொதுமக்கள் பயன்.

சேலத்தில் காங்கிரஸ் சிறுபான்மை மற்றும் மனித உரிமை துறை சார்பில் இலவச பல் மருத்துவ முகாம். ஏராளமான பொதுமக்கள் பயன்.

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

சேலத்தில் காங்கிரஸ் சிறுபான்மை மற்றும் மனித உரிமை துறை சார்பில் இலவச பல் மருத்துவ முகாம். ஏராளமான பொதுமக்கள் பயன். 

சேலம் மாநகர் மாவட்ட சிறுபான்மையினர் துறை மற்றும் மனித உரிமை துறை ஆகியவற்றின் சார்பில் மாபெரும் இலவச பல் மருத்துவ முகாம் சேலம் சூரமங்கலம் பகுதியில் நடைபெற்றது. முகாமிற்கு சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் அலாவுதீன் பாஷா  தலைமை தாங்கினார். தொடர்ந்து  நடைபெற்ற இலவச பல் மருத்துவ முகாமில், அகில இந்திய தேசிய காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாவட்ட தலைவர் இர்ஃபான், மாவட்டத் துணைத் தலைவர் அம்ஜத் கான் மற்றும் மாவட்ட பொருளாளர் கன்னங்குறிச்சி தமிழ்செல்வன் மற்றும் மாவட்ட துணை செயலாளர் இம்தியாஸ் உள்ளிட்டோர்  சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தனர். இந்த முகாமில் பல் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு பல் சம்பந்தமான அனைத்து விதமான வியாதிகளுக்கும் இலவசமாக சிகிச்சைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர். இந்த முகாமில் சூரமங்கலம் ஜங்ஷன் பழைய சூரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்று சென்றனர்.

புதன், 6 ஆகஸ்ட், 2025

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினம். மாலை அணிவித்து மரியாதை செய்த தேசிய தெலுங்கு சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் நாகா அரவிந்தன்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினம். மாலை அணிவித்து மரியாதை செய்த தேசிய தெலுங்கு சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் நாகா அரவிந்தன்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினம். மாலை அணிவித்து மரியாதை செய்த தேசிய தெலுங்கு சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் டாக்டர் நாகா அரவிந்தன். 

முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதல் வருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 7 ம் ஆண்டு நினைவு தினம் தமிழக முழுவதும் திமுகவினரால் அனுஷ்டிக்கப்பட்டது. இதே போல சேலம் அண்ணா பூங்கா அருகே அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் முழு திருவுருவ சிலைக்கு தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனரும், ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவருமான டாக்டர் நாகா. அரவிந்தன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் மலர் தூவியும்  மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் மருத்துவர் ஓஷோ. முரளி மற்றும் காசாளர் கேசவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளை நிர்வாகம் மற்றும் அன்பின் கரங்கள் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளையின் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு பாராட்டு விழா.

ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளை நிர்வாகம் மற்றும் அன்பின் கரங்கள் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளையின் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு பாராட்டு விழா.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளை மற்றும் அன்பின் கரங்கள் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளையின் சார்பில் தமிழக முதல்வர் அவர்களுக்கு பாராட்டு விழா.

மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் வழங்கிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா, ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளை, அன்பின் கரங்கள் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை ஐந்தாம் ஆண்டு துவக்க விழா மற்றும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் ஆகியவை சேலம் கோட்டை பகுதியில் நடைபெற்றது. அன்பின் கரங்கள் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளையின் நிர்வாக அலுவலர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவினை  தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் சேலம் மாநகர மேயர் இராமச்சந்திரன் ஆகியோர்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்து  விழாவை சிறப்பித்தனர்.  ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளையின் தலைவர் கர்லின் எபி, மற்றும் சேலம் மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் அத்தி அண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகுத்தனர். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பிரதநிதித்துவம் அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சிறந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கி விழாவில் கௌரவிக்கப்பட்டனர். இந்த விழாவில் மாபெரும் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றன இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மேடம் ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளை நிர்வாகத்தின் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சியும் அழிக்கப்பட்டன. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களும் விழாவின் போது வழங்கப்பட்டது. இதனை அடுத்து மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் விழாவில் இடம் பெற்றன. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளை நிர்வாகம் மற்றும் அன்பின் கரங்கள் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

சேலம் பொன்னம்மாபேட்டையில்  உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் தொடங்கி வைத்து  தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு உதவி ஆணைகளை வழங்கினார்.

தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள்  கடந்த மாதம் 15 ஆம் தேதி துவக்கி வைத்தார். இதனை அடுத்து தமிழக முழுவதும் மாவட்டங்கள் தோறும் முகங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சேலம் அம்மாபேட்டை  மண்டலத்திற்கு உட்பட்ட பொன்னம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கு உட்பட்ட மக்களுக்கான  சிறப்பு முகாம்  சேலம் பொன்னம்மாபேட்டை வாய்க்கால்பட்டறையில் உள்ள சுபம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமினை  தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி டாக்டர் பிருந்தா தேவி மற்றும் சேலம் மாநகராட்சி ஒன்பதாவது கோட்ட மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் தெய்வம் ஆகியோரது  முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படக்கூடிய பல்வேறு உதவியா ஆணைகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் வழங்கினார். 
ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படக்கூடிய உதவி திட்டங்களுக்கான விண்ணப்பங்களை பெற்று ஆர்வத்துடன் பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் கொடுத்தனர். இதில் அதிகப்படியாக மாதாந்திர மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களே அதிக அளவில்  விநியோகிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு முகாமில் அனைத்து அரசு துறை அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

சேலம் பொன்னம்மாப்பேட்டையில் கிணற்றில் தவறி விழுந்த மாடு. உயிருக்கு போராடிய மாட்டினை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீட்ட மாமன்ற உறுப்பினர்.

சேலம் மாநகராட்சியின் 9 வது கோட்ட மாமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் சிறந்த சமூக சேவகருமான தெய்வலிங்கம் சிறந்த மனிதாபிமானம் கொண்டவர் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம். சேலம் பொன்னம்மாபேட்டை புத்து மாரியம்மன் கோவில் எதிரே 11 வது கோட்டத்திற்கு உட்பட்ட செங்கல் அணை சாலையில் ஜோதிமணி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் மாடு ஒன்று கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டதாக 9 வது போட்ட மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு உடனடியாக சேலம் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படைத்துறை என சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாட்டினை கயிறுகள் கட்டி உயிருடன் பத்திரமாக மீட்டனர். தீயணைப்பு மற்றும் மீட்புபடை துறையினருடன் மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இணைந்து கிணற்றுக்குள் தவறி விழுந்த உயிருடன் மாடு மீட்கப்பட்டது அனைவரிடமும் வரவேற்பினை பெற்றுள்ளது.