திங்கள், 18 ஆகஸ்ட், 2025

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாவட்ட மகளிர் அணி செயலாளராக புவனேஸ்வரி நியமனம். கட்சியின் நிறுவன தலைவர் முத்தமிழன் வேல்முருகன் அறிவிப்பு.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாவட்ட மகளிர் அணி செயலாளராக புவனேஸ்வரி நியமனம். கட்சியின் நிறுவன தலைவர் முத்தமிழன் வேல்முருகன் அறிவிப்பு.

சேலம். 
S.K. சுரேஷ் பபு
.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாவட்ட மகளிர் அணி செயலாளராக புவனேஸ்வரி நியமனம். கட்சியின் நிறுவன தலைவர் முத்தமிழன் வேல்முருகன் அறிவிப்பு.

சேலம் சின்ன திருப்பதி  பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி. தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சார்ந்த புவனேஸ்வரி கட்சியின் கட்சியின் செயல்பாடுகளையும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் முறையாக செய்ததை கௌரவிக்கும் விதமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாவட்ட மகளிர் அணி செயலாளராக அந்த கட்சியின் நிறுவனத் தலைவர் முத்தமிழன் வேல்முருகன் அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் கோரிமேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சேலம் மாவட்ட மகளிர் அணி செயலாளர் புவனேஸ்வரி அவர்களுக்கு கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி கட்சிப் பணிகளுக்கு உதவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் முத்தமிழன் வேல்முருகன் கேட்டுக் கொண்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள புவனேஸ்வரிக்கு கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
சேலம் அருகே ஸ்ரீ தமிழ் அன்னை கல்வி அறக்கட்டளையின் சார்பில் 79 வது சுதந்திர தின விழா. விழாவையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு.

சேலம் அருகே ஸ்ரீ தமிழ் அன்னை கல்வி அறக்கட்டளையின் சார்பில் 79 வது சுதந்திர தின விழா. விழாவையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் அருகே ஸ்ரீ தமிழ் அன்னை கல்வி அறக்கட்டளையின் சார்பில் 79 வது சுதந்திர தின விழா. விழாவையொட்டி நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு. 

இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தின விழா சேலத்தை அடுத்துள்ள சின்ன சீரகாபாடியில் நடைபெற்றது. காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில் ஸ்ரீ தமிழ் அன்னை கல்வி அறக்கட்டளையின் தலைவர் உதயகுமார் மூவர்ண கொடியினை ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை ஏற்றார். தொடர்ந்து சுதந்திர தின விழாவையொட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர். இவர்களுக்கான பரிசளிப்பு விழா விழா அன்று மாலை நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. சின்ன சீரகாபாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவின் போது நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். சுதந்திர தின கொடியேற்று விழா மற்றும் பரிசளிப்பு விழா நிகழ்வுகளின் போது ஸ்ரீ தமிழ் அன்னை கல்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள் கோபால் கோவிந்தராஜு ஸ்ரீனிவாசன் கண்ணன் பச்சைபாலி பழனிச்சாமி ஹைடெக் கணேசன் அருள்முருகன் ஏரிக்காடு குமார் பழனிச்சாமி அருள் பூபதி சண்முகம் மோகன் மோகனசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டதுடன் விழாவிற்கான ஏற்பாடுகளையும் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். இறுதியாக அறக்கட்டளையின் நிர்வாகி ராஜேந்திரன் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வரவேற்று நன்றி உரையாற்றினார்.

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

எழுச்சித் தமிழரின் 63 வது ஆண்டு பிறந்தநாள் விழா. முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி எளிமையாக கொண்டாடிய சேலம் தெற்கு தொகுதி விடுதலை சிறுத்தைகள்.

எழுச்சித் தமிழரின் 63 வது ஆண்டு பிறந்தநாள் விழா. முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி எளிமையாக கொண்டாடிய சேலம் தெற்கு தொகுதி விடுதலை சிறுத்தைகள்.

சேலம்.
S.K. சுரேஷ் பாபு. 

எழுச்சித் தமிழரின் 63 வது ஆண்டு பிறந்தநாள் விழா. முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி எளிமையாக கொண்டாடிய சேலம் தெற்கு தொகுதி விடுதலை சிறுத்தைகள். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் 63 வது பிறந்தநாள் விழா எழுச்சி விழாவாக விடுதலை சிறுத்தைகளால் வழக்கமாகக் கொண்டாடப்படுவ து வழக்கம். இந்த நிலையில் திருமா அவர்களின் சின்ன தாயார் இறந்த துக்க நிகழ்வின் காரணமாக சேலம் தெற்கு மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. அதன்படி சேலம் பேர்லன்ஸ் பகுதியில் உள்ள அன்னை தெரசா ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
சேலம் தெற்கு மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் மொழியரசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கட்சியில் மண்டல துணைச் செயலாளர் ஆறுமுகம்,  தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் கணபதி, சூரமங்கலம் பகுதி செயலாளர் பெரியசாமி, நிர்வாகிகள் அன்பு, செல்வம், அஜித் மற்றும் கௌதம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு முதியவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கி மகிழ்ந்தனர். முன்னதாக முதியோர் இல்ல நிர்வாகிகளால் தொல் திருமா அவர்களுக்கு பிறந்தநாள் பாடல் பாடப்பட்டது அப்பொழுது கட்சியினரும் ஒன்று சேர்ந்து பாடி கைகளை கட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இவர்களுடன் நட்புக்காக ஆதித்தமிழர் பேரவையின் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஆர் டி ஆர் சந்திரன் பங்கு பெற்றார்.

சனி, 16 ஆகஸ்ட், 2025

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி முடிவு எடுக்க கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவருக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். சேலத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி முடிவு எடுக்க கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவருக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். சேலத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி முடிவு எடுக்க கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவருக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். சேலத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம். 

தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சேலம் நான்கு ரோடு பகுதியில் நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநில செயற்குழு கூட்டத்தில், கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளரான கட்சியின் மாநில செயலாளர்கள் ராம்ஜி, தர்மன், Dr.பொன் சேகர் சென்னை மாவட்ட தலைவர் மோகன் ராவ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் தேசிய கட்சியின் சார்பில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கட்சியின் மாநில தலைவர் சீனிவாசன் விரிவாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற இந்த மாநில செயற்குழு கூட்டத்தில், தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தமிழக கூட்டணி குறித்து முடிவெடுக்க கட்சியின் மாநில தலைவருக்கு தேசிய தலைமை முழு அதிகாரம் வழங்கிட வேண்டும், தேர்தல் நியாயமான முறையில் நடத்திட தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பொது பொதுத்துறை நிறுவனமான மத்திய அரசு பணியிடங்களில் தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும், நியாயமாக தேர்தல் நடைபெறாமல் அவர்களுக்கு பணம் கொடுக்கும் கட்சிகளின் தேர்தல் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 
இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தேசிய மக்கள் தேசிய கட்சியின் தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகிகள் கட்சி தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

ஆடி இறுதி கிருத்திகை நாளில் பக்தர்களுக்கு ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்த சேலம் பள்ளப்பட்டி ஸ்ரீ ராஜரிஷி ஆசிரமம் பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

ஆடி இறுதி கிருத்திகை நாளில் பக்தர்களுக்கு ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்த சேலம் பள்ளப்பட்டி ஸ்ரீ ராஜரிஷி ஆசிரமம் பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு.

ஆடி இறுதி கிருத்திகை நாளில் பக்தர்களுக்கு ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்த சேலம் பள்ளப்பட்டி ஸ்ரீ ராஜரிஷி ஆசிரமம் பழனி ஸ்ரீ பாலதண்டாயுதபாணி. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம். 

தமிழ் கடவுள் ஆன முருகப் பெருமானுக்கு உகந்த தினமாக கிருத்திகை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆடி மாதத்தில் வரும் இறுதி கிருத்திகை நாளான இன்று சேலம் பள்ளப்பட்டியில் உள்ள பழனி ஸ்ரீ ராஜரிஷி ஆசிரம  ஸ்ரீ பால  தண்டாயுதபாணி திருக்கோவிலில்  எம்பெருமான் முருகப்பெருமானுக்கு இன்று காலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 
குறிப்பாக பால் மஞ்சள் குங்குமம் இளநீர் திருமஞ்சனம் உள்ளிட்ட மங்கள பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து எம்பெருமான் பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணிக்கு ராஜ அலங்காரம் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு மகாதீப ஆராதனைகள் நடைபெற்றன.
இதில் பள்ளப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடி இறுதி கிருத்திகை நாளில் வழிபாடு மேற்கொண்டனர். இதனை அடுத்து ஆசிரமத்தின் சார்பில் திருக்கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு பூஜையில் ஆசிரம நிறுவனர் முருகனடியார் பாபு உட்பட நிர்வாகிகள் சுப்ரமணியம், கேசவமூர்த்தி, வசியா, வாசுகி மற்றும் கிருபா உள்ளிட்டோர் சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பாரத பிரதமருக்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்பு..!

பாரத பிரதமருக்கு தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்பு..!


தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக மாநிலத் தலைவர் எல்.கே.எம் சுரேஷ் வெளியிட்ட செய்தி குறிப்பில் ....

தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக, விசைத்தறி தொழில்  மூலம், 6 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் வாயிலாக, நேரடியாகவும், மறைமுகமாகவும், 20 லட்சத்துக்கு மேற்பட்ட நெசவாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்,

ஒரு நெசவாளருக்கு நான்கு முதல் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் என்று வைத்துக் கொண்டால் தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகைக்கு வாழ்வாதாரமும்  வேலை வாய்ப்பும் பெற்று வருகின்றனர்,

இந்தியாவில் மொத்தம் 25 லட்சம் விசைத்தறிகள் மூலம் 70 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்,

இந்த விசைத்தறி தொழில்  நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது தற்போது விசைத்தறிகளை பழைய இரும்புக்கு உடைத்து விற்கக்கூடிய அவலமான சூழ்நிலையை கடந்து வருகிறது,

இந்நிலையில், இன்று 15.8.2025 சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜிஎஸ்டி வரிவிதிப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு, வரிகளை குறைப்பதற்கான செயல்பாடுகள் செய்வதாக தெரிவித்ததற்கு முதல் கண் எங்களது தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன்,

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியபோது, செயற்கை இழை நூலான ரயான் பாலிஸ்டர் சிந்தடிக் நூலுக்கு, 18 % ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு இருந்த நிலையில், விசைத்தறி சங்கங்கள் வாயிலாக அதனை குறைக்க கோரிக்கை வைத்த பொழுது, 12% குறைத்து கொடுக்கப்பட்டது. 

இதன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட செயற்கை இழை விஸ்கோஸ் சிந்தடிக் துணிகளை விற்பனை செய்யும்போது 5% விற்பனை வரி போட்டு விற்பனை செய்யும்போது, மீதமுள்ள 7%ம் உள்ளீட்டு வரி இருப்பாக (input credit balance) வரும் தொகையை நாங்கள் மீண்டும் பெறுவதற்கு  நூல் கொள்முதல் செய்த நாளிலிருந்து மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மேல் ஆவதால், எங்கள் தொழில் முதலீடுகள் அனைத்தும் வரி இருப்பாக மாறிவிடுகிறது,

இதனால் விசைத்தறியாளர்கள் நூல் கொள்முதல் செய்வதற்கு அதிகப்படியான கடன் பெறுவதற்கான சூழல் ஏற்படுவதையும், அதற்காக வட்டி கட்டுவதால் தொழில் நஷ்டம் அடைவதை தவிர்ப்பதற்கு, செயற்கை இழை விஸ்கோஸ் மற்றும் சிந்தடிக் நூலுக்கு 12 சதவீதத்திலிருந்து 5% ஆக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
ஈரோடு ஆடி வெள்ளியையொட்டி இந்து சமய அறநிலையத்துறையின் இலவச ஆன்மிக பயணம்

ஈரோடு ஆடி வெள்ளியையொட்டி இந்து சமய அறநிலையத்துறையின் இலவச ஆன்மிக பயணம்


ஈரோடு அருள்மிகு .ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து 3வது ஆடி வெள்ளியையொட்டி ஆன்மிக பயணம் இன்று அழைத்துச் செல்லப்பட்டனர்

ஆடி மாதத்தை ஒட்டி ஈரோடு
மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், இலவச ஆன்மிக சுற்றுலா அறிவிக்கப்பட்டது.

இதன்படி, ஈரோடு அருள்மிகு .ஸ்ரீ  பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து 3வது ஆடி வெள்ளியையொட்டி ஆன்மிக பயணம் இன்று அழைத்துச் செல்லப்பட்டனர்,

பக்தர்கள் பயணிக்கும் 4 சுற்றுலா வேன்களை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் மதன்குமார் தலைமையில், அறங்காவலர் குழு நிர்வாகிகள் மாதேஸ்வரன், ரவிச்சந்திரன், கதிர், சண்முகவடிவு, கீதா மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.    

ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்களுக்கு பக்தர்களுக்கு குடிநீர், காலை சிற்றுண்டி அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. 

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், பண்ணாரி மாரியம்மன், அந்தியூர் பத்ரகாளியம்மன், பவானி செல்லாண்டியம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர், மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மதன்குமார் கூறுகையில் ... ஆடி மாத வெள்ளிகிழமைகளில், இந்த ஒருநாள் ஆன்மிக சுற்றுலா நடக்கும்,  பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும், 60 முதல் 70 வயதிற்கு உட்பட்டவர்கள் வயது சான்றிதழ், மருத்துவ சான்றிதழ், ஆதார் கார்டு, ஆண்டு வருமானம் 2,00,000 ரூபாய்க்கு மிகாமல் இருப்பதற்கான வருமான சான்றுடன் கூடிய விண்ணப்பத்தை, ஈரோட்டில் காந்திஜி சாலையில் உள்ள அறநிலைய துறை இணை ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கு அனுமதி இல்லை. இன்று நான்கு வேன்களில், 72 பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்,

இதேபோல், ஒவ்வொரு ஆண்டும்  ஆடி மாத வெள்ளி கிழமைகளில் ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்படுவர்கள் என தெரிவித்தார்.