திங்கள், 10 நவம்பர், 2025

முதலாம் உலகப் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு, சேலம் வரலாற்றுச் சங்கத்தின் சார்பில் 107 வது ஆண்டு நினைவு அஞ்சலி.

முதலாம் உலகப் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு, சேலம் வரலாற்றுச் சங்கத்தின் சார்பில் 107 வது ஆண்டு நினைவு அஞ்சலி.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

முதலாம் உலகப் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு, சேலம் வரலாற்றுச் சங்கத்தின் சார்பில் 107 வது ஆண்டு நினைவு அஞ்சலி. 

முதலாம் உலகப் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு ஆண்டு தோறும் நவம்பர் 11ஆம் தேதி வீரவணக்க நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 107-வது ஆண்டான என்று வீர மரணம் அடைந்த போர் வீரர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதலாம் உலகப் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. 
சேலம் வரலாற்றுச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு அதன் பொதுச் சயலாளர் பர்னபாஸ் தலைமை வகித்தார். தலைவர் இமானுவேல் ஜெய்சி, செயல் தலைவர் தாரை குமரவேல், ஜென்னிஸ் அகாடமி தலைவர் கரோலின் எபி உள்ளிட்டோர்  முன்னிலை வகித்த நிகழ்வில், சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலாம் உலகப்போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்,
தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவரும் போர் வீரர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதையும் செய்தனர். மேலும் சேலம் மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள வீர மரணம் அடைந்த போர் வீரர்களின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகளையும் வழங்கினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் முதலாம் உலகப் போரின் போது போரில் கலந்து கொண்டு வீர மரணம் அடைந்த வீரர்களின் செயல்கள் நினைவு கூறப்பட்டன. நிகழ்வில் சேலம் வரலாற்றுச் சங்கத்தின் உறுப்பினர்கள் பாபு என்கின்ற சாணவாஸ்கான், புகழேந்தி சாம்ராஜ் பிரதீப் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 9 நவம்பர், 2025

சேலம் தாதகாப்பட்டி சோழிய வேளாளர் சங்கத்தின் சார்பில் ஐம்பெரும்புழா எழுச்சியுடன் நடைபெற்றது.

சேலம் தாதகாப்பட்டி சோழிய வேளாளர் சங்கத்தின் சார்பில் ஐம்பெரும்புழா எழுச்சியுடன் நடைபெற்றது.

சேலம். 
S.K. சுரேஷ் பபு
சேலம் தாதகாப்பட்டி சோழிய வேளாளர் சங்கத்தின் சார்பில் ஐம்பெரும் விழா எழுச்சியுடன் நடைபெற்றது. 

சேலம் தாதகாப்பட்டி சோழிய வேளாளர் சங்கத்தின் சார்பில் கப்பலோட்டிய தமிழர் வ உ சிதம்பரனார் 154வது பிறந்தநாள் விழா, தாதை சோழிய வேளாளர் திருமண தகவல் மையத்தின் 16 ஆம் ஆண்டு துவக்க விழா, சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா, தையல் பயிற்சி முடித்த மகளிருக்கு சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா ஆகியவை சேலம் தாதகாப்பட்டியில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஐம்பெரும் விழாவிற்கு சேலம் தாதை சோழிய வேளாளர் சங்கத்தின் தலைவர் அன்புமணி தலைமையில் நடைபெற்ற விழாவில் நிர்வாகிகள் தங்கவேல் பரமசிவம் சங்கர் குமரவேல் நாதன் அசோக்குமார் மற்றும் சேகோ. ரவிக்குமார் உள்ளிட்டூர் முன்னிலை வகித்தனர். 
தொடர்ந்து நடைபெற்ற ஐம்பெரும் விழா கூட்டத்தில்  சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இனிவரும் காலங்களில் சோழிய வேளாளர் சமூக நலனுக்காக என்னென்ன செய்வது என்பது உள்ளிட்ட யோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தற்போதைய செயல் தலைவராக உள்ள அன்புமணி தலைவராக தேர்ந்தெடுப்பது, ஒவ்வொரு வருடமும் பொதுக்குழு முடிந்தவுடன் செயற்குழு மாற்றி அமைத்திடவும் மற்றும் உறுப்பினர்கள் ஒவ்வொரு வருடமும் தவறாமல் பத்து ரூபாய் வருட சந்தா செலுத்த வேண்டும் என்றும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.
அதுமட்டுமல்லாமல், அதே மண்டபத்தில் சேலம் தாதை சோழிய வேளாளர் நலச்சங்கம் மற்றும் சுவாமி விவேகானந்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவர்கள் ஆலோசனை மகளிர் நல மருத்துவ ஆலோசனை எலும்பு மருத்துவர் ஆலோசனை ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன. எடை ரத்த அழுத்தம் சர்க்கரை அளவு ஆகியவற்றுடன் மருத்துவர் ஆலோசனையின் படி தேவைப்படுபவர்களுக்கு இசிஜி எலும்பு அடர்த்தி பரிசோதனை நுரையீரல் தன்மை  பரிசோதனை ஆகியவற்றுடன் மருந்து மாத்திரைகள் இலவசமாகவும் வழங்கப்பட்டது சோழிய வேளாளர் உட்பட அந்த பகுதி மக்களிடையே வரவேற்பினை பெற்றது. இந்த நிகழ்வுகளில் நிர்வாகிகள் திருநாவுக்கரசு அசோக்குமார் தங்கவேல் உட்பட நிர்வாகிகள் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சேலம் அமரகுந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி இயக்குனர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 12 ஆம் வகுப்பு மாணவனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சேலம் மண்டல உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் சங்கத்தினர் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். ஆசிரியப் பெருமக்களுக்கு தமிழகத்தில் ஆதரவற்ற சட்ட திட்டங்களை உள்ளதாகவும் வேதனை.

சேலம் மாவட்டம் அமரகுந்தியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12 வது வகுப்பு படிக்கும் மாணவன் லோகேஷ் என்பவன் கடந்த மாதம் பத்தாம் தேதி அதே பள்ளியில் பணியாற்றி வரும் உடற்கல்வி ஆசிரியர் முத்துசாமி என்பவரை தனது பெற்றோர் முன்னிலையில் கண்மூடித்தனமாக கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் சேலம் மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் மிகப் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் நாமக்கல் ஈரோடு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கங்கள் இணைந்து சேலத்தில் மண்டல அளவிலான கண்டன ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர். சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் இளங்கோ தலைமை வகிக்க மாநில தலைவர் தேவி செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு பள்ளியில் காவல்துறை விசாரணை செய்த பின் ஆசிரியர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு திரும்பியதாகவும், சம்பவம் நடந்து பல நாட்கள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகள் களம் இறங்கிய பின்னர் காவல் துறை சி எஸ் ஆர் மட்டும் பதிவு செய்ததும் பல போராட்டங்களுக்குப் பிறகு எஃப் ஐ ஆர் போட்டதும் வேடிக்கையாக உள்ளது என்று குற்றம் சாட்டினர். மேலும் மாணவன் மீது கைது நடவடிக்கையில் காவல்துறை பின்வாங்குகிறது என்று வேதனை தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட உடற்கல்வி இயக்குநர்கள், தகாத மற்றும் ஆபாச வார்த்தைகளால் திட்டியும் கொலை வெறி தாக்குதல் நடத்திய மாணவன் லோகேஷ் மற்றும் அவரது பெற்றோர்களை காவல்துறை மூலம் கைது நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் தமிழகத்தில் வேறு எங்கும் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாத வகையில் தடுத்திட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். 
இந்தப் போராட்டம் குறித்து சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் இளங்கோ செய்தியாளர்களிடம் கூறுகையில் ஒரு காலகட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயந்து மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்று கல்வி பயின்று திரும்பிய காலம் போய் இன்று ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்கள் இன்று என்ன செய்வார்களோ என்ற உயிர் பயத்துடன் பள்ளிக்கு சென்று திரும்ப வேண்டிய ஒரு சூழல் தமிழகத்தில் நிலவி வருவதாகவும், ஆசிரியப் பெருமக்களுக்கு உயிர் பாதுகாப்பற்ற சட்டங்களை தமிழகத்தில் உள்ளதாக குற்றம் சாட்டியா அவர்கள் இது போன்ற சட்டங்களை திருப்பி மாணவ மாணவிகளை நல்வழிப்படுத்த ஆசிரியர் பெருமக்களுக்கு வழிவகை செய்யும் வகையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் தவறும் பட்சத்தில் தமிழக அளவில் இந்த போராட்டத்தை ஒன்றிணைத்து சென்னையில் விரைவில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் தேவபிரபு முத்துக்குமரன் ரமேஷ் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆசிரியர் பெருமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

சனி, 8 நவம்பர், 2025

பார்பிகுயின் உணவக நிறுவனத்தின் சார்பில் இரண்டாவது ஆண்டு படைப்பாக வர்ணங்கள் ஆயிரம் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான மெகா ஓவிய போட்டி. பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு.

சேலம் உட்பட தமிழகத்தின் பிரபல உணவக நிறுவனமான பார்பிகுயின் சார்பில் ஆண்டுதோறும் குழந்தைகளை நல்வழிப்படுத்தும் விதமாகவும் பொது சேவைக்காகவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதில் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். அதில் மிகுந்த வரவேற்ப்பனையும் பெற்றுள்ள இந்த பார்பி குயின் உணவக நிறுவனம் இரண்டாம் ஆண்டு படைப்பாக குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கான மெகா ஓவிய போட்டி சேலம் குகை பகுதியில் உள்ள பார்பி குயின் உணவக வளாகத்தில் நடத்தியது. 
இந்த போட்டிக்கான துவக்க நிகழ்ச்சிக்கு உணவக நிறுவனத்தின் உரிமையாளர் நவ்ஷத் தலைமை வகித்த நிகழ்வில், சேலத்தைச் சேர்ந்த வணிக வணிக தலைமை பயிற்சியாளரும் மற்றும் உளவியலாளருமான வேள்பாரி நடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியினை துவக்கி வைத்தார். 
சேலம் மாநகரத்தின் பல்வேறு பகுதிகள் உட்பட மாவட்டம் முழுவதிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இரண்டாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு வரைபடங்களில் வர்ணம் தீட்டுதல், ஐந்து முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பண்டிகை கொண்டாட்டங்கள் மற்றும் எட்டு முதல் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு என 2030 தொலைநோக்கு பார்வை என்ற தலைப்பில் மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. 
இதில் வெற்றி பெரும் நோட்டில் போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தங்களது முழு திறமைகளை வெளிப்படுத்தி ஓவியங்களை தீட்டி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியின் போது நிர்வாக இயக்குனர் நவ்ஷத், வணிக தலைமைத்துவ பயிற்சியாளரும் உளவியலாளருமான வேள்பாரி நடேசன், உதவி நிர்வாக இயக்குனர் பையாஸ் மற்றும் அனைத்து கிளை நிறுவனங்களின் பொது மேலாளர் உமர் உள்ளிட்டோர் மாணாக்கர்களின் வெளிப்பாட்டு திறமையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசாக மூன்று நபர்களுக்கு மிதிவண்டியும், இரண்டாம் பரிசாக மூன்று நபர்களுக்கு மிக்ஸிகளும் மற்றும் மூன்றாவது பரிசாக மூன்று நபர்களுக்கு குக்கர்களும் ஆகியவற்றுடன் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தனர். பார்பி குயின் நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

வெள்ளி, 7 நவம்பர், 2025

சேலம் சாஸ்தா நகர் ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தில் வரும் 17ஆம் தேதி முதல் மண்டல பூஜை ஆரம்பித்து ஜனவரி 14 ஆம் தேதி வரை உற்சவம், மகரஜோதி மற்றும் திரு ஆபரண தரிசனம் நடைபெற  உள்ளதாக ஸ்ரீ ஐயப்பா ஆசிரம டிரஸ்ட் தலைவர் கே பி நடராஜன் தகவல்.

சேலம் குரங்கு சாவடி ஸ்ரீ சாஸ்தா நகர் ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தின் தலைவர் கே பி நடராஜ், செயலாளர் சண்முகம் மற்றும் பொருளாளர் சரவணன் பெருமாள் ஆகியோர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தில் வரும் 17ஆம் தேதி முதல் ஜனவரி 14ஆம் தேதி மண்டல பூஜை தொடங்கி, வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி வரை உற்சவம் மகரஜோதி மற்றும் திரு ஆபரண தரிசனம் நடைபெற உள்ளதாக தெரிவித்த அவர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து நாள்தோறும் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சிறப்பு அன்னதானம் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும், கடந்த வருடத்தைப் போல இந்த வருடம் 4500 முதல் 6000க்கும் மேற்பட்ட வெளி மாநில பக்தர்கள் நடைபயணமாக ஆந்திரா விசாகப்பட்டினம் விஜயவாடா ஹைதராபாத் கர்நாடகா மும்பை பெங்களூர் மைசூர் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வர இருப்பதாகவும் அவர்களுக்கு அனைத்து வசதிகளும் அறக்கட்டளை மூலம் செய்து தர உள்ளதாகவும் தெரிவித்தனர். 
மேலும் சேலம் ஸ்ரீ ஐயப்பா ஆசிரமத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இருமுடி கட்டி சபரிமலை சென்று சுவாமி தரிசனம் செய்து மீண்டும் சேலம் வரும் வரை அவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்பட உள்ளதாகவும் இந்த ஆசிரமத்திற்கு பொருட்கள் மற்றும் நன்கொடை வழங்குபவர்கள் கோவில் அலுவலகத்தில் முறைப்படி செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ளுமாறு அறக்கட்டளை சார்பாக கேட்டுக் கொள்வதாகவும் இந்த ஆசிரமத்தை பொறுத்தவரை ஆசிரமத்தின் பெயரை பயன்படுத்திக்கொண்டு வெளிநபர்கள் பணம் வசூலிப்பதற்கோ பொருட்களை வாங்குவதற்கோ ஸ்ரீ ஐயப்பா அறக்கட்டளை சார்பாக யாரையும் நியமிக்கப்படவில்லை எந்த சங்கத்திற்கும் அனுமதி வழங்கவில்லை அவ்வாறு யாராவது வசூலித்தால் ஐயப்பா ஆசிரமம் டிரஸ்ட் நிர்வாகம் பொறுப்பில்லை என்றும் தெரிவித்தனர்.
காங்கிரஸ் கட்சி மனித உரிமை துறையின் சேலம் பாராளுமன்ற தலைவராக இர்பான் நியமனம். நியமனம் மற்றும் பரிந்துரை செய்த நிர்வாகிகளுக்கு புதிய தலைவர் நன்றி.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறைக்கு பாராளுமன்ற தொகுதி வாரியாக தலைவர்கள் நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியுறது நல்லாசியுடன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறையின் தலைவர் அபிஷேக் மாங் சிங்வி ஆலோசனையின் படி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அவர்களின் ஒப்புதலின்படியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மனித உரிமை துறைக்கு பாராளுமன்ற தொகுதி வாரியாக புதிய தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு சுரேந்தர், திருவள்ளூர் தொகுதிக்கு பிரகாஷ் குமார், வடசென்னை தொகுதிக்கு சென்னை விஷ்வா, மத்திய சென்னை தொகுதிக்கு ஷாம் ஜெயகரன்,  சேலம் தொகுதிக்கு இர்பான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல ராமநாதபுரம் தொகுதிக்கு முகமது அபுதாஹிர், தென்காசி தொகுதிக்கு ராஜாராம் மற்றும் கன்னியாகுமரி தொகுதிக்கு டான் பெரின் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மனித உரிமை துறை சேலம் மாவட்ட தலைவராக இருந்த இர்பான், தற்போது சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு தலைவராக நியமிக்கப்பட்டதற்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மனித உரிமை துறை மாநில தலைவர் புரட்சித் தோழர் மகாத்மா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும், பரிந்துரை செய்த பர்மா பஜார் நாகூர் கனி அவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள சேலம் பாராளுமன்ற தொகுதி  காங்கிரஸ் மனித உரிமை துறையின் புதிய தலைவர் இர்பான் அவர்களுக்கு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
தமிழர்களின் கலாச்சாரத்தை சீரழித்து திருச்சி சரத் என்பவர் நடத்திவரும் மன்மதன் கானா பாய்ஸ் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதோடு சரத் உள்ளிட்ட ஆபாச நடனம் ஆடும் பெண்களை கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தமிழ்நாடு கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் மற்றும் திருநங்கை மாற்று திறனாளி அனைத்து கலைஞர்கள் நலச் சங்கத்தினர் சேலம் S.P அலுவலகத்தில் புகார் மனு.

தமிழகத்தில் கோவில் திருவிழாக்கள் மற்றும் முக்கிய விழாக்களின் போது, மேடை நடன நிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்களை மகிழ்விப்பது வாடிக்கையான ஒன்று. ஆனால் தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் மேடை நடன நிகழ்ச்சிகளில் ஆபாச நடனமும் எந்த ஒரு ஜாதியை ஊக்கப்படுத்தும் பாடல்கள் ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று என்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. 
தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் இது போல நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் அசம்பாவிதங்களும் குற்றங்களும் நடந்துவிடும் என்று ஐயம் உள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கட்சி பள்ளி கோணாங்கியூர் ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மன்மதன் பாய்ஸ் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி கடந்த நான்காம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருச்சி சரத் பெங்களூரை சேர்ந்த லட்சுமி அஞ்சாம் ப்ரீத்தி தியா பாண்டி மானிய மற்றும் நிலா உள்ளிட்டூர் அருவருக்கத்தக்க மிகவும் மோசமான முறையில் ஆபாச நடனம் ஆடியுள்ளனர்.
தமிழர்களின் கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக நிகழ்த்தப்படும் இதுபோன்ற நிகழ்வுகள் சம்பந்தமாக தமிழ்நாடு கிராமிய நாட்டுப்புற மேடை நடன கலைஞர்கள் மற்றும் திருநங்கை மாற்றுத்திறனாளி அனைத்து கலைஞர்கள் நலச் சங்கத்தின் சார்பில் அதன் மாநில பொது  செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றினை அளித்தனர். அந்த மனுவில் ஏற்கனவே திருச்சியை சார்ந்த மதன் என்பவர் மன்மதன் கானா பாய்ஸ் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
இவர் நடத்தக்கூடிய நிகழ்ச்சிகள் அனைத்தும் மிக மிக ஆபாசமான முறையில் உடைகளை அணிந்து பெண்களை நடனமாக வைப்பதாகவும் கணவன் மனைவி இருவருக்கும் நான்கு சுவற்றுக்குள் நடக்கக்கூடிய நிகழ்வை போல மேடையில் ஒளிபரப்ப கூடிய பாடலுக்கு பெண்களை உடலில் தொடக்கூடாது இடத்தில் தொட்டு நடனமாட வைக்கின்றார் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பலமுறை காவல் நிலையங்களில் திருச்சி சரத் என்பவர் மீது புகார் அளிக்கும் இதற்கு உண்டான எஃப் ஐ ஆர் பதிவு செய்யாமல் சிஎஸ்ஆர் காப்பி மட்டுமே வழங்கி தங்களை அலைக்கழிப்பதோடு தங்கள் புகார் மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை குறிப்பிடப்பட்டிருந்த மனுவில், திருச்சி சிவா என்பவர் ஒவ்வொரு முறையும் அவர் செய்யும் தவறுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளதால் திருச்சி சரத் பெங்களூர் லட்சுமி அஞ்சாம் ப்ரீத்தி தியா பாண்டி மானிய நிலா சுமிதா இவர்கள் அனைவரையும் கடுமையான சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்குமாறு சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை கேட்டுக் கொள்வதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். கிராம கோவில்களில் இது போன்று நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளில் அருவருக்கத்த மற்றும் ஆபாசமான முறையில் நடத்தப்படும் இது போன்ற நடன நிகழ்ச்சி குழுக்களை உடனடியாக தமிழக அரசும் சேலம் மாவட்ட நிர்வாகமும் தடை விதிக்க வேண்டும் என்று அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பார்த்திபன் கேட்டுக்கொண்டார்.