வெள்ளி, 19 டிசம்பர், 2025

உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் 41வது ஆண்டு நினைவு தினம். நாளை கோவை வையம்பாளையத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் புகழ் பறைசாற்றும் நிகழ்வு.. தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பங்கேற்க நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக அழைப்பு..

உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் 41வது ஆண்டு நினைவு தினம். நாளை கோவை வையம்பாளையத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் புகழ் பறைசாற்றும் நிகழ்வு.. தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பங்கேற்க நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக அழைப்பு..

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் 41வது ஆண்டு நினைவு தினம். நாளை கோவை வையம்பாளையத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் புகழ் பறைசாற்றும் நிகழ்வு.. தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பங்கேற்க நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக அழைப்பு..

தமிழக விவசாயிகள் சங்க நிறுவனரும், உழவர் பெருந்தகை என்று அனைத்து விவசாய பெருங்குடி மக்களாலும் போற்றப்படும், நாராயணசாமி நாயுடு அவர்களின் 41 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக அழைப்பு ஒன்றினை தமிழக விவசாயிகளுக்காக வெளியில் உள்ளார். அதில், தமிழக விவசாய பெருங்குடி மக்களுக்காக தமிழகத்தில் கடந்த 1970 முதல் 1980 கடுமையான வறட்சி நிலவியது,  அப்போது தமிழக விவசாயிகள் வேளாண் பணிகளை தொடங்குவதற்கு நிதி கையிருப்பு இல்லாமல் தவித்தனர். பல சிரமங்களுக்கு இடையிலும் வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், அப்போதைய தமிழ்நாடு அரசு மூலம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் மற்றும் பண்ணை அபிவிருத்தி கடன் பெற்று, கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் பயிர் செய்துவந்தனர்.
கிணறு பாசனத்தை நம்பி பயிர் செய்யும் விவசாயிகள், தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் மூலம், கிணற்று மோட்டாருக்கு மின் இணைப்பு பெற்று, பயிர் செய்தனர், அவ்வாறு அவர்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்கு அதிக கட்டணம் மின் வாரியத்தால் வசூலிக்கப்பட்டு வந்தது. இயற்கை சீற்றம் மற்றும் பருவம் தவறிய மழை பொழிவின் காரணமாக விளைச்சல் இல்லாததால் விவசாயிகளால் மின்சார கட்டணத்தை கட்டமுடியாத நிலையில் மின்சார வாரியம் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நெருக்கடி கொடுத்து வந்தது.
ஒரு புறம் கடுமையான வறட்சி நிலவிய நிலையில், தமிழக விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம்  வாங்கிய பயிர் கடன்  மற்றும் பண்ணை சாராத கடனை திருப்பி செலுத்த இயலவில்லை.
கடனை திருப்பி செலுத்தாவிட்டால் தமிழ்நாடு அரசு ஜப்தி என்ற சட்டத்தின் படி, விவசாயிகள் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்து நடவடிக்கை எடுக்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் முயற்சித்தினர்.
தமிழக விவசாயிகள் படும் இன்னல்களை கருத்தில் கொண்டு சிதறிய நெல்லிக்காய் போல் கிடந்த தமிழக விவசாயிகளை, கடன் தொல்லை, மின்சார கட்டணம்  உயர்வு போன்ற துயரங்களில் இருந்து காப்பாற்றுவதற்காக,   தமிழக விவசாயிகள் சங்கத்தை தோற்றிவித்து  மறைந்த உழவர் பெருந்தலைவர் C . நாராயணசாமி நாயுடு அவர்கள் தலைமையில் 1970 முதல் 1980 வரை தமிழகம் தழுவிய அளவில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது. 
கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த போராட்டத்தில், தமிழ்நாடு அரசு காவல்துறை நடத்திய துப்பாக்கி  சூட்டில், துப்பாக்கி குண்டுக்கு இறையாக்கி  53 விவசாயிகளும் இறந்துள்ளனர். 
‌கிணற்று மோட்டாருக்கு தமிழக அரசு யூனிட்டுக்கு பழைய கட்டணம் 8 பைசாவில் இருந்து 9 பைசாவாக கட்டணம் உயர்வின்  காரணமாக தமிழக விவசாயிகள் சங்கம்‌ சார்பில் ஒரு பைசாவாக உயர்த்தியதை அரை பைசாவாக குறைக்க கோரி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றதில் தமிழகம் முழுவதும் ஸ்தம்பித்து அப்போது தமிழகத்தில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களை தமிழக விவசாயிகள் சங்க  போராட்டத்தின் வாயிலாக மறைந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் தமிழக அரசை பணியவைத்தார்.
5.7.1972 ல் இந்த முதல் போராட்டத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெத்தநாயக்ன்பாளையம் பகுதியை சார்ந்த 9 விவசாயிகள் மீது தமிழக காவல்துறை துப்பாக்கி சுடு நடத்தியதில் விவசாயிகள் உயிரிழந்தனர், இது போல் பல தினங்களில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம், தமிழகம் முழுவதும் நடைபெற்றதில்  வேடசந்தூர், பெருமாநல்லூர் ,கோயில்பட்டி , குறிஞ்சாங்குளம் ஆகிய பகுதிகளில் 53 தமிழக விவசாயிகள் மீது தமிழ்நாடு அரசு காவல்துறை துப்பாக்கி சுடு ‌நடத்தி, விவசாயிகளை கொன்று குவித்தது. 
தமிழக அரசு தமிழகத்தில் முதல் துப்பாக்கி சுடு நடத்திய  நாளான 5.7.1972 மறைந்த தியாகிகளுக்கு ஆண்டு தோறும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில்  வீரவணக்க
நாளாக கடைபிடித்து வருகிறோம். தமிழக விவசாயிகள் கிணறு மோட்டார் மூலம் பாசனம் செய்ய இலவச மின்சாரம் கிடைக்க வழிவகை உருவாக்கி கொடுத்தது, தமிழக விவசாய சங்கம் மூலம் தான் இலவச மின்சாரம் கிடைக்க பெற்றது என்று இன்றைய தலைமுறை விவசாயிகள் கருத்தில் கொள்ளவேண்டும்.  
கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் கோயில்பாளையம் அருகே உள்ள வையம்பாளையம் கிராமத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் மணிமண்டபத்தில் நாளை  காலை 10 மணிக்கு தமிழக விவசாயிகள் சங்கத்தை தோற்றிவித்து உருவாக்கிய மறைந்த உழவர் பெருந்தலைவர் திரு.C.நாராயணசாமி நாயுடு  அவர்களின் 41 ஆம் ஆண்டு மறைவு தினத்தை முன்னிட்டு புகழ் படைசாற்றும் வகையில் மலர் தூவி மரியாதை செலுத்துவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் வருகை தரும்படி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அழைக்கிறேன் என்று உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.
சேலம் வரலாற்று சங்கத்தின் சார்பில் இரு பெரும் விழா.

சேலம் வரலாற்று சங்கத்தின் சார்பில் இரு பெரும் விழா.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் வரலாற்று சங்கத்தின் சார்பில் இரு பெரும் விழா. 

சேலம் வரலாற்று சங்கத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா ஆகியவை சேலம் அஸ்தம்பட்டி சிஎஸ்ஐ பாலர் ஞான எழுத்தில் நடைபெற்றது. சேலம் வரலாற்றின் அடையாளங்கள் என்ற பெயரில் சேலம் வரலாறு சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜே பரண பாஸ் எழுதிய இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சேலம் வரலாறு சங்கத்தின் தலைவர் இமானுவேல் ஜெயசிங் தலைமை வகித்தார். சேலம் வரலாறு சங்கத்தின் பொருளாளர் ஞானதால் வரவேற்புரை நிகழ்த்திய இந்த விழாவில் சேலம் வரலாற்று சங்கத்தின் மேனாள் தலைவர் பேராசிரியர் ஜெயக்குமாரி அனிபால்ட் நூலினை வெளியிட்டு மகிழ்வுறை ஆற்றினார். 
சேலம் வரலாற்றுச் சங்கத்தின் செயல் தலைவர் தாரை குமரவேலு கலந்து கொண்டு நூலின் முதல் படியை  பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார். ஈரோடு இதழாளர்  பதிப்பாளர் மற்றும் எழுத்தாளருமான நற்றமிழ் பாவலர் சந்திரா மனோகரன் நூலாய்வு நடத்திய இந்த நிகழ்வில் எழுத்தாளர் இடைப்பாடி அமுதன் சிறப்புரையும் சேலம் வரலாற்று சங்கத்தின் பொதுச்செயலாளர் நூல் ஆசிரியருமான ஜே பர்னபாஸ் ஏற்புரையுடன் நன்றி உரையும் ஆற்றினார். சேலம் ஜாமியா மசூதியின் மொத்த வள்ளி எஸ் ஆர் அன்வர் ஏற்காடு எழுத்தாளர் இளங்கோ தமிழறிஞர் சுல்தான் மற்றும் தொழிலதிபர் ஈசன் எழில் விழியன் உள்ளிட்ட ஒரு கலந்து கொண்ட விழாவில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவும் கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது மட்டுமல்லாமல் மதிய உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது போக சேலம் அஸ்தம்பட்டி சிஎஸ்ஐ பாலர் ஞான இல்லத்தில் உள்ள சிறப்பு குழந்தைகளுக்கு மதிய உணவும் சேலம் வரலாற்றுச் சங்க நிர்வாகத்தின் சார்பில் வழங்கி இரு பெரும்  விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இஸ்லாமிய பெண்ணுக்கு எதிரான கொடுஞ்செயல். இந்திய தண்டனைச் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் பீகார் முதல்வருக்கு அரபு நாடுகளை போன்று அதிகப்படியான தண்டனை விதிக்க வேண்டும்.. சேலத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

இஸ்லாமிய பெண்ணுக்கு எதிரான கொடுஞ்செயல். இந்திய தண்டனைச் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் பீகார் முதல்வருக்கு அரபு நாடுகளை போன்று அதிகப்படியான தண்டனை விதிக்க வேண்டும்.. சேலத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

இஸ்லாமிய பெண்ணுக்கு எதிரான கொடுஞ்செயல். இந்திய தண்டனைச் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் பீகார் முதல்வருக்கு அரபு நாடுகளை போன்று அதிகப்படியான தண்டனை விதிக்க வேண்டும்.. சேலத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

பீகாரில் நடைபெற்ற அரசு அரசு பணி விழா ஒன்றில் கலந்துகொண்ட இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் எனப்படும்  மதரீதியான உடை அணிந்து வந்து விழா மேடையில் கலந்து கொண்டார். முதலமைச்சர் நிதிஷ்குமார் இடம் பணி ஆணையை பெரும்போது, பீகார் முதலமைச்சர் இஸ்லாமிய பெண் அணிந்திருந்த ஹிஜாப் உடையை  முகத்தில் இருந்து விளக்கிய அந்த செயல், நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இடையே  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து மாநிலங்கள் தோறும் பீகார் முதலமைச்சரின் இந்த செயலுக்கு வன்மையான கண்டனங்களும் பல்வேறு போராட்டங்களும் நிகழ்ந்து கொண்டு உள்ளன. 
அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பீகார் முதலமைச்சருக்கு  எதிராக சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட தலைவர் மூஸா தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில பொதுச் செயலாளர் இம்தியாஸ், மாவட்ட அமைப்பு செயலாளர் சுல்தான், மாவட்ட செயலாளர் அலாவுதீன் மற்றும் மாவட்ட பொருளாளர் ஹன்னு என்கின்ற சாதிக் பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கு  எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பியதோடு மட்டுமல்லாமல், திருக்குர்ஆன் எங்களது உயிர், இஸ்லாத் எங்களுடைய உயிர் மூச்சு, இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளபடி பெண்கள் உடை அணியும் முறை  இஸ்லாமியர்களின் உரிமை என்று முழக்கமிட்டனர்.
அனைத்து மதத்தினரும் சமமாக வழி நடத்தப்படும் இந்திய திருநாட்டில், சிறுபான்மையினரான இஸ்லாமிய பெண்ணுக்கு,  பீகாரின் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், உடனடியாக அவரது பதவி பறிக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்ட இஸ்லாமிய பெண்ணிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இறுதியாக இந்திய திருநாட்டில் தண்டனைச் சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்பதன் அடிப்படையில் அரபு நாடுகளில் வழங்குவதைப் போல மிக அதிகப்படியான தண்டனையை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு இந்திய திருநாடு வழங்கி முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் அஸ்லாம் முஸ்தபா ஜிலான் அம்ஜத் அஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தினர்.

புதன், 17 டிசம்பர், 2025

பீகாரில் இஸ்லாமிய பெண்ணை பொது நிகழ்ச்சியில்  அசிங்கப்படுத்திய விவகாரம். முதலமைச்சரின் நிதிஷ்குமாருக்கு எதிராக போர் கொடி உயர்த்தி உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள்.

பீகாரில் இஸ்லாமிய பெண்ணை பொது நிகழ்ச்சியில் அசிங்கப்படுத்திய விவகாரம். முதலமைச்சரின் நிதிஷ்குமாருக்கு எதிராக போர் கொடி உயர்த்தி உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

பீகாரில் இஸ்லாமிய பெண்ணை பொது நிகழ்ச்சியில்  அசிங்கப்படுத்திய விவகாரம். முதலமைச்சரின் நிதிஷ்குமாருக்கு எதிராக போர் கொடி உயர்த்தி உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள். 

பீகாரில் ஐந்தாவது முறையாக முதலமைச்சராக ஆகியுள்ள நிதிஷ்குமார், நேற்று முன்தினம் நடைபெற்ற அரசு விழாவில் இஸ்லாமிய பெண்ணுக்கு நல உதவி வழங்கியதோடு மட்டுமல்லாமல் அணிந்திருந்த ஹிஜாப் என்ற உடையை பிடித்து இழுத்து பொது மேடையில் வைத்து அவரை மதரீதியாக அசிங்கப்படுத்தியுள்ளார். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தின் எதிரொலியாக சேதத்திலும் பீகார் முதல்வருக்கு எதிரான கண்டன குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த இஸ்லாமிய அமைப்பினர் உட்பட ஏனைய கட்சியினர் நிதிஷ் குமாரின் முதலமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் பொது இடத்தில் பகிரங்கமாக அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிதிஷ்குமார் எதிராக வழித்து வருகின்றன. இந்த நிலையில் நிதிஷ்குமாரின் இந்த செயல் சேலம் மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. தொடர்ச்சியாக கண்டன குரல்களும் கண்டன பதிவுகளும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சில மாநகர் மாவட்ட செயலாளர் காஜா மைதீன் தனது கண்டனத்தை பதிவு செய்கையில், 
ஹிஜாப் என்ற உடை அணிவது இஸ்லாமியர்களின் தொன்று தொட்டு நடக்கக்கூடிய தலையாய கடமை ஆகும். அப்படி இருக்க முதலமைச்சர் கலந்து கொள்ளும் அரசு விழா ஒன்றில் கலந்து கொள்பவர்களை காவல்துறையினர் பல கட்டங்களாக சோதனை மேற்கொண்டு தான் விழாவிற்குள் அனுமதிப்பார்கள். இந்த நிலையில் பொது நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஒரு முதலமைச்சர் பொறுப்பில் உள்ள நிதிஷ்குமார் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை இழுத்து அசிங்கப்படுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், பௌத்த மதத்தினர் வாயில் திரையிட்டு பயணிப்பதும், இதே போல சீக்கியர்கள் பாரம்பரியமாக தங்களது இடுப்பு பகுதியில் குத்து அருவாளை வைத்திருப்பதும் பாரம்பரியமாக கருதுகின்றனர் அவர்களிடம் அதாவது சீக்கியர்களிடம் குத்தறுவாளை எடுத்தோ அல்லது பௌத்த மதத்தினர் அணிந்துள்ள முகத்திரையை அவில்தோ அவர்களை அசிங்கப்படுத்த தைரியம் உண்டா நிதீஷ் குமாருக்கு என்று கேள்வி எழுப்பிய அவர் இஸ்லாமிய பெண்ணை அசிங்கப்படுத்திய நிதீஷ் குமாரை கண்டித்து சேலத்தில் விரைவில் மிகப்பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். 
இதே போல இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் இம்தியாஸ் கூறுகையில், 
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு மற்ற மதத்தினரை புண்படுத்துவதும் அசிங்கப்படுத்துவதும் வாடிக்கையான ஒன்று என்று கூறிய அவர் பல உதாரணங்களை முன் வைத்தார். அந்த வகையில் சிறுபான்மை சமூகமான இஸ்லாமிய பெண்ணை ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பொது நிகழ்வில் இது போன்று அவர் அசிங்கப்படுத்தியது அவமானப்படுத்தியது மிகப்பெரிய கண்டனத்திற்கு உரியது என்றும் உடனடியாக முதல்வர் பதவி வகிக்கும் நிதீஷ் குமாரிடமிருந்து அந்த பதவியை பறிக்க வேண்டும் என்றும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். 
அது மட்டுமல்லாமல் சேலம் ஜாமியா மசூதியில் டிரஸ்டி இமாம் அகமது தனது ஆதங்கத்தை பதிவிடுகையில்,
இறைத்தூதர் ஷல் அல்லா அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த பெண்கள் ஹிஜாப் அணிவது அவர்களது உரிமை என்றும் அந்த உரிமையை மீறும் வகையில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய தலைவர்கள் ஒன்றிணைந்தும், கூடுதலாக நீதிமன்றங்கள் தாமாக முன்வந்து நிதிஷ்குமார் அவர்களின் முதலமைச்சர் பதவியை உடனடியாக பறிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 
இதே போல தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி தனது ஆதங்க குரலில் வெளிப்படுத்துகையில், பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் தனது முகத்தை காட்டுவதும் அதை ஹிஜாப் அணிந்து மறைப்பதும் அவரவர் விருப்பம் என்று பதிவிட்ட அவர், நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்திருக்கும் இந்த சூழலில் அவர் தானாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் தற்பொழுது பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் காரணத்தினால் எந்த தலைவரை அவரை மகிழ்விப்பதற்காக இது போன்ற செயலில் ஒரு மதத்தை சார்ந்த பெண்ணை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தியது சரியா என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளார். நாடு முழுவதும் எழுந்துள்ள பீகார் முதலமைச்சரின் இந்த செயலுக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் என்ன பதில் கூறுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

செவ்வாய், 16 டிசம்பர், 2025

ஈரோடு தாலுக்கா காவல் நிலையம் - சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்தியநபர் கைது

ஈரோடு தாலுக்கா காவல் நிலையம் - சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்தியநபர் கைது

ஈரோடு தாலுக்கா காவல் நிலையம் - சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்திய
நபர் கைது

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.A.சுஜாதா அவர்களின் நேரடி மேற்பார்வையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 16.12.2025 ம் தேதி மாலை ஈரோடு தாலுக்கா காவல் நிலையத்திற்குட்பட்ட தெற்கு பள்ளம், வன்னியர் காலனியில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஈரோடு தாலுக்கா காவல் நிலைய போலீசார் மேற்படி வன்னியர் காலனியில் உள்ள மினியப்பன் என்பவரின் மகன் சிவலிங்கம்(49) என்பவருக்கு சொந்தமான உபயோகப்படுத்தப்படாத வீட்டின் பின்புறம் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் மாரிமுத்து (எ) பாம்புகாரர் ரமேஷ்(64) என்பவருடன் சேர்ந்து சட்ட விரோதமாக 3 கஞ்சா செடிகளை (1/2 அடியில் 2 செடிகள் மற்றும் 3 அடியில் 1 செடி எடை 300 கிராம்) வளர்த்து வந்தது தெரியவந்தது. மேலும் அவ்விடத்திலிருந்த மேற்படி சிவலிங்கம் மற்றும் மாரிமுத்து (எ) பாம்புகாரர் ரமேஷ் ஆகியோரை பிடித்து விசாரித்தும், அவர்களுக்கு சொந்தமான அவ்விடத்தில் நிறுத்தப்பட்டிருந்த Hero Pleasure TN 56 MM 5091 மற்றும் Honda Activa TN 56 P1026 ஆகிய இரண்டு இருசக்கர வாகனங்களிலும் சோதனை செய்த போது அதிலிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தலா 100 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த கஞ்சா, கஞ்சா செடிகள், இருசக்கர வாகனங்களை மற்றும் எதிரிகளை நிலையம் கொண்டுவரப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இஸ்லாமிய பெண்ணிடம் பீகார் முதலமைச்சர் அத்து மீறிய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேசிய மக்கள் கட்சியின் மாநில செயலாளர் ராம்ஜி சேலத்தில் காட்டம்.

இஸ்லாமிய பெண்ணிடம் பீகார் முதலமைச்சர் அத்து மீறிய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேசிய மக்கள் கட்சியின் மாநில செயலாளர் ராம்ஜி சேலத்தில் காட்டம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

இஸ்லாமிய பெண்ணிடம் பீகார் முதலமைச்சர் அத்து மீறிய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேசிய மக்கள் கட்சியின் மாநில செயலாளர் ராம்ஜி சேலத்தில் காட்டம். 

பீகார் மாநிலத்தில் நேற்று அரசு விழா ஒன்றில் தேர்ந்தெடுக்க பெண்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான நிகழ்வு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் திருடன் இருந்த அந்த பொது இடத்தில், சற்று நீ எதிர்பாராத வகை இஸ்லாமிய பின் ஒருவர் பணியாணி வாங்கும்போது அவர் அணிந்திருந்த ஹிஜாப் என்னும் அவரது மத ரீதியான உடையை தகர்த்து, அந்தப் பெண்ணே அசிங்கப்படுத்தியதோடு மத ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டார் பீகார் முதலமைச்சர். இதற்காக நாடு முழுவதும் பல்வேறு கண்டங்கள் எழுந்த நிலையில் தமிழகத்திலும் தற்பொழுது இதற்கான எதிர்ப்பு வலுத்து வருகிறது. 
அந்த வகையில் சேலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது எதிர்ப்புகளை வெளியிட்டு இருந்த நிலையிலும் கூட தேசிய மக்கள் கட்சியின் மாநில செயலாளர் ராம்ஜி தனது வன்மையான கண்டனக் குரலை பதிவிட்டுள்ளார். ஐந்தாவது முறையாக ஆட்சி பொறுப்பில் இருந்த நிதிஷ்குமார் தற்பொழுது பாஜக கூட்டணியுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்ற சில காலத்திலேயே சிறுபான்மையினரின் உரிமையை பறிக்கும் வகையில் பொது இடத்தில் செயல்பட்டது கண்டிக்கத்தக்கது.
எதிர்வரும் காலத்தில் இது நாடு முழுவதும் தொடர்கதை ஆகிவிடும் என்றும் தெரிவித்த அவர், பௌத்த மதத்தைச் சார்ந்த பெண்களும் ஆண்களும் தங்களது வாய்களில் மாஸ்க் அணிந்து கொண்டு தங்களது பணியை மேற்கொள்ளுவதும், இதே போல சீக்கியர்கள் தங்களது இடுப்பில் குற்றவாளி வைத்திருக்கும் தருணமும் தற்பொழுது வரை இந்திய திருநாட்டில் நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளது. அப்படி இருக்க பௌத்த மதத்தை சார்ந்த அவர்களின் முகத்திரையை கிழிக்க முடியுமா அல்லது சீக்கியர்கள் வைத்துள்ள அந்த குற்றவாளி நித்திஷ் குமார் அவர்களால் பறிக்க முடியுமா என்ற கேள்வியும் தற்பொழுது வன்மையாக இருந்துள்ளது என்றும் தனது ஆதங்கத்தில் தேசிய மக்கள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ராம்ஜி பதிவிட்டுள்ளார். உடன் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மனும் உடன் இருந்தார்.

திங்கள், 15 டிசம்பர், 2025

சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தல். வெற்றியாளர்களுக்கு ஆசிரியர் பெருமக்கள் வாழ்த்து.

சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தல். வெற்றியாளர்களுக்கு ஆசிரியர் பெருமக்கள் வாழ்த்து.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு

சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தல். வெற்றியாளர்களுக்கு ஆசிரியர் பெருமக்கள் வாழ்த்து.

சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட இளம் வயது தடகள வீரர்களுக்கான கண்டுபிடிப்பு போட்டியில்  100 மீட்டர், 200 மீட்டர் ,400 மீட்டர் ஓட்டத்திலும் மற்றும்  600 மீட்டர் ஓட்டத்திலும்,  நீளம் தாண்டுதல் ,உயரம் தாண்டுதல் ,குண்டேறிதல் வட்டு எறிதல்  ஆகிய  போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற  மாணவர்களுக்கான சான்றிதழ்கள், பதக்கங்களை முன்னாள் மாணவரும், மாநில வருவாய்த்துறை துணைத் தலைவரும் அர்த்தநாரி அவர்கள்  மாணவர்களுக்கு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
மற்றும் மாவட்ட தடகளப்  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் யுதிஷ்டன் குண்டு எறிதல்  போட்டியில் முதலிடம், வட்டு எறிதல்  போட்டியில் இரண்டாம் இடம், உயரம் தாண்டுதலில் உதயகுமார் இரண்டாம் இடமும் பெற்று மாநில அளவிலான குடியரசு தின போட்டிக்களிலும் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கான பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இப்பள்ளியின்  தலைமையாசிரியர் அருட்திரு ஜோதி பெர்னாண்டோ உதவி தலைமை ஆசிரியர் அருட்திரு டேவிட் கலந்துகொண்டு மாணவர்களை பாராட்டினர். பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் ராபர்ட் அவர்களும், உடற்கல்வி ஆசிரியர்கள் சுவாமிநாதன்,அல்போன்ஸ், அந்தோணி ராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களை ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் பாராட்டினர்.