ஞாயிறு, 21 டிசம்பர், 2025

தமிழக விவசாயிகளின் பெருங்குடி தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 41 வது ஆண்டு நினைவு தினம். கோவை அருகே உள்ள அவரது மணி மண்டபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய பெருங்குடி மக்களும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பு. தமிழக விவசாயிகளின் கோரிக்கையை தற்போது வரை ஏற்க மறுத்துள்ள தமிழக அரசுக்கு எதிராக வரும் 29ஆம் தேதி தமிழக முழுவதும் பால்   மாநில சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் கரவை மாடுகளுடன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிவிப்பு.

தமிழக விவசாயிகளின் பெருங்குடி தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 41 வது ஆண்டு நினைவு தினம். கோவை அருகே உள்ள அவரது மணி மண்டபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய பெருங்குடி மக்களும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பு. தமிழக விவசாயிகளின் கோரிக்கையை தற்போது வரை ஏற்க மறுத்துள்ள தமிழக அரசுக்கு எதிராக வரும் 29ஆம் தேதி தமிழக முழுவதும் பால் மாநில சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் கரவை மாடுகளுடன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிவிப்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

தமிழக விவசாயிகளின் பெருங்குடி தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 41 வது ஆண்டு நினைவு தினம். கோவை அருகே உள்ள அவரது மணி மண்டபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய பெருங்குடி மக்களும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பு. தமிழக விவசாயிகளின் கோரிக்கையை தற்போது வரை ஏற்க மறுத்துள்ள தமிழக அரசுக்கு எதிராக வரும் 29ஆம் தேதி தமிழக முழுவதும் பால்   மாநில சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் கரவை மாடுகளுடன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிவிப்பு.

தமிழக விவசாயிகள் படும் துயரத்தில் இருந்து அவர்களை மீட்டெடுத்து அவர்களுக்கான கொள்முதல் விலையை பெற்று தர வேண்டும் என்பதற்காக தனி ஒரு மனிதராக தமிழக விவசாயிகள் சங்கம் என்ற ஒரு அமைப்பினை உருவாக்கியவர் உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடு. அவர்கள் அமைப்பை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து, விவசாயிகளின் தேவைக்காக பலகட்ட போராட்டங்களை அறிவித்து அதனை முறைப்படி நடத்தி அதில் வெற்றியும் கண்டவர் நாராயணசாமி நாயுடு அவர்கள். தற்பொழுதும் தமிழக விவசாய குடி பெருமக்களால் போற்றப்படும் உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடு அவர்களின் 41 வது நினைவு தினம் இன்று அனைத்து விவசாய பெருங்குடி மக்களாலும் கடைபிடிக்கப்பட்டது. இந்த புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ஏற்கனவே தமிழக விவசாயிகள் சங்கத்தில் மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய பெருமக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில், கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் கோயில்பாளையம் அருகே உள்ள வையம்பாளையம் கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தை  தோற்றிவித்த மறைந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் 41 வது ஆண்டு  நினைவு நாளில் அன்னாரது மணிமண்டபத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் அதன் மாநிலத் தலைவர் வேலுசாமி  தலைமையில், நாராயணசாமி நாயுடு அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டத்துடன், அவரது நினைவிடத்திற்கு மலர்வளையம் வைத்து மலர்தூவி புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் மோகன் குமார், மாநில துணைத் தலைவர் ராஜா பெருமாள், திருப்பத்தூர் கணதி, சேலம் மாவட்ட தலைவர் ஏழுமலை உட்பட தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள், விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் தமிழகத்தின் முக்கிய பிரமுகர்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டு புஷ்பாஞ்சலி செலுத்தி மரியாதை தெரிவித்தனர். அப்போது உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி செய்தியாளிடம் கூறுகையில், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக விவசாயிகளின் கோரிக்கையை தேர்தல் அறிக்கையாக அறிவித்த தமிழக அரசு தற்பொழுது வரை அதனை நிறைவேற்றி தரவில்லை என்றும் இதற்காக பலகட்ட போராட்டங்கள் நடந்தப்பட்டுள்ளதாகவும், தற்பொழுது தமிழகத்தில் பிரதானமாக உள்ள பசும்பால் மற்றும் எருமை பாலிற்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டதாகவும், தமிழக அரசின் நிறைவேற்றாத பட்சத்தில், தமிழகத்தில் பால் உற்பத்தி எடுத்த போராட்டம் நடத்தப்படுவது உடன் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பால் கொண்டு வருவதை தடுக்க மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் கரவை மாடுகளுடன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்பு தலைவர் வேலுச்சாமி அவர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது என்றும் புயல் கனமழையின் காரணமாக  அந்தப் போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் வரும் 29ஆம் தேதி ஏற்கனவே அறிவித்ததை போன்று தமிழகம் முழுவதும்  கரவை மாடுகளுடன் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையில் தமிழக விவசாயிகள் சங்க விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் மறியல் போராட்டத்தில்  ஈடுபட போவதாகவும் இந்த 41 வது நினைவு தினத்தில் கடுமையான எச்சரிக்கையை தமிழக அரசுக்கு விடுத்துள்ளார்.

சனி, 20 டிசம்பர், 2025

CMAI ஆடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், நம் ஈரோட்டில் செயல்பட்டு வரும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்காக மும்பை நகரில் ஒரு பெரிய நெசவுக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

CMAI ஆடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், நம் ஈரோட்டில் செயல்பட்டு வரும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்காக மும்பை நகரில் ஒரு பெரிய நெசவுக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.


CMAI ஆடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், நம் ஈரோட்டில் செயல்பட்டு வரும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்காக மும்பை நகரில் ஒரு பெரிய நெசவுக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் கண்காட்சியின் சிறப்பு என்னவென்றால்,
வெளிநாடுகளில் இருந்து பத்து நாடுகளைச் சேர்ந்த நேரடி வாங்குநர்கள், இதில் பங்கேற்க உள்ளனர்.

அதோடு, இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 320 வாங்குநர்களை அழைத்து வந்து,கண்காட்சி அரங்குகளில் நேரடியாக சந்தித்து வணிகஉரையாடல் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

இதன் மூலம்,நம் தமிழ்நாட்டில் குறிப்பாக ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதிகளில் உள்ள அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறோம், இது அனைவருக்கும் பயன் அளிக்கும் வாய்ப்பாகும்.
CMAI என்பது 65 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்திய ஆடை உற்பத்தியாளர்களின் சங்கமாகும்.

இந்திய அளவில் ஆடை உற்பத்தியாளர்களுக்கான மிகப்பெரிய சங்கங்களில் இதுவும் ஒன்று, இதன் முக்கிய நோக்கம், நேரடி உற்பத்தியாளர்களும் தொழில்துறை குழுமங்களும் இதில் பங்கேற்பதுதான், இந்த வர்த்தகக் கண்காட்சி மூலம், முழு தொழில்துறை அமைப்பிற்கும் பயன் கிடைக்கும், துணி வழங்குநர்களுக்கும் ஆடை உற்பத்தியாளர்களுக்கும் சமமான நன்மை ஏற்படும் என தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் ( ஈரோடு டிஸ்ட்ரிக்ட் சேம்பர் ஆப் காமர்ஸ் & இன்ட்ரஸ்ட்ரி )
ஈரோடு மாவட்ட தொழில் வர்த்தக சபையின் தலைவர் வி.பி.சுப்பிரமணியம், செயலாளர் பிரேம் நாராயணன், ( எக்ஸிக்யூடிவ் பிரசிடெண்ட் ) செயல் தலைவர் வி.டி கருணாநிதி, டெக்ஸ்வேலி நிர்வாக இயக்குனர் குமார், ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர் சிவனந்தன், FATIA தலைவர் வி.கே ராஜமாணிக்கம், ரவிச்சந்திரன், 

CMAI பொதுச்செயலாளரும், பேப் ஷோ சேர்மன் நவீன், CMAI சேர்மன் வெண்டர் ஆனந்த் உட்பட ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் என ஜவுளி வர்த்தகர்கள் பங்கேற்றனர்.

CMI துணிக்காட்சி, மும்பை நகரில், ஏப்ரல் மாதம் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
காரமடையில் சர்வதேச மனித உரிமைகள் தின விழா

காரமடையில் சர்வதேச மனித உரிமைகள் தின விழா

காரமடையில் சர்வதேச மனித உரிமைகள் தின விழா

மனித உரிமைகள் காப்பாளர்கள் சார்பாக 78 ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தின விழா காரமடை நகராட்சி அலுவலகம் முன்பு ஈரோடு மாவட்ட தலைவர் ரசூல் மொய்தீன் தலைமையில் நடை பெற்றது.

சிறப்பு விருந்தினராக தேசிய தலைவர் சின்னராஜ் ராமசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

நிகழ்ச்சியில், தேசிய செயலாளர் செந்தில்குமார் தமிழ்நாடு மாநில தலைவர் அந்தோணி ராஜ், தமிழ்நாடு மாநில மகளிர் அணி தலைவி லோகநாயகி, தமிழ்நாடு மாநில மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி, கோவை மாவட்ட அமைப்பாளர் இப்ராஹிம் பாஷா, கோவை வடக்கு மாவட்ட தலைவர் மோகனசுந்தரம், கோவை மாவட்ட அமைப்புச்செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மனித உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினர். முடிவில் கோவை மாவட்ட செயலாளர் நண்பரசன் நன்றி கூறினார்.
ஈரோட்டில் த.மா.கா.வுடன் காமராஜர் மக்கள் கட்சியை இணைக்கும் விழா - ஜி.கே.வாசன் எம்.பி. முன்னிலை நடந்தது.

ஈரோட்டில் த.மா.கா.வுடன் காமராஜர் மக்கள் கட்சியை இணைக்கும் விழா - ஜி.கே.வாசன் எம்.பி. முன்னிலை நடந்தது.

*ஈரோட்டில் த.மா.கா.வுடன் காமராஜர் மக்கள் கட்சியை இணைக்கும் விழா - ஜி.கே.வாசன் எம்.பி. முன்னிலை நடந்தது.*

**************************

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் காமராஜர் மக்கள் கட்சியை இணைக்கும் விழா ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு த.மா.கா.தலைவர் .ஜி.கே வாசன் எம்.பி தலைமை தாங்கினார்.

மாநில பொதுச்செயலாளர் யுவராஜா, துணைத் தலைவர் விடியல் சேகர், மாவட்ட தலைவர்கள் விஜயகுமார், சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் தலைமையில் அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜி. கே.வாசன் முன்னிலையில்  த.மா.கா.வில் இணைத்து கொண்டனர்.  

நிகழ்ச்சியை ஒட்டி ஈரோடு மாநகர் முழுவதும் கட்சிக்கொடி தோரணைகள் கட்டப்பட்டிருந்தன. விழா நடைபெறும் இடத்திற்கு தமிழக முழுவதும் இருந்து கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். குறிப்பாக கொங்கு மண்டல நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மா பழ வாழை எனத் தொண்டர்கள் கொண்டு வந்து அன்பளிப்பாக வழங்கினர்.

காமராஜர் மற்றும் மூப்பனார் ஆகியோர் படத்திற்கு ஜிகே வாசன் எம்பி, தமிழருவி மணியன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

மாநில துணைத்தலைவர் விடியல் சேகர், மாநில பொதுச்செயலாளர் யுவராஜா, மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் ஆகியோர் வரவேற்று பேசினர். 
தமிழகம் முழுவதும் வந்திருந்த நிர்வாகிகள் அவர்கள் பாரம்பரிய படி நினைவு பரிசுகளை வழங்கினர்.
விழாவில் இளைஞர் சங்க நிர்வாகி ரமேஷ், பொருளாளர் ராமன், பிரகாஷ் ஜெயின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 19 டிசம்பர், 2025

உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் 41வது ஆண்டு நினைவு தினம். நாளை கோவை வையம்பாளையத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் புகழ் பறைசாற்றும் நிகழ்வு.. தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பங்கேற்க நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக அழைப்பு..

உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் 41வது ஆண்டு நினைவு தினம். நாளை கோவை வையம்பாளையத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் புகழ் பறைசாற்றும் நிகழ்வு.. தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பங்கேற்க நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக அழைப்பு..

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் 41வது ஆண்டு நினைவு தினம். நாளை கோவை வையம்பாளையத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் புகழ் பறைசாற்றும் நிகழ்வு.. தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பங்கேற்க நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக அழைப்பு..

தமிழக விவசாயிகள் சங்க நிறுவனரும், உழவர் பெருந்தகை என்று அனைத்து விவசாய பெருங்குடி மக்களாலும் போற்றப்படும், நாராயணசாமி நாயுடு அவர்களின் 41 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக அழைப்பு ஒன்றினை தமிழக விவசாயிகளுக்காக வெளியில் உள்ளார். அதில், தமிழக விவசாய பெருங்குடி மக்களுக்காக தமிழகத்தில் கடந்த 1970 முதல் 1980 கடுமையான வறட்சி நிலவியது,  அப்போது தமிழக விவசாயிகள் வேளாண் பணிகளை தொடங்குவதற்கு நிதி கையிருப்பு இல்லாமல் தவித்தனர். பல சிரமங்களுக்கு இடையிலும் வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், அப்போதைய தமிழ்நாடு அரசு மூலம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன் மற்றும் பண்ணை அபிவிருத்தி கடன் பெற்று, கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் பயிர் செய்துவந்தனர்.
கிணறு பாசனத்தை நம்பி பயிர் செய்யும் விவசாயிகள், தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் மூலம், கிணற்று மோட்டாருக்கு மின் இணைப்பு பெற்று, பயிர் செய்தனர், அவ்வாறு அவர்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்கு அதிக கட்டணம் மின் வாரியத்தால் வசூலிக்கப்பட்டு வந்தது. இயற்கை சீற்றம் மற்றும் பருவம் தவறிய மழை பொழிவின் காரணமாக விளைச்சல் இல்லாததால் விவசாயிகளால் மின்சார கட்டணத்தை கட்டமுடியாத நிலையில் மின்சார வாரியம் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நெருக்கடி கொடுத்து வந்தது.
ஒரு புறம் கடுமையான வறட்சி நிலவிய நிலையில், தமிழக விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம்  வாங்கிய பயிர் கடன்  மற்றும் பண்ணை சாராத கடனை திருப்பி செலுத்த இயலவில்லை.
கடனை திருப்பி செலுத்தாவிட்டால் தமிழ்நாடு அரசு ஜப்தி என்ற சட்டத்தின் படி, விவசாயிகள் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்து நடவடிக்கை எடுக்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் முயற்சித்தினர்.
தமிழக விவசாயிகள் படும் இன்னல்களை கருத்தில் கொண்டு சிதறிய நெல்லிக்காய் போல் கிடந்த தமிழக விவசாயிகளை, கடன் தொல்லை, மின்சார கட்டணம்  உயர்வு போன்ற துயரங்களில் இருந்து காப்பாற்றுவதற்காக,   தமிழக விவசாயிகள் சங்கத்தை தோற்றிவித்து  மறைந்த உழவர் பெருந்தலைவர் C . நாராயணசாமி நாயுடு அவர்கள் தலைமையில் 1970 முதல் 1980 வரை தமிழகம் தழுவிய அளவில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது. 
கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த போராட்டத்தில், தமிழ்நாடு அரசு காவல்துறை நடத்திய துப்பாக்கி  சூட்டில், துப்பாக்கி குண்டுக்கு இறையாக்கி  53 விவசாயிகளும் இறந்துள்ளனர். 
‌கிணற்று மோட்டாருக்கு தமிழக அரசு யூனிட்டுக்கு பழைய கட்டணம் 8 பைசாவில் இருந்து 9 பைசாவாக கட்டணம் உயர்வின்  காரணமாக தமிழக விவசாயிகள் சங்கம்‌ சார்பில் ஒரு பைசாவாக உயர்த்தியதை அரை பைசாவாக குறைக்க கோரி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றதில் தமிழகம் முழுவதும் ஸ்தம்பித்து அப்போது தமிழகத்தில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களை தமிழக விவசாயிகள் சங்க  போராட்டத்தின் வாயிலாக மறைந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் தமிழக அரசை பணியவைத்தார்.
5.7.1972 ல் இந்த முதல் போராட்டத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெத்தநாயக்ன்பாளையம் பகுதியை சார்ந்த 9 விவசாயிகள் மீது தமிழக காவல்துறை துப்பாக்கி சுடு நடத்தியதில் விவசாயிகள் உயிரிழந்தனர், இது போல் பல தினங்களில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம், தமிழகம் முழுவதும் நடைபெற்றதில்  வேடசந்தூர், பெருமாநல்லூர் ,கோயில்பட்டி , குறிஞ்சாங்குளம் ஆகிய பகுதிகளில் 53 தமிழக விவசாயிகள் மீது தமிழ்நாடு அரசு காவல்துறை துப்பாக்கி சுடு ‌நடத்தி, விவசாயிகளை கொன்று குவித்தது. 
தமிழக அரசு தமிழகத்தில் முதல் துப்பாக்கி சுடு நடத்திய  நாளான 5.7.1972 மறைந்த தியாகிகளுக்கு ஆண்டு தோறும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில்  வீரவணக்க
நாளாக கடைபிடித்து வருகிறோம். தமிழக விவசாயிகள் கிணறு மோட்டார் மூலம் பாசனம் செய்ய இலவச மின்சாரம் கிடைக்க வழிவகை உருவாக்கி கொடுத்தது, தமிழக விவசாய சங்கம் மூலம் தான் இலவச மின்சாரம் கிடைக்க பெற்றது என்று இன்றைய தலைமுறை விவசாயிகள் கருத்தில் கொள்ளவேண்டும்.  
கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் கோயில்பாளையம் அருகே உள்ள வையம்பாளையம் கிராமத்தில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் மணிமண்டபத்தில் நாளை  காலை 10 மணிக்கு தமிழக விவசாயிகள் சங்கத்தை தோற்றிவித்து உருவாக்கிய மறைந்த உழவர் பெருந்தலைவர் திரு.C.நாராயணசாமி நாயுடு  அவர்களின் 41 ஆம் ஆண்டு மறைவு தினத்தை முன்னிட்டு புகழ் படைசாற்றும் வகையில் மலர் தூவி மரியாதை செலுத்துவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் வருகை தரும்படி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அழைக்கிறேன் என்று உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.
சேலம் வரலாற்று சங்கத்தின் சார்பில் இரு பெரும் விழா.

சேலம் வரலாற்று சங்கத்தின் சார்பில் இரு பெரும் விழா.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் வரலாற்று சங்கத்தின் சார்பில் இரு பெரும் விழா. 

சேலம் வரலாற்று சங்கத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா ஆகியவை சேலம் அஸ்தம்பட்டி சிஎஸ்ஐ பாலர் ஞான எழுத்தில் நடைபெற்றது. சேலம் வரலாற்றின் அடையாளங்கள் என்ற பெயரில் சேலம் வரலாறு சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜே பரண பாஸ் எழுதிய இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு சேலம் வரலாறு சங்கத்தின் தலைவர் இமானுவேல் ஜெயசிங் தலைமை வகித்தார். சேலம் வரலாறு சங்கத்தின் பொருளாளர் ஞானதால் வரவேற்புரை நிகழ்த்திய இந்த விழாவில் சேலம் வரலாற்று சங்கத்தின் மேனாள் தலைவர் பேராசிரியர் ஜெயக்குமாரி அனிபால்ட் நூலினை வெளியிட்டு மகிழ்வுறை ஆற்றினார். 
சேலம் வரலாற்றுச் சங்கத்தின் செயல் தலைவர் தாரை குமரவேலு கலந்து கொண்டு நூலின் முதல் படியை  பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார். ஈரோடு இதழாளர்  பதிப்பாளர் மற்றும் எழுத்தாளருமான நற்றமிழ் பாவலர் சந்திரா மனோகரன் நூலாய்வு நடத்திய இந்த நிகழ்வில் எழுத்தாளர் இடைப்பாடி அமுதன் சிறப்புரையும் சேலம் வரலாற்று சங்கத்தின் பொதுச்செயலாளர் நூல் ஆசிரியருமான ஜே பர்னபாஸ் ஏற்புரையுடன் நன்றி உரையும் ஆற்றினார். சேலம் ஜாமியா மசூதியின் மொத்த வள்ளி எஸ் ஆர் அன்வர் ஏற்காடு எழுத்தாளர் இளங்கோ தமிழறிஞர் சுல்தான் மற்றும் தொழிலதிபர் ஈசன் எழில் விழியன் உள்ளிட்ட ஒரு கலந்து கொண்ட விழாவில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவும் கொண்டாடப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது மட்டுமல்லாமல் மதிய உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது போக சேலம் அஸ்தம்பட்டி சிஎஸ்ஐ பாலர் ஞான இல்லத்தில் உள்ள சிறப்பு குழந்தைகளுக்கு மதிய உணவும் சேலம் வரலாற்றுச் சங்க நிர்வாகத்தின் சார்பில் வழங்கி இரு பெரும்  விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இஸ்லாமிய பெண்ணுக்கு எதிரான கொடுஞ்செயல். இந்திய தண்டனைச் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் பீகார் முதல்வருக்கு அரபு நாடுகளை போன்று அதிகப்படியான தண்டனை விதிக்க வேண்டும்.. சேலத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

இஸ்லாமிய பெண்ணுக்கு எதிரான கொடுஞ்செயல். இந்திய தண்டனைச் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் பீகார் முதல்வருக்கு அரபு நாடுகளை போன்று அதிகப்படியான தண்டனை விதிக்க வேண்டும்.. சேலத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

 
சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

இஸ்லாமிய பெண்ணுக்கு எதிரான கொடுஞ்செயல். இந்திய தண்டனைச் சட்டம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் பீகார் முதல்வருக்கு அரபு நாடுகளை போன்று அதிகப்படியான தண்டனை விதிக்க வேண்டும்.. சேலத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்.

பீகாரில் நடைபெற்ற அரசு அரசு பணி விழா ஒன்றில் கலந்துகொண்ட இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் எனப்படும்  மதரீதியான உடை அணிந்து வந்து விழா மேடையில் கலந்து கொண்டார். முதலமைச்சர் நிதிஷ்குமார் இடம் பணி ஆணையை பெரும்போது, பீகார் முதலமைச்சர் இஸ்லாமிய பெண் அணிந்திருந்த ஹிஜாப் உடையை  முகத்தில் இருந்து விளக்கிய அந்த செயல், நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இடையே  பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து மாநிலங்கள் தோறும் பீகார் முதலமைச்சரின் இந்த செயலுக்கு வன்மையான கண்டனங்களும் பல்வேறு போராட்டங்களும் நிகழ்ந்து கொண்டு உள்ளன. 
அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பீகார் முதலமைச்சருக்கு  எதிராக சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட தலைவர் மூஸா தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில பொதுச் செயலாளர் இம்தியாஸ், மாவட்ட அமைப்பு செயலாளர் சுல்தான், மாவட்ட செயலாளர் அலாவுதீன் மற்றும் மாவட்ட பொருளாளர் ஹன்னு என்கின்ற சாதிக் பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கு  எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பியதோடு மட்டுமல்லாமல், திருக்குர்ஆன் எங்களது உயிர், இஸ்லாத் எங்களுடைய உயிர் மூச்சு, இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளபடி பெண்கள் உடை அணியும் முறை  இஸ்லாமியர்களின் உரிமை என்று முழக்கமிட்டனர்.
அனைத்து மதத்தினரும் சமமாக வழி நடத்தப்படும் இந்திய திருநாட்டில், சிறுபான்மையினரான இஸ்லாமிய பெண்ணுக்கு,  பீகாரின் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், உடனடியாக அவரது பதவி பறிக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்ட இஸ்லாமிய பெண்ணிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இறுதியாக இந்திய திருநாட்டில் தண்டனைச் சட்டம் என்பது அனைவருக்கும் சமம் என்பதன் அடிப்படையில் அரபு நாடுகளில் வழங்குவதைப் போல மிக அதிகப்படியான தண்டனையை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு இந்திய திருநாடு வழங்கி முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் பதிவு செய்யப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் அஸ்லாம் முஸ்தபா ஜிலான் அம்ஜத் அஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தினர்.