வியாழன், 5 பிப்ரவரி, 2026

சேலத்திற்கு வரும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பட்டியலின பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் மூன்று பிரதான கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இதை முடித்துக் கொண்டு திரும்பிச் செல்லும் போது கருப்புக்கொடி காட்டப்படும். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி அறிக்கை.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி அறிக்கையில் வாயிலாக சேலம் வரும் தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய்க்கு கருப்புக்கொடி காட்டப் போவதாக தகவல் வெளியிட்டுள்ளார். அந்த தகவலில், தமிழ்நாட்டில் 44 சட்டமன்ற ரிசர்வ் தொகுதியிலே தேர்வு பெறுகின்ற அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்ற பட்டியல் இன மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் இவர்களுடைய உரிமைகள் எல்லாம் தட்டி கேட்பதில்லை,  பதிவு செய்வதில்லை,  அவர்களுக்காக ஒதுக்கப்படுகின்ற மத்திய அரசு நிதி எல்லாம் அந்த மக்களுக்கு சரியான முறையில் சேர்க்காமல் திருப்பி அனுப்புகின்ற போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம். அதையெல்லாம் அந்த 44 ரிசர்வ்  தொகுதி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கேட்பதில்லை.  அதே போல தமிழகத்தில் 12 லட்சம் ஆக்டர் பஞ்சமி நிலம் 1925 ல் அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.  
இன்று அந்த 12 லட்சம் ஹெக்டேர் நிலம் எங்கே இருக்கிறது.  எத்தனை லட்சம் ஹெக்டேர் நலம் மட்டும் இருக்கிறது என்று வெள்ளை அறிக்கையை திமுக மற்றும் அதிமுக அரசுகள்  இதுவரை வெளியிடவில்லை. ஆகவே தான் தான் அடுத்த முறை முதல்வர் என்று சொல்லிக் கொள்கின்ற டி.வி.கே தலைவர் விஜய் அவர்கள் பறைசாற்றிக் கொள்வதை நாங்கள் ஒருபுறம் வரவேற்றாலும், சேலத்திற்கு வருகின்ற 13 ம் தேதி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக  வருகின்ற விஜய் அவர்கள், 
எங்களுடைய தேசிய ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கையான ஒன்று 12 லட்சம் எக்டர் பஞ்சமி நிலங்களை  எல்லாம் தமிழகத்தில் மீட்டு எடுத்து அதற்கென்று ஒரு போர்டு உருவாக்க தேர்தல் வாக்குறுதி  அறிக்கையாக அவர் அளிக்க வேண்டும்,  இரண்டாவது தமிழக அரசின் பல்வேறு துறைகளிலே கடந்த 25 ஆண்டுகளாக நிரப்பப்படாத பேக்லாக் வேக்கன்சி காலி பணியிடங்களில் 75 ஆயிரம் காலி பணியிடங்கள்  பல்வேறு துறைகளில் உள்ளது. அடுத்த வருகின்ற டி.வி.கே தலைவர் விஜய் அவர்கள் அந்த 75 ஆயிரம் காலி பணியிடங்களை  நிரப்புவோம் என்று தேர்தல் வாக்குறுதியாக அவர்கள்  சேலத்தில் அறிவிக்க வேண்டும்,  அதேபோல தாட்கோ மானியத்துடன் கொடுக்கின்ற  வங்கி கடமானது பெரும்பாலும் அந்த மக்களை போய் சேராமல், தமிழர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டதாக வங்கி நிர்வாகத்தால் ஏமாற்றப்பட்டு வருகிறது.  பலாயிரம் கோடி ரூபாய்கள் விரைமாகிறது. பெயரளவில்  அந்த மக்களுக்கு இத்தனை லட்சம் ஆயிரம் கோடி போகிறது கணக்கு காட்டுற அந்த நிர்வாகம் அந்த மக்களிடம் அந்த நிதியை போய் சேர்ப்பதில்லை, அதற்கு காரணமே வங்கியில் அவர்களுக்கு அந்த கடனை கொடுக்க மறுப்பது தான்.  ஆகவே தமிழக அரசு எந்த அரசும் அந்த தலித்  மக்களுக்கான தாட்கோ, சிட்கோ கடல்  வழங்குவதற்கு எந்த நடவடிக்கையும் இல்லாததால் டி வி கே விஜய் அவர்கள் தன் தேர்தலில் அடிக்கையிலே அந்த தாட்கோ லோன் தமிழகம் முழுதும் கொடுப்பதற்கு ஒரு தனி வங்கி உருவாக்கி தரவேண்டும் என்று கோரிக்கையை நீங்கள் உங்கள் தேர்தல் அறிக்கையாக சேலத்தில் கொடுப்பீர்கள் என்று நம்பிக்கையோடு இந்த விஷயங்கள் உங்களுக்கு பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டு இருக்கிறோம் என்றும்  இவற்றையெல்லாம் சேலத்தில்  அறிக்கையாக கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி பல கடிதம் உங்களுக்கு அனுப்பி இருக்கிறோம். சேலம் வருகின்ற நீங்கள் இந்த கூட்டத்திலே தமிழகத்தில்  இருக்கின்ற பட்டியலின பழங்குடியின  பிற்படுத்தபட்ட  மக்களுடைய அந்த  உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டும். இந்த மூன்று  கோரிக்கையை தேர்தல் அறிக்கையாக  அறிவிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ள தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி,  
அவ்வாறு நீங்கள்  சேலத்தில் தேர்தல் அறிக்கையாக இந்த மூன்று கோரிக்கை தரவில்லை என்றால் நீங்கள் திரும்பும்போது சேலம் மாவட்டம் முழுதும் உங்களுக்கு எங்களுடைய தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு சார்பாக கருப்புக்கொடியை காட்டுவதற்காக நாங்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம் சரஸ்ராம் ரவி தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

த.வெ.க மூன்றாம் ஆண்டு விழாவில் தமிழ் கடவுளான முருகனின் பாடலை இழிவுபடுத்தி பாடிய பாடகர் வேல்முருகன் உட்பட இதற்கு உடனடியாக இருந்து கட்சியின் தலைவர் விஜய் கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்டு அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் அஜித் சாக்கோ கட்சி நிர்வாகிகளுடன் சேலம் COP அலுவலகத்தில் புகார்.

த.வெ.க ஆண்டு விழாவில் தமிழ் கடவுளான முருகனின் பாடலை இழிவுபடுத்தி பாடிய பாடகர் வேல்முருகன் உட்பட இதற்கு உடனடியாக இருந்து கட்சியின் தலைவர் விஜய் கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்டு அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் அஜித் சாக்கோ கட்சி நிர்வாகிகளுடன் சேலம் COP அலுவலகத்தில் புகார்.

சேலம் கிழக்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் அஜித் சாக்கோ உள்ளிட்ட கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அளித்த புகார் மனுவில், சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் கட்சி ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றதை எடுத்து விழா நடைபெற்றது. விழாவில் கானா பாடகர் வேல்முருகன் கொள்கை பரப்புச் செயலாளர்களை பார்த்து நீங்க சொல்லிட்டீங்க தைப்பூசம் அப்படின்னு சொல்லி உண்மையிலேயே இன்னைக்கு தான் தைப்பூசமா நான் பார்க்கிறேன் என விஜய்யை பார்த்து விரலால் சைகை காட்டி இந்து மத நம்பிக்கை கடவுளான வீரத்தின் அடையாளமான அழகின் அடையாளமான இந்து கடவுள் இந்து மக்களின் மத நம்பிக்கையான முருக கடவுளையும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயையும் ஒப்பிட்டு விஜய் பார்த்த நாளான இன்று தைப்பூசமாக பார்க்கிறேன் என இந்துமத மக்கள் நம்பிக்கையை கடவுளான முருகனை இழிவுபடுத்தி பேசியுள்ளார். பின்னர் வேல்முருகன் இந்து கடவுள் முருகனின் பாடலை பாடுகிறேன் எனக் கூறி உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க என்று கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகனை பார்த்து கூற அதற்கு ராஜ்மோகன் விஜய் பார்த்து நீங்க சொன்ன உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க என்ற முருகன் பாடலை பாடி விஜய் பார்த்து செய்கையால் விஜய் தான் முருகன் கடவுள் என்று செய்கை செய்ததும் உங்களை நம்பி நாங்கள் இருக்கிறோம் என முருக கடவுளையும் விஜயையும் ஒப்பிட்டு இழிவுபடுத்தி உள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் மருதமலை மாமணியே முருகையா என்ற முழு பாடலையும் பாடிய பாடகர் வேல்முருகன் ஆனால் முழுப்பாடையும் முடிக்கும் போது கடைசி 3 வரியை மாற்றி பாடலின் இறுதியில் வருவாய் எங்கள் தளபதியே எனவும் வருவாய் எங்கள் வெற்றிக் கழகமே எனவும் பாடி இந்து மத நம்பிக்கையையும் இந்துமத முருக கடவுளையும் இந்து மத கடவுளின் பாடலையும் இழிவு படுத்தி பாடிய பாடகர் வேல்முருகன் மீதும் இதற்கு உடந்தையாக உறுதுணையாக இருந்து ஊக்குவித்த கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் மீதும் டிஎன்எஸ் பிரிவு 299 மற்றும் 32 மற்றும் சில பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இந்து மத கடவுள்களையும் இந்து மத உணர்வுகளையும் இனி இதுபோல வேறு எவரும் புண்படுத்தாமல் இருக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் வழக்கறிஞர் அஜித் சாக்கோ தெரிவித்தார். ஏற்கனவே நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படத்தில் வெங்கடேச பெருமாளை இழிவுபடுத்தி கோவிந்தா கோவிந்தா என்ற பாடலை சந்தானம் பாடியிருந்தார் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்து சேலம் கிழக்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் சேலம் மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் மணி அளித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வின்போது கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கிருபாகரன் சிவா குணாளன் மணி பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

திங்கள், 2 பிப்ரவரி, 2026

சேலம் IIHT கல்லூரியில் மண்டல அளவிலான உடல் கட்டமைப்பு போட்டிகள். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு அசத்தல்.

இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மண்டல அளவில் 2025 26 ஆம் ஆண்டிற்கான உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டிகள் சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியில் நடைபெற்றது..
IIHTஇந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனம் கல்லூரியின் செயலர் முனைவர் தென்னரசு துவக்கி வைத்த இந்த போட்டியில், 
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரியில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.  இதில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் அகில இந்திய போட்டியான ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 60 65 70 75 80 85 90 90 பிளஸ் ஆகிய எட்டு கேட்டகிரியில் நடைபெற்றது. 
எட்டு பிரிவுகளின் கீழ் கலந்து கொண்ட மாணவர்கள் தங்கள் உடல் கட்டமைப்பை நடுவர்கள் உத்தரவிற்கு ஏற்றவாறு வெளிப்படுத்தி அசத்தினர்.
சேலம் திருமணிமுத்தாறு ராஜவாய்க்காலில் கொட்டப்படும் கழிவுகளை தடுக்க இரும்பு வேலி அமைத்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு.

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனரும் மாநில தலைவருமான தங்கராஜ் உள்ளிட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு கொடுப்பதற்காக வந்திருந்தனர். அந்த மனுவில், சேலம் கொண்டலாம்பட்டி பைபாஸ் ரவுண்டானாவில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் ராஜவாய் காரில் தேவையற்ற கற்கள் கழிவுகள் கொட்டப்படுவதால் வாய்க்காலில் வரும் நீர் அடைக்கப்படுவதால் பாசனத்திற்கு வரும் நீர் பயன்படுத்த முடியாமல் விவசாயம் பாதிக்கப்படுகிறது. ராஜபாய் காலின் ஓரம் கம்பி வேலிகளை அமைத்து எச்சரிக்கை பலகை வைத்து விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய வாய்க்கால் நிறை முழுமையாக கிடைக்க உதவிட வேண்டி பாசன விவசாயிகள் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்வதாக மனதில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை ஆகவே மாவட்ட ஆட்சியர் இந்த பிரச்சனையில் தலையிட்டு பாசன விவசாயிகளை கோரிக்கை மீது நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டுமாய் கேட்டுக் கொள்வதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.   உடன் விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
.
சேலத்தில் குடிநீர் குழாயில் சாக்கடை கழிவு நீர். வேறு இடத்திற்கு மாற்றித் தர விடுதலை சிறுத்தைகள் கட்சி மனு.

பொதுமக்கள் பயன்படுத்தி வரும் குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதால் குடிநீர் குழாயை வேறு இடத்திற்கு மாற்றி தர வேண்டும் எனவும் தெரு விளக்குதி அமைத்து தர வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சேலம் மாநகர மாவட்டம் சார்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

சேலம் மாநகரம் ஐம்பதாவது டிவிஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் எண்ணற்ற குடும்பங்கள் வசித்து வருகின்றனர் குறிப்பாக இங்கு பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாயில் சாக்கடை கழிவுநீர் சேர்ந்து வருவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருவதாகவும் குறிப்பாக பெண்கள் முதியவர்கள் குழந்தைகள் பாதிப்பு ஏற்படுகிறது.இது சம்பந்தமாக மாநகராட்சி அதிகாரிகளிடம் மன அழுத்தம் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்தனர், மேலும் பகுதியில் உள்ள தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைவதாக தெரிவித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரச்சனைகளை சீர்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் காயத்ரி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள கூட்டுறவு நூற்பாலை தேர்தல் வாக்குறுதி படி திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க கோரி பாரதிய ஜனதா கட்சியின் நெசவாளர் பிரிவு சார்பில் கோரிக்கை மனு

பாரதிய ஜனதா கட்சியின் நெசவாளர் பிரிவு மாநில தலைவர் அண்ணாதுரை தலைமையில் உறுப்பினர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர் கலெக்டர் பிருந்தா தேவியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்று வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள கூட்டுறவு நூற்பாறையில் கடந்த 21 ஆண்டுகளாக மூடி உள்ளன அங்கு பணியாற்றிய 252 நிரந்தர தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு இதுவரை எந்தவித இழப்பு தொகை வழங்கப்படவில்லை பல்வேறு கட்ட போராட்டம் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை 252 குடும்பங்களும் வாழ வழி இல்லாமல் தவித்து வருகின்றனர் ஆலையை இயக்க மத்திய மாநில அரசுகள் ஆலய புதுப்பித்தல் செய்வதற்காக வைத்திருந்த நிதியிலிருந்து ஆலையை முழுமையாக இயக்காமல் மாறாக கட்டாய வி ஆர் எஸ் க்கு கடனாக புதுப்பித்தல் நிதியிலிருந்து பெற்று 735 தொழிலாளர்களை வெளியேற்றி உள்ளது 852 நிரந்தர தொழிலாளருக்கு பிஎஃப் முழுமையாக வட்டியுடன் கட்டவில்லை பிஎஃப் கமிஷனர் உத்தரவு வழங்கியும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவே பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண வழங்க வேண்டும் என இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து மாநில தலைவர் அண்ணாதுரை கூறுகையில் சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள கூட்டுறவு நூற்பாளையும் 31 ஏக்கர் உள்ளது அங்கு இருந்த இயந்திரங்கள் திருடப்பட்டுள்ளன மேலும் புதியதாக ஜவுளி பூங்கா உள்ளிட்ட ஜவுளி சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க அதே இடத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக அரசு கூட்டுறவு நூற்பாலை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது ஆனால் இதுவரை செய்யவில்லை எனவே மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட 252 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நூற்பாளையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக தேர்தல் வாக்குறுதி படி செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார். நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர். 
சேலம் கோட்டை மேல் தெரு புதிய பள்ளிவாசல் திறப்பு. அமைச்சர் ராஜேந்திரன் மற்றும் மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை.

சேலம் மாநகரம் கோட்டை மேல் தெரு பகுதியில் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழா  நடைபெற்றது. நூறாண்டு பழமை வாய்ந்த இந்த பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு ஜமாத்தின் முத்தவல்லி அமான் என்கின்ற நாசர்கான் என்கிற அம்மன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். புதிய பள்ளிவாசலை முஸ்லிம் எஜுகேஷனல் சொசைட்டி பொதுச் செயலாளர் கே ஜியாவுதீன் அஹமத் திறந்து வைத்தார். இதில் இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும்  பங்கேற்றனர்.