வியாழன், 7 மே, 2026

இந்த இக்கட்டான அரசியல் சூழலில் கம்னியூஸ்ட் கட்சிகள் மற்றும்  விசிக விற்கு தலா ஒரு மந்திரி பதவி. இந்த இக்கட்டான அரசியல் சூழலில் த. வெ.க தலைவர் விஜய் அவர்களுக்கு, தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தலைவருமாள் சரஸ் ராம் ரவி, கோரிக்கை.

சேலம், 
S.K. சுரேஷ்பாபு.

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான 17 வது தமிழக சட்டப்பேரவை அமைப்பதில் பிரதான கட்சிகள் இடையே பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் ஏற்கனவே ஆதரவு தெரிவித்து ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களை வழங்கி இருந்த நிலையில், தற்பொழுது விசிக இடதுசாரிகள் கட்சிகளுடன் த.வெ.க  தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய வண்ணமே உள்ளன. என்றாலும் இனமும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி, தமிழக வெற்றி கழக தலைவருக்கு கோரிக்கை ஒன்றினை முன் வைத்துள்ளார்.
அதில், ஒருவேளை இடதுசாரி கட்சிகளும், விடுதலை சிறுத்தை கட்சியும் ஆதரவு அளிக்கும் பட்சத்தில், கம்னியூஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக கட்சியின் தங்களது 6  உறுப்பினர்களும் TVK. ஆட்சி அமர  முழ ஆதரவு தரபட வேண்டும். கம்னியூஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக விற்கு தலா ஒரு மந்திரி பதவி வழங்க வேண்டும். திருச்சி இடை தேர்தலில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு TVK  ஆதரவு அளித்து  வெற்றி பெற செய்ய வேண்டும். தொல். திருமாவிற்கு துணை முதல்வர் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள சரஸ் ராம் ரவி அவர்கள் தமிழகம் காக்கபட வேண்டும் என்றும் தனது கோரிக்கை பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

புதன், 6 மே, 2026

சேலத்தில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை பாராட்டு வழா.

சேலத்தில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை பாராட்டு வழா.

சேலம்,
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை பாராட்டு வழா.

சிந்தி கல்விச் சங்கத்தின் சிந்தி இந்து உதவி பெறும் தொடக்கப் பள்ளி சேலம் நாராயண நகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை இடைநிலை ஆசிரியை ஆக பணியாற்றிய ஸ்ரீமதி சித்ரா மகேஸ்வரி ஆசிரியை பணி ஓய்வு பெற்றார். ஓய்வுபெறும் ஆசிரியைக்கு  பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 
பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி லதா தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில், பள்ளியின் தலைவர் ஸ்ரீ. ராம்சந்த் டி கிங்கர், பள்ளியின் தாளாளர் ஸ்ரீ. நரேஷ் கே கிங்கர், பள்ளியின் செயலர்
திரு. மகேஷ் டி சாவ்லா மற்றும் பள்ளியின் பொருளாளர் மற்றும்திரு. தீபக் ஜி பத்திஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பணி ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு பொன்னாடை போர்த்தியும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். தொடர்ந்து பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரிய பெருமக்கள் சார்பிலும் ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன. நிகழ்வில் அந்த பகுதியின் முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

தமிழகத்தில் ஏற்பட்ட அலையில் சிக்கிய அனைத்து கட்சிகளையும் சின்னாபின்னம் ஆக்கியவர் த.வெ.க தலைவர் விஜய்.. 2026 இல் மாற்றத்தை விரும்பிய தமிழக மக்களுக்கு ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நடத்த திராவிட கட்சிகள் எந்தவிதமான நெருக்கடிகளையும் கொடுக்கக் கூடாது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர பக்தனான பாரப்பட்டி கனகராஜ் பேட்டி.

2026 ஆம் ஆண்டிற்கான 17 வது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்தது. குறுகிய காலத்தில் கட்சியை தொடங்கி ஆட்சி அமைத்த பெருமை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களே சாரும். என்றாலும் இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க  உட்பட பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தற்பொழுது ஆட்சி அமைப்பதற்கு உண்டான 118 இடங்களை நிரூபிப்பதற்காக த.வெ.க பிரதான கட்சிகள் உட்பட சிறிய கட்சிகளிடம் ஆதரவு கோரி பேச்சுவார்த்தை நடைபெற்ற வண்ணமே உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தின் 17 ஆவது முதலமைச்சர் ஆக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை பதவி ஏற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர பக்தனான பாரப்பட்டி கனகராஜ், நம்மிடையே கூறுகையில், தமிழக அரசியல் களத்தில் ரஜினிகாந்த் வராதது வெற்றிடமாகவே தற்போது வரை கருதப்படுவது குறித்தும் அவரது இடத்தை த.வெ.க தலைவர் விஜய் பூர்த்தி செய்துள்ளாரா என்ற என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பாரப்பட்டி கனகராஜ் பதில் அளிக்கையில், 
சூப்பர் ஸ்டார் அவர்கள் அரசியல் களத்திற்கு வராதது அந்த வெற்றிடம் தற்பொழுது வரை அப்படியே தான் இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார். மேலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக விஜய் அமர்வார் என யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும், 2026  சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் வீசி அலையின்  அடிப்படையில், சிக்கிய பிரதான கட்சிகள் உட்பட அரசியல் கட்சிகள் அனைத்தும் சிக்கி சின்னாபின்னம் ஆகிவிட்டது என்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் களத்திற்கு வந்து  வந்து கட்சி தொடங்கி இதுபோன்று தேர்தலை சந்தித்து இருந்தால் 150 இடங்களுக்கு மேலாக கிடைத்திருக்கும் என்றும், என்றாலும் தமிழகத்தின் 17 வது முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பொறுப்பேற்பதற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும் தற்பொழுது உள்ள சூழலில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் வேண்டும் ஆனால் 108 இடங்களில் மட்டுமே தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றதன் அடிப்படையில் பிரதான கட்சிகள் உட்பட சிறிய கட்சிகளிடம் ஆதரவு கோரி தமிழக வெற்றிக்கழகம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டுள்ளது என்றாலும், தமிழக வெற்றி கழகம் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ஐந்து ஆண்டுகள் சிறப்பாக பூர்த்தியாகும் என்று குறிப்பிட்ட பாரப்பட்டி கனகராஜ், எதிர்வரும் 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து இந்த முடிவை தெரிவித்து இருக்கும் நிலையில் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக இந்த ஐந்து ஆண்டுகளும் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கும் விஜய் ஃப்ரீயாக பணியாற்ற எந்தவிதமான நெருக்கடிகளும் கொடுக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். 
தேர்தல் அறிக்கை என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் பல அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தாலும் அதனை முழுமையாக செயல்படுத்தினாலே போதும் என்றும் கூடுதலாக புதிய திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் ஆக பொறுப்பேற்ற பிறகு தமிழக வெற்றி கணக்க தலைவர் விஜய் சேலம் வரும்போது அவரிடம் சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு கோரிக்கைகள் அவரிடம் ரஜினி ரசிகர்களின் சார்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர பக்தன் என்ற அடிப்படையில் எனது தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

திங்கள், 4 மே, 2026

தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளித்ததன் பேரில் 234 தொகுதிகளிலும் 5000 முதல் 10,000 வாக்குகள் வெகுஜன மக்களால் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி த.வெ.க விற்கு வாழ்த்து.

2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியினருடனும் கூட்டணி வைக்காத தமிழக வெற்றி கழகத்திற்கு தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு தனது முழு ஆதரவையும் 234 தொகுதிகளிலும் அளித்து இருந்தது. அந்த வகையில் கடந்த 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் தற்போது வாக்குகள் எனும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் புதிதாக களம் கண்ட தமிழக வெற்றி கழகம் நூற்றுக்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. இந்த நிலையில், தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி வாழ்த்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். 
அதில், தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு ( இந்தியா ). ஆதரவு பெற்ற தமிழக வெற்றி கழகம்  தேர்தலில் முன்னணி பெற நமது இயக்கத்தின் 234 தொகுதிகளிலும். குறைந்த்து தொகுதிக்கு 5000 முதல் பத்தாயிரம் ( வெகுசன மக்கள்,  ஊழியர்கள்,  தொழிலாளர்கள்,  ஓய்வூதியர்கள் )  வாக்குகள் அளிக்பட்டது என்றும் அறிக்கையின் வாயிலாக தனது வாழ்த்துக்களையும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவன தலைவர் சரஸ்ராம் ரவி.
வெ லதா, மாநில ஒருங்கிணைப்பாளர். அறிவழகன், முருகேசன், மேற்கு  மண்டல ஒருங்கிணைப்பாளர். கைலாசம் ராஜேந்திரன், தென்கிழக்கு மண்டலம்.
புகழேந்தி,  அனிதா, கிழக்கு மண்டலம், முனுசாமி,  தமிழமுதன், வடமேற்கு மண்டலம். ராதாகிருஷ்ணன் பாஸ்கர், தென்மண்டலம்.

ஞாயிறு, 3 மே, 2026

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் பன்ருட்டி  ஊராச்சி அலுவலகம் முன் அல்லது உதவி இயக்குநர் ( கிராம பஞ்ச்சாயத்து ,) அலுவரகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீர்மானம்.

தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பண்ருட்டியில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் லதா தலைமையில் நடைபெற்ற இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், கடலூர் மாவட்டம் பன்ருட்டி வட்டம்-  பன்ரூட்டி ஊராட்சி  நிர்வாகம் மற்றும்  வட்டார வளர்ச்சி அதிகாரியின் கவனத்திற்கு பல்வேறு முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதில் குறிப்பாக செம்மேடு பகுதி பஞ்சாயத்து வாழ்  பட்டியலின ஒடுக்கபட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், செம்மேடு ஊர் பகுதியில் பஸ் நிறுத்தம்  ஏற்படுத்து வேண்டும், செம்மேடு பகுதியில்  நூலகம் அமைத்து கொடுக்க வேண்டும், செம்மேடு வாழ் பட்டியலின மக்களுக்கு கழிவு நீர் கால்வாய்  சுகாதார மையம் தெரு விளக்குகள் மயானத்திற்கு மின் விளக்கு வசதி அமைத்து கொடுத்திட வேண்டும், 
கடந்த 10 ஆண்டுகளில் செம்மேடு பகுதி வாழ்  மக்களுக்கு ஒதுக்கிய  பஞ்சாயத்து நிதி எவ்வளவு என்பதனை  வெள்ளை அறிக்கை வழங்க வேண்டும் மற்றும்
மேற்குறிப்பிடப்பட்ட தீர்மானங்கள் குறித்து நடவடிக்கைகள் காலம் கடத்தினால் ஊர் மக்கள் ஒன்று திரண்டு  ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழ பன்ருட்டி  ஊராச்சி அலுவலகம் முன் அல்லது உதவி இயக்குநர் ( கிராம பஞ்ச்சாயத்து ,) அலுவரகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தீரமானம் நிறைவேற்றபட்டது.

தமிழகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் 1.5 ஹெக்டேர் பஞ்சமி நிலங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் ஆலோசனைக் கூட்டத்தில் 7  முக்கிய தீர்மானங்கள்.

தமிழகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் 1.5 ஹெக்டேர் பஞ்சமி நிலங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் கடலூர் ஆலோசனைக் கூட்டத்தில் 7  முக்கிய தீர்மானங்கள்.

சமூகம், அரசியல், கல்வி, பொருளாதாரம் மற்றும் மேம்பாடு நோக்கத்திற்காக செயல்பட்டு வரும் தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசின் கடலூர் மாவட்ட துவக்க விழா மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் லதா தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ஹரிகிருஷ்ணன் மற்றும் புகழேந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கிய கூட்டத்தில், நிர்வாகிகள் வினோத் ராமதாஸ் கண்ணன் தமிழரசன் செல்வம் மாலா மற்றும் நெடுமாறன் முன்னிலை வகித்தனர். 
தேசிய ஒடுக்கப்பட்ட மக்கள் குடியரசு அமைப்பின் நிறுவனரும் தலைவருமான சரஸ்ராம் ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,  அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து நடைபெற்ற  ஆலோசிக்கப்பட்ட இந்த கூட்டத்தில், 
தமிழகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் 1.5 ஹிட்டேர் பரப்பளவு கொண்ட பஞ்சமி நிலங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், கடலூர் மாவட்ட நிர்வாகம் பொது மக்களின் தேவைகளான குடிநீர் கழிவுநீர் தெரு மின் வசதி சுகாதாரம் நூலகம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் கிராமம் முழுவதும் செய்து கொடுக்க வேண்டும் மற்றும் கடலூர் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்யாத மாவட்ட நல அதிகாரியை உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு முக்கிய அம்ச தீர்மானங்கள் தமிழக அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டன. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைப்பின் மண்டல மாவட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 1 மே, 2026

மே-1 தொழிலாளர் தின வாழ்த்துக்களுடன், சேலத்தில்  சாதனையாளர்களுக்கு குடியரசு  சிறப்பு விருதுகள் வழங்கி கௌரவிப்பு.

உலக தொழிலாளர் தினத்தை ஒட்டி, தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு மற்றும் மத்திய- மாநில அரசு & பொதுதுறை ஊழியர்கள்  தொழிலாளர்கள் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பாக பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்திய  சமூக சேவையாளர்களுக்கு  குடியரசு விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.  
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, தேசிய ஒடுக்கபட்ட மக்கள் குடியரசு நிறுவன தலைவரும், மத்திய, மாநில மற்றும் அரசு  பொதுதுறை ஊழியர்கள்  தொழிலாளர்கள் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு முதன்மை ஒருங்கிணைப்பாளருமான சரஸ்ராம் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,
அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் இடம் பிடித்த சமூக செய்வதற்கு குடியரசு விருதுகள் வழங்கி அமைப்புகளின் தலைவர் சரஸ்ராம் ரவி வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இந்த நிகழ்வில் அமைப்புகளின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் சேலம் மாநகரின் முக்கிய பிரமுகர்கள் என  திரளானவர்கள் பங்கேற்றனர்.