வெள்ளி, 30 ஜனவரி, 2026

ஈரோடு சூளை அந் - நூர் மஸ்ஜித் & மதர்ஷாவின் 6 ஆம் ஆண்டு விழாவில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு..!

ஈரோடு சூளை அந் - நூர் மஸ்ஜித் & மதர்ஷாவின் 6 ஆம் ஆண்டு விழாவில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு..!

ஈரோடு E.B.P.. நகர் சூளை அந் - நூர் மஸ்ஜித் & மதர்ஷாவின் 6 ஆம் ஆண்டு (மக்தப் மதர்ஷா) குழந்தைகள் ஆண்டு விழா மற்றும் சிறப்பு பயான் மதரஸா பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடை பெற்றது.

இவ்விழாவில் ஈரோடு கனி ராவுத்தர் குளம் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் தலைவர் ஷாஹுல் ஹமீது ஹாஜியார் தலைமை வகித்தார், அந் அந் - நூர் மஸ்ஜித் & மதர்ஷா நிர்வாக செயலாளர் அ.ரசூல் முகைதீன் வரவேற்புரை ஆற்றினார்,

பள்ளிவாசல் இமாம் முகமது  சல்மான் கிராத் ஓதிய பின்னர், ஆண்டு விழா துவங்கியது, மதர்ஷா ஆண்டு விழா போட்டியில் பெண் மற்றும் ஆண் குழந்தைகள் 50 பேர் கலந்து கொண்டு இஸ்லாமிய சட்டங்கள், நோன்பின் மாண்புகள், குரான் ஆயத்துகள், யாசீன் சூரா என சிறப்பாக மேடையில் ஓதி காட்டினர், பின்னர்  சிறப்பாக ஓதிய மாணவர்களை தேர்ந்தெடுத்து அந்த மாணவர்களுக்கு  முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு, வழங்கப்பட்டது..

விழாவில் பங்கேற்ற அனைத்து சிறுகுழந்தைகளுக்கும் சிறப்பு பரிசுகள் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் மௌலானா ஹபீஸ் தாவூதி ஜமாத் உலமா மண்டல செயலாளர் மற்றும் மௌலானா ஷாலிக் மற்றும் மௌலானா முஹம்மது அனஸ் மற்றும் மௌலானா கரீம் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்,

மேலும் பெண்கள் மதரசா உஸ்தாபிகள் ராபியத்தில் அரபியா ஆலிமா மற்றும் ஃபிர்தவ்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கினர்,

பள்ளிவாசல் நிர்வாகிகள் பொருளாளர் சாதிக் பாட்ஷா, நஸீர் துணைத் தலைவர் இஸ்மாயில் துணைச் செயலாளர் ஜான் அலி துணைப் பொருளாளர் பஷீர் பாஷா 
மற்றும் பள்ளி வாசல் உறுப்பினர்கள் முஹம்மது தாஹா, பாபு உட்பட பல உறுப்பினர்கள் மற்றும் மார்க்க ஆலோசகர் தஸ்தகீர் மற்றும்  மகளாவை சேர்ந்த  தாய்மார்கள் பெரியவர்கள் குழந்தைகள் ஜமாத்தார்கள் என திரளானோர் பங்கேற்றனர்
சேலம் வரலாற்றுச் சங்கத்தின் சார்பில் தேச தியாகிகளின் தினம் அனுசரிப்பு. அசோகர் ஸ்தூபி மற்றும் மகாத்மாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

சேலம் வரலாற்றுச் சங்கத்தின் சார்பில் தேச தியாகிகளின் தினம் அனுசரிப்பு. அசோகர் ஸ்தூபி மற்றும் மகாத்மாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் வரலாற்றுச் சங்கத்தின் சார்பில் தேச தியாகிகளின் தினம் அனுசரிப்பு. அசோகர் ஸ்தூபி மற்றும் மகாத்மாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி இந்திய விடுதலைக்காக தன் இன்னுயிரையும் நீத்தவர்களை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30 ஆம் தேதி தேசிய அளவில் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தியாகிகள் தினமான இன்று சேலம் வரலாற்றுச் சங்கம் சார்பில் தியாகிகள் தினம் ( Martyrs Day ) அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர மத்தியில், சேலம் ஆட்சியரகம் எதிரில் அமைந்துள்ள இந்திய சுதந்திரப் போரில் உயிர்நீத்த தியாகிகள் ஞாபகச் சின்னமான அசோகர் ஸ்தூபிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து, மலரஞ்சலியும், வீரவணக்கமும், செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள மஹாத்மா காந்தி திருவுருவ சிலைக்கும், மலரஞ்சலியும், வீர வணக்கமும் செலுத்தப்பட்டன.
இந்த நிகழ்வுகளுக்கு, சேலம் வரலாற்று சங்கத்தின் தலைவர் இமானுவேல் ஜெ. ஜெயசிங் தலைமையில் நடைபெற்ற விழாவில், பொருளாளர் ஞானதாஸ், செயல் தலைவர் தாரை. குமரவேலு, பொதுச் செயலாளர் பர்ணபாஸ் மற்றும் அமைப்புச் செயலாளர் பாலாஜி.வீரப்பன் மற்றும் ஜென்னிஸ் அறக்கட்டளையின் தலைவர் திருமதி கரோலின் எபி உள்ளிட்ட ஒரு கலந்து கொண்டு இந்திய தேசத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் அர்ப்பணிப்பை நினைவு கூறினர். இந்த நிகழ்வுகளில் செயற்குழு உறுப்பினர் பாபு,  ஷானவாஸ்கான், மற்றும் உறுப்பினர்கள் மகாதேவன், அயூப், மோகன்ராஜ், வருணதேவன், இராஜேந்திரன், பிரகாஷ், ரூபன் சீனிவாசன், மணிகண்டன் உள்ளிட்டோர் மிகுந்த ஆர்வமுடன் பங்கேற்றனர்.

புதன், 28 ஜனவரி, 2026

சேலம் சாரதா கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தமிழக அரசின் மடி கணணிகளை வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சர்.

சேலம் சாரதா கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தமிழக அரசின் மடி கணணிகளை வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சர்.

சேலம்.
S.K. சுரேஷ் பாபு.

சேலம் சாரதா கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தமிழக அரசின் மடி கணணிகளை வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சர்.

தமிழக அரசு சார்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் சாரதா மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கோமதி வரவேற்று பேசினார். மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார் தலைமை தாங்கி பேசினார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பள்ளி கல்வித்துறைக்கு 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கி சிறந்த கல்வியை தமிழக முதல்வர் அளித்து வருகிறார். 

இந்தியாவில் தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது. புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் கல்வியில் முன்னேற புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார். காலை உணவு திட்டத்தின் ன் மூலம் 20 லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெறுகிறார்கள். 10 லட்சம் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இன்று இந்த கல்லூரியில் 524 மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதனை மாணவிகள் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி அடைய மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் சாரதா கல்வி அறக்கட்டளை இயக்குனர் யதிதீஸ்வரி விநாயக பிரியா அம்பா, செயலாளர் யதீஸ்ஸ்வரி சுகப்பிரியா அம்பா மற்றும் யதீஸ்வரி அம்பாக்கள், துணை மேயர் சாரதா தேவி, மண்டல குழு தலைவர் உமாராணி உள்பட பங்கேற்றனர். முடிவில் கல்லூரி மடிக்கணினி திட்ட அலுவலர் செல்வ லட்சுமி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் துறை தலைவர்கள் மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

செவ்வாய், 27 ஜனவரி, 2026

உள்நாட்டு வேளாண் கட்டமைப்புகளுக்கும், உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் மத்திய அரசு போதிய நிதியை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தல்.

உள்நாட்டு வேளாண் கட்டமைப்புகளுக்கும், உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் மத்திய அரசு போதிய நிதியை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தல்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

உள்நாட்டு வேளாண் கட்டமைப்புகளுக்கும் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் மத்திய அரசு போதிய நிதியை கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தல்.

உழவர் பெருந்தகை நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மத்திய அரசின் 2026-2027 ஆம் ஆண்டிற்கு உண்டான நிதிநிலை அறிக்கை சமீபத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள  நிலையில், ஏற்கனவே மத்திய அரசிடம் அமெரிக்க அரசாங்கம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கு பலமுறை முயற்சித்த போது, உள்நாட்டு உணவு தானியம் வேளாண் சார்ந்த பொருட்கள் இறக்குமதி செய்ய ஒருபோதும் இந்திய அரசு அனுமதிக்காது, உள்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் தான் எனக்கு முக்கியம் என்று தெரிவித்தும், எனது தனிப்பட்ட  நட்பு முறையில் எவ்வளவு நெருக்கடி நிலை வந்தாலும் எதிர்கொள்ள நான் தயார், உள்நாட்டின் வேளாண் கட்டமைப்புகளுக்கும் உற்பத்தியை அதிகரிக்கவும் எவ்வளவு நிதி வேண்டுமானாலும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய தயார் என்று
மெரிக்க அரசாங்கத்துக்கு கணத்த குரலோடு படிலடி கொடுத்த மாண்புமிகு இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் இந்திய விவசாயிகள் நலன் கருதி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான MSP-யை அமல்படுத்தியும் நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் மத்திய அரசிடம் வைத்ததை நிறைவேற்றும் வகையிலும் உள்நாட்டு வேளாண் கட்டமைப்புகளுக்கு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் போதிய நிதியை  மத்திய அரசு கூடுதலாக ஒதிக்கீடு செய்ய வேண்டும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை இந்த அறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறது என்றும் அறிக்கையின் வாயிலாக தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். 


அருந்ததியர் மக்கள் வாழ்வில் வளர்ச்சி பெற தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக, சேலம் ஓமலூரில் அமைச்சர் எ.வ. வேலு பெருமிதம்.

அருந்ததியர் மக்கள் வாழ்வில் வளர்ச்சி பெற தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக, சேலம் ஓமலூரில் அமைச்சர் எ.வ. வேலு பெருமிதம்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

அருந்ததியர் மக்கள் வாழ்வில் வளர்ச்சி பெற தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக, சேலம் ஓமலூரில் அமைச்சர் எ.வ. வேலு பெருமிதம். 

இந்திய விடுதலை சுதந்திர போராட்ட மாவீரன் பொல்லான் அவர்களுக்கு திருவுருவ சிலையுடன் கூடிய நினைவகம் அமைத்துக் கொடுத்த தமிழக முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் ஆதித்தமிழர் பேரவை மற்றும் அருந்ததியர் மக்கள் சார்பில் நடைபெற்றது. சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் தலைமை தாங்கினார். ஆதித்தமிழர் பேரவையின் மாநில துணை பொது செயலாளர் ஏ.டி.ஆர்.சந்திரன் வரவேற்புரை நிகழ்த்த, மாநில மகளிர் அணி துணை செயலாளர் மகேஸ்வரி, தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச்செயலாளர் யுவராஜ் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் ஏசுராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்த நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வழக்கறிஞர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தை சிறப்பித்தனர். 
தொடர்ந்து நடைபெற்ற நன்றி அறிவிப்பு பொது  கூட்டத்தில் பேசிய அமைச்சர் பெருமக்கள், இந்திய விடுதலை போராட்ட மாவீரன் கொல்லானின் வீர வீரன் குறித்து பட்டியலிட்டு பேசி அவர்கள் அவரை பெருமைப்படுத்தும் விதமாக திருஉருவச் சிலையுடன் கூடிய நினைவகம் அமைத்துக் கொடுத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு செய்துள்ளார் என்றும் குறிப்பிட்டனர். தமிழக மக்களின் நலன் கருதி அடித்தட்டு மக்களும் வாழ்வில் முன்னேற்றம் அடைய தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்தும் பட்டியல் இட்ட அவர்கள் அருந்ததியர் மக்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பது திமுக தான் என்றும் அவர்களுக்கு மூன்று சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி அவர்கள் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்ற முதல்வர் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவது காரணம் என்றும் பெருமைப்பட தெரிவித்தனர். 
இந்த நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் மாரியப்பன் உட்பட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மனைவியின் தவறான சகவாசத்தால் கொலை மிரட்டலுக்கு அஞ்சி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தம்பதியினர். சேலம் வேடுகத்தாம்பட்டியில் நான்கு குழந்தைகள் அனாதையான சோகம்.. கொலை மிரட்டல் விடுத்த குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சேலம் காவல் ஆணையரிடம் புகார் மனு.

மனைவியின் தவறான சகவாசத்தால் கொலை மிரட்டலுக்கு அஞ்சி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தம்பதியினர். சேலம் வேடுகத்தாம்பட்டியில் நான்கு குழந்தைகள் அனாதையான சோகம்.. கொலை மிரட்டல் விடுத்த குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சேலம் காவல் ஆணையரிடம் புகார் மனு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

மனைவியின் தவறான சகவாசத்தால் கொலை மிரட்டலுக்கு அஞ்சி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தம்பதியினர். சேலம் வேடுகத்தாம்பட்டியில் நான்கு குழந்தைகள் அனாதையான சோகம்.. கொலை மிரட்டல் விடுத்த குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சேலம் காவல் ஆணையரிடம் புகார் மனு. 

சேலத்தை அடுத்துள்ள வேடுகத்தாம்பட்டி சங்கோதி வட்டம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநகர் மாவட்ட அமைப்பாளர் செந்தில் உள்ளிட்டவர்களுடன் புகார் மனு கொடுப்பதற்காக சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.  பழனிச்சாமி மற்றும் செந்தில் உள்ளிட்டோர் வழங்கிய புகார் மனுவில் பழனிச்சாமி எனும் நானும் எனது குடும்பத்தாரும் சங்கோதி வட்டம் பகுதியில் வசித்து வருகிறோம். எனது தம்பி தனபால் அவரது மனைவி பிரியா ஆகியோர் அவர்களது நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்பவருக்கும் எனது தம்பி மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் தனியாக அடிக்கடி பேசி பழகி வந்துள்ளனர். 
இந்த விஷயம் எனது தம்பிக்கு தெரிய வரவே, இதுகுறித்து சுபாஷிடம் கேட்டபோது சுபாஷும் அவரது மனைவி மற்றும் அவர்களது மகன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து எனது தம்பியையும் அவர்களது நான்கு குழந்தைகளையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து அனுப்பிவிட்டனர். இதில் மன உளைச்சலில் இருந்த தனபால் மற்றும் மனைவி பிரியா ஆகியோர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் எனது தம்பி மனைவி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்ட நிலையில், எனது தம்பி தனபால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது சேலம் கொண்டலாம்பட்டி காவல் துறையினரிடம் மரண வாக்குமூலமாக இந்த சம்பவத்திற்கு சுபாஷ் அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் அவரது மகன் 3 பேரும் தான் காரணம் என மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதற்கு உண்டான வீடியோவையும் காவல்துறையினர் பதிவும் செய்து உள்ளனர். அதன் பின் சிகிச்சை பலனின்றி எனது தம்பி தனபால் இறந்துவிட்டார். இந்த இருவரும் இறந்ததற்கு காரணமான சுபாஷ் மற்றும் குடும்பத்தினர் மூன்று பேர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். தாய் தந்தையரை இழந்து தற்போது தனியாக இருக்கும் இந்துமதி மோனிகா ஸ்ரீ சுமிதா மற்றும் திலீப் ஆகிய நான்கு குழந்தைகளும் அனாதையாக வாழும் நிலையில் உள்ளனர். அனாதை ஆக்கப்பட்டுள்ள நான்கு குழந்தைகளுக்கும் உதவி செய்யுமாறு கனம் சேலம் மாநகர காவல் துறை ஆணையரை கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்த சம்பவம் சேலம் வேடுகத்தாம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்வின்போது தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாவட்ட துணை தலைவர் வசந்த் உட்பட பாதிக்கப்பட்டுள்ள நான்கு குழந்தைகள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

திங்கள், 26 ஜனவரி, 2026

சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டம். மகாத்மா மற்றும் கர்மவீரர் ஆகியோரது திருவருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை.

சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டம். மகாத்மா மற்றும் கர்மவீரர் ஆகியோரது திருவருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டம். மகாத்மா மற்றும் கர்மவீரர் ஆகியோரது திருவருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை. 

இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில கட்சியின் சார்பில் நாட்டின் 77 வது குடியரசு தின விழாவை கொண்டாடும் விதமாக ஓமலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மகாத்மா காந்தி மற்றும் கர்மவீரர் காமராஜர் ஆகியோரது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டன. ஓமலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்விற்கு சேலம் மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சுசீந்திரகுமார் மற்றும் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். 
ஓமலூர் நகர  தலைவர் மணிகண்டன் வரவேற்புரை ஆற்றிய இந்த நிகழ்வில், வட்டார தலைவர்கள் சேதுராமன், அபி மன்னன், தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் ரகு நந்தகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து,  தீண்டாமை ஒழிப்பு, தீவிரவாத ஒழிப்பு, மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு போன்ற உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் அஜித் குமார், ராஜேந்திரன், கணேசன், மாரியப்பன், முத்து, ரமேஷ், முருகேசன் சரவணன் செந்தில்குமார் மனோஜ் குமார் விஜய் கூலிட்டு ஐம்பத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதே போல கருப்பூர் பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியடிகள் மற்றும் கர்மவீரர் காமராஜரின் திரு உருவப்படத்திற்கு கருப்பூர் நகர தலைவர் அரவிந்த் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட நிகழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டன.
புதிய பாதையில் காங்கிரஸ் கட்சி பயணத்தை தொடரும்... சேலத்தில் நடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பதவி ஏற்பு விழாவில் முன்னாள் தலைவர் தங்கபாலு தெரிவித்தார்....

புதிய பாதையில் காங்கிரஸ் கட்சி பயணத்தை தொடரும்... சேலத்தில் நடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பதவி ஏற்பு விழாவில் முன்னாள் தலைவர் தங்கபாலு தெரிவித்தார்....

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

புதிய பாதையில் காங்கிரஸ் கட்சி பயணத்தை தொடரும்... சேலத்தில் நடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் பதவி ஏற்பு விழாவில் முன்னாள் தலைவர் தங்கபாலு தெரிவித்தார்....

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மூன்று மாவட்டங்களில் புதிய தலைவர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆன தங்கபாலு நிருபர்களிடம் கூறுகையில், தமிழக காங்கிரசுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் காங்கிரஸ் புதிய பயணத்தை தொடர் உள்ளது. 
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக முற்பட 14 மாநிலங்களில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் உட்பட பல்வேறு பதவிகளில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. 
அதன்படி தமிழகத்தில் புதிய காங்கிரஸ் தலைவர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் கட்சியின் வளர்ச்சி மற்றும் திட்டங்களை செயல்படுத்துவார்கள். 
தமிழக அரசியலில் இதுவரை நடக்காததெல்லாம் நடக்கிறது. யாருக்கும் யாரு எதிரி அல்ல. 
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழகத்தில் 6000 பேர் விண்ணப்பித்துள்ளனர். 
அவர்களில் தகுதியானவர்கள் போட்டியிடும் வாய்ப்பை பெறுவார்கள். 
தமிழகத்தில் தொடர்ந்து திமுகவினர் காமராஜரையும், காங்கிரஸ் கீழ்மட்ட தலைவர்களையும் அவமதிக்கும் நிலையில், இரண்டாம் கட்ட தலைவர்கள் மௌனம் காப்பது ஏன், தற்போது சேலம் மாநகர காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சாரதா தேவியை அரசு விழாவில் திமுகவினர் புறக்கணித்ததும் அவமதித்த செயலும் அரங்கேறியது என்ற கேள்விக்கு, காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் ஆட்சி அமைப்பது தான் முக்கியம் அதற்காக சில தியாகங்களை செய்துதான் ஆக வேண்டும். 
சில இடங்களில் தனி மனிதனை நாம் பார்க்க கூடாது கட்சியை தான் பார்க்க வேண்டும். 
தனிப்பட்ட காரணங்களுக்காக சிலர் அவமதிப்பதை காங்கிரஸ் கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. 
சில நேரங்களில் இதற்கு நாம் கண்டனம் எதிர்ப்பை தெரிவித்துதான் வந்துள்ளோம். 
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு ந ஆசை இருக்கத்தான் செய்கிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய அளவு தான் முக்கியத்துவம். 
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் காலம் கனிந்து தான் வருகிறது. காமராசரின் காங்கிரஸ் ஆட்சி விரைவில் அமையும் என எதிர்பார்ப்போம். இவ்வாறு அவர் கூறினார். 
பேட்டியின் போது, சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் சாரதா தேவி உட்பட நிர்வாகிகள் பலருடன் இருந்தனர். 


சேலத்தில் விஜய ஸ்ரீ பில்டர்ஸின் புதிய வைஷ்ணவி பேலஸ் அபார்ட்மெண்ட் பூமி பூஜை

சேலத்தில் விஜய ஸ்ரீ பில்டர்ஸின் புதிய வைஷ்ணவி பேலஸ் அபார்ட்மெண்ட் பூமி பூஜை

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலத்தில் விஜய ஸ்ரீ பில்டர்ஸின் புதிய வைஷ்ணவி பேலஸ் அபார்ட்மெண்ட் பூமி பூஜை 

சேலம் அம்மாபேட்டை வித்யா மந்திரி பள்ளி அருகில் விஜய ஸ்ரீ பில்டர்ஸின் புதிய வைஷ்ணவி பேலஸ் அப்பார்ட்மெண்ட் பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜை விழாவிற்கு விஜயஸ்ரீ கன்ஸ்டிரக்ஷன் உரிமையாளர்  டாக்டர் டி ஜே ராஜேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். தொடர்ந்து புதிய வைஷ்ணவி பேலஸ் அப்பார்ட்மெண்ட் குறித்து விஜயஸ்ரீ பில்டர்ஸ் நிர்வாகத்தினர பாலசுப்பிரமணியம், மாலினி‌ ஆகியோர் கூறியதாவது, புதிய வைஷ்ணவி பேலஸ் அப்பார்ட்மெண்ட்ல் 2 பி ஹெச் கே மற்றும் 3 பி ஹெச் கே என 35 வீடுகள் உள்ளன. இங்கு குழந்தைகளுக்கு ஏற்ற விளையாட்டு அரங்கம், நடைபயிற்சி ஏரியா, அவுட்டோர் ஜிம் மற்றும் யோகா திடல் போன்ற அரங்கங்கள் உள்ளன. 24 மணி நேர குடிநீர் வசதி, தார் சாலை வசதி, சிசிடிவி கேமரா செக்யூரிட்டி வசதிகள் உள்ளன என்றும் தெரிவித்தனர். 
மேலும் புதிய லைசன்ஸ் பேலஸ் அப்பார்ட்மெண்டில் வீடு வாங்க கனரா வங்கி, இந்தியன் வங்கி, சவுத் இந்தியன் வங்கி, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி ஹோம், லோன் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் uco bank போன்ற முன்னணி வங்கிகளில் லோன் வசதி ஏற்பாடு செய்து தரப்படும். தொடர்ந்து பூமிபுரியில் கலந்து கொண்டு அட்வான்ஸ் செலுத்தி புக்கிங் செய்யும் முதல் ஐந்து வாடிக்கையாளருக்கு மாடுலர் கிச்சன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார்கள். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விஜயஸ்ரீ பில்டர்ஸ் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் செய்தனர்.
சேலம் பள்ளிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற குடியரசு தின கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து அவமதித்த அதிகாரிகள். இந்திய திருநாட்டை அவமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்களை ஒன்று திரட்டி ஆளுநரிடம் புகார் அளிக்க உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை...

சேலம் பள்ளிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற குடியரசு தின கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து அவமதித்த அதிகாரிகள். இந்திய திருநாட்டை அவமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்களை ஒன்று திரட்டி ஆளுநரிடம் புகார் அளிக்க உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை...

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் பள்ளிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற குடியரசு தின கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து அவமதித்த அதிகாரிகள். இந்திய திருநாட்டை அவமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்களை ஒன்று திரட்டி ஆளுநரிடம் புகார் அளிக்க உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை...

இந்திய திருநாட்டில் 77 வது குடியரசு தினம் நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்பட்டது. மேலும் குடியரசு தினத்தில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றி உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு  பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சேலம் அயோத்தியா பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டி கிராமத்தில் ஏரிக்காடு சன்னியாசி முனியப்பன் கோவிலில் குடியரசு தின சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த சிறப்பு கிராம சபை கூட்டம் அயோத்தியபட்டினம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முத்தழகன் மற்றும் அயோத்தியபட்டினம் பள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் ஆரோக்கியநாதன் கென்னடி ஆகியோரின் முன்னிலையில் இந்த கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று துண்டு பிரசுரங்களும்  ஏற்கனவே அச்சிடப்பட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டு இருந்தது.
11 மணிக்கு தொடங்க வேண்டிய குடியரசு தின கிராம சபை கூட்டம் சுமார் இரண்டு மணி நேரம் ஆகியும் தொடங்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம் காரணம். சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளான முத்தழகன் மற்றும் ஆரோக்கியநாதன் கென்னடி ஆகியோர் இந்திய குடியரசு தினத்தை அவமதிக்கும் வகையில் இந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்காததால் இந்த நிலை. பாதுகாப்பிற்கு காவல்துறை அதிகாரிகளும் வந்துவிட்டனர், குறைகளை கூற துப்புரவு பணியாளர்கள் பொதுமக்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பங்கேற்று இருந்தனர். ஆனால் கிராம சபை கூட்டத்தை முன்னின்று நடத்த வேண்டிய அரசு துறை அதிகாரிகள் வராமல் இந்திய தேசத்தை அவமதித்தனர் இதனால் இந்த கிராம சபை கூட்டம் தொடங்கு கால தாமதம். கிரிக்கெட் மைதானம் தயார், பந்துவீச்சாளர்  தயார் ஆனால் மட்டை பிடிப்பவர்   எங்கே என்ற நிலை இன்று நடைபெற்ற குடியரசு தின  பள்ளிப்பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் நிலவியது. நிலைமை இப்படி இருக்க சமையலுக்கு பயன்படுத்தப்படும் கருவேப்பிலையைபோன்று, வேண்டுமென்றால் பயன்படுத்தலாம் வேண்டாம் என்றால் தூக்கி எறியலாம் என்று கணக்கில் பள்ளிப்பட்டி மற்றும் மேட்டுப்பட்டி தாதனுரை சேர்ந்த ஒரே ஊராட்சி செயலர் அவசர அவசரமாக வரவழைக்கப்பட்டு பெயரளவில் முக்கிய கோப்புகள் இல்லாமல் கூட்டம் தொடங்கியது. அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ராம்ஜி தர்மன் மற்றும் சித்தரசன் உள்ளிட்டோர் மற்றும்  பஞ்சாயத்து  பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரி திணறியதையும் பார்க்க முடிந்தது. பிறகு பொதுமக்களின் குறைகளை கேட்டு அறியாமல் எந்த விதமான தீர்மானங்களும் நிறைவேற்றாமல்,  தொடங்கிய சில மணித்துளிகளில் கிராம சபை கூட்டம் நிறைவு பெற்றது என்பது வருத்தமளிப்பதாக உள்ளது என கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
பள்ளிப்பட்டி பஞ்சாயத்தில் ஏற்கனவே இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அவரின் கீழ் செயல்பட்ட அதிகாரிகளின் பேரில்  நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊழல் புகார் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று கொண்டிருப்பதாகவும் மேலும் பல்வேறு ஊழல்கள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்திய திருநாட்டின் முக்கிய நாள் என்று கூட கருதாமல் சம்பந்தப்பட்ட அதாவது முத்தழகன் மற்றும் ஆரோக்கியநாதன் கென்னடி ஆகிய  அதிகாரிகள் இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தை அவமதித்தது வேதனைக்குரியதாக உள்ளது என்றும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பொதுமக்கள் கலந்து கொண்டதால் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை ரத்து செய்துவிட்டு வேறு ஒரு நாளில் அறிவித்து உரிய அதிகாரிகள் பங்கேற்று திரளான மக்கள் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  இன்று நடந்த இந்த சம்பவத்தை கண்டித்து அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்படி தவறும் பட்சத்தில் பொது மக்களின் ஒத்துழைப்போடு ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வேறு ஒரு நாளில் குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டத்தை  கூட்டத்தை நடத்த வலியுறுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.
அயோத்தியாபட்டணம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் சரி பள்ளிப்பட்டி பஞ்சாயத்து அதிகாரிகளும் சரி அடிமட்ட ஊழியர்களை மிரட்டி அடிபணிய வைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 25 ஜனவரி, 2026

தமிழக விவசாயிகளின் நலனில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் NDA கூட்டணி ஆட்சி மாற்றத்தை தமிழ் மக்கள் விரும்புவார்கள். பிரதமருக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக நினைவூட்டல்.

தமிழக விவசாயிகளின் நலனில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் NDA கூட்டணி ஆட்சி மாற்றத்தை தமிழ் மக்கள் விரும்புவார்கள். பிரதமருக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக நினைவூட்டல்.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழக விவசாயிகளின் நலனில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் NDA கூட்டணி ஆட்சி மாற்றத்தை தமிழ் மக்கள் விரும்புவார்கள். பிரதமருக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையின் வாயிலாக நினைவூட்டல்.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர்கள் வேலுச்சாமி பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிக்கையின் வாயிலாக நினைவூட்டல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் வருகின்ற சட்ட மன்றத் தேர்தலில், பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியைதான்   தமிழ்நாடு விரும்புகிறது என்று  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பொது கூட்ட பிரச்சாரத்தின் போது தமிழகத்திற்கு வருகை தந்த  இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி  கூறிய வார்த்தை தமிழகமே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் பேசுபொருளாக இருந்தது தமிழக விவசாயிகள் தேசிய ஜனநாயக கூட்டணியை  விரும்ப வேண்டும் என்றால் மத்திய அரசு ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு கொடுத்த தேர்தல் வாகுறுதியான விவசாயிகள் விளை நிலத்தில் விளைவித்த விளை பொருட்களுக்கு லாபகரமான விளை நிர்ணயம் MSP-யை உடனடியாக அறிவித்தது விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடைமுறைக்கு மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.
மேலும் வருகின்ற 2026-2027 ஆம் ஆண்டு மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் வேளாண்துறை மூலம் வளர்ச்சி பெறும் வகையில்  விவசாயிகளுக்கு  மானிய திட்டம் மூலம் வழங்கப்படும் நிதி இனிவரும் காலங்களில்  நேரடியாக  விவசாயிகள் வங்கி கணக்கு எண்ணிற்கே   மத்திய அரசு வழங்க வேண்டும்.
நாடுமுழுவம் உள்ள விவிசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய பயிர் மற்றும் பண்ணை அபிவிருத்தி கடன் முழுவதும் மத்திய அரசு உடனடியாக தள்ளுபடி செய்யவேண்டும். தமிழக விவசாயிகள் நலன் கருதி மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த கோதாவரி காவேரி இணைப்பு திட்டம் விரைந்து செயல்படுத்தி விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் 2026-2027 ஆம் ஆண்டு மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் கூடுதலாக நிதி ஒதிக்கீடு செய்யவேண்டும்.
தமிழக விவசாயிகள் வாழ்வாதாரம் வளர்ச்சியடையும்  வகையில் புதிய தொழில்நுட்ப  கண்டுபிடிப்புடன் கூடிய தேசிய வேளாண் கல்லூரியை, மத்திய அரசு வரும் காலங்களில் 2026-2027ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்து தமிழக விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர முன்னேற்பாடு குறித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு தலையிட்டு தமிழ்நாட்டிற்கு உண்டான காவிரி உரிமை  பங்கீட்டு தண்ணீரை கர்நாடகா மாநிலத்தில் இருந்து தினந்தோறும் விகிதாச்சார அடிப்படையில் காவிரியில் திறந்து விட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.காவிரி  தண்ணீரை இனிவரும் காலங்களில்  பருவம் தவறாமல் தமிழ்நாட்டிற்கு காவிரி உரிமை தண்ணீரை கர்நாடகா மாநிலத்தில் இருந்து முறையாக திறந்துவிட இனிவரும் காலங்களில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும். 
எனவே அதன் பிறகுதான் தமிழக விவசாயிகள்  2026 ல் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மாற்றத்தை தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் விரும்புவார்கள் என்பதை மாண்புமிகு இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த அறிக்கையின் வாயிலாக நினைவுபடுத்துகி றேன் என்று உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 20 ஜனவரி, 2026

தமிழகத்தில் கள்ளு குண்டான தடையை நிரந்தரமாக நீக்க கோரி விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை. ஏற்கனவே தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிராகரித்த திமுக அரசை நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர வைக்க மாட்டோம் என்றும் சூளுரை.

தமிழகத்தில் கள்ளு குண்டான தடையை நிரந்தரமாக நீக்க கோரி விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை. ஏற்கனவே தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிராகரித்த திமுக அரசை நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர வைக்க மாட்டோம் என்றும் சூளுரை.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

தமிழகத்தில் கள்ளு குண்டான தடையை நிரந்தரமாக நீக்க கோரி விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை. ஏற்கனவே தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிராகரித்த திமுக அரசை நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர வைக்க மாட்டோம் என்றும் சூளுரை.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயி சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அவர்கள் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், தமிழக விவசாயிகள் நிலத்தில் தென்னை மற்றும் பனைமரத்தில் இருந்து இறக்கி எடுக்கப்படும் கள்ளுக்கு   தடையை நீக்க கோரி உழவர் பெருந்தலைவர் நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது தமிழ்நாடு அரசு விவசாயிகளின் கோரிக்கையை மறுத்து விட்டு மதுவுக்கு தான் இன்று முக்கியத்துவம் கொடுக்கிறது டாஸ்மாக் மதுக்கடை தமிழ்நாட்டில் அதிகப்படியாக திறந்து விட்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு இயற்கையான பானமான தென்னை மற்றும் பனை மரத்திலிருந்து இறக்கப்படும்  கள்ளு மனிதன் உடலில் உள்ள நோய் பிணியை போக்கூடிய அருமருந்தாக உள்ளது.இன்னும்  இந்த  இயற்கை பானத்திற்கு மட்டும் தடையை  நீக்கவில்லை பக்கத்து மாநிலத்தில் கேரளா பாண்டிச்சேரி ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா ஆகிய மாநிலத்தில் கள்ளுக்கு தடையில்லை தமிழ்நாட்டில் மட்டும்தான் கள்ளுக்கு  உண்டான தடை இந்த தடையை நீக்க  திமுக அரசு செவி சாயிக்காத காரணத்தை முன்னிட்டு உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முதல் முதலாக எனது விவசாய நிலத்தில்  உள்ள தென்னந் தோப்பில் கள்ளு கட்டி முதல் முதலாக சந்தைப்படுத்தினேன் கடந்த ஒன்பதாவது மாதம் அதனைப் பொறுத்துக் கொள்ளாமல் தமிழ்நாடு முதலமைச்சர்  காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தி என் மீது கள்ளு இறக்கிய வழக்கை பதிவு செய்து இன்று நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் நீதிமன்றத்தில் காவல்துறை என்னை ஆஜர் படுத்திருக்கின்றது. தமிழக விவசாயிகளின் கோரிக்கைக்கும் உரிமைக்காகவும் விவசாயிகள் சங்க தலைவர்கள் போராடினால் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் திராவிட மாடல அரசு பொறுத்துக் கொள்ளாமல் வழக்கைப்பதிவு விவசாயிகள் சங்க தலைவர்களை தமிழகம் முழுவதும் கைது செய்துள்ளது. இந்த திராவிட மடல் அரசை 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஓட ஓட விரட்டி அடித்து இன்னும் எத்தனை ஆண்டு காலம் வந்தாலும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் அமர விட மாட்டோம் என சூளுரை ஏற்று உள்ளோம் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுக்கின்றது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கள்ளுக்கு  உண்டான தடையை நீக்குகிறோம் எனக் வாக்குறுதி   கூறுகிறதோ அந்த கட்சிக்கு தமிழக விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு கொடுக்கும் என தெரிவித்தார்.மிழகத்தில் கள்ளுக்கு குண்டான தடையை நிரந்தரமாக நீக்க கோரி தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி தமிழக அரசுக்கு கோரிக்கை.
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயி சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அவர்கள் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், தமிழக விவசாயிகள் நிலத்தில் தென்னை மற்றும் பனைமரத்தில் இருந்து   இறக்கி எடுக்கப்படும் கள்ளுக்கு   தடையை நீக்க கோரி உழவர் பெருந்தலைவர் நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்ததும் தமிழ்நாடு அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க்க மறுத்து விட்டு மதுவுக்கு தான் இன்றுவரை முக்கியத்துவம் கொடுக்கிறது டாஸ்மாக் மதுக்கடை தமிழ்நாட்டில் அதிகப்படியாக திறந்து விட்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு இயற்கையான பானமான தென்னை மற்றும் பனை மரத்திலிருந்து இறக்கப்படும்  கள்ளு மனிதன் உடலில் உள்ள நோய் பிணியை போக்கூடிய அருமருந்தாக உள்ளது.இன்னும்  இந்த  இயற்கை பானத்திற்கு மட்டும் தடையை  நீக்கவில்லை தமிழகத்தை ஒட்டியுள்ள பக்கத்து மாநிலமான கேரளா பாண்டிச்சேரி ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா ஆகிய மாநிலத்தில் கள்ளுக்கு தடையில்லை தமிழ்நாட்டில் மட்டும்தான் கள்ளுக்கு  உண்டான தடை இந்த தடையை நீக்க  திமுக அரசு செவி சாயிக்காத காரணத்தை முன்னிட்டு உழவர் பெருந்தலைவர்  நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் முதல் முதலாக நாமக்கல் மாவட்டம் கோனூர் ஊராட்சி எனது விவசாய நிலத்தில்  உள்ள தென்னந் தோப்பில் கள்ளு கட்டி இறக்கி முதல் முதலாக சந்தைப்படுத்தினேன் கடந்த 2025 ஆம் ஆண்டு ஒன்பதாவது மாதம் அதனைப் பொறுத்துக் கொள்ளாமல் தமிழ்நாடு முதலமைச்சர்  காவல்துறையை ஏவல் துறையாக பயன்படுத்தி என் மீது கள்ளு இறக்கிய வழக்கை பதிவு செய்து இன்று நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மதுவிலக்கு காவல்துறை என்னை ஆஜர் படுத்தப்பட்டது. தமிழக விவசாயிகளின் கோரிக்கைக்கும் உரிமைக்காகவும் விவசாயிகள் சங்க தலைவர்கள் தமிழகத்தில் போராடினால் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் இருக்கும் திராவிட மாடல் அரசு பொறுத்துக் கொள்ளாமல் வழக்கைப்பதிவு விவசாயிகள் சங்க தலைவர்களை தமிழகம் முழுவதும் கைது செய்துள்ளது. இந்த திராவிட மடல் அரசை 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஓட ஓட விரட்டி அடித்து இன்னும் எத்தனை ஆண்டு காலம் வந்தாலும் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் அமர விட மாட்டோம் என சூளுரை ஏற்று உள்ளோம் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு எச்சரிக்கை விடுக்கின்றது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கள்ளுக்கு  உண்டான தடையை நீக்குகிறோம் எனக் வாக்குறுதி   கூறுகிறதோ அந்த கட்சிக்கு தமிழக விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு கொடுத்து ஆட்சி பொறுப்பில் அமரவைப்போம் என தெரிவித்தார்.